Wednesday, February 28, 2024
முகப்புகட்சிகள்பா.ஜ.கஉனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா

உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா

-

paza karuppaiya
மதுரவாயல் பு.மா.இ.மு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் திரு பழ. கருப்பையா

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் தி.மு.க வை சார்ந்த எழுத்தாளர் திரு.பழ.கருப்பையா ஆற்றிய உரை!

“நான் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ள மாநாடுகளில் பேசியுள்ளேன். ஆனால் ரொம்பப் பெரிய வியப்பு – இவ்வளவு இளைஞர்கள் ஒரு புரட்சிகர அமைப்பின் கீழ் கூடியிருக்கிறீர்கள் என்றால், இன்னொரு 10 ஆண்டுகளில் நீங்கள் இந்த நாட்டை மாற்றிவிடுவீர்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வளவு இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவிகள் எல்லாம் கொள்கை பிடிப்புள்ள இந்த அமைப்பில் இருப்பது பாராட்டுதற்குரியது.

ஏனென்றால் இளமை என்பது முனைப்பு மிக்கது, அறிவால் பெரும் வளர்ச்சியடையக் கூடிய வயது அது. ஆனால் இன்றைய இளைஞர்கள் சினிமா கதாநாயகர்கள் ரசிகர்களாக தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள். அப்படிப்பட்ட சாதாரண இளைஞர்களைப் போல் இல்லாமல், நீங்கள் தியாகிகளுக்கு உணர்வோடு வீர வணக்கம் செலுத்துகிறீர்கள். இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். உண்மையிலேயே இந்த நாடு மாற்றியமைக்கப்பட வேண்டும். சிந்தனை எல்லாம் வர்க்க அடிப்படையில் அமைந்தால் சாதிகளெல்லாம் தகர்ந்து போகும். இன்றைய உலகமயமாக்கல் – தாராளமயமாக்கல் காரணமாக நீங்கள் ஏற்றிக் போற்றுகின்ற சோசலிசத்தின் தேவை கூடியிருப்பதாக கருதுகிறேன்.

இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் – சோசலிசத்தின் மீது பற்று கொண்ட கூட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கூட்டம் – கடைசி வரை கட்டுக்கோப்பாக இருப்பது வியப்பு. அதுவும் கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே சினிமா டிக்கெட் வாங்க வந்த கூட்டம் போல் கூடியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன். புரட்சிகர அமைப்பில் நடைபெறுகிற கூட்டத்தைக் கேட்பதற்கு 50, 100 பேர்கள் தான் இருப்பார்கள் என்று கருதினேன். ஆனால் இப்படி ஆயிரக்கணக்கில் இளைஞர் கூட்டம் காத்திருக்கும் என நான் எண்ணவே இல்லை.

maduravoyal rsyf meetingகம்யூனிஸ்டுகள் இன உணர்வாளர்களாக இருந்து நான் பார்த்ததில்லை. ஆனால் புரட்சிகர அமைப்பினர், சோசலிசம் பேசுகிறவர்கள், மொழி, இன உணர்வாளர்களாக இருக்கிறீர்கள் என்பது பாராட்டுவதற்கு உரியது.

மொழிவழியாக ஒரு இனம் தன்னை அடையாளம் கண்டு கொள்வது இயல்பானது. பிறப்பிலேயே மொழிவழியாக நாம் தமிழர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட நாகரிகம் நம்முடையது.

பார்ப்பனர்கள் – வேத நாகரிகத்தை சேர்ந்தவர்கள். திராவிடம் என்பது ஆரியத்திற்கு மாற்று. உனக்கு வேத நாகரிகம் – எங்களுக்கு சிந்து சமவெளி நாகரிகம், உனக்கு செம்மொழி சமஸ்கிருதம் – எங்களுக்கு தமிழ், உனக்கு சிறந்த பெண் – பாஞ்சாலி – எங்களுக்கு கண்ணகி, உனக்கு வேதம் – எங்களுக்கு திருக்குறள், உனக்கு கீதை – எங்களுக்கு சங்க இலக்கியம், உனக்கு ஆயுர்வேதம் – எங்களுக்கு சித்த மருத்துவம்.

எவண்டா இன்றைக்கு சமஸ்கிருதம் பேசுறான்? பெரிய சங்கராச்சாரியாரோடு அது செத்து தொலைந்தது. கோவிலில் கிளிப்பிள்ளை போல பேசுகிறார்கள் சமஸ்கிருதத்தை. நமது பூசை முறை வேறு, (எல்லாவற்றையும் கழுவி பூவிடுவது, லிங்க வழிபாடு) அவனது பூசை முறை வேறு. (யாகம், அக்னி வழிபாடு) உன்னுடைய கடவுளை இழந்துவிட்டாய், எங்களுடைய கடவுளை பற்றிக் கொண்டாய். எங்கள் கருவறையில் உனக்கென்ன வேலை.

