Sunday, November 27, 2022
முகப்புகட்சிகள்காங்கிரஸ்காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே - ஆதாரங்கள்

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்

-

கோட்ஸே, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. – ஆர். விஜயசங்கர்

ADVANI_அத்வானி
கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ல் இல்லை என்று அத்வானி சொன்னது பொய் என்கிறார் நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரம்.

மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கோபமும், சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைக்கும் தனக்கும் இருந்த தொடர்பை கோட்சே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பாரதிய ஜனதா தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்க தலைவர்களும் கூறி வந்தனர்; கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார்.

அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து கண்டித்தவர் நாதுராம் கோட்சேயின் இளைய சகோதரரான கோபால் கோட்சேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். அவர் எழுதிய ”நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993 அன்று பேசிய கோபால் கோட்சே தானும் சகோதரன் நாதுராமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்ற பலருக்கும் தெரிந்த உண்மையை வெளியிட்டார்.

அதற்குப் பின் ஜனவரி 1994-ல் “ஃபிரண்ட்லைன்” இதழுக்கு பேட்டியளித்த கோபால் கோட்சே, “சகோதரர்களாகிய நாதுராம், தத்தாத்ரேயா, கோவிந்த், நாங்கள் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாயிருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸ்-ஸில் வளர்ந்தோம் என்பதே சரியாக இருக்கும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போன்றது. நாதுராம் ஆர்எஸ்எஸ்-ஸின் பவுதிக் கார்யவாஹ் (கொள்கைப்பரப்பு செயலர்) ஆக இருந்தார். தான் ஆர்.எஸ்.எஸ்-ஸிலிருந்து விலகிவிட்டதாக கோட்சே அறிக்கை விட்டார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு கோல்வால்கரும் (ஹெட்கேவாருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-ன் இரண்டாவது தலைவராக இருந்தவர்) ஆர்.எஸ்.எஸ்-ஸும் பெரும் பிரச்சினையிலிருந்தனர். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு விலகவில்லை,”என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கோட்சேவுக்கு தொடர்பு ஒன்றுமில்லை என்ற அத்வானியின் கூற்றை கடுமையாக மறுத்தார் கோபால் கோட்சே. ”அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்று நான் அவரை மறுதலித்து விட்டேன். ஆர்.எஸ்.எஸ். ‘காந்தியைக் கொல்லுங்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் கோட்சேயை நீங்கள் கழற்றி விடமுடியாது. இந்து மகாசபை அவரைக் கழற்றி விடவில்லை. 1944-இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பவுதிக் கார்யாவாஹ் ஆக இருந்த அவர் இந்துமகாசபையின் வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.”

பிரபல அமெரிக்க வாரப்பத்திரிக்கையான டைம் இதழுக்கு 2000-ம் ஆண்டில் அளித்த பேட்டியில், கோபால் கோட்சேயிடம் ஏன் காந்தியைக் கொல்ல திட்டமிட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. ”காந்தி ஒரு கபடாதாரி. முஸ்லிம்கள் இந்துக்களை படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்த அளவுக்கு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மை கொடி.” என்றார்.

GODSE_நீதிமன்றத்தில் கோட்சே
படத்தில் இடமிருந்து வலம்: நாதுராம் கோட்சே, நாராயண் தத்தாத்ராய் ஆப்தே, விஷ்ணு ராமகிருஷ்ணா – காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

சமீபத்தில் இதே கருத்தை மீண்டும் வெளியிட்டிருப்பவர் சத்யகி சவார்க்கார். இவர் கோபால் கோட்சேயின் மகள்வழிப் பேரன். அவரது தாயார் ஹிமானி சவார்க்கார் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட்ட அபினவ் பாரத் அமைப்பை நடத்தி வந்தார். அந்த வழக்கு விசாரணை வளையத்திலும் இருந்த அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

தங்கள் குடும்பம் நாதுராமும், கோபாலும் எழுதியவற்றை பராமரித்து வருவதாகவும், நாதுராம் ஆர்.எஸ். எஸ். அமைப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததும், அதன் தீவிரத்தன்மை போதவில்லையென்று உணர்ந்தமையால் ஏமாற்றமடைந்ததையும் அவ்வெழுத்துக்கள் தெளிவாக்குகின்றன என்கிறார் சத்யகி. மென்பொருள் துறையில் பணிபுரியும் அவர் சவார்க்கர் தொடங்கிய இந்து மகாசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருகிறார்.

“நாதுராம் 1932-ல் சாங்லியிலில் இருக்கும்போது ஆர். எஸ். எஸ்-ல் இணைந்தார். இறக்கும் வரை அதன் பவுதிக் கார்யவாஹ் – கொள்கைபரப்பு செயலராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்-ன் தினசரி ஷாகாவுக்கு செல்லும் உறுப்பினர்களின் பெயர்) என்கிற உண்மையை மறுப்பதால் ஆர்.எஸ்.எஸ். மீது எனக்கு நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டாலும் அவர்கள் உண்மையைக் கண்டு ஓடி ஒளியக்கூடாது, என்கிறார் சத்யகி.

