privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கமோடி அறிவிப்பால் மக்கள் படும்பாடு ! பு.மா.இ.மு தெருமுனைக் கூட்டம்

மோடி அறிவிப்பால் மக்கள் படும்பாடு ! பு.மா.இ.மு தெருமுனைக் கூட்டம்

-

த்திய அரசின் ரூ500, 100 செல்லாது! அறிவிப்பும் மக்கள் படும்பாடும்! என்ற தலைப்பில் 21.12.2016 அன்று மாலை 6 மணியளவில், மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

20161221_185012

கூட்டத்திற்கு பு.மா.இ.மு–ன் சென்னை கிளை செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார். தோழர்கள் செந்தில், சாரதி, திருமலை(ஏரிக்கரை பகுதி செயலர்), கணேசன்(மாநில ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர படல்கள் பாடப்பட்டது.

கருப்பு பணம் ஒழிக்கிறேன், கள்ள நோட்டை ஒழிக்கிறேன் என மோடி எடுத்த நடவடிக்கையின் உண்மை என்ன? சாதாரண உழைக்கும் மக்களாகிய நாம் தான் பாதிக்கப்படுகிறோம். ‘ஒருவர் வீட்டில் பணம் திருட்டு போய்விட்டது என்றால், அவரையும், அவர் சந்தேகப்படும் நபர்களையும் கூப்பிட்டு விசாரிக்கும் போலீசு. அதுபோல், கருப்புப்பணத்தை ஒழிக்க, சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து விசாரித்து கருப்புப் பணத்தை வெளி கொண்டு வந்திருக்கலாம்’.

ஆனால், அதைசெய்யாமல் நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும், குற்றவாளிகள் என மோடி தண்டிப்பது சரியா? எனவே இது கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல. மாறாக ஏழை மக்களில் வீட்டில் இருக்கும் சேமிப்புகளை வங்கிக்கு வரவழைத்து கொள்ளையடிப்பதே மோடியின் திட்டம். ஆனால், இதை புரிந்துக் கொள்ளாமல் ‘மோடி நமக்கு நல்லது செய்வார், கருப்புப்பணத்தை ஒழிப்பார்’ என பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருப்பது தான் உண்மையில் வருத்தமான செய்தி.

மோடி, அவரது நடவடிக்கைகளின் மூலம் ‘நான் உழைக்கும் மக்களுக்காக இல்லை’ என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நாம் மோடியின் மீது நம்பிக்கை வைத்து வங்கில் பணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் செலுத்திய இந்த பணத்தை காட்டி, கருப்புப்பணம் வங்கில் வந்துள்ளது என கூறுகிறார் மோடி.

நாம் வங்கியில் போட்ட பணம், ஏதோ நம் பெயர் போட்டு அக்கவுண்டில் பூட்டி வைத்திருக்கிறார்கள், நாம் சென்றால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். ஆனால், நாம் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார் மோடி.

இன்னமும் அது புரியாமல், மோடி எது செய்தாலும் மக்கள் நன்மைக்குதான், 50 நாட்கள் பொருத்திருங்கள். நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் என பா.ஜ.க போன்ற கட்சிகள் கூறுவதை மக்களில் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சரியாக 50 நாட்கள் முடிந்து 51-வது நாள் டிசம்பர் 29 ஆம் தேதி நரியின் (மோடியின்) சாயம் முழுமையாக வெளுக்கும்.

எனவே நம் வாழ்க்கைக்காக நாம் தான் போராட்ட வேண்டும். உடனே நம் பணம் அனைத்தையும் வங்கில் இருந்து எடுங்கள். உடனே புரட்சிகர அமைப்புகளில் இணைந்து, போராட்டங்களை கட்டியமையுங்கள்  என மக்களை அறைக்கூவி அழைத்தது இந்த கூட்டம்.

இந்த கூட்டத்தில் தோழர்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள், பகுதி உழைக்கும் மக்கள், பாதசாரிகள், வியாபாரிகள் என 300 -க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
( படங்கள் : வினவு செய்தியாளர்கள் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை – தமிழ்நாடு.
தொடர்பு எண் : 9445112675

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க