Saturday, September 14, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் !

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் !

-

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் என நான் நம்புவதேன்?

பிரிவினையின் போது நிலவிய கொந்தளிப்பான சூழலின் விளைவாக எனது தாய், அவளது பிறந்த ஊரான ராவல்பிண்டியை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன் பின் அவள் அங்கே திரும்பவே இல்லை. அவளுக்கு 75 வயதான போது – ஒரு வேளை சாத்தியப்பட்டால் – அவளது பிறந்த ஊருக்கும் அங்குள்ள வீட்டுக்கும் அழைத்துச் செல்வதே மிகச் சிறந்த பரிசாக இருக்கும் எனக் கருதினேன்.

எனது உத்தேசமான திட்டத்தை பாகிஸ்தானில் உள்ள நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.  அவர்கள் உடனே அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றனர். “அவரது கடவுச் சீட்டை மட்டும் வாங்கி விடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர். எனது பெற்றோர் மற்றும் மற்ற குடும்பத்தினருக்காக கடவுச் சீட்டு கோரி விண்ணப்பித்தேன்.  இந்த நடைமுறைகளெல்லாம் சுலபமாக முடிந்தது ஆச்சரியம்தான்.  முன்பதிவு செய்து எங்களது விமான பயணத்தைத் துவங்கினோம்.

அன்பான வரவேற்பு

Harsh-Mander-1
ஹர்ஷ் மந்தேர்

விமானம் லாகூரில் இறங்கியது. விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். என் அம்மா துவக்கத்தில் கொஞ்சம் பதட்டத்தோடு இருந்ததை கவனித்தேன். நாட்டிலிருந்து வன்முறையால் விரட்டியடிக்கப்பட்ட பழைய நினைவுகளாக இருக்க வேண்டும்; அல்லது இன்றைக்கு இதுவும் ஒரு அந்நிய நிலம் என்கிற நினைவாகவோ இல்லை பல இந்தியர்கள் நினைப்பது போல் எதிரியின் நாடு என்பதாகவோ நினைத்திருக்கலாம்.

இஸ்லாமாபாத் நோக்கிய பயணத்தின் போது, தனது குழந்தைப் பருவத்து பஞ்சாபி மொழியை எனது நண்பர்கள் பேசக் கேட்டதாலும், புதிய இடத்தை வேடிக்கை பார்த்து வந்ததாலும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததை கவனித்தேன். இஸ்லாமாபாத் என்கிற நகரமே அவளது பஞ்சாப் நாட்களில் கிடையாது.

இஸ்லாமாபாத்தில் தமது பெற்றோருடன் வசித்து வந்த நண்பர்கள் பலர் வீடுகளுக்கு அழைத்தனர். எனது நண்பர்கள் பஞ்சாபி பாடல்கள் மற்றும் கவிதைகளால் மாலை நேரங்களை அலங்கரித்தனர்; அதை என் பெற்றோர் இரசித்தனர்.

எனது தாயாருக்கு மேலும் ஒரு கோரிக்கை இருந்தது. தான் குழந்தையாகக் கழித்த ராவல்பிண்டியின் அந்தப் பழைய இருப்பிடத்தை அவர் பார்க்க விரும்பினார். அதே போல தான் படித்த புகழ்பெற்ற ராவல்பிண்டி கோர்டான் கல்லூரியைக் காண எனது தந்தையும் விரும்பினார்.

வீடு திரும்பல்

தான் சிறுமியாக இருக்கும் போது வசித்த காலனியின் பெயர் காவல் மண்டி (Gawal Mandi) என எனது தாயார் நினைவுகூர்ந்தார். எனது நண்பர்களுக்கு அந்த இடம் பரிச்சயமாக இருந்தது; இப்போது அது உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பகுதியாக உருமாறியிருந்தது. நாங்கள் அங்கே சென்ற போது எனது தாயார் தனது பழைய வீட்டை கண்டு பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அது முடியாத காரியமாகத் தெரிந்தது.

அநேகமான வீடுகள் புதிதாகவும் நவீன பாணியிலும் கட்டப்பட்டவைகளாக இருந்ததால், அந்த இடமே புதிதாக இருந்தது. தங்கள் குருத்வாரா இருந்த கட்டிடத்தை எனது தாயார் கண்டுபிடித்தார். தற்போது அது ஒரு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது.  நாங்கள் அவரது பழைய வீட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அநேகமாக நம்பிக்கை இழந்திருந்தோம். இத்தனை ஆண்டுகள் கழித்து அது இன்னமும் நீடித்திருப்பது சாத்தியமில்லை என்று நம்பினோம்.

இந்தியர்களை மாலையுடன் வரவேற்கும் பாகிஸ்தானியர்கள்
இந்தியர்களை மாலையுடன் வரவேற்கும் பாகிஸ்தானியர்கள்

அங்கிருந்து கிளம்பும் சமயத்தில் எனது தாய் ஒரு பழைய வீட்டின் பலகணியில் இருந்த குமிழ் வடிவ அலங்காரத்தை நோக்கிக் கைநீட்டினாள். “எனக்கு மிக நன்றாக அது நினைவிருக்கிறது. எனது தந்தைக்கு அந்த அழகான வடிவமைப்பு குறித்து மிகவும் பெருமையாக இருந்தது. இந்த மாதிரி அழகான அலங்காரம் அந்தப் பகுதியில் எந்த வீட்டிலும் இல்லை என்று அவர் சொல்வார்” என்றாள் அவள்.

நாங்கள் அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த நடுத்தர வயது மனிதர் நாங்கள் யாரைக் காண வந்துள்ளோம் என விசாரித்தார். “திடீரெனக் குறுக்கிட்டு தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நான் எனது குழந்தைப் பருவத்தில் இந்த வீட்டில் தான் வசித்தேன். தேசப் பிரிவினையால் நாங்கள் இந்தியாவுக்குச் செல்வதவற்கும் முந்தைய காலம் அது. இது தான் எங்கள் வீடாக அப்போது இருந்தது என நினைக்கிறேன்” என்றாள் என் தாய்.

அந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக பதிலளித்தார். ”அம்மா, ஏன் இது உங்கள் வீடாக இருந்தது என்று சொல்கிறீர்கள்?” என்றவர், “இப்போதும் இது உங்கள் வீடாகத் தான் இருக்கிறது. தயவு செய்து உள்ளே வாருங்கள்” என்று எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அது தான் தனது குழந்தைப்பருவ வீடு என்று எனது தாயார் விரைவிலேயே உறுதி செய்தார். கிட்டத்தட்ட ஒரு மோன நிலையில் அவர் அந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் வீட்டின் மொட்டை மாடிக்கும் சென்றார். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதோடு தொடர்புடைய தனது குழந்தைப்பருவத்தின் உடைந்து போன நினைவுகளை சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் தில்லிக்குத் திரும்பி பல மாதங்கள் ஆன பின்னும் அந்த வீடு தனது கனவுகளில் திரும்பத் திரும்ப வருவதாக சொல்லிக் கொண்டிருப்பார்.

அரை மணி நேரம் கழித்து வீட்டு உரிமையாளரிடம் நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்புவதாகக் கூறினோம். ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்தனர். ”நீங்கள் உங்கள் குழந்தைப்பருவ வீட்டிற்கு வந்துள்ளீர்கள். எங்களோடு விருந்து சாப்பிடாமல் எப்படி திருப்பி அனுப்ப முடியும்?” என்று கேட்டனர். எங்களது தயக்கங்களையெல்லாம் அவர்கள் புறந்தள்ளினார்கள். எங்கள் குடும்பத்தினர் மற்றும் எங்களோடு வந்திருந்த பாகிஸ்தானி நண்பர்கள் என மொத்தம் எட்டு பேர்களுக்கும் சேர்த்து உணவு தயாரித்தனர். நாங்கள் திருப்தியாக உணவருந்தினோம் என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான் கிளம்பவே அனுமதித்தனர்.

பாகிஸ்தானுக்கு ஓர் நாடோடிப் பாதை

நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பியதும் எங்களது சாகசப் பயணம் குறித்த தகவல்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினரிடையே பரவின. அடுத்த வருடம் தன்னையும் பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ள தனது பழைய வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் எனது மாமியார். எனது பெற்றோரின் வெற்றிகரமான பயணம் அளித்த மகிழ்ச்சி எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்திருந்தது. பின்னர் வேறு சில வயதானவர்கள் சிலரும் சேர்ந்து கொள்ள, நானும் எனது மனைவியும் மொத்தம் ஆறு முதியவர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்றோம்.

இந்த முறை கிடைத்த அனுபவங்களும் கடந்த வருடம் கிடைத்தவைகளைப் போன்றே இருந்தன. தனது சக்கர நாற்காலியுடன் சென்றிருந்த எனது மாமியாரை அவரது பழைய வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று காட்டினார் அதன் தற்போதைய உரிமையாளர். எங்களோடு சாப்பிட்டு முடித்தபின், “உங்கள் விவசாய நிலத்தைப் பார்க்க விருப்பமில்லையா” என்று எனது மாமியாரிடம் கேட்டனர்.

இரண்டு பயணத்தின் போதும் எனது மனைவி கடைகளுக்குச் சென்று உடைகளையும் காலனிகளையும் கைவினைப் பொருட்களையும் வாங்கினார். எல்லா கடைக்காரர்களும் நாங்கள் இந்தியர்கள் என்பதை அறிந்து கொண்டால் விலைகளை கணிசமாக குறைத்தனர். ”நீங்கள் எங்கள் விருந்தாளிகள்” என்றனர். “எங்கள் விருந்தாளிகளிடமே நாங்கள் எப்படி லாபம் சம்பாதிப்போம்” என்றனர்.

இந்தப் பயணங்கள் குறித்த செய்திகள் பரவிய போது நான் தொடர்பில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆஷாகிராமைச் சேர்ந்த நண்பர்கள் தாங்களும் இதே போன்ற பயணங்கள் செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் பார்வானியில் செயல்பட்டு வரும் ஆஷாகிராம் நிறுவனம், தொழு நோயாளிகள் மத்தியில் வேலை செய்து வருகிறது.

