Tuesday, June 18, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

-

1990-க்குப் பின் எண்ணற்ற ஊரடங்குகளை காஷ்மீர் கண்டிருக்கிறது. ஆனால், ஈத் பண்டிகை அன்றும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாதது இந்த ஆண்டில்தான். செல்பேசிகள், இணையம் ஆகிய தகவல் தொடர்புகள் அனைத்தும் ஈத் பண்டிகையையொட்டி 72 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டிருக்கின்றன. ஆளில்லா உளவுக்கருவிகளான டிரோன்கள் விண்ணிலிருந்து கண்காணிக்கின்றன. இதுதான் இன்றைய காஷ்மீர்.

kashmiri-struggle-against-indian-oppression-3
கோப்புப் படம்

காஷ்மீர் மீதான ஒடுக்குமுறை, பாலஸ்தீனத்தைப் பிரதிபலிக்கிறது. பண்டிட்டுகளுக்கான தனிக் காலனிகள், இராணுவத்தினருக்கான குடியிருப்புகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்துமயமாக்கும் பாரதிய ஜனதா அரசின் முயற்சி இஸ்ரேலின் அணுகுமுறையை அப்படியே ஒத்திருக்கிறது. போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை மட்டுமின்றி, இழிபுகழ் பெற்ற பெல்லட் ரவைகளையும் இந்திய அரசு இஸ்ரேலிடமிருந்துதான் இறக்குமதி செய்திருக்கிறது. புர்ஹான் வானியின் கொலையைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 10,000 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். 73 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 700 இளைஞர்களின் பார்வை பறிபோயிருக்கிறது.

“கடுகு அளவே உள்ள இந்த காரீய ரவை ஒன்றை உடலிலிருந்து அகற்றுவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. விழிகளில் பாய்ந்திருக்கும் இந்த ரவைகளை அகற்றுவது எப்படி என்று எங்களுக்கு எந்த மருத்துவப் பாடநூலிலும் சொல்லித் தரப்படவில்லை” என்று கூறிக் கண்ணீர் வடிக்கிறார்கள் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள். இந்தக் கொடூரமான அடக்குமுறை உலகெங்கும் அம்பலப்பட்டுப் போனதன் காரணமாக, பெல்லட் குண்டுகளின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, அதற்கு மாற்று உத்திகளை யோசிப்பதாகக் கூறினார் ராஜ்நாத் சிங். சொல்லி சில நாட்களிலேயே ஒவ்வொன்றிலும் 635 ரவைகள் கொண்ட ஒரு இலட்சம் தோட்டாக்கள் சி.ஆர்.பி.எப். படையினருக்கு வந்து சேர்ந்தன.

இருப்பினும், தோட்டாவால் துளைக்கப்பட்ட மக்கள் “ஆசாதி..ஆசாதி” என்று முழங்க, துப்பாக்கி ஏந்திய பா.ஜ.க. அரசின் இராணுவம் அவர்களின் முன்னே மண்டியிடும் காட்சியை நாம் காண்கிறோம். “முதல்வர் மெகபூபாவை உங்கள் மகளாக நினைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்று ஹுரியத் தலைவர் கிலானிக்கு கடிதம் எழுதுகிறது ஆளும் பி.டி.பி. கட்சி. காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370-வது பிரிவை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று பேசிவரும் பாரதிய ஜனதாவின் உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், “அரசியல் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு யாருடன் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறோம்” என்று கூறி, 370-வது பிரிவை விழுந்து கும்பிடுகிறார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஆத்திரம் கொண்ட முதல்வர் மெகபூபாவை அடக்க முயன்று, அனைவர் முன்னிலையிலும் அசடு வழிகிறார் ராஜ்நாத் சிங். அவருடன் காஷ்மீர் சென்ற யெச்சூரி, ராஜா உள்ளிட்ட சர்வ கட்சி பிரமுகர்கள் ஹுரியத் தலைவர் கிலானியின் வீட்டு வாசலுடன் திருப்பி அனுப்பப்படும் காட்சி எல்லா ஊடகங்களிலும் சந்தி சிரிக்கிறது. “உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் போராட்டத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று முகத்தில் அடித்தாற்போல அவர்கள் கூறிய பதில், ஒருமைப்பாட்டு புரோக்கர்களை நிலைகுலைய வைக்கிறது.

