Tuesday, June 28, 2022
முகப்பு அரசியல் ஊடகம் மோடியின் முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் !

மோடியின் முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் !

-

ன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரை “அண்டர் அச்சிவர்” – திறன் குறைந்தவர் – என அட்டைபடத்தில் செய்தி வெளியிட்டது அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை. அப்போது 56 இன்ச் மார்புடைய அண்டர் டேக்கராக – மல்யுத்த பயில்வான் – மோடியைக் காட்டிய பாஜகவினர்  தற்போது கிளிசரின் கண்ணீர் பிதுக்கும் அவரைக் காப்பாற்ற படாதபாடுபடுகின்றனர். ஃபோட்டோ ஷாப் உபயமாக மோடியை ஒபாமா பாரட்டுகிறார், புடின் வாழ்த்துகிறார், தெரசா வியக்கிறார் என்று அடித்து விட்டதெல்லாம் இப்போது எடுபடவில்லை.

Photo Shop modi
போட்டோ ஷாப்பால் -கருப்புப் பண ஒழிப்பு காவலரான மோடிஜி!

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற வடிவேலு தத்துவத்தின்படிதான் சங்க பரிவாரத்தினர் மோடிக்கு சர்வதேச ஆதரவு வெளுத்துக் கட்டுகிறது என்று கதையளந்தனர். ஆனால் உண்மை அப்படியில்லை.

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வந்த அறிவிப்பையொட்டி பல வெளிநாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்த விமர்சனங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 19.11.16 அன்று வெளியிட்டது. இப்பத்திரிகைகள் அனைத்தும் மோடியின் அறிவிப்பை முட்டாள்தனமென்று காறித்துப்பியிருக்கின்றன. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பத்திரிகைகள் மட்டுமல்ல, பா.ஜ.கவின் பாசத்திற்குரிய பாகிஸ்தான் பத்திரிகையும் உண்டு. அதன் சாரத்தைப் பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி நவம்பர் 2016 இரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, அதற்கு மாற்றாக புதிய 500, 2000 நோட்டுகள் வெளிவரும், கருப்புப் பணத்தை மீட்பதே இதன் இலக்கு என அறிவித்தார். மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை வரும் டிசம்பர் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

இதை ஆரம்பத்தில் பலர் வரவேற்றிருந்தாலும் பிறகு நாடு முழுக்க லட்சக் கணக்கானோர் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நீண்ட வரிசையில் ரொக்க பணத்துக்காக தற்போது காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமண காலமென்றாலும் ரொக்கப் பணமில்லாமல் திருமண ஏற்பாடுகள் தடைபட்டுள்ளன. தினக் கூலியாக வேலை செய்பவர்கள் பலர் வங்கிகளில் காத்திருப்பதால் தங்கள் வேலை வாய்புகளை இழந்துள்ளனர். மருத்துவ செலவுகள் மற்றும் அடிப்படையான செலவுகள் செய்ய முடியாமல் சிலர் இறந்தும் போயுள்ளனர்.

இந்த நிலைமைகளைப் பற்றி பல்வேறு வெளிநாட்டு பத்திரிக்கைகள் என்ன சொல்லுகின்றன?

தி கார்டியன் – The Guardian:

செல்வந்தர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது ஊழல் பணத்தையெல்லாம் தங்கமாகவும், பங்குகளாகவும், ரியல் எஸ்டேட் துறையிலும் மாற்றிவிட்டனர். ஆனால் 120 கோடி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் ஏழைகள்தான் இந்த நடவடிக்கையால் இழந்துள்ளனர். அவர்களில் பலருக்கு வங்கி கணக்குகளே இல்லை. மணிக்கணக்கில் வங்கிகளில் நிற்பதன் மூலம் அவர்களின் கூலியும், வேலைக்கான நேரமும் கணிசமாக இழக்கப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் சில பத்து உயிர்களும் பலி வாங்கப்பட்டுள்ளன. அரசோ இன்னும் சில வாரங்களின் ATM Queueபிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகிறது.

மோடியின் இந்த திட்டமானது ஏற்கனவே பல நாடுகளில் சர்வாதிகாரத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு,  விலைவாசியை உயர்த்தி, பணத்தை சீர்குலைத்து, பெரும் மக்கள் எதிர்ப்பில் தோல்வியடைந்த ஒன்று. அது மட்டுமல்ல பல நாடுகளில் பணச் சரிவையும், கலகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஊழலுக்கு முடிவு கட்டுவேன் எனக் கூறியிருந்த மோடி அதனை பழைய வரி வசூலிக்கும் முறைகளை சீர்திருத்தியிருந்தாலே செய்து இருக்க முடியும்.

தி நியூயார்க் டைம்ஸ்The New York Times:

இந்தியாவை பொருத்தவரை பணம் தான் ராஜா. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 20 முதல் 25 சதவீதமாக உள்ள நேரடி பணப் பரிவர்த்தனை இந்தியாவில் கிட்டத்தட்ட 78 சதவீதமாக உள்ளது. அதே போல இந்தியாவில் பலரிடம் வங்கிக் கணக்கு கிடையாது. அதனால் அவர்களின் வியாபாரங்கள் நேரடிப் பணம் தவிர்த்த வேறுவழிகளில் (கடன் அட்டை, வங்கி அட்டை மூலம்) செய்யவும் வாய்ப்பில்லை.