இவர்களுக்கும் கடவுச் சீட்டுகளை வழங்கியது பாகிஸ்தான் தூதரகம். இந்த முறை ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், செல்பவர்கள் அனைவரும் சைவ உணவுப் பழக்கமுடையவர்கள். அவர்கள் உணவைத் தவிர பாகிஸ்தானில் இருந்த ஒரு வார காலம் முழுவதையும் மகிழ்ச்சியாக கழித்தனர். ஒவ்வொரு நாளின் இரவு வேளையிலும் பழச்சாறு வாங்க சாலையோரக் கடைகளைத் தேடியலைவார்கள். ஒவ்வொரு இரவிலும் ஒரு புதிய கடையைக் கண்டுபிடிப்பார்கள் – ஒவ்வொரு இரவு புதிய கடை உரிமையாளரும் இவர்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார். “இந்தியாவிலிருந்து வரும் எங்கள் விருந்தினர்களிடம் நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளனர். அந்த வாரம் முழுக்க இப்படித் தான் நடந்தது.

எனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.

இதுவே எனது சமீபத்திய தேச துரோகச் செயல் குறித்த பிரகடனம்!

– ஹர்ஷ் மந்தேர்
மொழிபெயர்ப்பு : முகில்

நன்றி: scroll.in #SeditionThis: Why I believe Pakistanis are the most gracious people in the world

  1. நான் இந்த கட்டுரையை படிச்சு அப்படியே புல்லரிச்சு போயிட்டேன். பேசாம பாகிஸ்தானுக்கே குடியேரிடலாம் போலருக்கே.

  2. பாக்கும் சரி இந்தியாவும் சரி மக்கள் நல்லவர்கள்தன் அனால் இடையில் உள்ள அரசியல் வியாதி மற்றம் மத திவிராவரிகள் மத வெறிகொண்டு அலைவர்கள் இது இரு நாட்டுக்கும் பொருந்தும், இன்னும் காவி படை இதைபடிக்கவில்லை என நினைக்கிறேன் வருவனுங்க பிரியாணி திருடர்கள் வினவு எச்சரிகை

  3. தேச பக்தர்களின் சாமியாட்டம் வெறி கொண்டு தொடங்கட்டும்!ஜெய் ஹிந்த்!பாரத் மாத்தா கி ஜெய்!ராம் ராம் ஹரே ராம், ஹே ராம்,ஜெய் ராம்,ஜய் ஹனுமன் !பாய் பாய் மோடி பாய்!56 இன்ச் பாடி பாய்!அத்வானிக்கு முரளி மனோகர் ஜோடி பாய்!இந்தியா இந்துக்களுக்கே ஆனது! பாகிஸ்தான் லஸ்கர் இ தொய்பா ஆனது!மேற்படி வேத மந்த்ரங்கள் முழங்கட்டும்!ஜெய் சவர்க்க:

  4. பாகிஸ்தானிய இசைக்கலைநஃர்களுக்கு ஆதரவாக “இசை எல்லை கடந்தது” என்ற இளையராஜாவின் கருத்தையும் பதிவு செய்து இந்தியர்களின் குறிப்பாக தமிழ் நாட்டின் மத நல்லண்ணத்தையும் வெளிக்காட்டுவீர்கள் என்று நம்புகின்றேன்.

  5. யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர் தர வாரா
    பேசுவோரின் உள்ளத்துக்கும் உதட்டுக்கும்
    எவ்வளவு தூரம்
    சமீபத்தில் கிளம்பிய தேசவெறிப் புழுதியில்
    காவிரி உரிமை, கொட்டடிக் கொலை என
    எல்லாவற்றையுமே சவக்குழிக்கு அனுப்புகிறார்கள்.

  6. தாய்நாட்டை காட்டி கொடுக்கு வினவே பாகிஸ்தானியனுக்கு கூட்டி கொடு அதற்கு கூட உங்களை போன்ற ஆட்கள் கவலை பட மாட்டிர்கள். பாகிஸ்தானியனின் மனித நேயம் தான் 18 உயிர்களை பலி வாங்கி இருக்கிறது உங்களை போன்ற கேவலமான பிறவிகளுக்கு 18 உயிரின் பலி கொண்டாட்டமாக இருக்கலாம் ஆனால் எங்களை போன்ற சாதாரண மனிதர்களுக்கு அல்ல.

    நீயெல்லாம் ஒரு மனிதன் தூ

    • மக்கள் வேறு அரசியல் வேறு திவிரவாதம் வேறு

      மக்களுக்கு மதம், கடவுள் அவர்கள் காக்கும் என நம்பிக்கையில் அவர்கள் வணங்குகிறார்கள்

      மத அரசியல்வாதிக்கும் & திவிரவாதிக்கும் அதை வைத்து பிளைப்பு

      மத அரசியல்வாதிக்கும் & திவிரவாதிக்கும் பிலைப்பு நடத்த இருவரும் சண்டை போடுகிறார்கள் திவிராவதி சண்டையிடுவது அதிகரத்துக்கு மத அரசியல்வாதி சண்டையிடுவது அதிகரத்தை தக்கவைத்துகொள்ள இவர்கள் இருவர்கள் சண்டையில் அப்பாவி மக்கள் கொல்லபடுகிறார்கள், இதில் இரு நாட்டு மக்களை எதிரியாக நினைக்க வைத்துவிட்டர் அதில் 50 சதவிதம் வெற்றிபொற்றுவிட்டனர்

  7. காஷ்மீரிகளை போல் எங்களை போன்ற சாதாரண பொதுஜனம் வினவே பாக்கிஸ்தான் போ என்று கல்லெறிந்து போராட்டம் நடத்தலாமா ??? கல்லெறிவது தான் அகிம்சை போராட்டமாச்சே

    • காஷ்மீரிகளை போல் எங்களை போன்ற சாதாரண பொதுஜனம் வினவே பாக்கிஸ்தான் போ என்று கல்லெறிந்து போராட்டம் நடத்தலாமா ??? கல்லெறிவது தான் அகிம்சை போராட்டமாச்சே

      ஆகா மறுபடியும் பிரியாணியை திருட திருட்டு முண்ணனி காவிகள் கலம்பிட்டங்கா லா

      வினவுக்கு ஒரு வேண்டுகோள் உங்க ஆபிஸ் பாக்கத்துலா யாரவது பாய் பிரியாணி கடை வைத்து இருந்தால் எச்சரிக்கவும் ஏன் எனில் இவனுங்க பிரியாணி சட்டியா திரும்ப தரமாட்டனுங்கா

    • ஒரு கட்டுரையை படித்து கருத்து எழுதுவது விமர்சிப்பது அனைவருக்குமான உரிமைதான்.ஆனால் கட்டுரை என்ன சொல்கிறது? அதற்க்கு நாம் என்ன எழுதுகிறோம் என்ற சுய உணர்வு இருக்கவேண்டும்.ஒரு நாடு நமக்கு எதிரி நாடாகவே இருக்கட்டும்.அந்த நாட்டின் சிவிலியன் கள் நல்லவர்கள் என்று சொல்வது தவறா?நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஒரு சினிமாவில் எப்படி கதாநாயகன் வில்லன் என்று இரு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களை மோதவிட்டு அதற்க்கு இசை மற்றும் தொழிற்நுட்ப்பங்களால் சுவாரஸ்யம் சேர்த்து அடிமட்ட ரசிகனை ஆண்டாண்டு காலஙளாய் குஷிபடுத்தி கொண்டிருக்கிறார்களோ அதுதான் இந்திய பாகிஸ்த்தான் அரசியலிலும் நடந்து கொண்டிருக்கிறது.உலகம் ஒரு கூரையாய் சுருங்கிய பிறகு எல்லா நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தேதான் சுழ்ன்று கொண்டிருக்கிறது. பாகிஸ்த்தான் இந்தியாவுக்கிடையில் தவிர்க்க முடியா பல வர்த்தக தொடர்புகள் பின்னி பினைந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.மருத்துவ பரிவர்த்தனைகள் கலாச்சார தொடர்புகள் இசை சினிமா போன்ற கேளிக்கை தொடர்புகள் என்று இந்திய பாகிஸ்த்தானுக்கிடையேயான பினைப்புகள் ஏராளம்.இப்படி இருக்க பாகிஸ்த்தான் மக்களே ப்யங்கரம்.இந்தியனை கண்டால் அருவாளோடும் வெடிகுண்டோடும் தான் வருவான் என்ற கற்ப்பனையை கட்டமைத்து வைத்திருக்கிற கீழ்த்தரமான அரசியலை ஓரளவிற்க்கேனும் கட்டுரை தகர்க்க உதவுகிறது.இதுதான் இரண்டு நாட்டு மக்களுக்குமான நல்லதொரு ஆரோக்கிய போக்கு.மணிகண்டன் என்ற நாடிநரம்பெல்லாம் தேசபக்தி பீச்சிகொண்டு ஓடும் டவுசருக்கு பாகிஸ்த்தான் என்று சொன்னாலே கட்டி பீ தண்ணி பீ ஆகிவிடுகிறது.இப்ப்டியே இதுகளுக்கு மண்டையை கழுவி கழுவிதான் பகிஸ்தான் ராணுவத்தை தன்னத்தனி ஆளாய் போய் விரிந்த மார்போடு கிழித்து போட்டுவிடுவார் நரேந்திரமோடி என்ற நினைப்பு.

      • வினவின் நோக்கம் என்ன என்பது தெரியாத பச்சை குழந்தைகளா நாங்கள். 18 வீரர்களை அநியாயமாக கொன்ற பாகிஸ்தானி தீவிரவாதி மீது வரும் கோபத்தை திசை திருப்ப அந்த தீவிரவாதிகளோடு சேர்ந்து கொண்டு வினவு செய்யும் சதி இது. பாருங்கள் பாகிஸ்தானிகள் எவ்வுளவு நல்லவர்கள் அப்பாவிகள் அவர்கள் மீது தான் இந்த பிஜேபி அரசும் RSS இயக்கமும் சேர்ந்து கொண்டு வெறுப்பை தூண்டுகிறார்கள் என்று வினவு பிரச்சாரம் செய்கிறது.

