Sunday, February 5, 2023
முகப்புசெய்திவிஸ்வ இந்து ரவுடி பரிஷத்

விஸ்வ இந்து ரவுடி பரிஷத்

-

விசுவ இந்து ரவுடி பரிஷத்!
விசுவ இந்து ரவுடி பரிஷத்!

“துணிச்சலான ஒரு தலைவரை இழந்து தவிக்கிறோம். மத ரீதியாக இந்துத் தலைவர்களை குறிவைத்துத் தாக்குவது தொடர்கிறது. 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உளவுத் துறை செயலிழந்து போய் விட்டது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர் கெட்டு விட்டது” என்று விஸ்வ இந்து பரிஷத்தின் தமிழகத் தலைவர் வேதாந்தம் ஒரு அஞ்சலியின் போது பேசினார். இந்த கசிந்துருகுதல் யாருக்காக?

கிருஷ்ணகிரி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவரான சூரி, செப்டம்பர் 19, 2016 அன்று ஓசூர் நகரத்திலிருக்கும் அவரது ரியல் எஸ்டேட் அலுவலக வாசலில் படுகொலை செய்யப்பட்டார். வேதாந்தம் மலர் வளையத்துடன் “ஃபார்முலா அஞ்சலி” செலுத்தியது இந்த சான்றோருக்குகாகத்தான். இந்த கொலையை ஒட்டி ஓசூரில் இரண்டு நாட்கள் கடைகள் அடைக்கப்பட்டன.

போலீசும், ஊடகங்களும், ஃபேஸ்புக்கிலிருக்கும் இந்துத்துவ ஆட்களும் இந்தக் கொலையைச் செய்த ஜிகாதி யார் என்று தேடிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய, கொலை செய்தவர்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தே அனுப்பியிருக்கிறது. நம்ப முடியவில்லையா?

ஓசூர் அண்ணா நகரில் பிரபரமான சாராய வியாபாரியான கன்னையாவின் மகன்தான் பின்னர் சூரி என்று அழைக்கப்பட்டார். பேருந்து நிலையத்தில் சினிமா சி.டி கடை, பிறகு பைனான்ஸ், கட்டப் பஞ்சாயத்து என்று முக்கியமான ரவுடியாக வளர்ந்தார். ஒரு கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக சிறை சென்று பிணையில் வந்திருக்கிறார். இப்படியான தகுதிகளைப் பார்த்து வியந்த ஆர்.எஸ்.எஸ் கனவான்கள் சூரியை விஸ்வ இந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளராக நியமித்தனர். சனாதான தர்மத்தை காக்க இத்தகைய பக்கா ரவுடிஜிக்கள் தேவை என்பதை மனு முதல் கீதை வரை காலந்தோறும் வலியுறுத்துகின்றனர்.

இந்து இயக்க தலைவரானதும் ஓசூரில் விஸ்வ இந்து பரிஷத்தின் மாநில மாநாட்டை நடத்தி பார்ப்போரை வியக்க வைத்தார். ஒரு நகரத்து முன்னணி ரவுடி தலைவரானால் வசூல் என்ன, ஏற்பாடு என்ன எல்லாம் கச்சிதமாக நடக்கும் என்பதை சங்க பரிவாரத்து சான்றோர்கள் எவ்வளவு துல்லியமான யூகித்திருக்கின்றனர் பாருங்கள்!

இருப்பினும் பரிஷத்தில் கோஷ்டி மோதல் இல்லாமல் இல்லை. இவ்வளவு வசூல், காரியங்கள் இருக்கும் போது தொழில் போட்டி ஏற்படுவது சகஜம்தானே? சூரிக்கு போட்டியாக இருந்த கஜா பரிஷத்தின் நகர செயலாளராக இருக்கிறார். தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்தின் சார்பாக சூரியும், அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் சார்பாக கஜாவும் மோதிக் கொண்டனர்.