இது போன்ற திட்டத்தை அறிவிக்கும் முன்னர் போதுமான முன் ஏற்பாடுகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் நிற்கும் நிலை, பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது.

புளூம்பெர்க் Bloomberg :

பார்ப்பதற்க்கு ஆரம்பத்தில்  மோடி அவர்களின் திறன்மிகுந்த செயலாகக் காணப்பட்ட ஒன்று தற்போது ஏன் தப்புக் கணக்காக மாறியுள்ளது… ஒரே வாரத்தில் எது இப்படி நிலைமையை தலைகீழாக மாற்றியது?

ஒருவிசயம் தெரிகிறது புழக்கத்தில் இருக்கும் 86 சதவீத நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் ஒரு மொக்கை தைரியத்தில் தான் முடிவெடுத்திருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கியோ போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடியாமல் திணறுகிறது. மேலும் புதிய நோட்டுக்கள், இயங்கிக் கொண்டிருந்த ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பொருந்தும் வடிவத்திலும் இல்லை.

இந்த சிக்கல்களை எல்லாம் மோடி அவர்கள் 50- நாள்களில் சரி செய்துவிடலாம். பொருத்துக் கொள்ளுங்கள் என்கிறார். உண்மையில் இப்பிரச்சினைகளைச் சரி செய்ய குறைந்தது 4-மாதங்கள் வரை ஆகலாம்.

சில கிராமங்களுக்கு மட்டுமதான் ஏ.டி.எம் வசதி இருக்கின்றனது. பலர் வங்கிகளின் வாசலில்தான் நிற்க வேண்டியிருப்பதால் தங்களது வேலை வாய்ப்புகளை இத்தகைய பிரச்சினைக்குரிய நாட்களில் இழக்கின்றனர். பல இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகள் இல்லை.

இந்நிலையில் இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ எத்தனை 1000 ரூபாய் நோட்டுக்கள் எழைகளிடம் இருக்கப் போகிறது என கணிப்புடன் கேட்கிறார். கேள்வி தருக்கபூர்வமாக இருந்தாலும் எதார்த்தம் அப்படியில்லை. இந்தச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் வீழ்வதற்கு முன்பாக இப் பிரச்சினைகளை சரி செய்ய யாராவது முயல வேண்டும்.

ஹெரால்டு Herald:

எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு. ஆனால் அந்த உறுதியானது இந்தியாவில் உடைக்கப் பட்டிருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றனர். ரொக்கம் காலியாகி வங்கிகளும் விரைவிலேயே மூடப்படுகின்றன.

indian currency 500 note
எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு

அரசை அதிதீவிரமாக ஆதரிக்கும் சிலர் இந்த அறிவிப்பை எகத்தாளமாக ஆதரிப்பதோடு சில வாதங்களையும் முன் வைக்கின்றனர். அதாவது அதிக மதிப்புள்ள 1000, 500 நோட்டுக்கள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டதால் கருப்புப் பணத்தை கண்பிடிக்க முடியுமாம். இந்த அறிவிப்பு ரகசியமாக காப்பாற்றப்பட்டு வெளியிட்டதால் கருப்புப் பண முதலைகள் தங்கள் பணத்தை வேறு வழிகளில் மாற்றுவதர்கான அவகாசம் மறுக்கப்பட்டுள்ளது. எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கருப்புப் பண முதலைகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு கிடைத்த போதுமான நேரத்திலேயே அவற்றை வேறு வழிகளில்பதுக்கி இருப்பதால் தற்போது அவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? ” எனக் கேட்கிறது பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் இப்பத்திரிக்கை.

நன்றி : indianexpres
What foreign media thinks about PM Narendra Modi’s demonetisation move
தமிழாக்கம்: ராஜாமணி

 1. என்னடா வினவுக்கு இன்னும் பார்ப்பனியத்தை பற்றிய செய்தி கிடைக்கவில்லையா என்று யோசித்து கொண்டு இருந்தேன். தலையங்கம் போட்டு அதை சரி செய்து விட்டார்கள்

  பார்ப்போம் ஒரு வேளை ‘காங்கிரஸ்’ ஆட்சிக்கு ‘வினவின் நடுநிலையை

   • சிதம்பரம் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது

    ஆனால் வினவின் நடுநிலைமை நன்றாகவே தெரிகிறது

    இப்போது இருக்கும் வாரா கடன்கள் அனைத்தும் UPA காலகட்டத்தில் கொடுக்கப்பட்டவை தான். இதை பற்றி ‘வினவு’ குறிப்பிட்டு இருக்கிறதா ?

    அரசியல்வாதிகள் அனைவரும் எல்லா ஊர்களிலும், நாடுகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். ‘வினவின்’ speciality ‘பார்ப்பன எதிர்ப்பில்’ தான் உள்ளது

    • சரி பெரும் முதலைகளுக்குக் கடன் கொடுக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான். அவர்கள் சரியாக நிர்வாகம் பண்ணவில்லை என்று தானே இவரிடம் ஆட்சியை ஒப்படைத்தோம்? இவர் வந்ததும் ஏன் பெருமுதலாளிகளின் கடன்களை தள்ளுபடி பண்ண வேண்டும். அல்லது வாராக் கடன்களாக அறிவிக்க வேண்டும்? கடன்களை வசூலிப்பதற்குத் தானே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பதிலாக மல்லையா போன்றவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிப் போவதை வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருந்தது இப்போதைய அரசு. ஒருவேளை திரை மறைவில் ஏதும் பேரம் நடந்திருக்குமோ என்று சாமான்ய மக்களுக்கு சந்தேகம் வராதா என்ன!