இன்று மோடி மாபெரும் சிலை வைத்துக் கொண்டாடப்போகும் சர்தார் வல்லபபாய் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) நேருவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு (இவர் தான் பா.ஜ.க-வின் முன்னோடியான ஜனசங்கத்தை 1951-ல் தோற்றுவித்தவர்) எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “காந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால்           ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபைக்கு அதில் இருக்கும் தொடர்பைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகள் காரணமாக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் செயல்பாடு காரணமாக, எழுந்த சூழலில்தான் இத்தகைய கொடூர சோகம் நிகழ்ந்திருக்கிறது என எங்களுக்கு கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.”

GANDHI_காந்தியின் இறுதி ஊர்வலம்
காந்தி இறுதி ஊர்வலத்தில் நேரு மற்றும் பட்டேல். படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு செப்டம்பர் 11,1948-ல் எழுதிய கடிதம் இப்படிச் சொல்கிறது. “இந்து சமுதாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர்கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்துவிட்டெரிய முஸ்ஸல்மான்களை தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங்களுக்கு பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற்சாகப் படுத்தி ஒன்று திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்கும் விஷத்தைப் பரப்பவேண்டிய அவசியமில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாக காந்திஜியின் உயிர்த்தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்.எஸ்.எஸ். மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளிக் கூட பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப் பின் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.”

அன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்ட சங்கபரிவாரம் அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் வனவாசமிருக்க நேரிட்டது. காந்தியின் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொள்ள என்னதான் முயன்றாலும், கொள்கைரீதியாக கோட்சேயின் பாரம்பரியத்தைதான்  பாஜக வரித்துக்கொண்டுள்ளது. அது கொள்கையையும் துறக்க முடியாது.. வரலாற்றையும் மறைக்க முடியாது.

-நன்றி: மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர்

மேலும் படிக்க:

 • RSS & Gandhi’s murder By A.G. NOORANI
  (There is enough historical evidence to nail the RSS’ lie that Nathuram Godse was not a member of that organisation when he assassinated Mahatma Gandhi in 1948.)
 1. கோட்ஸே நீதிமன்றத்தில் சொன்ன வார்த்தைகள் இது மகாத்மா காந்தியை சுட்டு கொன்றது தனது சுய முடிவு என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான், ஆனால் பலரும் RSS இயக்கம் கூட்டம் போட்டு எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்து மகாத்மாவை சுட்டு கொன்றார்கள் என்பது போல் பேசுகிறார்கள்.

  ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றம் சொன்னது தான் சரியாக இருக்கும் கோட்ஸே மகாத்மா காந்தியை சுட்டு கொன்றான் என்பதும் RSS மகாத்மா காந்தியை கொன்றார்கள் என்று சொல்வதும் ஒன்றல்ல.

  ஆனால் நீதிமன்றம் சொன்னாலும் சரி கடவுளே சொன்னாலும் சரி சிலர் திட்டமிட்டு RSS (ஹிந்து) அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்பது போல் ஒரு பொய்யான தோற்றத்தை உண்டாக்குகிறார்கள்.

  • அது சரி மணிகண்டன் அய்யரே,

   என்ன இருந்தாலும் கோட்சேவை அவன் இவன் என்று சொல்லலாமா? எச்சரிக்கை! உங்களையே போட்டுத்தள்ளிவிடப்போகிறார்கள்.

   சரி ஏன் RSS ஹிந்து அமைப்பின் சார்பாக கோட்சேயின் சாம்பலை வைத்து வருடா வருடம் கொண்டாடுகின்றீர்கள்?

   • கோட்ஸே அஸ்தியை வழிபடுகிறார்களா என்று எனக்கு தெரியாது ஆனால் அவனின் அஸ்தியை சிந்து நதியில் இந்தியா பாக்கிஸ்தான் மீண்டும் இணைந்த பிறகு கரைக்க வேண்டும் வைத்து இருக்கிறார்கள் என்று படித்து இருக்கிறேன்.

    என்னை பொறுத்தவரையில் பாக்கிஸ்தான் பிரிந்தது இந்தியாவிற்கு ஏற்பட்ட மிக பெரிய நல்ல விஷயம் என்றே நினைக்கிறேன், இல்லையென்றால் இஸ்லாமிய முல்லாக்களால் வன்முறைகளும் அமைதியின்மையும் தாண்டவம் ஆடியிருக்கும், தேசம் அடிப்படைவாதிகளிடம் இருந்து தப்பித்தது…

    வினவு போன்றவர்கள் இந்தியாவில் ஹிந்து அடிப்படைவாதம் இருப்பது போல் ஒரு பொய் தோற்றத்தை உண்டாக்க பார்த்தாலும் இந்தியாவில் ஹிந்து மத அடிப்படைவாதம் வளர்வதற்கு வாய்ப்பு இல்லை.

    • மணிகண்டன் , காந்தியை கொன்ற கூட்டத்துக்கும் rss அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றே கூட இருகட்டும்…. அந்த விசயத்தில் rss தொடர்புகளை நீதி மன்றத்தில் நிருபிக்க இயலாமல் கூட போகட்டும்…. இவை எல்லாம் நீதி மன்ற விசயங்கள் தான். ஆனால் அரசியல் ரீதியாக பார்க்கும் போது காந்தியை கொலை செய்ததற்கு கோட்சே நீதி மன்றத்தில் கூறிய காரணங்கள் கோட்சேயின் ஹிந்து மதவெறியை தவிர வேறு என்னவாக இருந்தது? காந்தி கொலைக்கான வேறு ஏதாவது காரணத்தை உங்களால் யோசிக்க இயலுகின்றதா மணிகண்டன் ?