ஆரிய மேட்டிமையை, சமஸ்கிருத மேலாண்மையை எதிர்த்தால் ஒழிய நாம் சுயமரியாதை வாழ்வை பெற முடியாது. திருவனந்தபுரத்தில் சென்று விவேகானந்தர் – we are all hindus – என்ற போது We are not hindus என்றார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. பாரதி- தமிழை பாராட்டினாலும் அடிப்படையில் பார்ப்பனன். அவன் சமஸ்கிருதத்தை தெய்வ பாஷை என்கிறான். ஆரியத்தைவிட மேலாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். சமஸ்கிருதம் செத்துத் தொலைந்து வெகு காலமாகிவிட்டது. அதில் நவீன அறிவியல், தொழில்நுட்பம், எதுவும் இல்லை.

பாரதியின் உள்மனதில் ஆரியர்கள் தான் அறிவு பரம்பரையினர். நமக்கு பாரதி தாசன் உள்ளார். அவர் கூறியது போல விழிப்புற்று எழுவோம்!”

  • //இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் – சோசலிசத்தின் மீது பற்று கொண்ட கூட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கூட்டம் – கடைசி வரை கட்டுக்கோப்பாக இருப்பது வியப்பு//

   நாட்டிற்கு வறுமை வரப்போகிறது என்பதை உணர்த்த வில்லையா ?

   • மிகச் சரி! அம்பானி – அதானிகளின் நாட்டிற்கும், அந்த நாட்டையே பாட்டாக பாடும் கவிராயர்களின் மனக் கோட்டைக்கும் வறுமை நிச்சயம்!

   • ஓய் . . . உங்களுக்கு எதிரா .. உங்க சமஸ்கிருதத்துக்கு எதிரா பேசிட்டா ஒடனே வரும வரப்போறதுன்னு …. பூணூல புடிச்சிண்டு சாபம் உடுறேள இது நோக்க நன்னா இருக்கா..?

    இப்படி சாபம் உட்டு உட்டே தான் ஒய் எவன் ஆட்சிக்கு வந்தாலும் உம்மவால்லாம் சேப்படியா ஆண்டுகிட்டிருக்கா…

    எப்பதான் இந்த ஜனங்க தன்ன கட்டிப்போட்டிருக்க பூணூல அத்து எறியப்போறாங்களோ…

 1. ஆரிய மற்றும் திராவிட கலாச்சார வேறுபாடுகளை தெளிவான கோடுகள் வரைந்து பழ. கருப்பையா அவர்கள் உணர்த்தி இருக்கிறார். இவற்றுக்கிடையேயான வேறுபாட்டை மங்க செய்து இரண்டும் ஒன்றே என்று பார்ப்பன அறிஞர்கள் கூறி வருகிறார்கள். திராவிட கலாச்சாரம் தாழ்வானது; எங்களுடையது உயர்ந்தது என்று முன்பு போல் சொல்வதில்லை. இரண்டும் ஒன்றே என்றும்; இந்து கலாச்சாரத்தின் பன்மைத்துவம் தான் அந்த வேறுபாடுகள் என்றும் அனைத்தையும் தன்மயப்படுத்தும் நிலையில் இருந்து பேசி வருகிறார்கள்.

 2. திராவிடம் என்பதே சமஸ்க்ரித சொல். அது பஞ்ச திராவிட பிராமணர்களை குறிக்குள் சொல். எடுத்துக்காட்டு Radhul Dravid. சங்க இலக்கியத்தில் திராவிடம் என்ற சொல் கிடையாது. பழத்துக்கு இதுகூட தெரியலையே.

  • ஒரு வார்த்தை ஆயிரம் பொருட்களை சுட்டிக் காட்டுவதாக அமையலாம். அசோகரின் காலத்திற்கு முட்பட்ட, பிராமியிலிருந்து வேறுபட்ட எழுத்துவகைகளின் ஆதாரம் பல இடங்களில் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. அசுகோ பர்போலாவின் ஆராய்ச்சிகள் சிந்து சமவெளி நாகரீகம், ஆரிய நாகரீகத்தில் இருந்து மாறுபட்டது என எடுத்துக் கூறுகின்றன.