   • கருப்பு பணத்தை ஒழிக்காமல் , நடுத்தர வர்க்கத்தின் மீதே மீண்டும் மீண்டும் வரி சுமையை ஏற்றுகிறீர்களே?
    – விகடன்

    அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்வது எளிது . அவர்களிடம் தான் நான் வரி அதிகப்படுத்தி பெற முடியும் அதனால் தான் அவர்கள் மீதே வரி ஏற்றுகிறேன்
    – பி சிதம்பரம் நிதியமைச்சர்

    இப்படி பதில் கூறிய யோக்கிய சிகாமணி , கூர்க் எஸ்டேட்டின் விலை 25 லட்சம் என்று கணக்கு கூடிய யோக்கிய சிகாமணி , இந்திய ரூபாயின் வீழ்ச்சியை சிங்கப்பூர் பங்கு வர்த்தகத்தில் பெட்டு கட்டி காசு பார்த்த யோக்கிய சிகாமணி என்ன சொன்னார் என்று சொன்னால் தெரிந்து சிந்தையை தெளிவாக்கி கொள்கிறேன் !

    • “கருப்பு பணத்தை ஒழிக்காமல் , நடுத்தர வர்க்கத்தின் மீதே மீண்டும் மீண்டும் வரி சுமையை ஏற்றுகிறீர்களே?
     – விகடன்

     அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்வது எளிது . அவர்களிடம் தான் நான் வரி அதிகப்படுத்தி பெற முடியும் அதனால் தான் அவர்கள் மீதே வரி ஏற்றுகிறேன்
     – பி சிதம்பரம் நிதியமைச்சர்”

     Mr. Ramaan , Didn’t you understand what does he meant it ? HE was telling you that the elites do not pay the taxes. Very simple Mr. Ramaan. Do not read the lines Ramaan. Read the meaning between the lines. Here also, middle class praises MR. Modi’s plan, but he failed miserably. Planing is one thing and implementation is another. Try to understand it. If you really believe in abolishing Black Money ?. Then you are a fool. Elite’s thinking way is like that. Because they do not understand ordinary people. MODI FAILED ALREADY AND WILE BE FAIL LIKE “BAY OF PIGS” AGAIN.

    • THis is from Mr. Manmogan Singh.”1000, 500 ரூபாயினை செல்லாது என அறிவித்த பிறகு எழுந்த பிரச்னைகளைப் பற்றி நான் பேசவுள்ளேன். 1000, 500 ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணமும், கள்ளநோட்டுகளும், தீவிரவாத நடவடிக்கைகளும் குறையும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த நடவடிக்கை மீது எங்களுக்கு முழு உடன்பாடு உள்ளது. ஆனால், இதைச் செயல்படுத்திய விதம் மாபெரும் தவறான நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

     நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்… இந்த செல்லாகாசு அறிவிப்பு அமல்படுத்தப்பட்டவிதம், நம்முடைய விவசாயத்தை… சிறுதொழிலை… முறைப்படுத்தப்படாத தொழில்துறையில் இருப்பவர்களை மிக மோசமாகப் பாதிக்கும். இந்த நடவடிக்கையால், தேசத்தின் வருமானம், மொத்த உற்பத்தி இரண்டு சதவிகிதம் அளவுக்கு குறையும். இது அதிக மதிப்பீடு அல்ல… நான் குறைவாகவே மதிப்பிட்டிருக்கிறேன். எனவே, எப்படி சாமான்ய மனிதன் பாதிக்கப்படாதவாறு, இந்த திட்டத்தை அமுல்படுத்துவதென்று…?நம் பிரதமர் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்வைக்கவேண்டும்.

     இங்கு ஏறத்தாழ 90 சதவிகிதத்தினர் முறைசாராத் தொழிலாளர்கள், 55 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் துயரத்தில் உழல்கிறார்கள். கிராமப் புற பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளைத்தான் பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த வங்கிகளும் இயங்குவது இல்லை. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறை… மிகமோசமான அரசு நிர்வாகத் தோல்வியாக, முறைப்படுத்தப்பட்ட கொள்ளையாக உள்ளது …இது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல். There is no difference between Mr. Sing’s speech and Mr.Sithambaram’s speech. Now you can clearly makeup your mind mr. Ramaan. “சிந்தையை தெளிவாக்கி கொள்” MR. Ramaan

 2. பாகிஸ்தானிகள் மோடியின் இந்த செயலை எதிர்ப்பார்கள் காரணம் அவர்கள் தானே மோடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், அந்த கோபம் இருக்கும் தானே.
  இந்தியா அரசு ஒரு முடிவை பல கோணங்களில் அலசி ஆராய்ந்து எடுக்கிறார்கள்… அது வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு தெரியும் வாய்ப்பு இல்லை.
  மோடி under performer இல்லை அவரை perform செய்யவிடாமல் மற்ற நாடுகளின் நலனுக்காக உள்நோக்கத்தோடு தடுப்பதற்க்கே பல கூட்டங்கள் இருக்கிறது (உதாரணம் கம்யூனிஸ்ட்) அவர்களை எல்லாம் மீறி தான் மோடி செயல்பட வேண்டியிருக்கிறது.