     காந்தியுடன் எல்லாருமே கருத்து வேறுபாடுகள் கொண்டு இருந்தார்கள்….. அவர் சார்ந்த காங்கிரஸ்காரர்களே கூட கருத்து வேறுபாடு கொண்டு இருந்தார்கள்…. கம்யுனிஸ்டுகள் கூட கருத்து வேறுபாடு கொண்டு இருந்தார்கள்… பாரத பிரதமாராக இருந்த நேருவும் கூடத்தான்…. ஆனால் காந்தியடிகள் அவர்களுடன் கொண்டு இருந்த அத்தகைய கருத்து வேறுபாடுகள் காரணமாக கொல்லப்படவில்லை…! காந்தியை அதுவும் ஒரு வயது முதிர்ந்த மனிதரை கொல்லும் மனம் இந்த ஹிந்துத்துவாவில் முழுகி திளைத்த பார்பனரான கோட்சேவை தவிர வேறு யாருக்கும் வரவில்லை…! என்ன கொடுமை மணிகண்டன் இது! நீலிக்கண்ணிர் வடிக்காமல் முடிந்தால் விவாதியுங்கள்….

     • “முடிந்தால் விவாதியுங்கள்….” Yes I agree with you.

      Mr. Manikandan healthy discussion is one of the basic pillars of democracy. Healthy and decent prefer prevail here. Thank you.

     • செந்தில் நான் இந்தியாவை நேசிப்பதற்கு பல காரணங்களில் மகாத்மா காந்தியும் ஒரு காரணம், மகாத்மா காந்தி போன்ற ஒருவர் இந்தியாவில் மட்டுமே பிறக்க முடியும் அதுவும் ஹிந்து மதம் சார்ந்த ஒருவரால் தான் இப்படி அகிம்சை வழியில் நடக்க முடியும் என்று திடமாக நம்புகிறேன், அவ்வுளவு ஏன் தான் எதிர்த்த ஆங்கிளையர்களின் நலனுக்காக கூட பேசியவர் தான் மகாத்மா காந்தி, அப்படிப்பட்டவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஆனால் மகாத்மா காந்தியை சரியாக புரிந்துகொள்ளாமல் பலரும் அவரை எதிர்த்து இருக்கிறார்கள்… அதில் ஒருவன் கோட்ஸே.

      இதில் பலரும் விவாதிக்காத ஒரு விஷயம் ஜின்னாவின் செயல், பாக்கிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று கேட்டதற்கு காரணமே இஸ்லாமிய மதவெறி தான், இஸ்லாமியர்களால் மற்ற மதத்தினரோடு ஒன்றி ஒற்றுமையாக வாழ முடியாது என்ற மதவெறி சிந்தனை தான் நடந்த கலவரங்களுக்கு மூல காரணம். ஆனால் நம் நாட்டில் உள்ள மதசார்பின்மை என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களால் ஜின்னாவின் செயல் பற்றி அவ்வுளவாக விவாதிப்பது இல்லை.

      கோட்ஸே பற்றி பேசும் போது ஜின்னா பற்றியும் பேச வேண்டும். ஜின்னாவின் செயலால் ஹிந்துக்கள் இஸ்லாமியர்கள் என்று ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்

      • மணிகண்டன்…, காந்தியுடன் யார்வேண்டுமானாலும் அரிசியல் ரீதியாகவும் , கொள்கை ரீதியாகவும் வேறுபட்டு இருப்பது என்பது தவறே இல்லை…. அதே நேரத்தில் அவரின் அரசியல் கொள்கைகள் காரணமாக அவர் கொலை செய்யப்படுவது என்பதனை எப்படி ஏற்க்க முடியும்? இத்தனைக்கும் காந்தி அடிகள் சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு அரசாங்க பதவியையும் ஏற்க்கவில்லை…. ஏன் காங்கிரஸ் கட்சியையே கலைத்துவிடவேண்டும் என்று நேர்மையாக கூறிய அருமையான மனிதர்… ராமனை தன் மனதில் எந்நேரமும் போதித்து வைத்து இருந்த மனித நேயம் மிக்க மனிதர்… தன் இறுதி நாட்களில் மதகலவரம் ஏற்பட்டு மக்கள் கொலை செய்யபடும் போது கூட இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக சாகும் வரையில் உண்ணாவிருதம் இருந்து மத ஒற்றுமைக்காக பாடுபட்டவர்…. அத்தகைய நிலையில் அவரை கொலை செய்த கோட்சே கூறிய காரணங்கள் ஹிந்து வெறியனின் மன வெளிப்பாடாகத்தான் இருந்தது.. அதனை ஏற்கின்றீர்களா மணிகண்டன் ? மேலும் ஒரு விஷயம் ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவை மத ரீதியாக பிரிக்ககூடாது என்று இறுதி வரையில் ஒற்றைக்காலில் நின்று தோற்றவர் இந்த காங்கிரஸ் கட்சியில் இருந்த ஒரே மனிதர் காந்தி அடிகள் தான்…காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும், ஹிந்து முஸ்லிம் இடையே ஒற்றுமை வேண்டும்மற்றும் இந்தியாவை மத ரீதியாக பிரிக்ககூடாது என்று வலியுறித்திய காந்தியை கொன்ற கோட்சே கண்டிப்பாக அதி தீவிரமான ஹிந்து வெறியனாக தான் இருக்கவேண்டும் … ஏற்கின்றீர்கள் தானே மணிகண்டன்? அப்படி பட்ட நிலையில் இன்றும் கோட்சேவை துதி பாடுபவர்கள் எப்படி பட்டவர்களாக இருக்க முடியும்… நல்ல வேலை நீங்கள் அப்படி பட்டவர் இல்லை என்று நினைக்கிறன்…!