        இந்த விஷயம் கூட தெரியவைத்தார்கள் அல்ல நாங்கள்.

        பிணத்தின் மீது அரசியல் வியாபாரம் செய்கிறது வினவு,

        பாகிஸ்தானில் வாழ்ந்த இந்தியர்களை (ஹிந்துக்களை) எல்லாம் கொலை செய்து அடித்து விரட்டி சொத்து வீடுகளை பிடுங்கி கொண்டு வாழ்வார்களாம் இவர்கள் அங்கே போனவுடன் அவர்கள் சோறு போட்டாங்களாம்… சோறு போட்டவுடன் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிட்டார்களாம்… ரொம்ப நல்லா இருக்கு சார் உங்க நியாயம்

      • தன்னையும் சேர்த்து பாதுகாத்து வரும் இந்திய ராணுவத்தினர் 18 பேர் கொல்லப்படும்போது ‘சாஹிப்’ மௌனமாக இருப்பார் . ஆனால் பாகிஸ்தானிய மக்களைப்பற்றி கருத்து சொன்னால் பதட்டமடைந்து “கட்டி பீ , தண்ணி பீ” என்று கண்ணியமான வார்த்தைகளால் பொங்கி எழுவார். . என்னதான் இருந்தாலும் அவரிகள் ஒரே ‘உம்மா’ வை சேர்ந்தவர்கள் அல்லவா?

        • ராணுவவீரர்கள்தான் நாட்டையும் நாட்டில் வாழும் எங்களையும் காப்பாற்றுகிறார்கள் என்ற அரிய உண்மையை எங்களுக்கு உணர்த்தி எங்களின் அறிவு கண்களை திறந்த மகேஷுக்கு கோடான கோடி நன்றி.உலகத்தில் வேறு எங்கும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதில்லை.அதிலும் இந்தியாவில் இப்போதுதான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அதுவும் பதினெட்டுபேர்.இதை கேட்டதிலிருந்து மகேஷும் மணிகண்டனும் சோறு தண்ணி இல்லாமல் அழுது அழுது கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பது அவர்களின் பதிவிலிருந்து தெரிகிறது.இந்த தேஷபக்தி என்பது உங்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதைப்போல உலகத்தில் எந்த நாட்டு மக்களிடமும் இந்த அளவிற்க்கு மாட்டிக்கொண்டு விழிப்பதாக தெரியவில்லை.கட்டுரை என்ன தலைப்பின் கீழ் இருக்கிறது…ராணுவத்தைப்பற்றியா கட்டுரை பேசுகிறது.சாதாரண பொதுமக்களின் குணம் அவர்களின் உபசரிப்பு இந்தியர்களைப்பற்றிய அவர்களின் மனநிலை.இதுதானே கட்டுரையின் மையம்.தமிழ் என்ற சகோதரரும் கூட மிகத்தெளிவாக மக்களையும் அரசியல்வாதிகளையும் பிரித்து பதிவிட்டிருந்தார்.ஆனால் அதெல்லாம் தேவையில்லை.பாகிஸ்த்தான் என்று சொன்னவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வாயில் வந்ததை உளறி தேசப்பக்தியை கொப்பளித்துவிட வேண்டும்.தேசபக்தி என்றாலே பாகிஸ்தானை திட்டுவதுதான்.இதுபோக இங்கிருக்கும் முஸ்லிம் எல்லாமே பாகிஸ்த்தான் ஆதரவாளன் என்பதையும் இடையிடையே சேர்த்துக்கொள்ளவேண்டும். இவையெல்லாம் போன தலைமுறை டவுசர்களின் இத்துப்போன கைங்கர்யம் என்பதை யாராவது இவர்களுக்கு சொல்லி கொடுங்களேம்பா..

          • உங்களை போன்றவர்களிடமும் வினவு போன்றவர்களிடமும் இருக்கும் பிரச்னை என்ன தெரியும்மா ? உங்களை மாதிரியே எல்லோரும் இந்தியாவையும் ஹிந்து மதத்தையும் சைக்கோத்தனமாக எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக யாராவுது பேசினால் உடனே அவர்களை காவி கூட்டம் என்று சொல்கிறீர்கள்.

            தேசப்பற்று தான் காவி கூட்டத்தின் அடையாளம் என்றால் நிச்சயம் அந்த கூட்டம் நல்லவர்களாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவிற்காக பேசுபவர்கள் தான் காவி கூட்டம் என்றால் அவர்களை பாராட்ட வேண்டும்.

            • இந்த மட்டரகமான திசை திருப்பலெல்லாம் இனி எடுபடாது.நாடும் உலகமும் தொழில்நுட்ப உதவியால் நடப்புகள் அனைத்தையும் தெள்ளத்தெளிவாய் விளங்கி அறிவுத்தளத்தில் சிந்திக்க கூடியவர்களாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இது புரியாமல் கோல்வால்கர் காலத்தில் இருந்து கொண்டு பேசி காமடியன் களாகவே போய்கொண்டிருக்கிறீர்கள்.இந்தியாவை சைக்கோதனமாக எதிர்கிறோமா!? இந்தியாவை எங்கே எதிர்த்தோம்?இந்தியாவை எதிர்ப்பது என்றால் என்ன?நரேந்திர மோடியை எதிர்த்தால் இந்தியாவை எதிர்ப்பதா? சோனியா காந்தியை எதிர்த்தால் இந்தியாவை எதிர்ப்பதா? இந்திய பிரதமர்களையும் அவ்ர்களின் அரசியல் பொருளாதார கொள்கைகளையும் எதிர்த்தால் இந்தியாவை எதிர்ப்பதா?இந்தியாவை எதிர்ப்பது என்பது முதலில் இங்கே எங்கு வந்தது? தலைப்பிற்க்கு சம்மந்தமில்லாமல் உளறவேண்டும்!இந்த உளறல்தான் காவிகளை அடையாளம் காட்டுவது. அதோடு இந்து மதத்தை எதிர்கிறோமாம்… நான் ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறேன் எனக்கு என்ன அவசியம் வந்தது இந்து மதத்தை எதிர்க்க? இதையெல்லாம் படிக்க கூடியவர்களுக்கு புரியாதா? இப்படி சம்மந்தமில்லாமல் உளறுகிறார்களே இவர்களிடம் என்ன உண்மை இருக்கும் என்று மக்கள் நினைக்க மாட்டார்களா….

              • வினவையும் என்னையும் ஏன் ஒன்று சேர்கிறீர்கள்.வினவும் நானும் என்ன ஒரே கோட்பாட்டிலா இருக்கிறோம்.இந்து என்ற அடிப்படையில் நீங்களும் வினவும் வேண்டுமானால் ஒன்றாக இருக்கிறீர்கள்.என்னதான் கம்யூனிஸ்ட் பெரியாரிஸ்ட் என்று சொன்னாலும் பிறப்பாலும் இந்திய அரசியல் சாஸனத்தின் படியும் வினவு இந்துதான்.நான் அதில் சேரமுடியாது.இது போக வினவோடு எங்களுக்கு நிறைய வாக்குவாதங்கள் உண்டு. வினவின் பார்வையில் நான் ஒரு கடுங்கோட்பாட்டுவாதி.இந்த வார்த்தையே வினவு கண்டுபிடித்ததுதான்.எவ்வளவு முரண்பாடுகளும் விமர்சனக்களும் இருந்தாலும் வினவை நான் பயங்கரவாதியாக ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதாக நினைக்க மாட்டேன்.கருத்து தளத்தில் மோதிக்கொள்வது என்பது வேறு.தனிப்பட்ட முறையில் கண்ணியமாக இணக்கமாக உறவாடுதல் என்பது வேறு.இந்த நாகரீகம் எங்களுக்கு துல்லியமாக தெரியும்.

                • நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது காலம் மாறிவிட்டது, இன்று அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர்ந்து வந்து இந்தியாவின் மீது படை எடுத்தாலும் இந்தியாவை வெற்றி கொள்ள முடியாது. உங்களை போன்றவர்கள் 10 இந்தியா வீரர்களுக்கு 1 பாகிஸ்தானிய வீரர் போதும் என்று கொள்வீர்கள் ஆனால் அது எல்லாம் உங்களின் கற்பனையில் தான் நிஜத்தில் இந்தியா தேசத்தை அசைக்க முடியாது. இந்தியா இப்போது பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

                  • திருமணிகண்டன் உங்கள் தலைமை உங்கள் மூளையை துருபிடிக்க வைத்துவிட்டது.கூடுமானவரை அதை சுத்தம் செய்ய முயற்ச்சிக்கிறேன் கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.பாகிஸ்தான் எல்லையில் ஊடுறுவது என்பதும் காஷ்மீரை அபகரிக்க துடிப்பதும் அரசியல்.அது இஸ்லாமோ இஸ்லாமிய கொள்கையோ அல்ல.இதோ இன்றைய சூழ்நிலையில் கூட பல இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை.ஒரு இஸ்லாமியனுடைய பார்வையில் என் வாழ்விடத்தை என்னிடமிருந்து அபகரிக்கவோ அதில் குழப்பம் ஏற்படுத்தவோ எவன் முயன்றாலும் அதை எதிர்த்து வெல்வது அல்லது எதிர்த்து மடிவது இரண்டுமே அறப்போராட்டம் அல்லது உயிர்தியாகம்.நான் பாகிஸ்தானியனாக இருந்தால் என் மண்ணுக்காக போராடுவேன்.நான் இந்தியனாக இருக்கும் பொழுது இந்த மண்ணுக்காக போராடுவேன்.ஆனால் அது நியாயமாக இருக்கவேண்டும்.என் நாட்டுக்காரன் என்பதற்க்காக ரவுடித்தனம் பண்ணுவதை ஆதரித்து போராடமுடியாது.என் வீட்டிலிருந்து என்னை துரத்துபவன் நவாஸ்சரீபாக இருந்தாலும்சரி மணிகண்டனாக இருந்தாலும் சரி ஒரே பதிலடிதான்.என் உயிர் இருக்கும்வரை போராடி மடிவேன்.”இந்திய தேசத்தை அசைக்க முடியாது” என்று என்னிடம் வீராவசனம் பேசுவதற்க்கு என்ன இருக்கிறது? பிறகு நான் யார்?இந்தியாவை சுக்குநூறாக உடைத்துவிட்டால் என் வீடு மட்டும் பிழைத்திருக்குமா?எவ்வளவு பச்சைபிள்ளைத்தனமாக உங்கள் சிந்தனை இருக்கிறது தெரிகிறதா?இப்படிப்பட்ட சிந்தனையை உங்கள் மூளையில் ஏற்றியது யார்?அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கினால்தான் உங்களால் அறிவுப்பூர்மாய் எதையும் பார்த்து அணுகமுடியும்.இல்லையென்றால் பாவம் உங்களை மேலும் மேலும் மட்டி மடையர்களாக ஆக்கி காலம் முழுக்க கைப்புள்ளையாய் தவழவிட்டுவிடுவார்கள்.