  இந்த 100 நாள் வேலை திட்டம் வந்த பிறகு கிராமங்களில் பலருக்கும் வங்கி கணக்கு துவக்கப்பட்டு விட்டது, எல்லோரும் வங்கிகள் மூலம் தான் பணம் எடுக்கிறார்கள்.

  • மோடி சார யாரு perform செய்ய உடாம கைய புடிச்சி வெச்சிருக்காங்க? அவர் தான் நாடு மாறி நாடு சுத்திகிட்டு இருக்காரு. எல்லாருக்கும் பேங்க் அக்கவுண்ட் இருக்கு, இருக்குன்னு சொன்ன மட்டும் பத்தாது. அதுல எவ்வளோபேர் கணக்கு உயிற்ப்போட இருக்குன்னு சொல்லுங்க. இன்னமும் ATM-ல பணத்த எடுக்கத் தெரியாதவங்க இருக்குறாங்க. அவங்கள பத்தி என்ன சொல்லுரீங்க மணி சார். பாக்கிஸ்தான் பத்திரிக்கைனாலும் உண்மைய தானே எழுதி இருக்கான், அத மறுத்து பதில் சொல்லுங்க ரூபாய் நோட்டுல “ I PROMISED TO PYA THE BEARER THE SUM OF ____ RUPEES” அப்படின்னு போட்டது யாரு? அத காப்பாத்த வேண்டியது யாரு ? இப்ப அது செல்லாதுன்னு சொல்லுரது யாரு? நேர்மையா பதில் சொல்லு தல. இல்ல மறுக்க மறுக்க மோடி 56 இன்சு, வளர்ச்சி, சதி, பாக்கிஸ்தான் அப்படு திரும்பத் திரும்ப பேசுற நீன்னு வடிவேல் காமெடி பன்னாதீங்க.

  • இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ‘அரசாங்கம் யோசிச்சுதான் முடிவெடுத்திருப்பாங்கன்னு’ சப்பைக்கட்டு கட்டப் போறீங்க? பழைய நோட்டுகளை செல்லாது னு அறிவிக்கறதுக்கு முன்னாடி, குறைந்த பட்சம் புழக்கத்துல இருக்குற நோட்டுகள்ல பாதி அளவுக்காவது புது நோட்டு அச்சடிச்சி, எல்லா வங்கிகளுக்கும் அனுப்பிச்சிட்டு, அப்புறமாதானே அறிவிச்சிருக்கணும்? ஒவ்வொரு ATM, வாங்கி வாசல்ல நிக்குற அன்றாடங்காய்ச்சி ஜனங்களிடம் போய் இந்த வியாக்கியானத்த சொல்லுங்க. மெச்சிக்குவாங்க. மிக மிக குறைந்தபட்ச முன்னேற்பாடு அல்லது அறிவிப்பு கூட இல்லாம அணைய, ஏரியை திறந்துவிட்டு பொதுமக்களை கொல்லுறதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?

  • யாருங்க இவரு வாங்கிய காசுக்கு மேல கூவிக்கொண்டு இருக்காரே! இணையத்தில் மொக்கையடிக்கும் அட்ரா சக்கையா இவரு?

 3. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ் தான் நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இருக்கிறது. காங்கிரஸ் நாட்டை சரியாக ஆளாததன் விளைவு தான் பிஜேபி ஆட்சிக்கு வந்து உள்ளது. ‘வினவு’ போன்ற விமர்சகர்கள் ‘காங்கிரஸ்ஸை’ சரியாக வழிநடத்தி இருந்துஇருந்தால் பிஜேபி ‘ஆட்சிக்கே’ வந்திருக்காது.

  ‘பார்ப்பனியம்’ தான் தேச வளர்ச்சியை தடுத்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. தேச வளர்ச்சியை நாசம் செய்தது ‘ஒட்டு வங்கி’ அரசியல் மற்றும் கடமையை சரியாக செய்யாத மோசமான அரசியல்வாதிகள் தான். ‘பார்ப்பனீயம்’ என்பது ஒரு துளி தான்

 4. வெளிநாட்டு பத்திரிக்கைகள் காறி உமிழ்ந்ததாக சொல்லிவிட்டு எந்தந்த பத்திரிக்கை என்ன கருத்தை சொல்லியிருக்கிறது என குறிக்கவில்லை.