2011 உள்ளாட்சித் தேர்தலில் இருவரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரச்சினையில் மோதிக் கொண்டனர். சென்ற ஆண்டு சூரி கோஷ்டி கஜாவை வெட்டுகிறது. மகேஷ் எனும் கஜாவின் ஆள் கொல்லப்பட்டார். கஜா பிழைத்துக் கொண்டார். அந்த கொலைக்கு பழிவாங்கவே இந்தக் கொலை நடந்திருக்கும் என்பது ஊரறிந்த ஒன்று.

அதை ஆமோதிக்கும் வண்ணம் கஜாவும் தனது கூட்டாளிகளோடு போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

இப்போது வேதாந்தத்தின் கண்ணீர் அஞ்சலியைப் பாருங்கள்! தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, இந்து தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுவது, இன்னபிற அவரது கவலைகளை தீர்க்க வேண்டுமெனில் அன்னாரை கைது செய்வதும் அன்னாரது சங்க பரிவாரங்களை தடை செய்தால்தானே முடியும்?

வேதாந்தம் போன்ற விபூதிப் பழங்களும் சூரி போன்ற பக்கா ரவுடிகளும் இல்லாமல் விஸ்வ இந்து பரிஷத் இல்லை!

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட  குறுஞ்செய்தி.

  1. வெறியர்கள் தங்களை தெள்ளத்தெளிவாக அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.சாதாரண பொதுமக்களில் பலரும் கூட இவர்களை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.இதற்க்கு சமூக வலைதளங்களில் இவர்களை கண்டித்தும் கலாய்த்தும் எழுதும் இந்துமக்களின் பதிவுகளே சாட்சி.கோவை கலவரத்திற்க்கு பிறகு நடந்த கண்டன கூட்டத்திலும் வெறியர்களை ஒதுக்கி வெறியர்களுக்கு எதிராக திரண்ட அனைத்து மக்களும் கூட இதற்க்கு கண்கண்ட உதாரணம்.இனி காவல் துறையும் சட்டமும்தான் இவர்களை எந்த முறையில் அணுகவேண்டுமோ அந்த வகையில் அணுகி இதை களையவேண்டும்.இவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதின் சோதனையை சிறுக சிறுக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.இது வளருமானால் வரும் விளைவுகள் எண்ணிப்பார்க்கமுடியாததாகவே முடியும்.இந்த கோவை கலவரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் சில காலிகளுக்கு கல்யாணராமன் என்ற மூளை வெந்தவன் கொடுக்கும் அறிவுரையை அவன் முகநூல் பக்கத்தில் பதிந்திருப்பதை பாருங்கள்.சிறைக்குள் இருக்கும் கொலைகாரர்களோடும் கொலைதாக்குல் செய்தவர்களோடும் அறிமுகமாகி நெருக்கம் கொள்ளவேண்டுமாம் அவர்களுக்கு இந்த காலிகளின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டுமாம்.இவ்வளவு பகிரங்கமாக கொக்கரிக்கிறானென்றால் சட்டம் இவர்களை எப்படி கையாள வேண்டும்?இதில்தான் இருக்கிறது தமிழ்நாட்டின் வருங்கால அமைதி.

  2. ரவுடி,மொள்ளமாரி,கேப்மாரி,பக்காத்திருடன்,கன்னக்கோல்,கொலைகாரன்,கூலிப்படை,ஜேப்படி,பொறுக்கி ,பஜாரி,புறம்போக்கு,பொம்பளை பொறுக்கி,மாமா,சாதி வெறியன்,துரோகி, நயவஞ்சகன் இத்தியாதி பண்புகள் கொண்ட தேசபக்த்தர்கள் ராஷ்ட்ட்ரீய ஸ்வயம் ஷேவக் என்கிற இந்து தேச மொத்த குத்தகைதாரர்கள் வைத்திருக்கும் பலப் பல உட்டாலங்கடி சேனாக்களுக்கு வானரங்களாகத் தொழில் செய்ய நிறைய தேவை!எச்சி ராஜா மூலமாக வரவும்!advt