                • வினவு உங்களின் (பாகிஸ்தானிய) proxy இந்த உண்மை கூட தெரியாதவர்களா நாங்கள்.

                • முதலில் இந்திய முஸ்லிமாக இருங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருக்காதீர்கள். உங்களின் விசுவாசம் இந்தியார்க்காக இருக்க வேண்டும் இஸ்லாமியர் என்பதற்காக பாகிஸ்தானுக்கு அல்ல… உங்களின் வார்த்தைகள் இஸ்லாமியர் என்பதற்காக பாகிஸ்தானை கூட ஆதரிக்க தயங்க மாட்டேன் என்று இருக்கிறது… இது தான் இஸ்லாமியர்களையும் மற்றவர்களையும் பிரிவிக்கிறது.

                  • முஸ்லிம் எப்படி இருக்கவேண்டும் என்று இந்தியாவை வெள்ளைகாரனிடம் குத்தகைக்கு எடுத்த மணிகண்டன் சொல்லிவிட்டார்.இனி இந்திய முஸ்லிகள் வரிசையில் இவர் வீட்டின் முன் நிற்க்க வேண்டியதுதான்.எப்படி எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் நடத்துவார்.அதை கேட்டு நடந்து கொள்ளவேண்டியதுதான். யாருக்கு யார் பாடம் நடத்துவது…என் முப்பாட்டன் கள் இல்லையென்றால் பாரதமாதா பரலோகம் போயிருப்பாள்.இன்றைக்கு உங்களைப்போன்ற்வர்களின் மூளையை கழுவி வெற்றுகூச்சல் போடுபவர்களாக மாற்றியவர்கள் அன்றைக்கு வெள்ளைகாரனுக்கு முதுகு சொறிந்து விட்டவர்கள்தான்.எந்த வகையிலாவது இந்த மக்கள் அனைவரையும் த்ங்களின் அடியாட் களாக மாற்றி தங்களுக்கு ஒத்துவராதவர்களை இவர்களைவிட்டே கொம்பு சீவி குத்தவிடலாம் என்று பார்க்கிறார்கள்.அவர்களுக்கு கிடைத்தது உங்களைப்போன்ற மிகச்சிலரே. நீங்களும் பாவம் என்ன செய்வீர்கள் ?எந்த சுயசிந்தனையும் இன்றி அவர்கள் சொல்வதை மனப்பாடம் பண்ணி இங்கு வந்து ஒப்பித்து கடைசியில் தாக்குபிடிக்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிடுகிறீர்கள்.உண்மை இருந்தால்தானே வாதாடமுடியும்.

                    • இஸ்லாமியர்களின் வரவால் இந்தியா இழந்தது மிக அதிகம். இஸ்லாமியர்களின் வரவுக்கு முன் இந்தியா உலக நாகரிகத்தின் முன்னோடி கணிதம் அறிவியல் மருத்துவம் கலை இலக்கியம் என்று அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கியது. அரேபியர்களும் சீனர்களும் இந்தியாவிற்கு வந்து தான் கணிதத்தை கற்று சென்றனர்… ஆனால் இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு இந்தியா சந்தித்தது எல்லாம் அழிவு தான். பாகிஸ்தானை “Land of Pure” என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், ஆனால் “Land of Pure” என்ற வரலாற்றுக்கு பின்னால் இருக்கும் மனித இன யாரும் பேசுவதே இல்லை… இந்தியாவில் பேசாதற்கு காரணம் மதசார்பின்மை…

                      “Land of Pure” என்ற வரலாற்று பின்னணியை நான் எழுதினால் வினவு என்னை நிரந்தரமாக தடை செய்து விடுவார்கள் அந்தளவுக்கு மதசார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை நாசம் செய்து இருக்கிறார்கள். வினவு போன்றவர்களுக்கு ஹிந்து மதத்தை சைக்கோ மாதிரி எதிர்ப்பது தான் மதசார்பின்மை

                    • அர்த்தமற்ற விவாதம்தான் மணிகண்டனோடு தொடர்வது தெரிகிறது.இருந்தாலும் மணிகண்டன் களை வாயை திறக்கவைத்தால்தான் இவர்கள் என்ன மாதிரி தயாரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளங்க முடிகிறது.காவிகளின் மேல்மட்ட தலைவன் கள் என்று சொல்லப்படுபவர்களிலிருந்து கீழ்மட்ட குஞசுகள்வரை ஒரே மாதிரியான பேச்சுவழக்குதான் அடிப்படையான விவாதத்திலிருந்து கிளை தாவி கிளைதாவி எதையாவது உளறிகொட்டி,யார் சிரித்தால் நமக்கென்ன என்று கவலையே இல்லாமல் விட்டு அடிப்பதில்தான் இருக்கிறது இவர்களின் அடையாளம்.

                  • ஜயா மீரான் உங்கள் முப்பாட்டங்களை பற்றி சொன்னார் நீர் அதனால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை சொல்கிறேன்.

                    • அட அப்பாவி மணிகண்டனே என் முப்பாட்டன் இந்த மண்ணுக்கு சொந்தகாரந்தான்.என் தமிழிலிருந்து தெரியவில்லையா நான் யார் என்று!ஐயரகவோ செட்டியாராகவோ முதலியாராகவோ பறையன் என்றும் பள்ளன் என்றும் நீங்கள் இழிவு படுத்தி வைத்திருக்கிறீர்களே அந்த பஞம ஜாதியில் ஒருவனாகவோதான் என் முப்பாட்டன் இந்த தமிழ் மண்ணில் வாழ்ந்தான்.அவன் எந்த குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தான் என்பதே தெரியாமல் அவன் தழுவிய இந்த இஸ்லாம் என்ற மார்க்கம் மாற்றிவிட்டது.ஆகவே நான் எந்த ஜாதியிலிருந்து வந்த தலைமுறை என்பதையே நான் அறியமாட்டேன்.அறிய முடியாது.அது இஸ்லாம் என்ற அற்புதத்தின் விளைவு.ஒருவேளை இந்தியா என்ற இந்த பரந்த தேசத்தை ஆட்சி செய்தவர்களை என் முப்பாட்டன் என்று நீர் கருதினால் அது ஆட்சியாளர்களுக்கே உரிய குணம் தனி.எல்லா அரசர்களும் நாடு பிடிக்கவும் வளமான நாடுகளின் சுகபோகங்களை ஆண்டு அனுபவிக்கவும் வந்தவர்கள்தான்.அதிலும் இஸ்லாமிய முகலாய ஆட்சியாளர்களைப்பற்றி காவிகள் உங்கள் மண்டைகளில் ஏற்றி வைத்திருப்பது பச்சைபொய்.அவர்களை கொடூரர்களாக காட்டித்தான் இங்குள்ள மக்களை ஒன்று திரட்டி அவர்களின் வாரிசுகள்தான் இன்றைய முஸ்லிகள் என்று சொல்லி முஸ்லிகள் அனைவரையும் எதிரிகளாக ஆக்கமுடியும்.இந்த லூசுத்தனமான பொய்யை நம்பித்தான் உங்களைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்கிறீர்கள்.நான் முஸ்லிம் ஆட்சியாளர்களெல்லாம் மகா உத்தமர்கள் என்று சொல்லவில்லை.மன்னர்களுக்கே உரிய ஆடம்பரத்தோடும் டாம்பீகத்தோடும் இந்த நாட்டின் வளங்களை ஆண்டு அனுபவித்தார்கள்.ஆனால் அவர்கள் இங்கிருந்து எதையும் கொண்டு செல்லவில்லை.இங்கேயே வாழ்ந்து இங்கேயேதான் மாண்டார்கள்.கஜினி கோரி போன்றவர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தாலும் அது மிக சொற்பம்.அது பலவீனமான பல நாடுகளில் நடப்பது.முகலாயர்கள் மிக வலுவாக கால் ஊன்றிய பிறகு இந்தியா எந்த வெளி மன்னர்களாலும் சூறையாடப்பட்டதே இல்லை.அவர்களின் ஆட்சியும் படைபலமும் வலிமை மிக்கதாகவே இருந்தது.மிகச்சிறந்த நிர்வாகம் அவர்களிடம் இருந்தது.துண்டு துண்டு நிலங்களாய் கிடந்த இந்த துணைகண்டத்தை ஒரு பரந்த பேரரசாய் ஆக்கியதே அவர்கள்தான்.அவர்கள் வலிமை குறைந்த பிறகே வெள்ளையன் நாட்டை பிடித்தான். அவனும் பல நல்ல நிர்வாக முறைகளையும் தொழில்நுட்பங்களையும் தந்தே இந்த நாட்டை விட்டு வெளியேறினான்.அவனிடம் அடிமையாய் இருப்பதை சகிக்காமலேயே நாம் போராடி விடுதலை பெற்றோம்.இதில் ஒன்றை கவனிக்க வேண்டும்.நானூறு வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களின் காலத்தில் மக்களிடம் ஆட்சியாளர்களுக்கு எதிராய் எந்த பெரிய எதிர்ப்பும் இல்லை. இதற்க்கிடையில் அவர்கள் வெறும் கத்தியையும் ஈட்டியையும் வைத்திருந்தவர்கள்.ஆனால் பீரங்கி வைத்திருந்த வெள்ளையனுக்கு எதிராக மிகப்பெரிய கிளர்ச்சியும் போராட்டமும் வெடித்தது.எங்களுக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் எந்த தொடர்புமில்லை.நாங்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களே அன்றி எந்த நாட்டின் அரசியலோடும் எங்களுக்கு அக்கறை இல்லை. மணிகண்டனின் மண்டையில் ஏற்றப்பட்ட வெறுப்பு நெருப்பை கீழே கொட்டிவிட்டு வரலாறை பார்த்தால் மணிகண்டனுக்கும் இந்தியாவுக்கும் இந்தியாவின் அமைதி ஒற்றுமைக்கும் பெரும் நன்மையாய் இருக்கும்.