 5. குற்றவாளிகள் நாடகத்தில் நல்லவர்களாக நடித்தாலும் அது முடியாத காரியம்தான், அவர்களால் நினைத்தாலும் நல்லது செய்யமுடியாது, தேன் எடுத்தவன் புறங்கை நக்கினாலும் அது சரியதான், ஆனால் அதை வாங்கிவைப்பவன் முழுசும் சாப்பிட நினைக்கிறானே அது சரியா?, மோடி செய்த மோசடியாலே இன்றைக்கு பாமரமக்கள் பணத்திற்காக அலைகிறார்களே, இது சரியா? குற்றவாலியை பிடிக்க அப்பாவிகளை கொலைசெய்யலாமா, இதற்குத்தான் நல்ல ஆட்சியா? சில முட்டாள்கள் இதனை சரிதான் என்று மூடத்தனமாக பேசுகிறார்கள், இப்படி பேசும் முட்டாள்கள் பத்து நாட்கள் வேலையை விட்டு அலைவானுகளா? மக்கள் ஆட்சியில் மக்கள் அலைக்கழிக்க படவேண்டுமா? தனி மெஜாரிட்டி என்றால் சர்வாதிகாரமா? அல்லது மன்னராட்சியா? ஆபரேஷன் என்று சொல்லி கழுத்தைவெட்டுவதை முட்டாள் தானம் என்றுதானே சொல்லுவார்கள். இந்தமுட்டாள் தனத்துக்கு துணைபோகும் பொதுநலம் இல்லா பொறம்போக்குகளை அறிவாளி என்று எப்படி சொல்லமுடியும்! இந்தியா மோடிக்கு மட்டும் சொந்தமானதா? மக்களுக்காக பிரதமரா? அல்லது பிரதமருக்காக மக்களா? அதிகாரம் வந்துவிட்டால் தலைகால் தெரியாமல் ஆடுவதா? இப்படியே ஆடினால் முடிவில் தலை உடைந்து நசுங்கிப்போய்விடும், மோடி தனது முட்டாள் தனத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உபத்திரவம் செய்யாமல் நல்லாட்சி செய்ய அறிவுரை சொல்லுகிறோம்,

 6. மோடி ஜீ….,

  நலமா?

  நான் நலம்…

  ஆனால் மக்கள் கைப்பணத்தை இழந்து நலமாக இல்லை…

  நான் அதிகம் பேசப்போவது இல்லை….. நீங்கள் இதுவரையில் உங்கள் செல்லா நோட்டு திட்டம் முலம் மக்களிடம் இருந்து ,அவர்களின் சேமிப்பில் இருந்து பெற்ற தொகை 5 இலச்சம் கோடிகளுக்கும் மேல். இவ்வளவு பணத்தை என்ன செய்யப் போகின்றீர்கள்? பெரு முதலாளிகளிடம் இருந்து தேசிய வங்கிகளுக்கு வராத கடன் தோகை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். யாருக்கு மீண்டும் கடனாக கொடுக்கப் போகிறீர்கள்? கணினி முதுகலை அறிவியில் மற்றும் M.Phil படித்து 20 ஆண்டுகளுக்கு மேல் கணினி ஆசிரியராக ,மென்பொருள் இன்ஜினியராக , மென் பொருள் பயிற்றுவைப்பவராக பணியாற்றி உள்ளேன். சொந்தமாக கணினி மென்பொருள் பயிற்றுவிக்கும் மையத்தை தொடங்க உள்ளேன். குறைந்து இரண்டு இலச்சம் கடன் கொடுக்க முடியுமா? பெரு முதலாளிகளுக்கு கொடுக்கும் அதே குறைந்த வட்டியில் எனக்கும் கடன் கொடுக்க முடியுமா? மக்களின் பணத்துக்கு பாதுகாப்புக்கு அடமானமாக அசையா சொத்து தருகின்றேன்.

  இல்லை இந்த பணத்தையும் முந்தைய கடனை திருப்பி அளிக்காத பெருமுதலாளிகளுக்கே கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் யாரிடம் கையேந்தி ஓட்டு கேட்டீர்கள் என்பதனை எண்ணிப்பாருங்கள். அதானியும் அம்பானியும் தான் உங்களுக்கு பிடித்த தலைகள் என்றால் அடுத்த தேர்தலில் அவர்களிடமே கையேந்தி ஓட்டு கேட்டு நில்லுங்கள்… மக்களிடம் ஓட்டுக் கேட்டு கையேந்தி வராதீர்கள்…

  புரிதலுக்கு நன்றி பிரதமர் அவர்களே!.

  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறாத ,

  கி.செந்தில் குமரன்.

  • //கணினி மென்பொருள் பயிற்றுவிக்கும் மையத்தை தொடங்க உள்ளேன்//

   வாழ்த்துக்கள் சார் ! முதலாளி ஆனா பிறகுதான் தெரியும் கம்யூனிசத்தின் யோக்கியதை !
   ஒரு ஐந்து வருடங்களுக்கு பிறகு உங்கள் எண்ணம் எப்படி மாறி உள்ளது என்பதை பார்க்க போகிறேன்.

   • மார்சியம் வலியுறித்திய அதன் அடிப்படையில் சமுக நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ள ஒரு முதலாளித்துவ ஐரோப்பிய நாட்டில் இருந்து பேசிக்கொண்டு உள்ளீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள் ராமன். என் வாழ்க்கையை பொறுத்தவரையில் என் கல்வியை பெருங் காசாக்க இதுவரையில் முயன்றது இல்லை. தேவைக்கு மிஞ்சி ஊதியம் பெற்றதும் இல்லை. ஊதியம் அதிகம் கிடைக்கும் என்று வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து இந்தியாவிற்கு brain drain விளைவுகளை ஏற்படுதியதும் இல்லை. என் குடும்ப தேவைக்கு Rs 15,000 மட்டுமே மாதம் சம்பாரிக்க திட்டமிட்டு உள்ளேன். மேலும் எனக்கு நன்கு தெரிந்த ஜாவா, movie editing tools , Screen play writing ஆகிய நுட்பங்களை எமது இளைய சமுகத்துக்கு சொல்லி கொடுபதாக திட்டம். நாட்டை விட்டு ஓடுவதனை விட நாட்டுக்கு ஏதேனும், அடுத்த தலைமுறைக்கு ஏதேனும் செய்யலாமே!