       ஜினாவையும் , கோட்சே வையும் பற்றி விவாதிப்தில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை… அதே நேரத்தில் காத்தியை கொலை செய்ய கோட்சேவுக்கு ஜின்னா எப்படி காரணம் ஆனார் என்று நீங்கள் தான் கூறவேண்டும்!

       • கோட்ஸே செய்ததை நான் எந்த சூழ்நிலையிலும் நியாப்படுத்தவில்லை, கீழே ஜோசப் எழுதியிருப்பதை படியுங்கள்.

        என் பார்வையில் அந்த காலகட்டத்தில் கோட்ஸே போன்றவர்களுக்கு இஸ்லாமியர்களின் வன்முறை செயல்களால் பெரும் கோபம் இருந்து இருக்கிறது அந்த கோபத்தை காந்தியின் மீது காட்டியிருக்கிறார்கள். மகாத்மா காந்தி இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையை முற்றிலும் நிராகரித்தவர் ஆனால் அவர் தான் பிரிவினைக்கு காரணம் என்று கோட்ஸே நினைத்து இருக்கிறான்.

        http://www.outlookindia.com/website/story/why-exactly-did-godse-kill-gandhi/293200

        இதில் நீதிமன்றத்தில் கோட்ஸே கொடுத்த வாக்குமூலத்தை தடை செய்து இருக்கிறார்கள், கோட்ஸேவின் வார்த்தைகளின் படி அவன் மகாத்மா காந்தியை கொன்றதற்கு அரசியல் தான் காரணம் என்கிறான்.

    • மணிகண்டன்,

     உங்க பதில பாத்தா “உங்களுக்கு வந்தா இரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி ஜூஸ் மாதிரி” ஜோக் தான் ஞாபகத்துக்கு வருது….

     உங்க பித்தம் தெளிஞ்சு மன ஷாந்தி கிடைக்கனும்னா கொஞ்சம் கோவன் பாட்ட கேளுங்க ஜி..

     ஹிந்து தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய ஒரு ஹிந்துவான ஹேமந்த் கர்கரேவேக் கொன்றது சாட்சாத் உங்களுடைய கோட்சே கூட்டம் தான், அதற்காக நீங்கள் நடத்திய திட்டமிட்ட தாக்குதல் தான்… மேலும் படிக்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்கவும்…ஆனால் உங்களுக்கு மீண்டும் மதபோதை தலைக்கேறினால் நான் பொறுப்பல்ல…

     https://www.vinavu.com/2011/02/03/on-saffron-terror/
     https://www.vinavu.com/2013/04/15/hyderabad-blasts-police-bigotry/

    • இந்து மத அடிப்படை வாதமே இல்லை என்று சொல்லாதிர்கள் மணிகன்டன் ஆர் எஸ் எஸ் இந்து ஒற்றுமைக்காகவும் இந்து மக்களின் பாதுகாப்புக்காகவும் இயங்கும் இயக்கம் என்ற பொய்யை நம்புகிறீர்கள் போல இருக்குதே

 2. மிஸ்டர் மணி ,
  நான் புடித்த முயலுக்கு மூணு கால்”என்ற கதையாக எப்ப பாத்தாலும் விவாதத்திற்கு சம்பந்தமேயில்லாத பாகிஸ்தானை இழுக்குறீங்க.கோட்ஸே RSS-ல் இருந்தார்.அப்படியென்றால் அந்த அமைப்பின் ஆலோசைனையின் பேரில் தான் செய்திருப்பார்.இப்ப நாடு அமைதிப் பூங்காவா இருக்கிற மாதிரி வன்முறைகள் இல்லாமல் அமைதியா இருக்குற மாதிரி பேசறீங்க.

  • RSS இயக்கத்திற்கு மகாத்மா காந்தியை கொன்றதில் எந்த தொடர்பும் இல்லை நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்பு பற்றி நிரூபிக்க படவில்லை. அதனால் RSS இயக்கம் காந்தியை கொன்றது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை, அதனால் தான் RSS இயக்கத்தின் மீது இருந்த தடை நீக்கப்பட்டது.

   அப்படி உங்களிடம் RSS இயக்கம் காந்தியை கொன்றதற்கான ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அதை நிரூபித்து காட்டுங்கள்.

   • மணிகண்டன் ………..