                    • நீங்கள் வந்தது அரேபியாவில் இருந்து அதனால் உங்களால் முழு மனதாக இந்தியாவை நேசிக்க முடியவில்லை, ஒரு இந்தியன் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் உங்களை போன்றவர்களால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, அதேபோல் எங்களை போன்றவர்கள் பாகிஸ்தானை விமர்சனம் செய்தால் அதை உங்களால் ஏற்க முடிவது இல்லை.

                    • மணிகண்டன் கள் தயாரிக்கப்பட்ட விதம் பற்றி தெளிவாக தெரிந்துகொண்டோமில்லையா? இதுதான் இந்துத்துவ தயாரிப்பு.கலப்படமற்ற காவிகளின் உற்பத்தி.எங்களுக்கு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலையே இல்லை.வெட் கம் நாணம் என்ன நினைப்பார்களோ என்ற கூச்சம் எதுவும் கிடையாது.சில வார்த்தைகளை மனனம் செய்து ஒப்பித்துக்கொண்டே இரு.எவன் என்ன சொன்னாலும் காதில் வாங்காதே.அம்மனமாய் நின்றாலும் அவமானப்படாதே.பொய்யே நமக்கு உரம்.புரட்டே நமக்கு உயிர்.மாட்டு மூத்திரம் வந்தேமாதரம்.பாரத் மாத்தேகீ…….ஜே…

              • உங்கள் ஆசைப்படி இந்தியா எல்லை தாண்டி சென்று பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் 50 பேரை அழித்து விட்டு வந்து இருக்கிறது. எல்லை தாண்டினால் இந்தியாவின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று சொன்ன பாக்கிஸ்தான் ஒன்றும் செய்ய முடியாமல் எப்போதும் போல் பொய்களை பேசி கொண்டு இருக்கிறது

                • முதலில் இந்தியா பாகிஸ்தான் என்பது காஙிரஸ் பிஜெபி அல்ல அரசியல் விளையாடுவதற்க்கு.இரண்டும் அணுஆயுதங்கள் கொண்ட நாடுகள்.தரைடிக்கட்டுகள் விசில்டிப்பதற்க்காக அணுகுண்டுகளை வீசி விளையாடமாட்டார்கள்.இதுபோக நீங்கள் என்னவோ இந்தியாவுக்கு உள் இருப்பதுபோலவும் நாங்கள் எல்லாம் எல்லையில் நின்று கொண்டு பாகிஸ்தானுக்கு குண்டு எடுத்து கொடுப்பது போலவும் சின்னபுள்ள சிந்தனையில் இருக்கிறீர்கள் இல்லையா அதைத்தான் சுட்டிகாட்டுகிறேன்.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போட்டி என்றால் அதை இந்துவுக்கும் முஸ்லிமுக்கும் உள்ள போட்டியாக மாற்றிய பைத்தியாக்காரத்தனம் எங்கிருந்து வந்தது?டவுசர்களின் தலைமை உருவாக்கிய மோடத்தனம்தான் இந்த சிறுபிள்ளை சிந்தனை.ஊழலும் அருவருப்பும் கொண்ட கிரிகெட் விளையாட்டையே அதை ஒரு போராக சித்தரித்து கிறுக்குத்தனம் பண்ணும் கேலிக்கூத்தை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.நாட்டு எல்லைகளில் ஊடுருவல் என்பதும் அது விரட்டி அடிக்க படுதல் என்பதும் இதன் விளைவாய் இரண்டு பக்கங்களிலும் வீரர்கள் உயிரிழத்தல் என்பதும் காலகாலமாய் நடந்து கொண்டிருப்பதுதான். இது ராணுவம் அரசு நாடு சம்மந்தபட்டது.இதில் காங்கிரஸ்காரனோ பிஜேபி காரனோ காலரை தூக்கிவிட்டுக்கொள்ள என்ன இருக்கிறது.இது ஒட்டு மொத்த நாட்டுக்கானது எல்லா மக்களுக்குமானது.இதில் மதம் சாதி மொழி என்பது இல்லை.கட்சி இயக்கம் அமைப்பு என்பதும் இல்லை.

            • Manikandan தேசப்பற்று தான் காவி கூட்டத்தின் அடையாளம் என்றால் நிச்சயம் அந்த கூட்டம் நல்லவர்களாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவிற்காக பேசுபவர்கள் தான் காவி கூட்டம் என்றால் அவர்களை பாராட்ட வேண்டும்.

              பாருடா பீப் பிரியாணி திருடன் கூட்டம் நல்லவர்கள்தன் இந்து இந்தி இந்தியா என பேசுவர்கள் தான் இந்த காவி கூட்டம் வெள்ளைகாரனுக்கு கூட்டி குடுத்த கூட்டம்

          • இன்று அர்னாப் அவரின் timesnow நிகழ்ச்சியில் இந்த JNU கூட்டத்தின் நாட்டிற்கு எதிரான சதிகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும்படி எடுத்து சொன்னார். அர்னாப் சொன்ன விஷயத்தை வினவை படிக்கும் போதே புரிந்து கொண்டேன், வினவு போன்றவர்கள் இந்த நாட்டை அனைத்து வகையிலும் பலவீன படுத்தி பிரிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

            ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லலாம் விரைவில் வினவு மற்றும் JNU கூட்டங்கள் சேர்ந்து கொண்டு 18 வீரர்களை கொலை செய்தது RSS தான், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோடி திட்டமிட்டு இதை செய்தார் என்று கட்டுரைகளை வெளியிட்டு 18 வீரர்களின் மரணத்தை கேவலப்படுத்துவார்கள் ஏற்கனவே பதன்கோட் விவகாரத்திலும் இப்படி தானே பாகிஸ்தானுக்காக பிரச்சாரம் செய்தார்கள். விரைவில் 18 வீரர்களின் மரணத்தை வைத்தும் இவர்கள் கேவலமான பிரச்சாரங்களை செய்து பாகிஸ்தானை ஒரு அப்பாவி ஒன்னும் தெரியாத தேசம் என்பது போல் பேசுவார்கள்.

          • 18 இந்திய ராணுவ வீரர்கள் மரணத்தை சர்வசாதாரணமாக பார்க்கும் உங்களின் உயர்ந்த மனிதாபிமானத்தை பாராட்டுகிறேன். இதே உயர்ந்த மனிதாபிமானத்தை காஷ்மீர் தீவிரவாதிகள் மரணத்திற்கும் நீங்கள் காண்பிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

            • ஒன்றை இந்த நேரத்தில் நினையுறுத்துகிறேன்.ஒரு பதினேழு வருடங்களுக்கு முன்பு கார்கில் என்ற் எல்லைபகுதியில் பாகிஸ்தானிய ஊடுருவல் காரர்கள் உள்ளே வந்துவிட்டார்கள்.இந்திய ராணுவம் தூங்கிக்கொண்டு இருக்கிறது.ஒரு ஆடு மேய்க்கிற சிறுவன் இதை கண்டு அறிவிக்கிறான்.அதன் பிறகே இந்திய ராணுவம் திடுக்கிட்டு விழிக்கிறது.இந்த பே த்தனம் நடந்தது இதே பிஜேபி ஆட்சியில்தான்.இன்னொரு சம்பவம் இன்றைக்கு இருக்கிற 56 இஞ்ச் மார்புக்கு குரு ஒருத்தர் அன்றைக்கு அவர்தான் அஞசாநெஞ்சா வாய்ச்சொல்வீரர் ரத்தயாத்திரை புகழ் அத்வானி பாகிஸ்த்தானில் போய் முகம்மதுஅலிஜின்னாவை, அவர் வல்லவர் நல்லவர் நாளும் தெரிஞச தூயவர் என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு வந்தார்.இதை கேட்டு டவுசர் கூட்டத்தின் ஒரு பகுதி பதறியது.”விசிலடிச்சான் குஞசிகளிடம் நாம் எப்படி பாகிஸ்தானை பாகிஸ்தான் மக்களை பாகிஸ்தான் ஆட்சியாளர்களை கொண்டு சேர்திருக்கிறோம் இந்த ஆள் இப்படி உள்றி கொட்டிவிட்டு வந்திருக்கிறாரே”என்று அந்த அஞசாநெஞசனை பிளுபிளுவென பிளுத்தார்கள்.அதிலிருந்துதான் அவர் ஓரம் கட்டப்பட்டு ‘அம்பத்தாறுஇஞ்ச்’மார்பு இழுத்துவரப்பட்டது.வளர்த்தகிடா மார்பில் பாய்ந்ததடா என்று அவர் நெஞ்சில் கைவைத்து சாய்ந்து கிடப்பது தனிக்கதை.ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது.பாகிஸ்தான் என்ற ஒன்றை வில்லனாய் காட்டி தாங்கள் அதை வீழ்த்தும் வீரனாக ஏமாற்றி கொண்டே வெகு நாட் களாய் கதை விட்டுக் கொண்டு இருப்பது புரிகிறதா இல்லையா? ஏமாற்றப்படுவது உங்களைப்போன்ற அப்பாவி டவுசசர்கள் தான் என்பதும் புரிகிறதா இல்லையா? நான் ஒரு சவால் விடுக்கிறேன் இந்த 18 ராணுவவீரர்களின் சாவுக்கு பழி தீர்க்கப்போகிறோம் என்று உதார் விட்டுக்கொண்டுள்ள நரேந்திரமோடி அரசு பாகிஸ்தானோடு யுத்தம் நடத்தி கணக்கு தீர்க்குமானால் நான் பாரதீயஜனதா கட்சியின் உறுப்பினராகி இதே வினவில் என்னால் முடிந்த அளவு ஆதரவு திரட்டுகிறேன்.

