மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு வழங்கும்
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு
பாடல்
__________________________________
நண்பர்களே,
தமிழக வரலாற்றில் இதுவரை நமது விவசாயிகள் இப்படிச் சாகவில்லை. கருகிய பயிரைக் கையில் பிடித்தபடி விவசாயிகள் நெஞ்சு வெடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டமே இப்போது சுடுகாடாக காட்சியளிக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வறட்சியும் அதன் பாதிப்புக்களுமே எதிரொலிக்கின்றன. என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள். அந்த ஆத்திரத்தை அரசியல்படுத்தி இதர பிரிவு உழைக்கும் மக்களின் துணையுடன் மக்கள் அதிகாரம் அங்கே பிரச்சாரம் செய்து வருகிறது. பல மாணவர்கள், தொழிலாளிகள், இளைஞர்கள், பெண்கள் இதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொருட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் இந்தப் பாடலை தயாரித்து வெளியிடுகிறது.
இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை, தாளக்கருவிகள், ஸ்டூடியோ அனைத்தும் மிகக் குறைந்த செலவில் செய்வதற்கு போராடியும் செலவு எமது கணிப்பைத் தாண்டிவிட்டது. மேலும் நிதிச்சுமை காரணமாகவே இந்தப்பாடலை குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளோடு மட்டுமே தயாரித்திருக்கிறோம். இருப்பினும் விவசாயிகளின் துயரத்தையும், அதற்கான நமது கோபத்தையும் கலை வடிவில் இந்தப் பாடல் தட்டி எழுப்புமென்றே நம்புகிறோம். இசையமைப்பு நிலையத்தில் ஒரு மணிநேர வாடகை மிகக்குறைந்த அளவு வைத்துக் கொண்டாலும் ரூ.500 ஆகும். தொழிற்முறை இசைக் கலைஞர்களை தாளம் மற்றும் இதர கருவிகளுக்கு மிகக்குறைந்த அளவு பயன்படுத்தினாலும் ஒரு பாடலுக்காக ஒரு கலைஞருக்கு அளிக்க வேண்டிய குறைந்தபட்சம் ரூ 5000 அளிக்க வேண்டும். இதுவே ஒரு கால்ஷீட் அளவு அவர்களை பயன்படுத்தினால் அதன் செலவு இன்னும்அதிகம். இது போக வயலின், கித்தார் என்று கருவிகளுக்கேற்ப கட்டணமும் மாறுபடும்.
இணையத்தில் நாங்கள் வந்த பிறகு வெளியான ம.க.இ.க பாடல்கள் அனைத்தும் வீடியோ பாடல்களாக இலவசமாக வெளியிடப்படுகின்றது.
ஆகவே இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்ய உங்களால் இயன்றதை அல்ல, இன்னதுதான் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வுடன் கூடிய தொகையை நன்கொடை அளியுங்கள். சினிமா உலகைச் சேர்ந்த நண்பர்கள் வாடகை இன்றியோ இல்லை குறைந்த வாடகையுடன் கூடிய ஒலிப்பதிவு அரங்கங்கள், படப்பிடிப்பு கருவிகள், கட்டணமின்றி வாசிக்க கூடிய தொழிற்முறை இசைக் கலைஞர்கள் போன்றோரை ஏற்பாடு செய்து உதவுங்கள். இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!
நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________
பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
KANNAIAN RAMADOSS
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084
செல்பேசி – 99411 75876
__________________________________
வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.
அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நன்றி!
நட்புடன்,
வினவு
_______________________________________________
பாடல் வரிகள்
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூ…ச்சு ஓய்ஞ்சிருச்சு
ஆ…ய்வு என்னங்கடா ஆய்வு – நீங்க
அழிஞ்சாத்தான் எங்களுக்கு வாழ்வு.