  3. உயிர் தட்ஷணை உத்திரவாதம் மட்டும் தந்தால் போதும்.உடனடி அப்பாயின்மெண்டு!சாகிறதுக்குள்ள எப்புடி எம்புட்டு வேணுமுன்னாலும் சம்பாதிச்சுக்கலாம் ஆனா ஒரு முசுலீமக் கொல்லணும் பாலியல் வல்லுறவு கொள்ளனும்-இது தான் கண்டிசன்.தியாகிப் பட்டம் கண்டிசனா உண்டு!பாரத ரத்னா பரிசீலிக்கப்படும்!(விலம்பரம்)

  4. செங்கதிர்செல்வன் போன்ற ஏராளமான சகோதரர்கள் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஆறுதலையும் பலத்தையும் தருகிறார்கள்.

  5. ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிக்ஷத், இந்து முன்னணி போன்றவை எவ்வித விசாரணையும் இல்லாமல் தடை செய்யப் பட வேண்டிய பயங்கரவாத தேச விரோத இயக்கங்கள். காவிரி நீருக்காக ஒரு வரி கூட பேசாத இவர்கள் தங்கள் கட்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து செய்யும் பொறுக்கிகளின் மரணத்திற்காக அப்பாவி மக்களின் சொத்துக்களையும் இசுலாமியர்களின் வழிப்பாட்டு தலங்களையும் தாக்கி அழிப்பதை பார்க்கும் பொழுது, விசாரணை என்கிற ஜனநாயக உரிமையை கூட இவர்களுக்கு தராமல் இவர்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

    இது வரை இறந்து போன இந்து மத இயக்கங்களை சார்ந்த எவரும் சாமானியரோ அல்லது அப்பாவிகளோ அல்ல, அனைவருமே ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து, மக்களின் பணத்தை பிடுங்கி தின்னும் வட்டிக்கு பணம் விடும் கேவலமான இழி தொழில்களை செய்பவர்கள் தான் கொல்ல பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்த கொலைகள் அனைத்துமே முன்விரோதம், தொழில் போட்டியின் காரணமாகத் தான் செய்யப்பட்டிருக்குமே தவிர நிச்சயம் இசுலாமிய மத வெறியின் காரணமாக அல்லவே அல்ல.. ஆகவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை இயக்கங்களை ஒழித்தாலே போதும் நாட்டின் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்..

  6. மீண்டும் தாயுமானவன் போன்ற சகோதரர்களுக்கு கோடி கோடி நன்றிகள்.உங்களைப்போன்றவர்களின் வெளிப்படையான கண்டனங்கள்தான் ஓரளவிற்க்காவது அவனுங்களை சோர்வடையச்செய்யும்.ச்மீபகாலமாக வெறி உச்சத்திற்க்கு ஏறி நிலைகுலைந்து போய் அலயுதுகள் பேய்கள்.காவிரிநீருக்காக பேசவில்லை என்று இந்த வெறி பிடித்த கூட்டத்திடம் எதிர்பார்க்கிறீர்கள்.மனித பிணம் திண்ணும் மிருகங்கள் காவிரிக்காகவா கவலைப்படும்.அது எல்லா அரசியல் பயல்களும் அரசியல் செய்ய அதை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள்.அது மாமூலான எச்சை அரசியல்.நீங்கள் அந்த பட்டியலில் இவர்களை சேர்க்காதீர்கள்.இவர்களுக்கு அதெல்லாம் சும்மா ஊறுகாய்.நாங்களும் அரசியல் வாதிகள்தான் என்று போர்த்திக்கொள்ளும் போர்வை.இவர்களின் முக்கிய இலக்கு, பசுமாடு பாரதமாதா வந்தேமாதரம் என்று சொல்லிக்கொண்டு மனித ரத்தம் குடிப்பதுதான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க