    கற்ற கல்வி என்றுமே கை கொடுக்கும் ,பெற்ற காசு செல்லாமல் கூட போகலாம் அல்லவா? அடுத்த ஐந்து ஆண்டுகள் என்ன ஆயுள் வரையில் இன்று எந்த சிந்தனையுடன் உள்ளேனோ அதே மார்சிய சித்தனை மற்றும் செயல்பாட்டில் தான் இருப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கின்றேன்.

    புரிதளுக்கு மிக்க நன்றி ராமன்.

    • உங்களுக்கு brain இருந்தால் தானே drain பற்றி கவலைப்படுவதற்கு 🙂

     வேண்டாம் சார் நீங்க போய் screenplay writing பற்றி எல்லாம் சொல்லி கொடுத்தால் இளையதலைமுறை என்ன ஆவது, இந்த விஷ பரீட்சை எல்லாம் வேண்டாம் சார்

     • மணிகண்டன், பாருங்க Mr R மற்றும் ராமன் அறிவை பயன்படுத்தி எவ்வளவு நுட்பமாக விவாதிகின்றார்கள். (பின்னுட்டம் 1.1.2 மற்றும்1.1.2.1 பாருங்க). நீங்களும் இருக்கீங்களே! சுத்த வேஸ்டு… உங்களுடன் இனி நானும் விவாதித்தால் உங்களை போன்றே அறிவு மங்கி போய்விடுவேன்… குட் bye மணிகண்டன்… அதுக்காக நீங்க போடும் மொக்கைகள் அனைத்தையும் கண்டுக்காமல் போய்விடுவேன் என்று பொருள் ஆகாது.. அடிப்பேன் சொல்லி அடிப்பேன் சொல்லால்….

 7. This small piece for our demonitrarization supporters: Please note demonitarization is not the issue here but the way that implemented is.

  பேசாத பிரதமர் என எதிர்கட்சிகளால் கிண்டலுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்துள்ளார். ரூபாய் நோட்டுகள் தடை பற்றி 6 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன், ஆழமான அழுத்தமான கருத்துகளை கூறி மோடி அரசை விமர்சித்தார். மன்மோகன் பேசும் போது அரங்கத்தில் கரகோஷங்கள் தெறித்தன. மன்மோகன் பேசி முடித்த பிறகு, பிரதமர் மோடியே மன்மோகன் இருந்த இடத்திற்கு சென்று கைக்கொடுத்தார். மன்மோகன் சிங் பேசிய உரை தமிழில் இங்கே…

  ”1000, 500 ரூபாயினை செல்லாது என அறிவித்த பிறகு எழுந்த பிரச்னைகளைப் பற்றி நான் பேசவுள்ளேன். 1000, 500 ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணமும், கள்ளநோட்டுகளும், தீவிரவாத நடவடிக்கைகளும் குறையும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த நடவடிக்கை மீது எங்களுக்கு முழு உடன்பாடு உள்ளது. ஆனால், இதைச் செயல்படுத்திய விதம் மாபெரும் தவறான நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

  பிரதமரின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் பலர், இந்தக் குறுகிய காலத் துயரத்தை நாட்டின் நீண்ட கால நலனுக்காக தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அவர்களுக்கு ‘ஜான் கெய்ன்ஸ்’ன் மேற்கோளை நினைவுறுத்த விரும்புகிறேன் “வெகு நீண்ட காலத்தில் நாம் அனைவரும் இறந்திருப்போம்”, ஒரே இரவில் பிரதமர் எடுத்த இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு பொறுப்புடன் நான் சொல்கிறேன், இதன் இறுதி விளைவு என்னவாக இருக்கும் என நமக்குத் தெரியாது.

  பிரதமர் 50 நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். 50 நாட்கள் குறைவான நாட்களாக இருக்கலாம் ஆனால், சாமானியர்களுக்கு இந்த 50 நாட்கள் பெரும் சித்தரவதைகளையும் பாதிப்புகளையும் உண்டாக்கும். இந்தப் பாதிப்புகளால்தான் 60-65 பேர் இறந்துள்ளனர். நான் குறிப்பிடுவதை விட இன்னும் அதிகமாக இருக்கலாம். வங்கிகள், ரூபாய் நோட்டுகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, பிரதமரின் நடவடிக்கை அரித்துவிட்டது. உலகில் எந்த நாடாவது தன் குடிமக்கள் வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை மீண்டும் எடுக்க முடியாது என கூறியிருக்கிறதா? என நான் பிரதமரிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பிரதமரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க இதுவே போதும் என நினைக்கிறேன்.

  நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்… இந்த செல்லாகாசு அறிவிப்பு அமல்படுத்தப்பட்டவிதம், நம்முடைய விவசாயத்தை… சிறுதொழிலை… முறைப்படுத்தப்படாத தொழில்துறையில் இருப்பவர்களை மிக மோசமாகப் பாதிக்கும். இந்த நடவடிக்கையால், தேசத்தின் வருமானம், மொத்த உற்பத்தி இரண்டு சதவிகிதம் அளவுக்கு குறையும். இது அதிக மதிப்பீடு அல்ல… நான் குறைவாகவே மதிப்பிட்டிருக்கிறேன். எனவே, எப்படி சாமான்ய மனிதன் பாதிக்கப்படாதவாறு, இந்த திட்டத்தை அமுல்படுத்துவதென்று…?நம் பிரதமர் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்வைக்கவேண்டும்.