              • அந்த ஒற்றை வில்லன் பாகிஸ்தான் வீழ்த்தப்படக் கூடது என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் பதிலடி ஆரம்பித்து விட்டது என்பது உங்களுக்கு தெரியவில்லை போதும்.

                • பாருங்கள் என்ன அற்புதமான பதில் பாருங்கள்.வெறும் அரசியலுக்காக தங்களை வீராதிவீரர்களாக காட்டிக்கொள்வதற்க்காக பாகிஸ்தானையும் பாகிஸ்தான் மக்களையும் பூதாகரமாக்கி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால்,பாகிஸ்தான் வீழ்த்தப்படக்கூடாது என்று எனக்கு ஆதங்கமாம்.இவர்க்ளுடைய புரிதல் எந்த லச்சணத்தில் இருக்கிறது பாருங்கள்.இவர்களை வைத்துக்கொண்டுதான் பாகிஸ்தானோடு போர் புரிகிறாராம் போரு.இன்றைய் கால கட்டத்தில் ஒரு நாடு இன்னொரு நாட்டோடு யுத்த்ம் செய்வது என்பது என்ன விளையாட்டா?வெட்டி வீரம் பேசி வெட்டிவீரம் பேசி கடைசியில் கடைசியில் காவிகள் எல்லாம் தெலுங்கு பட ரசிகர்களாய் மாறி சண்டை காட்சி பார்க்க தயாராகிவிட்டார்கள்.விள்ங்கும் நாடு.சுற்றி நியூக்ளியர் நாடுகள். சைனா காரன் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.அவன் பாகிஸ்தானுக்கு நெருக்கம்.அமெரிக்காவியே வந்து பார் என்று சவால் விட்டு கொண்டிருப்பவனுக்கு தன் ஆயுதங்களை பரிசோதிக்க சரியானதொரு சோதனை கூடமாக இந்திய பாகிஸ்தான் சண்டையை பயன்படுத்த தயாராய் இருப்பான்.போர் என்றால் என்னவென்றுதான் நினைத்துக்கொண்டிருப்பார்கள் இந்த கீழ்மட்ட டவுசர்கள்? பழைய நாடோடிமன்னன் படத்தில் எம்ஜியார் மன்னர் உடையில் உரைவாளை இடுப்பில் சொருகிகொண்டு எதிரியை மேட்டிலும் பள்ளத்திலும் வாளை கொண்டு உருட்டி உருட்டி எடுப்பாரே அதுபோல நரேந்திர மோடி போர் களத்தில் போய் நவாஸ்ஷரீபை உருட்டி உருட்டி எடுப்பார் என்று நினைத்துக்கொண்டார்களோ!?சிரிப்புதான் வருது

                  • மிஸ்டர்மகேஷ் போர் என்பது கோயம்புத்தூரில் ஊளையிட்டுக்கொண்டு ஓடி பூட்டிய கடைகளை அடித்து நொறுக்கி வாகனங்களை கவிழ்த்துபோட்டு கும்பலாக கூடிய தைரியத்தில் வழிபாட்டுதலங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசி பிரியாணி சட்டியை அப்படியே தூக்கிச்சென்று எச்சி சோறு தின்று….இவையெல்லாம் போர் முறைகள் என்று நினைத்து விட்டீர்களே மகேஷ்

                    • மீரான் அய்யா, அய்யா நீங்கள் குறிப்பிடுவது மட்டும் போர் அல்ல என்பது தெரியும். மாற்று மதத்தினர் மீது ஜிஹாத் நடத்துவது , ஒரே இறைவனை வழிபடும் சொந்த மதத்தினரான ஷியா , அகமதியா பள்ளிவாசல் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி அவர்களை கொல்வது , மாற்று கருத்து கொண்ட பத்திரிகை அலுவலகம் மீது நடத்தி அவர்களைஅழிப்பது , பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தி நிர்மூலமாக்குவது, அறியாச் சிறுவர்களுக்கு கூட மூளை சலவை செய்து , துப்பாக்கியை கொடுத்து அவர்கள் மனதில் விஷ வித்துக்களை விதைப்பது, சக மதத்தின் பெண்களை கூட பாலியல் அடிமைகளாக்குவது , இவை எல்லாம் கூட சிலரது போர் முறைகள் தான் என்பதும் தெரியும். இப்படி எந்த எந்த போர் சவாலையும் சந்திக்கும் ஆற்றல் இந்திய மக்களுக்கு இருக்கிறது.

                      எச்சி சோறு, கட்டி பீ , தண்ணி பீ, பேடித்தனம் என்றெல்லாம் எழுதி வரும் உங்களது தரத்துக்கு இறங்கி விவாதிக்க விரும்பவில்லை என்பதால் நீங்கள் குறிப்பிட்டுருக்கும் சில விடயங்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கிறேன்.

                • கிரிகெட் மேட்ச் தொடங்கிவிட்டது
                  அதிரடி ஆட்டம்
                  அழகிகள் அங்கிங்கெனாதபடி
                  அவிழ்த்துப் போட்டு ஆடுகிறார்கள்
                  காணுமிடமெல்லாம்
                  அம்பெயர் பரமாத்மா
                  தூங்கிக்கொண்டிருக்கிறார்
                  ஆட்டத்தின் போது மழை பெய்யுமா… தெரியாது
                  ஆடுகளம் சூடாகவே இருக்கிறது
                  ஆட்டத்தின் போதும், முடிந்தபிறகும் சீறி எழும்
                  ஊளைச் சத்தத்திலும், கை தட்டலிலும்
                  எத்தனை காதுகள் நிறந்தரச் செவிடோ,
                  நீண்டகால செவிடோ
                  எல்லாமே வின் வின் பாலிசிதான்
                  அவர்களுக்கு.

                • Mahesh மற்றும் Manikandan என்னயா இது தேச பத்திக்கு முழு உரிமையை கோரும் காவிகள் உங்க லட்சனம் தெரியாத வெள்ளகாரனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து வாழ்ந்த நன்றி கெட்ட——- நீங்க இப்ப என்ன புதுசா தேசபத்தி முஸ்லிம் மக்களை இந்தியவில் வம்பு இழுத்து திருந்திங்க இப்ப போர் அடித்தால் பாக்கிஸ்தான் கிட்ட மோத போயிஇருக்கிங்கா ஒன்னு சொல்லுறேன் கோட்டுகங்க இங்க இருக்கிற அப்பாவி முஸ்லிமை திவிரவாதினு செல்லி அடித்திங்க அவன் ஒன்னு செய்யால ஆனால் பாக்கிஸ்தான் இருக்குரவான் உன்மையான திவிரவாதி வைச்சி செய்வன் உதவிக்கு பாரத மாதவும் வாரது பாரத பிரதமரும் வார மாட்டரு ஏன் என்றால் எல்லாரும் கூட்டு களவானிங்க,

                  • இந்தியாவிற்காக பேசும் எல்லோரும் காவி கூட்டம் என்றால் நானும் காவி தான், இந்தியாவில் உள்ள 99 சதவீத மக்களும் காவிகள் தான் காரணம் அத்தனை பெரும் தேசப்பற்றோடு இந்தியாவிற்காக பேசுபவர்கள்…

                    • காவி கூட்டம் இந்தியாவிற்க்காக பேசாது மிஸ்டர் மணிகண்டன்.பசுமாடு மாட்டு மூத்திரம் மனு பூணூல் மொத்தத்தில் பார்ப்பனீயத்திற்க்காக மட்டும்தான் பேசும்.அந்த காவிகளை கழித்துவிட்டு மீதி உள்ள மக்களே இந்த இந்தியா என்ற நாட்டை உருவாக்க பாடுபட்டவர்கள் போராடியவர்கள் இன்றும் இதன் ஒற்றுமைக்காக நீடித்திருப்பவர்கள்.இங்கு இருக்கும் 99
                      சதவீத மக்களை பொய்யாலும் புரட்டாலும் வஞசித்து ஏமாற்றி அவர்களை உறிஞசி கொழுத்து அவர்களுக்குள் கலகத்தையும் பிரிவையும் ஏற்படுத்த தொடர்ந்து முயற்ச்சிக்கும் பேராபத்துகொண்ட நாசகார சக்திதான் காவிகள்.அவர்கள் ஒருபோதும் இந்தியாவிற்க்காக பேசமாட்டார்கள்.உலகத்திலேயே மிகப்பெரும் மோசடி என்று ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் காவிகளின் தேசப்பற்றுதான் முதலிடம் வகிக்கும்.இது பெரும்பாலான மக்களுக்கும் தெரியும். மக்களுக்கு தெரியும் என்பது காவிகளுக்கும் தெரியும்.ஆனாலும் மான்ங்கெட்டுபோய் அது தெரியாத மாதிரி நடித்துக்கொண்டிருப்பார்கள். இதற்க்கு உதாரணம் வேண்டுமென்றால் பல தொலைகாட்ச்சிகளில் விவாதம் என்ற பெயரில் காவி தலைவர்கள் கேவலப்படுவதை பார்க்கலாம்.

                    • இந்தியாவிற்காக பேசும் எல்லோரும் காவி கூட்டம் என்றால் நானும் காவி தான், இந்தியாவில் உள்ள 99 சதவீத மக்களும் காவிகள் தான் காரணம் அத்தனை பெரும் தேசப்பற்றோடு இந்தியாவிற்காக பேசுபவர்கள்

                      இந்தியவில் இருக்கும் 99சதவீத இந்தியர்கள் உண்ணமாதிரி 10 தான் காவிதிவிரவாதிகள் தமிழ்தேசத்தை காட்டி குடுக்கும் துரேகிகள்

                    • உங்களை போன்ற ஆட்களுக்கு பசுவை பற்றியும் தெரியாது இந்தியா கலாச்சாரத்தை பற்றியும் தெரியாது.