கருகின பயிரப் பாத்து சரிஞ்சா…ங்க கதிரப்போல
காவிரிய தடுத்த மோடி பேச்சப்பா..ரு யோக்கியன்போல
செல்லாத நோட்ட மாத்த சாகிறோம் வரிசையில – உழவை
இல்லாம செஞ்சி இங்கே போடப்போறான் மீதேன் போரை
போலீசு கம்பிளைண்டுக்கு போடணும் வாய்க்கரிசி
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டு அதுக்கொரு வாக்கரிசி
வி.ஏ.ஓ வெரிபிகேசன் அவனுக்கும் வாக்கரிசி
வேளாண்மை அதிகாரி அங்கேயும் வாக்கரிசி
நிவாரணம் திங்கிறதெல்லாம் நீங்கதாண்டா பொணத்த வச்சி
ஊ…ரை சுத்தி சுத்தி வாய்க்கா.. குளம் ஆறு
முப்போகம் விளஞ்சபோது பஞ்ச… மில்லாத ஊரு
தஞ்சையின் தைரியத்தில் தலை நிமிர்ந்த… நாடு – ஒரு
கொள்ளைக் கூட்டம் ஆள்வதாலே மெல்லச் சாகுது தமிழ் நாடு
கா..விரி பாமினி கோரையாறு குடமுருட்டி
வெட்டுன மணலுதாண்டா செங்கல்லாட்டம் தங்க கட்டி
சின்னம்மா ஓபிஎஸ் சிக்குனவன் சேகர் ரெட்டி
அங்க போயி தோண்டுங்கடா ஆய்வுக் குழுவாம் கம்முனாட்டி
இரணியன் களப்பாள் குப்பு சீனிவாசராவ் வளர்த்த தஞ்சை
வெண்மணி தியா…கிகளை விளைய வைத்த கீழத்தஞ்சை
அறுவடைப் போரா….ட்டம் அடங்கியது… பண்ணை – அந்த
நினைவுகள் அழிவதில்லை அஞ்…சாதே நிமிர்த்து நெஞ்சை
___________________________________________________
படத்தொகுப்பு
துரை. சந்திரன்
ஒளிப்பதிவு
இரா. கண்ணா
பாடியவர்
கோவன்
ஒருங்கிணைப்பு
வினவு
பாடல், இசை, தயாரிப்பு
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு
பாடலில் இடம் பெறும் காட்சிகள்
திருவாரூர், நாகை மாவட்ட கிராமங்கள்
விவசாயிகளின் வாழ்க்கையைப் போல வறட்சியான நெல் வயல்கள்.ஆட்சியாளர்களின் வஞ்சனை அறியாமல் வயல்களின் நிலை பார்த்து நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயிகள் .ஆறு காய்ந்ததற்கும் வானம் பொய்த்ததற்கும் விவசாயிகளின் இறப்புக்கும் அமுல்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைதான் காரணம் என்பதை விவசாயிகள் உணரும் போது காட்சிகள் மாறும்.இதை உணர்த்தும் விதமாக பாடல் வரிகளும் கோவனின் குரலும் கோபக்கனலாய்த் தெறிக்கின்றன.பாடலும் பாடல் காட்சிகளும் விவசாயிகளின் வாழ்க்கையோடு இணந்திருப்பது சிறப்பு.சரியான தருணத்தில் பாடலை வெளியிட்டதற்கு விவசாயிகளின் சார்பாக நன்றி.
பாடலின் வரிகளும் இசையின் தன்மையும் கழிவிரக்கத்தைத் தோற்றுவிக்காமல் துல்லியமான துணிச்சலான அம்பலப்படுத்தல்களாக இருப்பது சிறப்பு.11-01-17 திருவாரூர் தர்ணாப் போராட்டத்தில் பேசிய ஒரு தாயின் துயரத்தைக் காட்சிப் பதிவு செய்திருப்பது மதிப்பிற்குரியது.களப்பால் குப்பு என்ற பெயர் களப்பாள் குப்பு என்று பிழையாக வந்திருக்கிறது என்று கருதுகிறேன்.
காவிரி டெல்ட்டா விவசாயத்தின் எதிரிகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் பாடல்.
விவசாயத்தின் எதிரிகளை அடையாளம் காட்டும் அதே வேளையில் தான் தமிழர்களின் பண்பாடு ஏறுதழுவுதல் அதில் உங்களின் நிலையை அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம்
வரவேற்கிறோம் தோழர் பாடல் வரிகள் சொல்லிய விதம் அனைத்தும் அருமை ஆனால் இசை மிக மோசம் அது கோவம் ,சோகம் அல்லது போராட்ட உணர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இது குதூகல உணர்ச்சியை ஏற்படுத்துவது போல் உள்ளது. இந்த இசை பாடல் ஏற்படுத்தக்கூடிய விளைவை வெகுவாக குறைக்கிறது
தோழர்களே தமிழகத்திலே தற்போது நடந்து கொண்டிருக்கும் பெரிய செய்தி ஜல்லிக்கட்டு அதைப்பற்றியும் இதில் மத்தியஅரசில் நிலைப்படு தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பீட்டா அமைப்பு என்பதை பற்றி ஒரு வாய் திறங்கள். நன்றாக இருக்கும் விவசாயி தற்கொலை அதற்கான காரணம் ஏகாதிபத்தியம் மற்றும் அதை நடத்தும் மத்திய அரசும் தான் அதே விவசாயின் பண்பாட்டு தளத்தையும் அசைத்து பார்க்க துடிக்கும் மத்திய பிஜேபி அரசையும் ஏகாதிபத்திய பீட்டா அமைப்பை பற்றி வாய் திறந்து சொல்லுங்கள் நன்றாக இருக்கும்