privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கருப்புப் பணம் : மோடியை துரத்துவோம் - புதுவை வீதியில் போர் !

கருப்புப் பணம் : மோடியை துரத்துவோம் – புதுவை வீதியில் போர் !

-

ந்தியாவின் பிரதமர் பாசிச மோடி 08.11.2016 அன்று இரவு தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி கருப்புப் பணத்துக்கு கடிவாளம் போடவும் போலியான கள்ள நோட்டுக்களைக் கட்டுப்படுத்தவும் தீவிரவாதிகள் இந்தியப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தற்போது புழக்கத்தில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சமூக அந்தஸ்து உள்ளவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ள 80 லட்சம் கோடி ரூபாயை பறிமுதல் செய்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாயை வரவு வைப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுப் பொறுக்கியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று 3 ஆண்டுகளாகியும் இந்தத் தொகையை பறிமுதல் செய்ய முயற்சிக்கவில்லை. குறைந்த பட்சம் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலைக் கூட வெளியிட வக்கில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தானே முன்வந்து வங்கிகளில் பணத்தை ஒப்படைக்கவும் அந்தப் பணத்திற்கு வட்டியுடன் வெள்ளையாக மாற்றித் தருவதாகவும் அறிவித்தார். இதில் பெரிய பயன் ஏதுமில்லை. தனது முயற்சிகளில் தோற்றுப் போன மோடி கும்பல் தற்போது அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாசிஸ்டுகள் தனது தோல்விகளை மறைக்க இது போன்ற மோசடி அறிவிப்புகளை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல.

கருப்புப் பணத்தை வைத்திருக்கும் தரகு முதலாளிகளுக்கும் வரி மோசடி செய்யும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கும் ஒவ்வொராண்டும் பத்து லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வாரிவழங்கிக் கொண்டிருக்கும் வள்ளலான மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்பது அயோக்கியத்தனம். அதுமட்டுமல்ல ஒரு கம்பனி 2 நாடுகளில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, ஒரு நாட்டில் மட்டும் வரியைக் கட்டினால் போதும் என்ற அறிவிப்பின் மூலம் இந்தியத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் மொரீசியஸ் தீவின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிலேயே முதலீடு செய்துள்ளனர். வரிகளற்ற சொர்க்க பூமிகளான மொரீசியஸ், மேமன் தீவுகள், சிங்கப்பூர் போன்ற நாடுகள் மூலம் கருப்புப் பண முதலைகள் முதலீடு செய்ய தாராள அனுமதி வழங்கியுள்ள மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பதாக நாடகமாடுவது பித்தலாட்டம்.

இதே போன்ற நாடகத்தை 1946ல் பிரிட்டிஷ் அரசாங்கமும் 1978ல் கதம்பக் கூட்டணியான ஜனதா – மொரார்ஜி தேசாய் அரசும் நடத்தியுள்ளது. இதனால் கருப்புப் பணம் ஒழிந்தபாடில்லை. திருட்டுப் பணம், கருப்புப் பணம், வரி ஏய்ப்புப் பணம், போதை மருந்துப் பணம், ஆயுத கடத்தல் பணம் என்று எந்த அடைமொழி சேர்த்து அழைத்தாலும் அவற்றைப் பற்றிக் கவலைப் படாத அவற்றைப் பாதுகாக்க பல சொர்க்கத் தீவுகளை தனித் தனி நாடுகளாக உருவாக்கி வைத்துள்ள முதலாளித்துவத்தை அடித்து வீழ்த்தாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது.

ஆனால், மக்களை ஏய்ப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி பாசிச மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் சாதாரண உழைக்கும் மக்கள் பேருந்து, ஆட்டோவில் செல்ல முடியவில்லை. காய்கறிக் கடை, பால், உயிர் காக்கும் மருந்து, மருத்துவமனை போன்ற எதிலும் கையிலிருக்கும் பணத்தை மாற்ற முடியாமல் உழைக்கும் மக்கள் சொல்லனாத துயரத்தில் ஆழ்ந்து துன்புற்று வருகின்றனர். ஆனால் இதை அற்புதமான நடவடிக்கை என்று கொண்டாடும் சிறு கும்பலான அதிகாரிகள், ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சினிமாக் கழிசடைகள், கோடீஸ்வரர்கள் தமது தேவைகளை டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் மூலம் பூர்த்தி செய்து கொண்டனர்.

உழைக்கும் மக்கள் மீதான இந்த பாசிசத் தாக்குதலை எதிர்த்து முறியடிக்கவும் மோசடிப் பேர்வழியான மோடியின் முகத்திரையைக் கிழித்தெறியவும் புதுச்சேரி பு.ஜ.தொ.மு அறைகூவல் விடுத்து திடீர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலை 09.11.2016 மாலை 4.30 மணிக்கு புதுவை இந்திரா காந்தி சிலை அருகில் நடத்தியது. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் ஆயிரக்கணக்கான பேருந்துப் பயணிகள், பொதுமக்கள் மத்தியில் போர்க்குணமிக்க இந்தப் போராட்டம் பெருமளவில் பிரச்சாரத்தைக் கொண்டு சென்றது. எந்தப் பிரச்சனையையும் வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் பார்க்கும் போலீசு தோழர்களை கைது செய்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றது. பிறகு ஒரு மணி நேரம் கழித்து விடுதலையும் செய்தது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.  95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க