  எளிய மக்கள் வங்கிகளில் பணம் எடுப்பது தொடர்பாக தினம் தினம் ஒரு விதியை முன்வைப்பது யாருக்கும் நல்லதல்ல. இது பிரதமர் அலுவலகத்தின், நிதி அமைச்சக அலுவலகத்தின் மற்றும் ரிசர்வ் வங்கியின் மோசமான செயல்பாட்டைக் காட்டுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் மோசமாக விமர்சிக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆனால், அந்த விமர்சனங்கள் எல்லாம் நியாயமானதே.
  நான் இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை. இந்தப் பிரச்னைக்கு நடைமுறைக்கேற்ற வழிகளைக் கண்டு, பாதிக்கப்பட்ட பெருந்திரளான மக்களின் துயர் துடைக்க வேண்டுமென்று நான் நம் பிரதமரை வலியுறுத்துகிறேன்.

  இங்கு ஏறத்தாழ 90 சதவிகிதத்தினர் முறைசாராத் தொழிலாளர்கள், 55 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் துயரத்தில் உழல்கிறார்கள். கிராமப் புற பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளைத்தான் பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த வங்கிகளும் இயங்குவது இல்லை. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறை… மிகமோசமான அரசு நிர்வாகத் தோல்வியாக, முறைப்படுத்தப்பட்ட கொள்ளையாக உள்ளது …இது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்.

  நான் பிறர் செய்வதைப் போல, இதில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை .. ஆனால், இப்போதாவது… இந்த கடைசி நேரத்திலாவது நம் பிரதமர்… நம்முடைய அடித்தட்டு மக்களின் துயர் துடைக்க நடைமுறைக்கேற்ற வழிகளை தேடுவார் என்று நான் நம்புகிறேன்.”

  நன்றி.

  http://www.vikatan.com/news/coverstory/73369-organised-loot-legalised-plunder-manmohan-singh-on-demonetisation.art

 8. 500,1000 செல்லாதுன்னு அறிவிச்சு கள்ளப் பணம்,கருப்புப் பணம்,லஞ்சம்,தீவிரவாதம் இந்த நாலையும் ஒழிக்கப் போறதா 8 ம் தேதி ராத்திரி 8 மணிக்கு அறிவிச்சார் பிரதமர் மோடி!இன்னைக்கு 24 ம் தேதி பாராளுமன்றத்தில மோடியும் ஜெட்லியும் என்ன சொல்றாங்க?கடந்த 15 நாள்ல 7 லச்சம் கோடி பணம் பேங்குக்கு வந்திருக்கு.இத வச்சுக்கிட்டு சரிஞ்சு போன பேங் பொருளாதாரத்த தூக்கி நிறுத்தலாம்.கடன்கொடுக்கலாம்னு சொல்றாங்க.யாருக்கு கடன் கொடுக்கப் போறாங்க? ஏற்கனவே கடன வாங்கி 7 1/2 லச்சம் கோடி கட்டாம விட்டு ,வெளி நாட்டு பேங்குகள்ல 70 லச்சம் கோடிகளப் பதுக்கி வச்சுக்கிட்டு,உள் நாட்டு பேங்குகள திவால் நிலைமைக்குக் கொண்டு வந்த அதே முதலாளிகளுக்குத் தான்.இன்னொரு நல்ல திட்டமும் மோடி குரூப் வச்சிருக்குது.அரசு பேங்குகளை சீக்கிரமா மூடுறது தான்.எப்படி?ஐ.சி.ஐ.சி.ஐ..ஆக்ஸிஸ் பேங்,எச்.டி.எப்.சி.,கே.வி.பி. சி.யு.பி.,டி.எம்.பி.,பேங்குகளுக்கு ஏராளமான விதி விலக்குகள மோடி அரசு திரைக்குப் பின்னால கொடுத்திருக்கு.எத்தனை கோடிகள் வேணும்னாலும் மாத்திக்கலாம்.எவ்வளவு பணம்னாலும் கட்டிக்கலாம், வாங்கிக்கலாம்.கமிசன் மட்டும்தான் பேச்சு.எந்த அதிகாரிகளும் கண்டுக்கிறதில்லை.அன்றாடம் பட்டுவாடா செய்யுற பணத்துல பெருவாரியா தனியார் பேங்குகளுக்குத்தான் போகுது.புது 500 ரூ நோட்டு தமிழ் நாட்டுல நேத்து கே.வி.பி. யில தான் முதல்முதலா அறிமுகமாயிருக்கு.ஐ.சி.ஐ.சி.ஐ.பேங் சேர்மேன் அருந்ததி பட்டாச்சாரியா தான் ஊடகங்கள்ல ஹீரோயினி மாதிரி வலம் வருகிறாங்க.தனியார் வங்கிச் சேவை நாட்டுக்கு ரொம்பத் தேவை என்பதை நல்லாவே ‘ மக்களுக்கு’ புரிய வச்சிருக்காரு மோடி.அரசு வங்கி அதிகாரிகளே இதச் சொல்லி புலம்புறாங்க.பெரும்பான்மைமக்களின் சேமிப்பை வழிப்பறி செய்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பங்குச் சந்தையில சூதாடுறதுக்கு குடுக்கிறது தவிர இந்த மோசடி கும்பலுக்கு வேற நோக்கமே இல்ல.ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சங்கப்பரிவாரங்கள் வெளி நாடு வாழ் அம்பிகள் ஒன்னு சேர்ந்து அவாளுக்கு வேணுங்கிறவாளுக்கு 8ம் தேதிக்கு முன்னும் பின்னும் நன்னா சேவை செய்துண்டிருக்கா.எப்பவுமே அவாளுக்குன்னா தனி ரூல்ஸ்தான்.பட்டை நாமம் இளிச்சவா மக்களுக்குத்தான் போங்கோ!

