privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரEnglishமோடியை கண்டிக்கும் போஸ்டர் - பு.ஜ.தொ.மு - ஐ.டி தோழர்கள் கைது !

மோடியை கண்டிக்கும் போஸ்டர் – பு.ஜ.தொ.மு – ஐ.டி தோழர்கள் கைது !

-

பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு – பத்திரிகை செய்தி

காவிரி பிரச்சனையில் கன்னட இனவெறியை தூண்டி விட்டு அரசியல் செய்யும் பா.ஜ.க-வினரையும், பிரதமர் மோடியையும் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பக விநாயகம் உட்பட 3 பேர் நேற்று (20-09-2016) காலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தமிழ்நாடு திறந்தவெளி அவதூறு தடுப்பு சட்டம் பிரிவு 4a ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

cauvery-issue-modi-bjp-poster-2
ஜெயா போலீசுக்கு ஆத்திரமூட்டிய சுவரொட்டி

உண்மையில் சென்னை திறந்தவெளி அழகை பராமரிப்பதுதான் போலீசின் நோக்கமாயிருந்தால் மோடியின் பிறந்தநாளுக்கு போற்றி செய்தி ஒட்டியவர்கள், ஜெயலலிதாவுக்கு ஃபிளெக்ஸ் வைத்து சுவர்களில் படம் வரைந்து துதி பாடுபவர்கள், விநாயகர் சிலை வைத்து தெருக்களை ஆக்கிரமித்தவர்கள், ஜக்கி வாசுதேவ் ஆன்மீக வியாபார விளம்பரம் செய்தவர்கள், ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி விளம்பரம் ஒட்டியவர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் சினிமா போஸ்டர்கள், டைம் பாஸ் முதலான பத்திரிகை விளம்பரங்கள் தினமும், வாரந்தோறும் ஒட்டப்பட்டு வருகின்றன. அவற்றையும் போலீஸ் கண்டு கொள்வதில்லை. ஆனால், உண்மையில் மோடி-பா.ஜ.க-வின் கன்னட வெறி அரசியலை அம்பலப்படுத்தியதுதான் இந்த போலீஸ் நடவடிக்கையின் பின்னணி என்பது “மோடியையே விமர்சித்து போஸ்டர் ஒட்டுனா விடுவோமா” என்று தோழர்களை காவல் நிலையத்தில் போலீசார் விமர்சித்தது வெளிப்படுத்தியது.

நமது நாடு ஜனநாயக நாடு என்பது பெயரளவில்தான்,அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிப்பவர்கள் மீது போலீஸ் வழக்கு பாயும் என்பதுதான் நடைமுறை என்பது இந்த வழக்கின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயா அரசின் சாராய விற்பனையை விமர்சித்து பாட்டு பாடிய தோழர் கோவன் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது, நாடாளுமன்றத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டது, மமதா பானர்ஜியை கிண்டல் செய்த கார்ட்டூனை பகிர்ந்து கொண்டதற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மீது வழக்கு போடப்பட்டது என அணிவகுக்கும் நூற்றுக் கணக்கான வழக்குகளின் வரிசையில் இதுவும் இணைந்துள்ளது. ஜெயலலிதா, மமதா பானர்ஜியை போன்ற தனிப்பட்ட சர்வாதிகாரியாக மட்டுமில்லாமல், ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிச, மதவெறி அமைப்பின் பிள்ளையான மோடியின் ஆட்சியில் இந்த நடைமுறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19-ம் தேதி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தமது அதிகாரத்தை பயன்படுத்தி போலீசை ஏவி விட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். தம் மீதான விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ள திராணியும், அடிப்படையும் அற்ற பிற்போக்கு, மதவாத, இனவாத,சாதி வெறி கும்பலான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்த அதிகாரத் திமிருக்கு பகுத்தறிவு கோலோச்சும் தமிழகத்தின் உழைக்கும் மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். ஏற்கனவே, சுவாதி கொலை, ராம்குமார் சிறையில் மரணம் என பா.ஜ.க கிரிமினல் கும்பல்களின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாசிச நடைமுறைகளிலும், பார்ப்பனிய திமிரிலும் மோடியை விஞ்சும் ஜெயாவின் காவல் துறை இந்துத்துவ சக்திகளின் ஏவலுக்கு கைகட்டி சேவை செய்கின்றது. ஜெயா அரசின் காவல்துறையின் இந்த நடவடிக்கையை பு.ஜ.தொ.மு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்தியில் பா.ஜ.க, மாநிலத்தில் அ.தி.மு.க என்பது உண்மையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பரிவாரங்களின் ஆட்சி நடக்கிறது என்பதுதான் என உணர்ந்து ஜனநாயக மறுப்பு இந்துத்துவ சக்திகளை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என்று உழைக்கும் மக்களை அறைகூவி அழைக்கிறது.

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Press release – NDLF I.T. Employees Wing

Organizer of NDLF – IT Employees Wing Comrade Karpaga Vinayagam and two others were arrested by police on 20-09-2016 morning for pasting posters condemning BJP and prime minister Modi for indulging in kannada chavinistic politics on Cauvery issue. A case was filed under section 4 (A) of Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act 1959.

cauvery-issue-modi-bjp-poster-1
NDLF poster

If the intention of the police was indeed prevention of disfigurement of open places, cases would have been filed on those who put up posters singing Modi’s praise on his birthday, those who put up flex banners praising Jayalalithaa, those who set up hundreds of Vinayaga idols encroaching streets, people who advertised spritual marketing gurus like Jaggi Vasudev, or those who put up posters for IAS training academy etc. The police is also not bothered by hundreds of cinema posters and advertisements for magazines like “Time Pass” depicting women in obscene manner adorning the walls of Chennai. Police revealed their real intention for arresting NDLF comrads by remarking “How dare you criticize Modi himself”.

This police action clearly shows that people of this country do not enjoy democratic rights. Anyone criticising those in power are implicated in false cases using laws which are meant for some other purpose. This was demonstrated in hunderds of cases including that of Comrade Kovan who was arrested under sedition act for criticising liquor sales by Jayalalithaa government, arrest of Cartoonist Aseem Trivedi for depicting the Parliament in its true light, foisting of cases on Professsor Ambikesh Mahapatra for sharing a cartoon lampooring Mamta Banerjee. Unlike Jayalalithaa and Mamta Banerjee, Modi’s dictatorial tendancies are bolstered by the fascist, communal Sangh parivar organizations. Hence, oppression and suppression of dissenting voices has reached a peak under Modi’s rule at the center.

We charge that having seen the posters and the public’s anger towards Modi-BJP on the 19th RSS-BJP thugs have misused their power as the ruling party in center and instructed police to prevent further spread of the message among people. Not able to face criticism, not having a leg to stand on for their reactionary, communal, racist, casteist politics, RSS-BJP indulges in misuse of power. The democratic, rationalist people of Tamil nadu will give a fitting reply to these high handed actions.

NDLF strongly condemns the action Tamil Nadu police under the control of fascist, brahminical Jayalalithaa which submits to the dictates of Hindutva thugs. We call upon all democratic forces to realise that BJP rule in center, ADMK rule in state in reality means Sangh Parivar rule in both and to struggle against the anti-democratic, anti-rationalist communal and casteist Hindutva forces.

New Democratic Labour Front – IT Employees Wing