  • ஓய் சுத்திரன் என்பதே சமஸ்கிருத சொல்தான் அதுக்காக உங்க வருணாசிரம கொள்கை ஞாயமானதுன்னு சொல்ல முடியுமா? நீங்கதான் டிவி, பத்திரிகைன்னு ஆரம்பிச்சு, பிற ஊடகங்களையும் ஆக்கிறமிச்சு, உம்ம பாஷைய பறப்புறேள் அது போதாதுன்னு இப்ப சமஸ்கிருத திணுப்ப நேரடியாவே நடத்துறேள். இத்தன சவால்களையும் மீறி உம்ம மோழிமாதிரி செத்து ஜடமாகாம உயிரோட வாழ்ந்துன்டு இருக்குதே தமிழ் அதனோட மகிமைக்கு முன்னால இந்த சமஸ்கிருதம் ஒரு —– குக்கூட சம்மில்ல. அதனாலதான் திராவிடம்ங்கிற ஒற்ற சொல்ல புடிச்சு தொங்கிண்டு இருக்கிறேள்.

 3. கீதையும் தேவை குறளும் தேவை.இதில் எங்கே முரண்பாடு. அநாவசியமான சர்ச்சை.

  • பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பது திருக்குறள்
   நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன் என்பது கீதை
   சர்ச்சை அல்ல. போராட்டம். ஏகலைவர்களும், சம்பூகர்களும் போராடுகிறார்கள்

   • ரவி நீங்க சொல்ல வற்றது கொஞ்சம் விரிவா சொன்னா இன்னும் சரியா இருக்கும்.

    குறிப்ப ஏகலைவன் ஒரு S.T அதாவது Scheduled Tribes அதனாலதான் அவன் வில்வித்தைல சிறப்பா விளங்கிறது பார்பன இந்துமத கூட்த்தக்கு புடிக்காம தர்மத்த நிறைவேத்தி, கட்ட விறல கட் பண்ணிட்டா…

    ஆதார பூர்வமா அவ்வாளே வாயொளறி சொன்ன ஒரு ஏகலைவனத்தான் நமக்குத் தெரியும். ஆனா கண்ணுக்குத்தெரியாம கட்டவிரல், கை, கால், ஏன் தலையையே கூட இழந்துட்டு இந்துதர்மத்த வாழவச்ச ஏகலைவர்கள் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும்.

    இதையொல்லா மறைச்சிட்டு ஒரே வரியில

    கீதையையும், குறளையும் ஒரே தராசில் வைக்கும் பார்பனியத்தின் அயோக்கியதனமான தந்திரம் பயங்கரமானது.

    வாழ்த்துக்கள் ரவி.

    தொடர்ந்து பதிலளியுங்கள்.

 4. கானாரூனாவுக்கு இப்போதாவது புமாஇமு கூட்டம் பற்றித் தெரியவந்த வகையில் மகிழ்ச்சி

 5. karupiyavai kooti vanthathe muran padu.. ariya ammavuku kavadi thookitu.. enkha porathunu theriyama dmk pakkam othunkana alla puduchu koottiyanthu.. enna kodumai sir ithu

 6. காணொளியில் அவர் பேசியிருப்பதற்கும் நீங்கள் கட்டுரையில் சுருக்கி வெளியிட்டிருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது! பல இடங்களில் பொருளே மாறி விடுகிறது!

  சினிமா விரும்பி

 7. சினிமா விரும்பி. எனக்கு ஒன்றும் அப்படி தெரியவில்லை. காணோளியும், உரையும் ஒன்றாகதான் இருக்கின்றது.

 8. முழுக்க ஒரு முறை காணொளியைப் பார்த்து விட்டு அதன் பின் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் அறிவுடைநம்பி சார்! பல விஷயங்கள் கட்டுரையில் விட்டுப் போயிருப்பது தெரியும்!

  சினிமா விரும்பி

 9. பழ. கருப்பையாவா, நல்லது நல்லது, ஊழல் ஜெயலலிதாவை எதிர்க்க ஊழல் கருணாநிதியே சரி என்று முள்ளை முள்ளால் எடுக்க முனைந்திருக்கும் யோக்கியர் அல்லவா 🙂

  • பழ கருப்பையா மறுபடி உஜாலாவுக்கு மாறும் போது வேற மாதிரி பேசுவார்….

 10. நான் முழுவதும் காணொளியைப் பார்த்தேன். உரை மிகச்சிறப்பான முறையில் சுருக்கப்பட்டு இருக்கின்றது என்பது எனது தாழ்மையான கருத்து.

 11. பழ.கருப்பையா அ.இ.அ.தி.மு.க. வில் இருக்கும் போது சாதிய திமிருமிக்க ஒரு நபர்.. அவரை எப்படி மார்க்ஸிய அமைப்பு அழைத்து பேச வைத்தது….நாளை பாமக வையும் அழைத்து பேச வையுங்கள்…

 12. எனக்கு நீங்க எழுதுன “கருணாநிதி என்ன கடவுளா?” புக்குதான் பைபிள் மாதிரி அய்யா!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க