எனினும், நம் கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, அடிபணிய மறுக்கும் அம்மக்களின் வீரத்தை, பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்து ஒரு முன்மாதிரியை உருவாக்கிக் காட்டியிருக்கும் அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பைப் புரிந்து கொள்ளும் அறிவோ, அங்கீகரிக்கும் பக்குவமோ, குற்றவுணர்வு கொள்ளும் இதயமோ இல்லாமல், இந்த அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள். இதுதான் நாட்டுப்பற்று என்றால், அதைக் காறி உமிழ்வோம்!
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

 1. Are they fighting for freedom from india to establish a ” secular, democratic, free country” or ‘communist/socialist’ country? No they want a sharia imposed Islamic state. How can one support such a system. I think it is foolish to believe that there is no religious angle in this so called freedom fight.It is true that the sufferings by the ordinary kashmiris are unbearable but the fact is they are misguided by some religious nuts like Geelani and Asiya Andrabi whose own children are studying and working in other parts of the world whereas the ordinary are pelting stones and taking pellets.

  • So your argument is, some nuts are misguiding poor Kashmiris and because of that Goverment of India killing ordinary Kashmer people. Am I correct ? IF they are fighting for freedom from india to establish a ” secular, democratic, free country” or ‘communist/socialist’ country then we can accept it. AH……

    • Mr. ramaan, You are accepting this statement.”some nuts are misguiding poor Kashmirs and because of that Government of India killing ordinary Kashmir people” Am I correct ? Please do not hide and answer my question.

     • //some nuts are misguiding poor Kashmirs //

      கண்டிப்பாக. தனி நாடு கிடைத்துவிட்டால் நாட்டில் பாலரும் தேனாறும் ஓடும் என்று ஒரு நம்பிகையை விதைக்கிறார்கள் . மத அடிப்படையில் அவர்கள் “நாம் வேறு இந்தியர்கள் வேறு ” என்று எண்ண வைக்கப்படுகிறார்கள் .

      தனி தமிழ்நாடு கோரிக்கை எழுந்த போதும் அப்படிதான் . இதே மாதிரியான சிந்தனை முன்வைக்கப்பட்டது .

      ஒரு வேலை தனி நாடு அமைந்தால் நமக்கு வாழ்வில் ஏற்றம் வருமோ என்று ஏழைகள் சிந்திப்பார்கள். காஸ்மீரில் ராணுவம் இருப்பதால் அசவுகரியமாக உணருபவர்கள் தனி நாடு கிடைத்துவிட்டால் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று நப்பாசை கொள்கிறார்கள் .

      ராணுவம் சென்று விட்டால் , மதவாத இயக்கங்கள் காசுமீரை ஆக்கிரமிக்கும் . மதவாத இயக்கங்கள் ரஷ்யாவை வென்றெடுத்து ஆப்கானில் சுதந்திரம் பெற்றன.அதன் பின்னர் என்ன ஆனது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

      ஸ்காட்லாஅந்து ஏன் தனி நாடு வேண்டாம் என்று கூறியது என்பதையும் படித்து பாருங்கள் .

      பல் வேறு இனக்குழுக்கள் ஒன்று இணைந்து இசுலாமியர் பெரும்பான்மை உள்ள மதச்சார்பற்ற நாடு உள்ளதா ? பங்களாதேசும் , துருக்கியும் ஒரு மொழி , ஒரு இனம் என்பதால் சாத்தியப்பட்டது .