    மகாத்மா காந்தியை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை, அந்த பாவத்தில் இருந்துதும் தீரா பழியிலிருந்தும் விடுவிக்க என்னென்ன பிரயத்தனம் செய்கிறீர்கள்!!!!. ஆனால், அது நிச்சயம் நடக்கவே நடக்காது. காந்தியாரை கொன்றதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து மகா சபை எனும் இரண்டு பாசிச அமைப்புகளின் பங்கை அவ்வளவு எளிதில் யாரும் நிராகரிக்க முடியாது. நாதுராம் கோட்ஸேயின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உடனான தொடர்பை அவருடைய தம்பி கோபால் கோட்ஸே அம்பல படுத்திய பிறகும் நீங்கள் அதனை மறுக்கின்றீர்கள் என்றால், ஆர்.எஸ்,எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எவ்வளவு திருட்டு கொடியவர்கள் என்பது இதன் மூலம் நன்றாக விளங்குகின்றது.

    காந்தியாரின் கொலைக்கு சம்பந்தம் இல்லாமல் தானா, அவர் சுடப்பட்ட அன்று ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் நாடு முழுக்க இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். கோட்ஸேவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று இங்கு சிலர் கூப்பாடு போட்ட பொழுது அதனை ஆர்.எஸ்.எஸ்ஸோ அல்லது வேறு எந்த இந்துத்துவ அமைப்போ அதற்காக ஒரு சிறு எதிர்ப்பை கூட பதிவு செய்யவில்லையே அல்லது வெளிப்படுத்தவில்லையே ஏன்?. இதிலிருந்தே காந்தியின் கொலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பின்னணியை அதன் சூழ்ச்சியை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும், எதனையும் ஆதாரத்துடன் பேசுவது தான் நியாயமான ஒன்றாகும் என்னும் அடைப்படையில் ஆர்.எஸ்.எஸ் மீதான குற்றச்சாட்டிற்கு என்னால் அளிக்க முடிந்த ஆதாரம்.

    1948 இல் பிரிட்டிஷ் அயலுறவு அலுவலகம் அனுப்பிய தந்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கு அளிக்கிறேன்.

    http://www.nationalheraldindia.com/news/2016/11/15/nh-exclusive-new-evidence-links-godse-to-rss (தந்தி மேற்கண்ட தளத்தின் உள்ளே இருக்கின்றது).

    மேலும் இது தொடர்பான நேருவின் கடித்த போக்குவரத்துக்களையும் அளிக்கிறேன்.

    https://raattai.wordpress.com/2016/01/29/gandhi-murdabad/

    இதில் இருந்து சில கடித்த வரிகள் ……

    To Vallabhbhai Patel
    New Delhi
    22 January 1948

    My dear Vallabhbhai,

    Most of the Urdu and Hindi newspapers of Delhi have been writing poisonous stuff during the last few weeks. This was noticeable especially during Gandhiji’s fast. These newspapers or some of them are official organs of the Hindu Mahasabha or are aligned with it.(1) I do not know what steps can be taken about this matter but I think much of our trouble at this end is due to this totally unbalanced writing in the press, just as the Pakistan newspapers write poisonous stuff. In view of the attitude of the Hindu Mahasabha and the R.S.S. it is becoming increasingly difficult to be neutral towards them.

    Yours sincerely,
    Jawaharlal Nehru
    1. A leading article in the Hindu Outlook stated that Mahatma Gandhi and Nehru should be murdered. An anonymous poster in Hindi incited the public “to murder Mahatma Gandhi, to cut him to pieces and throw his flesh to dogs and crows”. The Hindu Mahasabha held meetings in defiance of the ban order and criticized the Congress and the Government for helping the Muslims .

    இந்த கடிதம் கூற வரும் தகவல். காந்தியும், நேருவும் படுகொலை செய்ய பட வேண்டும். அதிலும், காந்தியை கொன்று துண்டு துண்டாக வெட்டி அவரின் சதைகளை காக்கைக்கும், நாய்களுக்கும் வீசி ஏறிய வேண்டும் தங்களின்(ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை மற்றும் அவர்களின் சார்பு சோம்பு தூக்கி பத்திரிக்கைகளும்) பத்திரிக்கைகளிலும் மற்றும் சுவரொட்டிகளிலும் கொலை வெறி வன்மத்தோடு பிரச்சாரம் செய்யபட்டது.

    ஆகவே, காந்தியின் படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச அடிப்படைவாத அமைப்புகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என வாய் கூசாமல் பேசுவது கடைந்தெடுத்த “வார்த்தை பயங்கரவாதமாகும்”.

