Sunday, June 26, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அடாவடி - அனைத்துக் கட்சியினர் கண்டனம் !

விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அடாவடி – அனைத்துக் கட்சியினர் கண்டனம் !

-

letter-head28.10.2016 அன்று மாலை, சென்னை, கோடம்பாக்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரிடையே கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்குபெற்றோர்

1. கோபண்ணா, காங்கிரஸ் கட்சி
2. மா. உமாபதி, தி.மு.க
3. இ.பரந்தமன், தி.மு.க
4. கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்
5. அ.அருள்மொழி, திராவிடர் கழகம்
6. சு.குமாரதேவன், திராவிடர் கழகம்
7. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
8. அருணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா)
9. த. கனகராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா)
10. வன்னி அரசு, விடுதலைச் சிறுத்தைகள்
11. ஷா நவாஸ், விடுதலைச் சிறுத்தைகள்
12. ஓவியா, புதிய குரல்
13. வே. மதிமாறன், எழுத்தாளர்
14. சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

28-10-2016 அன்று சென்னை கோடம்பாக்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரிடையே நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற, பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், எழுத்தாளர்களுமாகிய நாங்கள், ஊடகங்களின் அழைப்பை ஏற்று, பல்வேறு தொலைக்காட்சிகள் நடத்தும் சமூக, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று, எங்களின் பார்வைகளையும், கருத்துகளையும் பதிவு செய்து வருகிறோம். அவ்விவாதங்களில் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் பிறர் தம் கருத்துக்களைச் சொல்லவிடாமல், தடுத்தும், நாகரிகமின்றியும், அடாவடித்தனமாகவும், மிரட்டல் தொனியிலும், விவாதத்தை திசை திருப்பும் போக்கில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை முன் வைத்தும் பேசி வருகின்றனர்.

தொலைக்காட்சியில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் இப்போக்கினை தொலைக்காட்சியினர் முறைப்படுத்த வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அவ்வாறின்றி, ஒரு பக்கச் சார்பாகவே தொடர்ந்து நடந்து கொள்வார்களெனில் அத்தகைய தொலைக்காட்சி விவாதங்களின் பங்கேற்பது குறித்து நாங்கள் பரிசீலனை செய்ய நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
சுப. வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை

