privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருத்துறைப்பூண்டி சமஸ்கிருத எதிர்ப்பு - விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை

திருத்துறைப்பூண்டி சமஸ்கிருத எதிர்ப்பு – விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை

-

1. புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து திருத்துறைப்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ttp-pvr-1ர்.எஸ்.எஸ. கிரிமினல்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பிறந்த கள்ளக்குழந்தையே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை! என்ற தலைப்பில் மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுக்க புரட்சிகர அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக பிரச்சாரம், போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக 17-09-2016 தந்தை பெரியாரின் பிறந்த நாளன்று திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வீச்சாக நடந்தேறியது.

புதிய கல்வி கொள்கையின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் பிரசுரங்கள் அச்சிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் இடையே விரிவான பிரச்சாரம் செய்யப்பட்டு பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.

மக்கள் அதிகாரம் தோழர்கள் மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை தமிழ் மண்ணை விட்டே விரட்டியடிப்போம் என உறுதி ஏற்றனர். மாலை 4.30 மணியளவில் மக்கள் அதிகாரம் தோழர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் தி.க. திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் தோழர் சித்தார்தனன், திருத்துறைப்பூண்டி தி.மு.க ஒன்றியத் துணைத்தலைவர் திரு எம்.என். ராஜா, சி.பி.ஐ–ன் ஒன்றியத் துணைத் தலைவர் தோழர் சந்திரசேகர ஆசாத், வி.சி.கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வி.த. செல்வன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திரு. ஜமால், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர். க. முத்துக்குமார், ம.தி.மு.க நகரச் செயலாளர் திரு. கோவி. சேகர், மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பனர் தோழர். மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ttp-pvr-4இவர்கள் அனைவரும் பார்ப்பனியத்தின் வரலாறு, புதிய கல்வி கொள்கையை அம்பலப்படுத்தியும், தங்களுக்குள் பல்வேறு கருத்துகள், கொள்கைகள் வேறுபாடு இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ. – பி.ஜே.பி. மாவெறி கும்பலை விரட்டியடிப்பதற்கு ஒன்று திரண்டுள்ளதாகவும், மக்கள் அதிகாரத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் பேசினர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயோனல் அந்தோனிராஜ் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது, “‘லார்டு’ மெக்காலே பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு ஆதரவாக கொண்டுவந்த கல்வி முறையே இன்றுவரை தொடர்கிறது, டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் குழுவின் அறிக்கையோ மெக்காலே கல்வி முறையோடு, காவி மயமாக்கும் சதித்திட்டத்தை அறங்கேற்ற முயற்சிக்கிறது” என்றும், சமஸ்கிருதத்தை திணிப்பதின் நோக்கமே, பிற்போக்குத்தனம், மூடத்தனம், அடிமைத்தனங்களைப் பரப்பி அதன்மூலம் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். பாரத பாரம்பரிய பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், எது பாரம்பரிய பண்பாடு? சம்பூகனை படுகொலை செய்ததை, வாலியை ஏமாற்றி கொன்றதை, ஏகலைவன் கட்டவிரலை வெட்டியதை, வர்ணாஸிரமத்தை சரியானது என்பதை திணிக்கவே சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கின்றனர்.” என்றும்

ttp-pvr-speakers-9“தமிழுக்கு தொல்காப்பியத்தில் இலக்கணம் எழுதும்போது, வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழியாக (எழுதா கிளவி) சமஸ்கிருதம் இருந்தது. தமிழ்மொழி “பிறபொக்கும் எல்லா உயிருக்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” போன்ற உயரிய பண்பாட்டை போதிக்கிறது” என்று சமஸ்கிருதத்திற்கும் தமிழ்மொழிக்கும் உள்ள போராட்டத்தையும், “1965-ல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மாணவர்கள் போராட்டத்தைப் போன்று இந்த புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் போராட்டம் நடத்தி முறியடிக்க வேண்டும்” என்றும் எழுச்சியுரையாற்றானார்.

திருத்துறைப்பூண்டி என்பது செங்கொடி இயக்கத்திற்கும், திராவிட அரசியலுக்கும் பெயர் பெற்ற ஊர். பல்வேறு கம்யூனிச இயக்கத் தலைவர்கள், தியாகிகளை அளித்த மண். ஆனால் தற்போதோ இடதுசாரி, முற்போக்கு அரசியலை பின்னுக்கு தள்ளி பிற்போக்கு சக்திகளான ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பல்கள் விரைவாக வளர்ந்து வரும் பகுதியாக மாறிவருகிறது. இப்பகுதியில் உள்ள வேலையில்லாத இளைஞர்களை பிடித்து பணம், பதவி என்று ஆசைக்காட்டி லும்பன் கும்பல்களை உருவாக்கிவைத்து அவர்களை தனக்கு அடித்தளமாக பயன்படுத்திக் கொள்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலை விரட்டியடிக்க மக்கள் அதிகார அமைப்பினர் நேருக்கு நேராக களத்தில் இறங்கி ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பலை ஒழித்துக்கட்ட அப்பகுதி அனைத்து ஜனநாயக, முற்போக்கு, சமூக அமைப்புகள் – கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டி நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் ஆர்.எஸ்.எஸ். –பிஜே.பி. கும்பலை எச்சரிக்கும் விதமாக இருந்தது. செங்கொடிக்கு புகழ்பெற்ற மண்ணில் புதிய இரத்தம் பாய்ச்சுவதாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம்,
திருவாரூர் – 9626352829.

2. விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை போராட்டம்

2016 செப்டம்பர் 17-ம் தேதி விஜயமாநகரம், வடவாடி, புவனூர், கட்டியநல்லூர், கோ.பவழங்குடி, மாத்தூர் பகுதியில் ஒரு வாரம் பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டி விஜயமாநகரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

tasmac-vdm-struggle-1அதன்படி 17-ம் தேதி காலை அனைவரும் அணிதிரட்டல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது 16-ம் தேதி இரவு கியு பிரிவு போலீசார், எஸ்.பி.சி.ஐ.டி, மப்டி போலீசு உட்பட அனைவரும் ஊரில் தங்கி வேலை செய்யும் தோழர்களை கைது செய்யும் வேலையில் ஈடுபட்டனர். காலையில் 9 மணி முதலே போலீசார் தெரு தெருவாக, வீடு வீடாக சென்று 10 க்கும் மேற்பட்ட முன்னணியாளர்களை கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில், பேருந்தில் செல்பவர்களை வழிமறித்து சோதனை செய்து போராட்டத்தில் கலந்து கொண்டால் கைது செய்து வேனில் ஏற்றுவேன் என்று மிரட்டினார்கள்.

உள்ளுர் அ.தி.மு.க கட்சி ஆள்காட்டி வேலையை செய்தது. குறிப்பாக டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் சேல்ஸ்மேன் இருவரும் அப்பகுதி முன்னணியாளர்களை வீடுகளை காட்டியும் அடியாள் வேலை செய்தனர்.

காலை 9 மணி முதல் 12 மணி வரை போலீசு தெரு தெருவாக சுற்றி வந்த்து. இந்த அனைத்து தடைகளையும் மீறி 300-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர். போலீசின் அச்சுறுத்தல் காரணமாக 86 பேர் கைதாகினர். அதன் பிறகு மேலும் இரு குழுக்களாக பிரிந்து முற்றுகை இட்டனர். காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை 200 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் 6 போலீசு காவலுக்கு நின்றது. போராட்டம் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டம் சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க