    • மேற்கண்ட கடிதத்தின் துவக்கத்தில், இந்தி மற்றும் உருது மொழியில் உள்ள செய்தித்தாள்கள் என்று நேரு கூறி இருப்பார், உடனே உருது என்கிற வார்த்தையை பிடித்து கொண்டு, “பாருங்கள் உருது என்று கூறி இருப்பதால் இசுலாமியர்களுக்கு இதில் பங்கிருக்கிறது” என்று கிளம்பி விட வேண்டாம். அந்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை போன்றவைகள் உருது மொழியிலும் தங்களின் மதவாத நச்சு கருத்துக்களை வெளியிட்டன என்பது குறிப்பிட தக்கது. மேலும், ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச அமைப்புகளுக்கு மூன்று பேரின் மீது மட்டும் தான் அன்று முதல் இன்றளவும் தீரா பகையும் வெறுப்பும் உள்ளது. 1)இசுலாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள். 2)காந்தியம் 3)கம்யூனிஸ்டுகள், ஆகிய மூவர் மீதும் தான் என்பது உலகறிந்த ஒன்று

     • சரி உங்களை போன்றவர்கள் எல்லாம் இவ்வுளவு ஆதாரம் வைத்து இருக்கிறீர்களே ஏன் நீதிமன்றத்தில் RSS பற்றி உங்களால் நிரூபிக்க முடியவில்லை, ஏன் நீதிமன்றம் RSS இயக்கத்திற்கு மகாத்மா காந்தியை கொலை செய்ய போகிறார்கள் என்பது தெரியாது என்று சொன்னார்கள் ? இந்த விஷயத்தில் நீதிமன்றம் சொல்வதை தான் ஏற்க முடியும்

      • மணிகண்டன்…, நேரு அவர் கடிதத்தில் சுட்டிகாட்டுவது போன்று, சாத்விக காந்தியை துண்டு துண்டாக வெட்டி கொல்லும் அளவுக்கு RSS இயக்கத்துக்கு அவர் மீது அப்படி என்ன அரசியல் பகை?

       //A leading article in the Hindu Outlook stated that Mahatma Gandhi and Nehru should be murdered. An anonymous poster in Hindi incited the public “to murder Mahatma Gandhi, to cut him to pieces and throw his flesh to dogs and crows”. The Hindu Mahasabha held meetings in defiance of the ban order and criticized the Congress and the Government for helping the Muslims .//

      • மணிகண்டன் அவர்களே, நேரு அவர்களின் கடிதத்தின் அடிப்படையில் rss இயக்கம் காந்தியை கொல்ல கூறும் காரணமும், கோட்சே காந்தியை கொன்ற காரணமும் ஒன்றா அல்லது வேறு வேறானவைகளா ?

      • மணிகண்டன் ……

       அப்படியே ஆதாரத்தை கொடுத்து விட்டால் மட்டும் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்து விடுமா?. சுதந்திர இந்தியாவின் முதல் கொலை வழக்கே(காந்தியின் வழக்கு) மிகவும் தந்திரமான வகையில் முடிக்கபட்ட ஒன்றுதான். எய்தவனை விட்டு அம்பை தண்டித்த வினோதம் இங்கு தான் நடந்தேறியது. குஜராத்த்தில் நடந்த இசுலாமிய படுகொலைகளுக்கு யார் தண்டிக்க பட்டார்கள். தவறு செய்த அனைவருமே அனைத்து சாட்சியங்கள் இருந்தும் சுதந்திரமாக தான் வெளிய உலாவுகிறார்கள். குஜராத் படுகொலைகள் அனைத்தும் மோடியின் ஆசீர்வாதத்துடன் தான் அரங்கேறியது என்பது நாடே அறிந்த ஒன்று, இருந்த போதிலும் அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி, விசாரணை செய்து அவர் என்ன தூக்கில் ஏற்றப்பட்டு விட்டாரா?. தூக்கில் கூட போட வேண்டாம் குறைந்த பட்சம் அவரை இனி அரசியலில் பங்கெடுக்காத அளவிற்கு தகுதி நீக்கம் செய்து, அரசியலை விட்டே விரட்டி, அவர் அண்ணன் நடத்தும் டீ கடையில் மீண்டும் அவரை “எச்சி க்ளாஸ்” கழுவ அனுப்பி இருக்க வேண்டும். அது கூட நடை பெறவில்லையே.

       ஆக, பாபர் மசூதியை இடித்தவர்கள் யாரும் இங்கு தண்டிக்க படவில்லை , சிறுபான்மை மற்றும் தலித்துகள் மீது நடத்த பட்ட தாக்குதல் என்று எதிலுமே யாருக்கும் தண்டனை கிடைக்காத பொழுது, காந்தியார் கொலை சம்மந்தமான அனைத்து ஆதாரங்களையும் அளித்து விட்டால் மட்டும் அப்படியே கிழித்து விட போகிறார்களாக்கும். இங்கிருக்கும் நீதி மன்றங்கள் அனைத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புகலிடமாகித் தான் செயல் படுகின்றன எனும் பொழுது யாரை குறை சொல்ல? ஒன்று மட்டும் கூற முடியும், காந்தி உங்களின் ஆர்.எஸ்.எஸ் இந்து மகாசபை போன்ற பாசிச அமைப்பிற்கு உயிர் பிச்சை அளித்து விட்டார் என்று நினைத்துக் கொள்கிறோம். தொலைந்து போங்கள்

      • ஹஹா….சூப்பர் அப்பு….

       நீதிமன்றமே காவி மன்றமாக இருக்கும் போது எப்படி அய்யா நீதி கிடைக்கும்.

       கீழ் வெண்மணி படுகொலை செய்த ஆதிக்க சாதி கயவர்களுக்கு உச்சா நீதி மன்றம் என்ன தண்டனை கொடுத்தது? ஆனா நேத்து சென்னையில் ஒருத் தியேட்டரில் ஜனகன மன பாட்டுக்கு நிக்கலீன்னு போலிசு மூணு பேர்களை கைது செஞ்சுது.