                      ஒவ்வொரு கோவிலும் மரம் வளர்க்கிறார்கள், இன்றும் கூட கோவில்களால் உருவாக்கப்பட்ட காடுகள் மூலம் தான் பல அறிய வகை மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.

                      என்னை கேட்டால் பசுவை மட்டும் அல்ல எந்த ஒரு உயிர் இனத்தையும் கொல்வது பாவம் மனிதனை மனிதன் கொலை செய்யவது சரி என்று நியாயப்படுத்தும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மத்தியில் பசு வதை பாவம் என்று சொல்வதை புரிந்துகொள்ள முடியாமல் உங்களை போன்றவர்கள் இருக்கிறார்கள். பசு வதை கூடாது என்று சொல்லும் போது பல உயிர்கள் மீதும் அக்கறை வரும், ஹிந்து கோவில்களில் இன்றும் பாம்பு, நாய் (பைரவர்), பசு, கிளி, கழுகு என்று பல ஜீவராசிகளை வணங்கும்படி வைத்து இருக்கிறார்கள் அதற்கு காரணம் அணைத்து உயிர்கள் மீதும் அன்பு வேண்டும் என்பதற்காக தான்.

                      உங்களை போன்ற ஆட்களுக்கு இது புரிய போவதில்லை.

                      வினவு போன்றவர்கள் திட்டமிட்டு என்னமோ ஒட்டு மொத்த இந்தியாவும் பசுவின் பெயரை சொல்லி கொலை செய்கிறது என்பது போல் பிரச்சாரம் செய்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடிக்கு மேல் அதில் இம்மாதிரியான சம்பவங்கள் நூற்று கணக்கில் கூட இல்லை, விறல் விட்டு என்னும் அளவில் தான் நடந்து இருக்கிறது ஆனால் அதை வைத்து கொண்டு என்னமோ ஹிந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களையும் தலித்துகளை திட்டமிட்டு தாக்குகிறார்கள் என்பது போல் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

  8. Pak and India could become the best friendly nations if they are willing. Look at Canada and USA. But I will tell one thing. India should behave like a big brother to Pak and listen to their complaints. Pak should behave in a disciplined way. Oh well…I am dreaming…this fights will never end until both countries realize that what they have lost so far!

  9. மணிகண்டனின் அறியாபிள்ளை மனது அவர் எழுத்திலிருந்து தெரிகிறது.வாசிக்கிற ஆர்வமும் எழுதுகிற ஆர்வமும் இருப்பதால் வரும் காலங்களில் பல உண்மைகள் அவருக்கு தெரியவரும்.அப்போது அறியாமையிலிருந்து அவர் வெளியே வருவார்.மணிகண்டன்….இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களை தாக்குகிறார்கள் என்று நான் உட்பட இங்கு யாருமே சொல்லவில்லை.இந்த தளத்திலேயே இந்துசகோதரர்கள் ஏகப்பட்ட பேர்தான் காவி வெறியர்களுக்கு எதிராக கருத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.அதிலும் தலித்துகளை வேறு இந்துக்களிலிருந்து தனியாக பிரிக்கிறீர்களே.தலித்துகள் யார் முஸ்லிம்களா?அவர்கள் இந்துக்களில்லையா?ஒருபோதும் இந்துக்கள் முஸ்லிகள் கிறித்துவர்கள் என்பவர்கள் தாக்குதல் நடத்தவே மாட்டார்கள்.இதில் நாத்திகர்களையும் கம்னியூஸ்ட்டுகளையும் கூட சேர்த்துக்கொள்ளலாம்.மனிதகுல விரோதிகள் மக்கள் ஒற்றுமையை குலைத்து குறுக்குசால் ஓட்ட நினைக்கும் குள்ளநரிகளே திட்டமிட்டு தாக்குதல் நடத்துவார்கள்.அதில் இந்தியாவில் இந்த வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது இந்துக்கள் என்ற போர்வையில் உலாவி கொண்டிருக்கும் காவி கூட்டம்தான். இதில் சில மணிகண்டன் கள் அறியாமையால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் அறிவும் அனுபவமும் கூடட்டும் கண்டிப்பாய் உங்களுக்கு புரியும்.அப்போது இந்த காவிகளின் முகத்தில் காரி உமிழ்வீர்கள்.

  10. Mahesh & Manikandan – truly appreciate your patriotism and contributions. India needs people like you to strengthen it’s unity.
    It’s unfortunate that nationalism, patriotism are getting erased from the minds of some.

    But, we have one good news: Vinavu followers (may be just few hundreds) and people like Meeran Sahib are not significant in numbers. So we don’t have to worry too much about them.

    For instance, if websites like Vinavu, Keetru, Viduthalai start collecting a fee for readership, you can imagine the Readers’ count. Another example: Seeman continuously rants about Sri Lankan Tamils without even having a basic understanding of the issue. But look at the support they get, it’s hardly anything…

  11. காவிகுஞசுகளுக்கு உற்ச்சாகம் குன்றாமல் பார்த்துக்கொள்கிறாராம்.அம்மனமாய் நிற்பதற்க்கு ஆர்வமூட்டுகிறாராம்.முகநூல் பக்களில் பதிவிடும் லட்சக்கணக்கான இந்து சகோதரர்களின் பதிவுகளை பார்ப்பதே இல்லை.பார்த்தாலும் மனம் சோர்வடைந்து விடும் என்று கஷ்டப்பட்டு கண்டு கொள்வதே இல்லை.கொடிய நோய் பரப்பும் விஷ கிருமிகள்.கொஞச நாட் களில் முற்றிலும் தனிமை பட்டு தானே அழிந்து ஒழிந்து விடும்.

    • மீரான் ஜயா எனக்கு RSS இயக்கத்தை பற்றி அந்தளவுக்கு தெரியாது ஆனால் உங்களை போன்றவர்கள் மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் போது தான் RSS போன்ற அமைப்புகளுக்கு நியாயம் கற்பிக்கிறீர்கள். மதத்தின் அடிப்படையில் உங்களை போன்றவர்களால் முழு மனத்தானாக இந்தியாவை நேசிக்க முடிவதில்லை. காஷ்மீரில் ஒரு இந்தியன் கொல்லப்பட்டால் அதை மதத்தின் அடிப்படையில் நியாயம் கற்பிக்கிறீர்கள். உங்களை போன்றவர்களின் இந்த மாதிரியான மனிதநேயமற்ற செயல்கள் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு வேதனை அளிக்கிறது. நீங்கள் மட்டும் அல்ல உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் ஒரு தவறான பாதையில் செல்கிறீர்கள்…

      ஹிந்துக்களால் இந்தியா தேசத்தின் கொடியை சிதம்பரம் போன்ற பெரிய கோவிலின் உச்சியில் ஏற்றி பெருமைப்பட முடிகிறது. மதத்தை விட நாடு தான் முக்கியம் என்று ஹிந்துக்களால் சொல்ல முடிகிறது ஆனால் உங்களுக்கு இன்னும் தேசம் என்றால் என்ன ? நாடு என்றால் என்ன கேள்வி கேட்கிறீர்கள் ?

      உங்களால் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்க முடியாவிட்டாலும் அப்பாவிகள் வாழும் இந்த நாட்டிற்கு துரோகம் இழைக்காதீர்கள்.

  12. ராசா கண்மணி புல்லரிக்கிற வைக்கிற உங்கள் தேசபக்தியை இன்னொரு முறை விளக்கினால் நான் அழுதிருவேன் ராசா.எந்த அளவிற்க்கு என்றால் நான் மாங்கு மாங்கு என்று எழுதியும் அதை வாசிக்கவே முடியாத அளவிற்க்கு தேசத்திற்க்காக உருகிய உங்கள் கண்ணீர் என் அனைத்து விளக்கங்களையும் மறைக்கிறது பார்த்தீர்களா இதுவல்லவோ தேசபக்தி.தேசபக்த்தியை கண்டையினர் கண்டையினராக சேர்த்து வைத்திருக்கும் டவுசர்கள் உங்களுக்கும் கொஞசம் மொண்டு வாயில் ஊற்றியதில் “எதிராளி என்ன சொன்னான் அவன் நம் தாய் மொழியில்தானே சொன்னான் மதத்தை பற்றி அவன் ஏதும் பேசினானா தாய்நாட்டை திட்டினானா இந்துக்கள் என்று இருக்கிற பெரும்பான்மை மக்களை ஏதும் இழிவு படுத்தினானா என்றெல்லாம் படித்து கூட பார்க்க முடியாத அளவிற்க்கு தேசபக்தி கண்ணீராய் கரை புரண்டு ஓடுகிறதே.சரி நான் கேட் கிறேன் இந்தியா இந்துக்கள் இந்தியா இந்துக்கள் என்று அந்த இன்டியாவை விட்டும் அந்த இந்துக்களைவிட்டும் தள்ளிநின்று கொண்டு கத்திக்கொண்டிருக்கிறீர்களே அந்த இந்துக்கள் உங்களை விட்டு வெகு தூரத்தில் உங்களை கண்டாலே வெறுப்போடு திரும்பி கொண்டார்களே அதை பார்த்துமா உங்களுக்கு சொரனை வரவில்லை.இந்துத்துவ வெறியை மண்டை முழுக்க ஏற்றி பாரதமாதாவை குத்தி குதறி அவளுடைய பெரும்பாலான பிள்ளைகளை கொன்று குவிக்க எண்ணுகிறீகளே …அவள் மூழியானாலும் உங்கள் வெறி தீரவேண்டும்.அத்ற்க்கு அவளிடம் பாசம் இருப்பதுபோல நடிக்க வேண்டும் அதுவும் எங்களுக்கு மட்டும்தான் தேசபக்தி என்று சதா ஊளையிட்டுக்கொண்டே திரிய வேண்டும். இது பக்கா நடிப்பு என்பதும் ஒற்றுமைக்கு உலைவைக்கிற வேலை என்பதும் இந்தியர்களாகிய எங்களுக்கு தெள்ளத்தெளிவாய் தெரிந்து விட்டது என்பதை உங்கள் டவுசர் தலைமையிடம் சொல்லி வேறு ஏதாவது புது நடிப்பு பசப்புகளை ஆரம்பிக்க சொல்லுங்களேன்.இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற படம் ரொம்ப இத்து இரந்து போய் கிழிந்து தொங்குகிறது. இதை பிடித்து இன்னும் தொங்கி கொண்டிருக்கிறீர்களே எங்களுக்கு பார்க்க பரிதாபமாய் இருக்கிறது.ஒன்றுக்குள் ஒன்றாய் பழகி விட்டோம் அந்த அக்கறையில்தான் சொல்கிறேன்.கேட்டால் இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் ஓட்டலாம். இல்லையென்றால் இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து டவுசரை கிழித்து நசுக்கி விடுவார்கள்

    • நான் சொன்ன விஷயத்திற்கு பதிலை காணோம் எப்போதும் போல் ஹிந்துக்கள் மீது வெறுப்பை கக்க வேண்டியது… எப்போதும் போல் உங்கள் ஆட்கள் சொல்வது போல் நானும் இந்தியாவை நேசிப்பவன் தான் என்று ஒரு பொய்யை சொல்லி விட்டு ஓடி ஒளிய வேண்டியது… உங்க்ளை போன்ற ஆட்களிடம் இருப்பது எல்லாம் போலிதனம் தான்.