      இந்தியா போன்ற பல் வேறு நாடுகள் பல் வேறு இந குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படும் நாடுகளுக்கு உள்ள பிரச்சினை எளிது அல்ல

      //Government of India killing ordinary Kashmir people//

      ராணுவம் தன்னிச்சையாக பொது மக்களை கொன்று குவித்து மகிழ்ச்சி அடைகிறது என்று சொல்கிறீர்கள்? இந்திய ராணுவத்தில் பஞ்சாபி தமிழர் என்று பல இன குழுக்களின் மக்கள் தான் பணியாற்றுகிறார்கள். நூறு சாதம் ஐடியல் அமைப்பு என்று ஒன்று கிடையாது . கரப்ட்டேட் பேர்வழிகள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் . தவறுகள் நேரிடலாம் அதற்காக ஒட்டு மொத ராணுவமும் அப்படிதான் செய்கிறது என்று அவதூறு பரப்புவது விஷமத்தனமானது

      • Thank you for your reply. Do you agree with that the people who should decide their own fate ?

       “ராணுவம் தன்னிச்சையாக பொது மக்களை கொன்று குவித்து மகிழ்ச்சி அடைகிறது என்று சொல்கிறீர்கள்? இந்திய ராணுவத்தில் பஞ்சாபி தமிழர் என்று பல இன குழுக்களின் மக்கள் தான் பணியாற்றுகிறார்கள். நூறு சாதம் ஐடியல் அமைப்பு என்று ஒன்று கிடையாது . கரப்ட்டேட் பேர்வழிகள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் . தவறுகள் நேரிடலாம் அதற்காக ஒட்டு மொத ராணுவமும் அப்படிதான் செய்கிறது என்று அவதூறு பரப்புவது விஷமத்தனமானது”

       Please note that I never stated anything about military yet. you are agreeing with that in Kashmir, Indian military killing innocent people. I never ever heard about an army was trained to establish peace and harmony among people. I new one thing clearly that every military forces in the world was trained to kill, defeat and win. But I agree with your statement that நூறு சாதம் ஐடியல் அமைப்பு என்று ஒன்று கிடையாது . கரப்ட்டேட் பேர்வழிகள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் . தவறுகள் நேரிடலாம்”

       தனி நாடு கிடைத்துவிட்டால் நாட்டில் பாலரும் தேனாறும் ஓடும் என்று ஒரு நம்பிகையை விதைக்கிறார்கள் . if you are saying this then WHY DID YOUR GRAND PARENTS FIGHT FOR FREEDOM FROM BRITISH ESTABLISHMENT. And, are you saying that Our elders fought for ONLY MILK and HONEY. Get me an answer my friend. THE SPIRIT OF FREEDOM COMING FROM THE SOUL. THE IDEA OF FREE FROM ALL OPPRESSION EMERGE FROM THE HEART. I DECIDE MY OWN FATE IS MY BIRTH RIGHT. Expecting more from you.

       • //Do you agree with that the people who should decide their own fate ?//

        Yes. That is enabled by democracy. Tamils or Punjabis are not ruling them. Do they?

        //தனி நாடு கிடைத்துவிட்டால் நாட்டில் பாலரும் தேனாறும் ஓடும் என்று ஒரு நம்பிகையை விதைக்கிறார்கள் . if you are saying this then WHY DID YOUR GRAND PARENTS FIGHT FOR FREEDOM FROM BRITISH ESTABLISHMENT//

        You think you have asked smart question? If you cant understand the logic you are dumb.

        //THE SPIRIT OF FREEDOM COMING FROM THE SOUL. THE IDEA OF FREE FROM ALL OPPRESSION EMERGE FROM THE HEART//

        Great! Where will you put your boundary ?
        geography/race/linguistic/cast/village/house?

        By the way you are asking freedom for Kashmirs but not for your people?
        Enjoying the slavery?

