privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்கோவை : நலியும் விசைத்தறி தொழில் காக்க வீதியில் இறங்குவோம் !

கோவை : நலியும் விசைத்தறி தொழில் காக்க வீதியில் இறங்குவோம் !

-

விசைத்தறி தொழிலை பாதுகாக்க வீதிகளில் இறங்கி போராடுவோம் !

அன்பார்ந்த விசைத்தறி தொழிலாளர்களே,

கோவை திருப்பூர், பல்லடம் சோமனூர் போன்ற பகுதிகளில் எந்நேரமும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த விசைத்தறிக் கூடங்கள் நிசப்தம் ஆகி வருகிறது. Notice_Visaithari-Tholilalargalai_FRONT-postலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்த விசைத்தறி தொழில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

நாட்டின் துணித் தேவையில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே விசைத்தறி மூலம் உற்பத்தியாகிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் தான் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. மனிதர்களின் மானம் காக்கும் ஆடை தயாரிக்கும் தொழில் என்பது இதன் சிறப்பு.

மாஸ்டர் வீவர்ஸ் எனப்படும் ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உழைப்பாளர்களாக மாறுவதும் உண்டு. கூலி உயர்வு போன்ற பிரச்சினைகளில் இரு தரப்பு ஒப்பந்தமோ, முத்தரப்பு ஒப்பந்தமோ முறைப்படி நடப்பதில்லை.

தொழிலாளர் நலத்துறை உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் இருக்கிறார். காவல்துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். எம்‌.எல்‌.ஏ இருக்கிறார். எம்‌.பி இருக்கிறார். மந்திரி இருக்கிறார். இவர்கள் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் ? சட்டப்படியான ஒப்பந்தம் கூட கடந்த 50 வருடமாக இல்லை. இதுதான் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை.

தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை, பாதுகாப்பான, காற்றோட்டமான குடோன் இல்லை. இ‌.எஸ்‌.ஐ இல்லை. பி‌.எஃப் இல்லை. பணிக்கொடை இல்லை. பென்ஷன் இல்லை. எட்டுமணி நேர வேலை இல்லை. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு இருக்கின்ற சட்டப்படியான எந்த சலுகையும் எட்டு தறி / 12 தறிகள் இயக்கும் தொழிலாளர்களுக்கு இல்லை. கொத்தடிமைகளைப் போல விசைத்தறித் தொழிலாளர்கள் நடத்தப்படுகின்றனர்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும் சட்டப்படியான உரிமைகள் இல்லாமலே உள்ளனர். விசைத்தறியாளர்கள் கெண்டையை நாடாவில் போட்டு உறிஞ்சி எடுத்து அதே நாடாவை தரிகளில் போட்டு ஓட்டுவார்கள். அந்த நாடா இரண்டு பக்கமும் உதை வாங்கி ஓடிக் கொண்டிருக்கும். இதே நிலைமைதான் இவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.

powerloom-workersசெல்லாத நோட்டு பிரச்சினையை வைத்து இருக்கிற கொஞ்ச நஞ்ச ஓட்டமும் படுத்துவிட்டது. ஒரு வாரத்தில் 6 நாட்கள் வேலைசெய்த தொழிலாளிக்கு இப்போது 6 ஷிப்ட் வேலை கூட கிடைப்பதில்லை. ஏற்கெனவே பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்ற அவலம் நடந்தது. இனி பட்டினிச் சாவும், தற்கொலையும், தஞ்சை விவசாயிகளுக்கு ஏற்பட்டது போல விசைத்தறி தொழிலுக்கும் வராமல் தடுப்பது நம் கடமை.

இதற்கான காரணங்கள் மத்திய மாநில அரசுகள், ஓட்டுக்கட்சிகள் கடைபிடித்த தாராளமயக் கொள்கைகளால் இறக்குமதிகள் ஏராளமாகி குவிந்தது. சந்தையில் வெளிநாட்டு போட்டியாளர்களை சமாளிக்க முடியவில்லை. பாரம்பரியமான உள்நாட்டுத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும், இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் எந்த ஓட்டுக் கட்சிகளும் மனதளவில் கூட நினைக்கவில்லை.

ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இதே கொள்கைகளை ஏற்றுக் கொண்டு சங்கம் நடத்தியதால் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுக்க முடியவில்லை. ஜவுளிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு எதிராக போராட வேண்டும். அம்பானிக்கும் அதானிக்கும், மல்லையாவுக்கும் கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, விசைத்தறிக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது ?

பங்களா தேஷ் அகதிகள் வருவதை எதிர்க்கும் பி‌.ஜே.பி-யினர் பங்களா தேஷ் துணிகளை எப்படி இந்திய சந்தையில் வர அனுமதிக்கலாம் ? சீனாவுக்கு எதிராக சண்டமாருதம் செய்பவர்கள் சீனத் துணிகளையும் தடுக்க வேண்டுமல்லவா ? ஊடகங்கள் விசைத்தறி தொழிலாளர்களின் கொடுமைகளை வெளிப்படுத்த மாட்டார்கள், அவர்களுக்கு நடிகை தமன்னா விவகாரம்தான் முக்கியம். தொழிலாளர்கள் மத்தியில் உள்ள போராட்ட உணர்வு புரோக்கர்களால் மழுங்கடிக்கப்பட்டு உள்ளது. நம் போராட்ட உணர்வை புதுப்பிப்போம்.

ஜவுளித் தொழில், விசைத்தறி தொழில் பன்னாட்டு கார்பரேட் முதலாளிகள் நலனுக்காக, ஓட்டுக்கட்சிகளால் பலி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது நாம் போராடவில்லையெனில் எப்போதும் போராட முடியாது. நம் தொழிலையும் காப்பாற்ற முடியாது.

எனவே நம் தொழிலை, நம் குடும்பத்தையே காக்க களம் இறங்குவோம்.

Notice_Visaithari-Tholilalargalai_BACK-postகண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்

  • நாள் : 04.01.2017 புதன் – மாலை 04.00 மணி
  • இடம் : சோமனூர் பேருந்து நிறுத்தம்

தலைமை : தோழர் சரவணன் பு.ஜ.தொ.மு. கோவை

உரைவீச்சு : தோழர் வினோத் பு.மா.இ.மு. கோவை
தோழர் வசந்தன் காங்கேயம்
தோழர் ராமசாமி கரூர்
தோழர் புஷ்பராஜ் பு.ஜ.தொ.மு. ஈரோடு
தோழர் சம்புகன் ம.க.இ.க. கோவை
தோழர் நித்தியானந்தன் பு.ஜ.தொ.மு. கோவை

கண்டன உரை : தோழர் விளவை இராமசாமி
மாநிலத் துணைத் தலைவர்,பு.ஜ.தொ.மு.

நன்றியுரை : தோழர் திலீப், மாவட்ட செயலர் பு.ஜ.தொ.மு. கோவை

  • – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
    கோவை
    தொடர்புக்கு: 90924 60750

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க