 1. ஆரோக்கியமான விவாதங்களில் பங்கேற்ப்பது என்றால் அவர்களால் இயலாத ஒன்று.அதற்க்கு சாத்தியமே இல்லை.சபை குழப்புவது ஒன்றுதான் அவ்ர்களால் முடியும்.அதற்க்குத்தான் அவர்கள் வரவும் செய்கிறார்கள்.அவ்ர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் எதிர்பார்த்தால் எப்படி?இந்த வினவு மறுமொழியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?பெரியார் காலத்தில் அவர் இவர்களுடைய டங்குவாரை கிழித்து தொங்க போடும்பொழுது யாரையோ கிழிப்பதாக சொரனையில்லாமல் எருமை மாடுகள் போல போனார்கள்.பதில் சொல்லவும் மாட்டார்கள் கோபப்பட்வும் மாட்டார்கள்.அப்படி எதிவினை காட்டினால் உண்மை வெளியில் தொங்கி மிக மோசமான அவமானமாகிவிடும் என்று இவர்கள் முன்னோர்களுக்கு தெரிந்திருந்தது.அவர்களின் வாரிசுகளான இவர்கள் “ஒக்க அழுதால் வெக்கமில்லை”என்பதற்க்கொப்ப மானம் அவமானமெல்லாம் பார்த்தால் வேலைக்காகாது என்று கருதி அம்மனமாய் நின்று அலறுகிறார்கள்.அதிகாரமும் கைக்கு கிடைத்தவுடன் துளிர்விட்டுப்போனது.நான் ஒன்றை இங்கே உறுதியாய் குறிப்பிட்டுச்சொல்கிறேன்.ஜெயமோகன் என்ற புல்லுருவி அறிவுஜீவி என்ற போர்வையில் இவர்களுக்கு நிறைய எடுத்து கொடுத்திருக்கிறது.அவர் பொது விவாதங்களில் கலந்து கொள்ளமாட்டார்.தன் முகநூல் பக்கத்திற்க்கு பதில்மொழி தரும் உரிமை தரமாட்டார்.நடுநிலை வேஷம் போட்டு நியாயஸ்த்தன் போல நீட்டி முழக்கி, பதிலே இல்லாமல் பே முழி முழித்துக்கொண்டிருந்த இந்த கருங்காலிகளை தூண்டிவிட்டு நல்ல பிள்ளை போல இருப்பதில் அந்த ஜெயமோகனுக்கு பெரும்பங்கு இருக்கிறது.பெரியாரை மிக மோசமாக இந்த __________திட்டுவதற்க்கு அந்த ஜெயமோகன் முக்கிய காரணம்.இதற்க்கு முன்பெல்லாம் இதுகள் பெரியாரை கண்டுகொள்ளவே செய்யாது.இப்போது என்ன எகத்தாளமாய் பேசுகிறதுகள்! பெரியார் விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் நான் கருதவில்லை.ஆனால் ஒரு பெருந்தலைவனை மிக கேவலமாக பொது மேடைகளில் பேசுவது என்பதெல்லாம் சமீபத்தில் வந்ததுதான். காறித்துப்பப்படவேண்டிய பல மூடத்தனங்களுக்கு பெரிய ஆன்மீக விளக்கம் என்ற பெயரில் பக்கம்பக்கமாய் உளறுவது.பரிதாபமாய் முழித்துக்கொண்டிருந்த இவனுங்களுக்கு பிடித்து தொங்குவதற்க்கு இத்தகயிற்றை கொடுத்து தொங்கவைத்ததும் இந்த ஜெயமோகந்தான்.மோகன்பகவத்தைவிட கொடிய ஆபத்து இந்த ஜெயமோகன்.

  • அதானே இஸ்லாமியர்களிடம் 700 வருடங்கள் அடிமையாக இருந்த ஹிந்துக்கள் இப்போது எப்படி பதில் பேசலாம், யார் அந்த உரிமையை ஹிந்துக்களுக்கு கொடுத்தது… பெரியாரோ அல்லது மீரான் சாஹிப் பாய் போன்றவர்கள் என்ன சொன்னாலும் கம்முனு கேட்டுக்கொண்டு ஆமாம் சாமி என்று இருக்க வேண்டும்… பதிலே பேச கூடாது… அப்படி தானே பாய் 🙂

   • ஆமாம்! ஒவ்வொறு விவாதங்களிலும் என்ன அற்புதமான பதில் உங்கள் கூட்டத்திடமிருந்து வருகிறது!சரி….இந்துக்கள் இந்துக்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறாயே தங்கம்!யாரம்மா அந்த இந்துக்கள்?இப்படி நீங்கள் அசிங்கப்படும்போது தற்காத்துகொள்ளுவதற்க்கும்,திருப்பி தாக்குவதற்க்கு ஆள் கிடக்கமாட்டானா என்று பார்ப்பதற்க்கும் இந்துக்கள் இந்துக்கள் என்று போகிற வருகிறவனையெல்லாம் இந்துக்கள் இந்துக்கள் என்று கூவ வேண்டும்.நுங்கை அவன் வகுந்து கொடுத்தபிறகு நைசாக உட் கார்ந்து தனியாக திண்ணவேண்டும்.சுருக்கமாக சொன்னால் நோகாமல் நொங்கு திண்ண அத்தனை பேரையும் இந்துக்களாக ஆக்கிவிட்டு தின்று முடித்தபின் திண்ணையில் கூட அவனை நிற்க விடாமல் துரத்திவிடவேண்டும்.இதற்க்கான தந்திரம்தான் இந்துக்கள்.அந்த இந்துக்கள்தான் இதே தளத்தில் வேறு தலைப்புகளில் உங்களை நொங்குநொஙென்று நொஙகெடுத்து விட்டார்கள்.இன்னுமா அறிவு வரவில்லை.இங்குவந்து இந்துக்கள் வேஷம் போட்டு ஆள் திரட்டுறே தங்கம்..

