Thursday, December 1, 2022
முகப்புபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்விருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் !

விருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் !

-

விருத்தாசலத்தில் சேவா பாரதியின் “யோகா” பயிற்சிக்கு எதிர்ப்பு

vdm-seva-barti-yoga-opposedமோடியின் பாசிச கோமாளி அரசு, மருத்துவ துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது மட்டுமில்லாமல் மருத்துவத்திற்கான மானியத்தை குறைத்து அதற்கு மாற்றாக ஒரு வருடத்திற்கு ஒரு நோயை தேர்வு செய்து அதற்கு மருத்துவத்திற்கு பதில் யோகா செய்து நோய்கள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதாக அரங்கேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேவா பாரதி அமைப்பு 21-08-2016 முதல் 31-08-2016 வரை சர்க்கரை நோய் இல்லாத பாரதம் உருவாக்குவோம் என்ற பெயரில் யோகா பயிற்சி நடத்தப்படும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

சேவா பாரதி என்பது ஆர்.எஸ்.எஸ் வானரப் படைகளில் ஒன்று. ரத்த தானம், இலவசக் கல்வி, மருத்துவ முகாம் போன்றவற்றின் பெயரில் ஒரு பகுதியில் ஊடுறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நேரடியான இயக்கம் இது.

இதைக் கண்ட மக்கள் அதிகார பகுதி தோழர்கள் 22-08-2016 அன்று, தமிழ்நாடு மார்க்ஸிட் கட்சி (TMP), CPML மக்கள் விடுதலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ்வாதி கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் அதிகாரத்தின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.

மனுவில், “இந்த சேவாபாரதி என்பது இந்துத்துவா கொள்கையை பரப்பக் ஊடிய அமைப்பு. இந்த அமைப்பு சமூக சேவை என்ற பெயரில் மக்களிடையே சென்று மதங்களுக்கு எதிராக வன்முறையை தூண்டக் கூடிய அமைப்பு. இந்த அமைப்பு அரசு ஆண்கள் ஏல்நிலைப் பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி அளிக்க அனுமதித்தது சட்ட விரோதமானது. மேலும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயம் உள்ளது. இது போன்ற மதவாத அமைப்புகளை பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனுமதிப்பது கல்விச் சூழலை கெடுக்கும்.” என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

“யோகா என்ற பெயரில் இந்து மதவாத அமைப்புகள் பெரியார் பிறந்த பூமியில் காலூன்ற விடமாட்டோம்” என்று எச்சரித்து தடுத்து நிறுத்தினோம். “யோகா பயிற்சி மீண்டும் நடைபெற்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் தொடரும்” என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் எச்சரித்தனர்.

seva-barti-in-govt-school-newsதகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

 

  1. ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது இந்த நாட்டில் கிறிஸ்துவ அல்லது இஸ்லாமிய அமைப்பு எங்கே வேண்டுமானாலும் என்ன பயிற்சி வேண்டுமானாலும் கொடுக்கலாம் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் ஆனால் தப்பி தவறி ஒரு ஹிந்து அமைப்பு மட்டும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்ய விட கூடாது என்பதில் பலர் குறியாக இருக்கிறார்கள்.

    இந்த மாதிரியான எதிர்ப்புகள் எல்லாம் சைக்கோ தனமாக இருக்கிறது.

    நம் நாட்டில் மட்டும் தான் பெரும்பான்மை மக்களின் மதத்தை இப்படி வெளிப்படையாக எதிர்க்க முடிகிறது இதுவே பாகிஸ்தானில் போய் ஒரு இஸ்லாமிய அமைப்பு இதை அதை செய்ய கூடாது என்று சொன்னால் நடப்பதே வேறு.

    இதை எதிர்த்த அத்தனை காட்சிகளையும் பாருங்கள் தேசத்துரோக இந்திய எதிர்ப்பு அமைப்பினர்

    எப்படி ஒரு கிறிஸ்துவ அமைப்பிற்கு அவர்கள் விரும்பும் நிகழ்ச்சியை நடத்தும் உரிமை உள்ளதோ அதேபோல் ஏன் RSS நடத்த கூடாது அதற்க்கு ஏன் உரிமை மறுக்கபடுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க