       குஜராத் படுகொலை மாபாதகர்களுக்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்து கிழித்து
       விட்டது?

       நேத்து கூட மோடி லஞ்சம் வாங்கிய வழக்கை உச்சா நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

       அதுக்கு முன்னாடி அமித்சாவ விடுவித்தது அதே நீதிமன்றம் தாம்.

       ஜெயலலிதாவை விடுதலை செய்தது அதே உச்சா நீதிமன்றம் தான்

       தில்லை நடராஜன் கோவிலை பார்ப்பனர்களுக்கு நேந்து விட்டதும் அதே அம்பிகளின் மன்றம் தானே.

       நிலைமை இப்படி இருக்கும் போது எப்படி அய்யா நீதிமன்றம் படியேறி நீதியை நிலைநாட்ட முடியும்.

       • உங்களுக்கு இருப்பது செலெக்ட்டிவ் அம்னீஷியா வியாதி என்று நினைக்கிறேன். உங்கள் நியாபக மறதிக்கு உதாரணங்கள் இதோ உச்ச நீதிமன்றம் தமிழக முதல்வரின் மகளையே சிறையில் அடைத்தது, திமுக தமிழகத்தில் மட்டும் அல்ல மத்தியிலும் ஆட்சியில் மிக மிக வலுவாக காங்கிரஸ் கட்சியை ஆட்டிப்படைக்கும் நிலையில் இருந்தும் அவர்களால் கனிமொழியை காப்பாற்ற முடியவில்லை. ராஜா, லாலு பிரசாத் யாதவ் (அவரும் ஆட்சியில் இருந்த போது தான் சிறை சென்றார்), சுரேஷ் கல்மாடி என்று எத்தனையோ பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவிகளை இழந்து இருக்கிறார்கள்.

        உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் அவன் குற்றவாளி இவன் குற்றவாளி என்று கண்டமேனிக்கு சொல்லலாம் அதற்கு பெயர் அவதூறு

        • கேட்ட கேள்விக்கு பதில காணோம்,

         அய்யா உங்க கோர்ட் சூத்திர மக்களை மட்டுமே தண்டிக்கிறதே ஏனய்யா?
         ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, தில்லை நடராசர் ,கீழ் வெண்மணி என்று பார்ப்பனர்களும் பார்பனர் பாததாங்கிகளும் தண்டிக்கவில்லையே என்று கேட்டால் ராஜா,கனிமொழி,லல்லு பிரசாத் என்று சேம் சைட் கோல் அடிக்கிறார்.

         • சுரேஷ் கல்மாடி எந்த ஜாதி உயர் ஜாதியா இல்லை தாழ்பட்ட ஜாதியா ? சுரேஷ் கல்மாடி உங்கள் வார்த்தைகளின்படி உயர் ஜாதி.

          விட்டால் தலித் அதனால் நீதிமன்றம் தண்டிக்க கூடாது என்று கூட சொல்லுவீங்க போல…

          • கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை.
           மோடி ஜெயலலிதா எந்த ஜெயில்ல களி தின்னாங்க?

           அப்புறம் கல்மாடி அய்யா இப்போ எந்த ஜெயில்ல களி தின்னுகிட்டு இருக்காரு?

           இப்போ அவாறு இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முடிசூட்டப்பட்டு உள்ருளாருங்கோ.

           http://www.thehindu.com/sport/Suresh-Kalmadi-accused-in-CWG-scam-appointed-Life-President-of-Indian-Olympic-Association/article16950491.ece

          • மோடி மீதான வழக்குகள் எதிலும் அவர் குற்றவாளி என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை, உங்களின் வார்த்தைகளின்படி மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

           ஜெயலலிதா வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

           சுரேஷ் கல்மாடி அவருக்கான தண்டனையை அனுபவித்த பிறகு, பதவி அவரை தேடி சென்று இருக்கிறது.

           அவதூறுகள் அடிப்படையில் ஒருவரை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றால் நாட்டில் முக்கால்வாசி பேர் சிறையில் தான் இருப்பார்கள். ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதி மீது உண்மை இருக்கிறதோ இல்லையோ அவதூறை பரப்பலாம் உங்களை போன்ற ஆட்கள் அதை நம்பி அந்த அரசியல்வாதி தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் ஆனால் உண்மை என்ன என்று பார்க்க வேண்டும், நீதிமன்றம் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் தண்டனை கொடுக்க முடியும், பத்திரிகைகள் தொடர்ந்து ஒருவரை பற்றி அவதூறு பரப்பி அவர் மீது அவப்பெயரை உண்டாக்கி அதனால் அந்த நபர் தண்டனைக்குரியவராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

           ஒரு நல்லவரை கூட தொடர்ந்து அவதூறாக பிரச்சாரம் செய்து அவரை கெட்ட மனிதராக பத்திரிகைகள் முன்னிறுத்தலாம்.

           இதனால் தான் நான் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் சொல்லப்படும் அவதூறுகளை நம்புவது இல்லை.