    • மணிகண்டா உங்கள் வகையறாக்கள் இந்துக்கள் என்றால் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் இல்லை.பெரும்பாலான மக்கள் இந்துக்கள் என்றால் உங்கள் வகையறாக்கள் இந்துக்கள் இல்லை.இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் வினாயகர்சதுர்த்தி அன்று எந்த குரோதமும் விரோதமுமின்றி பயபக்தியோடு தனக்கு தெரிந்த நம்பிக்கையில் கொலுக்கட்டை செய்து சாமி கும்பிடுபவன் இந்துக்கள் என்றால், அதே வினாயகர்சதுர்த்தியில் பொறுக்கித்தனமாய் ஊளையிட்டுக்கொண்டு “பத்துபைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு, துளுக்கனை வெட்டு துளுக்கச்சிய கட்டு என்று கத்திக்கொண்டு போகிறவன் இந்துக்கள் இல்லை.இந்த பொறுக்கி பன்றிகள் இந்துக்கள் என்றால் அந்த பொதுவான மக்கள் இந்துக்கள் இல்லை இல்லை இல்லவே இல்லை.நீ என்ன வேடம் போட்டு வந்தாலும் உன் பொய் வேடத்தை உறிந்து விடுவார்கள் மக்கள்.

     • முட்டாள் மணிகண்டா இன்று ( நீ )தப்பு நீதான் அவாளாச்சே என்னை போன்றோர் இன்று கணினி படித்து உனக்கு சமாமாக ஆக்கியவரே அவர்தனாடா அவரை போன்றோரை திட்டுவதற்க்கு ஒன்று இல்லை இரண்டு ஜெயமோகன் மட்டுமே இருப்பார்கள் ஆனால் பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்ல எங்களை போன்று லட்சம் பேர் உண்டு என்பதை புரிந்து கொள், ஒரு இஸ்லாமியன் கருத்து சொன்னதால்தானே உன்னை போன்றோர்க்கு பெரியார் இழிவாக தெரிகின்றார் அந்த இடத்தில் என் பெயறை என் கருத்தாக எடுத்து கொள் எடுத்து பார் நீ மட்டும் அவாளா இல்லாதிருந்தால் மனசாட்சி தொட்டு பார் உன் முதாதையரின் இழி நிலை நீங்க யார் காரணம் என்று இன்று நீ போட்டு இருக்கும் ஆடைவரை நீ என்ன அணிய வேண்டும் என்பதை தீர்மானித்தவர்களிடம் இருந்து விடுதலை பெற்றாய் என்று.

      • சும்மா ஏதாச்சும் சொல்ல வேண்டாம் பெரியார் இல்லாத ஆந்திரா கர்நாடக மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் கூட கம்ப்யூட்டர் படித்து பலர் மேல் நிலைக்கு வந்து இருக்கிறார்கள்…

       பெரியார் __________இந்த நாட்டை பற்றியும் அதன் அருமை பெருமைகளை பற்றி ஒன்றும் தெரியாதவர்.

 2. அப்படியே “பான்டேக்களைப்” பற்றியும் ஒரு முடிவெடுத்திருக்கலாம்.

 3. அறிவுபூர்வமாகவும, நாகரிகத்தோடும் நடத்தப் படவேண்டிய அரசியல் விவாதங்கள், தரம் தாழ்ந்ததற்கு, பா.ஜ. க மற்றும் அதன் பரிவாரங்களே காரணம் என்பது முற்றிலும் உண்மை.அவர்கள், குட்டையைக் குழப்பி மீன்பிடிப்பவர்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவான நெறியாளர்கள் மனசாட்சியின்றி இத்தகைய அடாவடிகளை அனுமதிப்பது இன்னும் கேவலம். பார்வையாளர்களான நாங்கள் காட்சியை(channel) மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க