  • இந்தியாவில் எந்த ஒரு வாங்கியாவுத்து மக்கள் சேமித்து வைத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் வங்கியை மூடி இருக்கிறதா ? வங்கிகள் யாருக்கு கடன் கொடுத்தாலும் உங்கள் பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறது, இப்போதும் கூட உங்கள் பணத்தை நீங்கள் டெபிட் கார்டு மூலம் எவ்வுளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம்.

   தொழில் முனைவோருக்கு கடன்கள் கொடுக்க வேண்டியது வங்கிகளின் கடமை, அப்போது தான் நாட்டில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் உண்டாகும்.
   மற்றவர்களுக்கு கடன் கொடுத்ததால் நீங்கள் சேமித்த பணத்தை வங்கிகள் திருப்பி கொடுக்கவில்லை என்ற நிலை என்றுமே இந்தியாவில் வராது.

   • வராகடன்களால் நாட்டுக்கும், தனி நபருக்கும் எந்த பொருளாதார பிரச்சனையும் இல்லை என்ற நோக்கில் பேசிக்கொண்டு உள்ளீர்கள். வங்கிக்கு பெரு முதலாளிகளிடம் இருந்து வரா கடன்கள் எப்படி இந்திய பொருளாதரத்தை சிதைத்து அழிக்கும் என்பதனை விரிவாக அடுத்த பின்னுட்டத்தில் பார்க்கலாமா?

   • மணிகண்டன், வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத முதலாளிகளுக்கு மீண்டும் மீண்டும் கடன் கொடுபது தான் வங்கிகளின் கடமையா…அப்போது தான் நாட்டில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் உண்டாகுமா ? அப்படி தானே அணில் அம்பானியின் குழுமத்துக்கு மேலும் மேலும் கடன் கொடுத்துக்கொண்டு இருக்காங்க உங்க மோடி சகலபாடிகள்!

    வராத கடன் தொகை வங்கிகளில் உயருவதால் என்னவாகும்? மீண்டும் மீண்டும் RBI நோட்டுகளை அச்சடிப்பார்கள்… அதனால் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் செல்லும்…., விலை வாசி உயரும்…, பணம் மதிப்பிழந்து போகும். மக்களின் சேமிப்பு பணவீகத்தில் செல்லாமல் போகும்…!

   • The big industrialists,after enjoying credit,tax concessions and tax subsidy to the tune of 54 lakh crore in the past two decades,have created employment opportunities to 20 lakh people only.On the other hand,Micro,Small and Medium industries,without getting any preferential treatment from banks,could provide employment to crores of people during the same period.The big industrialists,after enjoying such a mammoth amount of credit and other facilities,diverted this money to foreign countries to acquire real estate.The above data was not provided by any of the leftist leader.S.Gurumoorthi,belonging to BJP only gave these statistics in series of articles he wrote in Dinamani just before 2014 parliament election.He was criticizing former PM and FM for giving tax concessions amounting to 5 lakh crore in every budget to big industrialists.BJP FM Arun Jaitley also gives tax concessions to the tune of 5.40 lakh crore to the same industrialists in every budget.But,Gurumoorthi keeps mum.VENDIYA MARUMAGAL UDAITTHAAL MANGUDAMTHAANE!
    Manikantan!When the capital is eroded due to provision for bad debts,and when banks incur losses,there will be a RUN on those banks and they will go bankrupt.You cannot get back your money.Try to learn some economics before venturing to argue here.Are you aware about the fate of American banks in 2008?

  • அரசாங்க வங்கி லஞ்சம் வாங்கி கொடுத்தா மக்களுக்கு தான் தான் லாஸ் .
   தனியார் வங்கி கடன் கொடுத்து நஷ்டம் ஆனா இன்வெஸ்டர்களுக்கு தான் லாஸ் .

   அரசாங்கம் வங்கி நடத்தியது தான் பிரச்சினையே ! நஷ்டம் ஆக வாய்ப்பு இல்லாத தொழில் என்று உலகில் எதுவும் இல்லை !

   • In both cases,investing public are the losers.Raman!The people who have invested their savings in private banks are also Indian people.Only because the banks were nationalized,you could do exchange of old notes.The major task of exchanging old notes and depositing old notes in customers’accounts are done by nationalized banks only.Maximum number of Jan Dhan accounts were opened in nationalized banks only.You cannot make a wild accusation stating that the corrupt public sector officers gave non-recoverable loans to big industrialists.May be a few officers would have been corrupt.But,majority of corporate loans were given by PSBs under political pressure.The loan proposals,in these cases,would not emanate from the concerned branches.The proposals would come down from the higher-ups.The bad debts started mounting only after 1991 (the liberalization era).

 9. என்னுடைய முந்தய பதிவில் அருந்ததி பட்டாசார்யா ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி தலைவர் என்று தவறுதலாகப் பதிவிட்டுவிட்டேன்.அவர் எஸ்.பி.ஐ.வங்கித் தலைவர்.மற்ற தகவல்கள் அனைத்தும் சரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க