 3. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் இந்து முசுலீம் கலவரத்துல நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டனர் ஒரு ரயில் நிறைய பிணங்களை ஏற்றி வந்தது ிந்தியாவுக்கு பாகிஸ்தானின் பரிசு என்று ரத்தத்தால் எழுதப்பட்ட வாசகம் இருந்ததாகவும் அதுக்கு அந்த ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டர் சாச்சி என்று மருதன் என்பவர் எழுதிய இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நந்தது என்ன என்று எழுதப்பட்ட புத்தகத்தில் படித்த நியாபகம்

  அதுவும் இல்லாமல் பாகிஸ்தான் பிரிவினையின் போது அலுவலக சேரிலிருந்து தண்ணி குடிக்குற கப்பு வரை எதெதெல்லாம் பாகிஸ்தானுக்கு சேர வேண்டும் என்று தட்டு முட்டு சாமானுகளை எல்லாம் பிரித்து பாக்கி விடாம எடுத்துக்கொண்டு சென்றனர்

  அதோடு நிக்கவில்லை பாகிஸ்தானில் அமைய விருக்கும் புதிய அரசுக்கு 200 கோடி பணத்தை குடுக்கவேண்டும் என்று இந்திய அரசுக்கு கெடுவும் விதிக்கிறார் ஜின்னா இந்திய அரசு பிரதமார பொருப்பேற நேரு விழி பிதுங்கி நிக்கும் போது இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அந்த பணத்தை குடுக்கவில்லை என்றால் உன்னாவிரதம் இருந்து உயிர் துறப்பேன் என்று சொல்லுகிறார் காந்தி

  காந்தியின் இந்த செயலை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று கருதிய கோட்சே காந்திய தனது 5 சகாக்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்கிறார் கோட்சே உட்பட 5 பேரின் தனிப்பட்ட திட்டமே காந்தி கொலை இதுல ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு சம்பந்தம் இருக்கா அவர்கள் பின்புலமாக இருந்து உதவி செய்தார்களா என்று தெரியவில்லை

 4. ஏன் மணிகண்டன் ஐயரே ! கட்டுரையில் கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ் என்றும், காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் கோல்வார்கர் பங்கு இருந்தது என்பதையும், ஆர்.எஸ்.எஸ் கோட்சே தங்கள் உறுப்பினர் அல்ல என்று பொய் சொல்கின்றனர் என்பதையும் கோட்சேயின் இரத்த வாரிசுகள் வாக்குமூலத்தோடு விளக்கி இருக்கும்போதும் ஏன் உங்களால் அதனை படிக்க இயலவில்லை.

  இந்தியாவின் தலிபான் ஆர்.எஸ்.எஸ் என்பது உங்களுக்கு உரைப்பதால்தான், அடித்தாலும் வலிக்காதமாதிரி நடிக்கிறீர்கள் ???

 5. காந்தி கொல்லப் பட்டதால் அரசியல் இலாபம் அடைந்தவர் யார் என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்ப்பது நலம் என்று நினைக்கிறேன்.
  காந்தியின் பெயரையே கபளீகரம் செய்து நாட்டில் நாட்டாண்மை ஆட்சி நடத்துபவர்கள் கோட்சேயா காந்தியா அவர்களின் வாரிசுகளா அல்லது இந்திய மக்களா என்பதை நாம் பார்க்க வேண்டாமா?

 6. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் இயக்கம் சார்ந்தவர்கள் எப்போதாவது தங்கள் மீது வைக்கும் விமரிசனத்திற்கோ தங்கள் இயக்கத்தின் மீது வைக்கும் விமரிசனத்திற்கோ கருத்தோ அல்லது மாற்று கருத்தோ தெரிவிப்பது கிடையாது அது வரலாறு. அவர்கள் எப்போதும் எதிர் கேள்வி கேட்பவர்கள் ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் சொல்லக்கூடாது என்ற கட்டமைப்பில் உள்ளவர்கள் அவர்களிடம் போய் நியாயமான பதிலையோ நேர்மையான பரிசீலனையோ எதிர்பார்க்முடியுமா

 7. திரு செல்வம் என்பாரது கருத்து ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு மட்டும்ல்ல இசுலாமிய இயக்கங்களுக்கும் பொருந்தும் வருந்துகிறென் தினகரன் என்பதற்க்கு பதில் செல்வம் என்று எழுதி விட்டேன்

 8. ஜோசப் அவர்களே அதான் நான் சொன்னேன். சொல்லுகின்ற கருத்துக்கு என்றைக்கும் பார்பனியம் கருத்து தெரிவிப்பது கிடையாது அதற்கு உதாரணம் பிஜேபி பயலுங்க அதே போல் தான் நீங்களும் பதில் அளித்துள்ளீர்கள் பாராட்டுக்கள் வாழ்க

 9. ஜோசப் அவர்களே அதான் நான் சொன்னேன். சொல்லுகின்ற கருத்துக்கு என்றைக்கும் பார்பனியம் கருத்து தெரிவிப்பது கிடையாது அதற்கு உதாரணம் பிஜேபி பயலுங்க அதே போல் தான் நீங்களும் பதில் அளித்துள்ளீர்கள் பாராட்டுக்கள் வாழ்க. தினகரன் என்று தெளிவாக உள்ள பெயரை மறந்து இப்படி பதிவிட்டேன் என்கீறீர்கள் பாரத்து ம.க இக என்பதற்கு பதில் பி ஜே பி என்று அழைக்காதீர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க