Tuesday, October 20, 2020
முகப்பு கலை கவிதை காவியைக் கரைக்கும் காவிரி !

காவியைக் கரைக்கும் காவிரி !

-

காவியைக் கரைக்கும் காவிரி!

cauvery-trichy
‘‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை”

‘‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை”
என,
மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால்
மகிழ்ந்து பாடப்பட்ட காவிரி!
இன்று,
‘‘சூழ்நிலைத் திரிந்து
கன்னட இனவெறி வாட்ட
காவிரி டெல்டா மீத்தேன் குடிக்க
கார்ப்பரேட் பணவெறி மூட்ட
தன் வாழ்நிலை இழந்து பாலையாக”
நம் கண்முன் காயும் காவிரி.

மங்கிய வாழ்வின் நினைவுகளாய்
மனதில் உறைந்த இரத்தம்
குடிக்க
அன்னை காவிரி மீதினிலே
ஆயிரமாயிரம் மணல் லாரி!

எடியூரப்பா
(எடியூரப்பா) திருட்டு ஊழல் சொத்தைக் காக்க திருநள்ளார் சனீஸ்வரனின் தீர்த்தம்

குறுவையை
கொலை செய்தது
இந்திய தேசியம்
இப்போது,
சம்பாவுக்கும் சாவு மணி

­­ஒரு சொட்டுத் தண்ணீரும்
தரமுடியாதென
சட்டவிரோத திமிரில் பேசுவது
கர்நாடகாவை ஆளும் காங்கிரசின்
அமைச்சர் மட்டுமல்ல
இந்தியாவை ஆளும் பா.ஜ.க
எடியூரப்பாவும்தான்!

திருட்டு ஊழல் சொத்தைக் காக்க
திருநள்ளார் சனீஸ்வரனின்
தீர்த்தம் கேட்குது,
உரிய நீரை தமிழகம் கேட்டால்
எடியூரப்பாவுக்கு நமச்சல் எடுக்குது!

ஊழல் சொத்துக்கு வரம் கேட்க
உனக்கு தமிழ்நாட்டு சாமி கேட்குது,
உரிய காவிரியின் வரவைக் கேட்டால்
உடம்பெல்லாம் சாமியாடுது,
வரும் கோபத்தில்
கோயில் மாடுகள்
சாணி சேர்க்குது!

bigotry and cow flesh
மாட்டுக்கு ஒன்று என்றால் நாட்டுக்கே கேடு என ஆளையே உரிக்கிறது ஆர்.எஸ்.எஸ் பரிவாரம்

காவிரிக் கரையில்
காங்கிரசுக்கு ‘தர்ப்பணம் கொடுத்து
காலம் பல ஆச்சு.
காவியே, இனி உனக்கும்
உரிய நேரம் வந்தாச்சு!

மாட்டுக்கு ஒன்று என்றால்
நாட்டுக்கே கேடு என
ஆளையே உரிக்கிறது
ஆர்.எஸ்.எஸ் பரிவாரம்
நம் ஆற்றுக்கு ஒன்று எனில்
ஆடக் காணோமே!
ஆளை ஏய்க்குது
‘இந்து தேசிய அரிதாரம்!

இல்லாத ராமனுக்கு
கோயில் கட்ட
இங்கிருந்து செங்கல் எங்கள்
இல் வாழும் காவிரிக்கு
எங்கே கர்நாடகாவில் உன் குரல்?

‘ராமஜென்ம பூமியை
மீட்க! வா என
மசூதியை இடிக்க
கடப்பாறையோடு வரச்சொன்ன
‘இந்து ஒற்றுமையே
காவிரி உரிமையை மீட்க
கபினியின் பக்கம்
எங்கே உன் கரசேவை?

‘தமிழ்த் தும்பி தருண் விஜய் கூட
கருநாடகா பக்கம் போய்
தமிழ்க் காவிரிக்காக
பறபறக்கக் காணோமே!

tarun_vijay_modi
‘தமிழ்த் தும்பி தருண் விஜய் கூட கருநாடகா பக்கம் போய் தமிழ்க் காவிரிக்காக பறபறக்கக் காணோமே!