      நீங்கள் தானே சொன்னிர்கள் மதத்தின் அடிப்படையில் நான் பாகிஸ்தானை ஆதரிப்பவன் என்று, அந்த ஒரு வார்த்தைக்கு பிறகு நீங்கள் என்ன வார்த்தை சொன்னாலும் அதை நம்புவதற்கு இல்லை

      • Manikandan,

        Let’s not waste our time debating with Terrorist Sympathizers. Actions speak louder than words. Modiji is leading us in the right direction; we just started.

  13. அவிழ்த்துப்போட்டு நிற்பதில்தான் என்ன ஒரு சந்தோஷம் இல்லையா மணிகாண்டா?இப்படித்தான் பேசியதையே பேசவேண்டும்.இந்த விவாதம் துவங்கியதிலிருந்து இதில் பங்கெடுத்தவர்கள் இதை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கவலைபடக்கூடாது.நாம் என்ன எழுதினோம் எதிராளி என்ன எழுதினான் என்றெல்லாம் சிந்திக்கவே கூடாது.மூளை குழம்பியவனைப்போல சொன்னதையே சொல்லி அவனை சலிப்படைய செய்யவேண்டும்.அதனால் ஏற்ப்படுகிற கேவலங்களை கணக்கில் எடுக்கவே கூடாது.யாராவது ரெண்டு பைத்த்கியக்காரனை இதன் மூலமாய் தக்கவைத்தால் போதாதா என்றுதான் கணக்கு போடவேண்டும்.நம்ம வடிவேலு பாணிதான்.. என்ன கையபிடிச்சி இழுத்தியா ……

    • நான் சொன்ன விஷயங்களுக்கு இன்னும் பதிலை காணோம் 🙂

      மதத்தின் அடிப்படையில் இந்திய தேசிய கீதத்தை பள்ளி கூடத்தில் பாட கூடாது சொன்னவருக்கு இன்றுவரையில் நீங்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. காஷ்மீரில் அநியாயமாக கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானை எதிர்த்து நீங்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை… ஆனால் காலம் மாறிவிட்டது என்பது கூட புரியாமல் 800 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் நாங்கள் என்று உங்களை போன்ற ஆட்களும் பாகிஸ்தானிகளும் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்…

      உங்களை போன்றவர்கள் இந்திய துரோகிகளாக இல்லாமல் இந்தியாவை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை, இந்திய உப்பை தின்று விட்டு நன்றி இல்லாமல் பாகிஸ்தானுக்கு சேவை செய்யாதீர்கள்.

      இத்துடன் என் வாதத்தை முடித்துக்கொள்கிறேன்.

  14. ஒரு நல்ல தலைப்பிலான கட்டுரை.ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்க்கு வழிகோலுகிற கட்டுரையும்கூட.இதை பைத்தியக்காரத்தனமான திசையில் இழுத்து சென்றுவிட்டதுகள் காவி குஞ்சுகள்.பாகிஸ்தானை மையமாய் வைத்து கட்டுரை இருந்தாலும் இது பல நாட்டு மக்களுக்கும் பொருந்தும்.இலங்கையை கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம். இலங்கை இந்தியாவால் பகை நாடாக பார்க்கப்படாவிட்டாலும் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தில் குறிப்பாக தீவிர தமிழ்தேசியம் பேசுகிற சில அரசியல் கட்சிகளுக்கு இலங்கை ஆகாத நாடுதான்.அதில் நியாயம் இருக்கலாம்.சிங்கள ஆட்சியாளர்களும் சில வெறிபிடித்த பெளத்தபிக்குகளும் இன துவேஷத்தை கிளப்பி ஒரு இன மக்களை விரட்டி அடித்த பயங்கரம் அங்கு நிகழ்ந்தது.ஆனால் அங்குள்ள சிங்கள மக்கள் அனைவரும் வெறிபிடித்த இன வெறியர்களா?இல்லவே இல்லை.எனக்கு இலங்கையோடு நெருங்கிய வியாபார தொடர்பு உண்டு.வாரத்திற்க்கு நாஙுகுமுறை போய்வந்த காலமெல்லாம் உண்டு.இலங்கை முழுக்க எல்லா பகுதியும் அத்துபடி. சிங்களர்களோடும் நெருங்கி பழகி இருக்கிறேன்.போதுமான அளவிற்க்கு சிங்களமும் தெரியும்.சிங்களர்கள் மிகவும் வெள்ளந்தியான வெகுளியான மக்கள்.வஞசமோ வன்மமோ பெரும்பாலும் அவர்களிடம் இருந்ததில்லை.ஆனால் அப்படி ஒரு விஷத்தை அரசியல் வியாதிகளும் மதவாதிகளும் தொடர்ந்து கிளப்பினார்கள்.அதற்க்கு தோதாய் புலிகளின் எதேச்சதிகார எதிர்வினையும் அதற்க்கு வலு சேர்த்தது.விளைவு ஒரு நல்ல நாடு அமைதியை இழந்து அதன் ஒரு பகுதியே சுடுகாடாய் மாறிப்போனது.சில அரசியல் ஆதிக்கத்திற்க்காக அப்பாவி மக்கள் பகையாகி பலியாவதும்தான் இங்கே கவனிக்கதக்க பரிதாபம்.பாகிஸ்தான் என்பது முஸ்லிகளை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதால் காவிகளுக்கு அரசியல் செய்ய மிக தோதாகவும் மிக விருப்பமுள்ளதாகவும் மாறுகிறது.பாகிஸ்தானாவது நம்மை விட பவீனமான நாடு. நம்மிடம் அடிவாங்கி ஓடியநாடு.சீனா மிக வலிமையும் பாகிஸ்தானையும் விட பல மடங்கு தீமையும் எந்த வகையிலும் நம்மோடு ஒப்பிடவோ நெருக்கமாக்கவோ வழியேயில்லாத நாடு.காவிகள் அதை பெரிதாக பேசவே மாட்டார்கள்.மணிகண்டன் போன்ற காவி குஞ்சுகளுக்கு சீனா என்ற ஒன்று இருப்பதே தெரியாது.தெரிந்தாலும் அதில் அரசியல் செய்ய முடியாது.முஸ்லிம்களை சீண்டி அரசியல் செய்ய பாகிஸ்தானே சரி.அதில்தான் கிறிகெட் முதல்கொண்டு தேசபக்தியை பீச்சி அடிக்க முடியும்.பிஞ்ச விளக்குமாரை கொண்டு அடிக்கவேண்டும் இவன் களின் தேசபக்தியை.

  15. உங்களின் பாகிஸ்தான் பாசம் புரிகிறது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எத்தனை இந்தியர்கள் கொலை செய்யபட்டாலும் நீங்கள் அவர்களை ஆதரித்து கொண்டு தான் இருப்பீர்கள், அதை கண்டிக்க கூட உங்களுக்கு மனம் வராது கேட்டால் பாகிஸ்தானியர்கள் தான் உலகிலேயே மிக கருணை மிக்கவர்கள் என்பிர்கள் உங்களின் மனிதநேயமற்ற பாகிஸ்தான் பாசம் புல்லரிக்கிறது.

    18 இந்தியர்களை 4 பாகிஸ்தானிகள் கொன்றார்கள் என்பது தான் உங்களை போன்றவர்களுக்கு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது, 18 இந்தியர்களின் மரணம் உங்கள் மனதில் துளி கூட வருத்தம் ஏற்படுத்தவில்லை…

    பாகிஸ்தான் மீது இவ்வுளவு பாசம் வைத்து இருக்கும் உங்களை போன்றவர்களை பாகிஸ்தான் போய்விடுங்கள் என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும். இந்தியாவின் தேசிய கீதத்தை பள்ளிக்கூடங்களில் பாடுவதை கூட ஏற்க முடியாத நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் ? நீங்கள் இஸ்லாமியரா, கிறிஸ்துவரா, ஹிந்துவா என்பது இங்கே கேள்வி இல்லை, நீங்கள் இந்திய தேசத்திற்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்பது தான் இங்கே கேள்வி. உப்பை இங்கே தின்று விட்டு விசுவாசத்தை பாகிஸ்தானிடம் காட்டாதீர்கள்.

    மதவாதத்தால் மனம் வக்கிரப்பட்டு இருக்கும் உங்களை போன்றவர்களுக்கு, தேசப்பற்று என்பது இளக்காரமாக தெரியும், இந்த தேசத்தை உள்ளன்போடு நேசிப்பவர்களை விளக்கமாற்றால் அடிக்க வேண்டும் என்று தான் கொள்வீர்கள்… இவ்வுளவு பேசியும் உங்களை போன்றவர்களுக்கு இந்த தேசம் இடமளித்து கருணை காட்டுகிறது பாருங்கள் அந்த ஒரு விஷயத்திற்காகவே நான் இந்த நாட்டை பற்றி மிகவும் பெருமை படுகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க