        //Expecting more from you//
        I am not here to entertain you.

        • Hellooooooooooooooo RAMAAN,

         You can not simply ignore my questions. Answer me first. There are lots of people reading VINAVU and every one knows who you are. By the way why are you so rude to me ??????? –

         “You think you have asked smart question? If you cant understand the logic you are dumb”

         If you want to prove your arguments are correct then you have to answer in a polite way. I still believe that we can have a decent discussion here.

         “By the way you are asking freedom for Kashmirs but not for your people?
         Enjoying the slavery?”

         This is not the answer for my question Mr. RAMAAN. I know that you are trying to identify me who am I ? But, this is not a topic to discuss here. I expect more from you in a civilized manner. ANSWER MY QUESTIONS FIRST. Thank you my friend.

  • What the Kashmiri’s wishes are simple and straight forward.They want the UN resolutions concerning Kashmir to be implemented.The Kashmiri’s are mostly influenced by Sufism, which is moderate form of Isam.After 70 years (approx),the Indian Government and the people of India failed to inculate a sense of belonging to India.This is the major lapse of us.If we do say Kashmiri’s are misguided by some religious elements, then Iam afraid we are not aware of the ground reality.The sorry state of affairs is the lack or the failure to evoke any strong reaction from the Indian’s for their sufferings.This sort of attitude further alienates them from the mainstream of India.

 2. பொதுவாக ஒரு பழமொழி உண்டு குரங்கு கையில் பூ மாலை கொடுத்தால் என்ன செய்யிமோ அதைதான் இன்று பிரதமர் முதல் அமைச்சர்கள் அதிகாரிகள் மாநிலங்களை ஆளும் முதல்வர்கள் வரை செய்து கொண்டுயிருக்கின்றர் இவற்றையொல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டோ அல்லது அதற்கு இசைவாக இருந்து கொண்டு இருக்கிறது நீதிமன்றம்

 3. You can’t say entire Kashmir supports freedom from India. There are loads of people taking part in indian elections and are ok with it.
  Just because few minority misguided people go about creating trouble we can’t give up on Kashmir….

 4. உங்கள் வாதம் சரியே. இதற்கு என்ன தீர்வு என்பதை தெளிவாக “வினவு” ஒரு கட்டுரையில் கூற வேண்டும்.
  -> ராணுவம் தனிப்பட்டு செயல்படுவது அல்ல. அது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதாகும். இது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. ஏன் ஸ்டாலின், லெனின் & அமெரிக்கா அரசாங்கம் அனைத்தும் அவ்வாறுதான் செயல்படும். எனவே ராணுவத்தை குறை கூறுவது நியாயமில்லை.
  -> தீர்வை கூறும்போது “புரட்சி” ஒன்றே வழி என்பதை தவிர்த்து சாத்தியமான ஒன்றை (தற்போது) கூறவும்.
  -> காஷ்மீரிகள் பொது வாக்கெடுப்பில் தனி நாடோ அல்லது பாகிஸ்தானுடனோ சேரும்படி ஆதரவு தெரிவித்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? அதன் எதிர்காலத்தை நினைவில் கொண்டு கூறுங்கள்.
  -> காஷ்மீர் பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்று தெரியாமல் விழிக்கும் என்னை போன்ற பலருக்கு புரியும்படி ஒரு விளக்கம் தாருங்கள். (இறந்த கால நிகழ்வுகளை விட, எதிர்காலத்தை மனதில் கொண்டு விளக்கம் அளியுங்கள்.
  பி.கு நான் புரட்சியையும், கம்யூனிசத்தையும் பெரிதும் நம்புபவன், விரும்புகிறவன்.

 5. மனம் சுத்தமாக இருந்தால் ஐ.நா.தலைமையில் காஸ்மீர மக்களின் கருத்துக் கணிப்பு வாக் கெடுப்பை நடத்தி முடிவு செய்யலாமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க