அய்யன் வள்ளுவருக்கு
சிலை எடுப்பது இருக்கட்டும்
முதலில்,
அருமைக் காவிரிக்கு
ஒரு நிலை எடுத்துக் காட்டட்டும்
இந்தத் திடீர்த் தமிழ்க் காதலர்!

திருவள்ளுவருக்கு
கங்கைக் கரையில் அவமானம்
காவிரிக்கு
தேசிய நீரோட்டத்தால் ஊனம்.
எங்கே உங்கள்
‘இந்து ஒற்றுமை பொங்…கல்!

பிள்ளையார் சிலையைத் தூக்கிக்கொண்டு
கடலில் கரைக்க ஊர்வலம் போகும்
‘இந்து உணர்வு
காவிரியை அழைத்துக் கொண்டு வரமட்டும்
கால் மரத்துப்போகும் இரகசியம் என்ன?

மத்தியில் காவி ஆட்சி
காவிரிக்கு சிறை!
இனி
மகா கணபதியையும்
கொண்டு போய்
கர்நாடகாவிலேயே கரை!

மோடி
தேடித் தேடிப் பார்த்தாலும் காவிரிப் பக்கம் காணவில்லை ‘‘மன் கி பாத் மோடி!

தமிழக விவசாயி ‘இந்துவுக்கு
தண்ணீர் தராமல்
எந்த லஸ்கர் தடுக்குது?
உன் காவி அனுமார்தான்
எங்கள் காவிரிக்கும் வேட்டு வைக்குது!

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளே
‘இந்து ஒற்றுமை எங்கே வாழுது!

கங்கையை புனிதமாக்க பல கோடி
காவிரியைப் பிணமாக்க
கார்ப்பரேட் பா.ஜ.க ஜோடி!
தேடித் தேடிப் பார்த்தாலும்
காவிரிப் பக்கம் காணவில்லை
‘‘மன் கி பாத் மோடி!

cauvery-L-1
காவி தேசபக்…தீ…யில் பாரத மாதாவின் தலையும் எரியுது… காலும் எரியுது….

ஊரை ஏய்க்க இந்திய தேசியம்
ஊரை கெடுக்க இந்து தேசியம்
காவி தேசபக்…தீ…யில்
பாரத மாதாவின்
தலையும் எரியுது…
காலும் எரியுது….
காஷ்மீர் முதல் காவிரி வரை
சாயம் வெளுக்குது.

தமிழகக் ‘கோமாதாக்கள்
தண்ணீரின்றித் தவிக்குது,
கோமாதாவுக்கு ஒன்றெனில்
குதித்துவரும் காவிகளே…
உங்கள் கர்நாடகா ஆவிகளுடன்
கலந்து பேசி,
காவிரியைத் திறந்துவிடத் தடுப்பது
பாக்கிஸ்தான் சதியா?
பார்ப்பனிய சதியா?

பகர்மின்!
கோமாதாவின் பாங்கர்களே…!

– துரை.சண்முகம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. அருமையான கருத்து தொகுப்பு ஆர் ஆர் எஸ் தேச தூரோக கூட்டத்தின் முகத்திரையினை கிழிக்கும் வார்த்தைகள், எங்கே எங்கள் டேஷ்பக்தர்கள் ,

  2. நல்ல கவிதை ஆனால் நன்றிகெட்டவர்களுக்கு விளங்காது!

    நம் நாட்டுக்கு பாக்கிஸ்தான் எதிரியல்ல குப்பைகளாகிய இனவெறியர்களே! அணையை ஏன் உயர்த்தினார்கள்? குறுக்கே அணை போட்டு குடும்பத்தை கெடுக்கிறார்கள், தான் வாழ பிறரை கெடுக்கிறார்கள் கேடுகெட்ட மனிதர்கள், தமிழ் நாடு வளர்த்தால் அது நாட்டின் வளர்ச்சியல்ல என்று நினைக்கும் இவர்கள்தான் நாட்டின் வளர்ச்சியில் பங்குள்ளவர்களா? கூறு கேட்ட குப்பைகளை கூட்டி குற்ற கூட்டத்தில் போடவேண்டியது தானே? மனிதாபிமானம் இல்லாத மடையர்களுக்கு இருப்பது என்ன அறிவு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க