Wednesday, January 20, 2021
முகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு - மகஇக புதிய பாடல்

ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு – மகஇக புதிய பாடல்

-

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழங்கும்

ஜல்லிகட்டு இல்ல – இது டெல்லிக் கட்டு பாடல்

பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராக கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை?  காளையையா, டில்லியையா?

“உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை எப்படி புரிந்துகொள்வது என்று இப்பாடல் விளக்குகிறது.

 

இணையத்தில் நாங்கள் வந்த பிறகு வெளியான ம.க.இ.க பாடல்கள் அனைத்தும் வீடியோ பாடல்களாக இலவசமாக வெளியிடப்படுகின்றது.

ஆகவே இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்ய உங்களால் இயன்றதை அல்ல, இன்னதுதான் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வுடன் கூடிய தொகையை நன்கொடை அளியுங்கள். சினிமா உலகைச் சேர்ந்த நண்பர்கள் வாடகை இன்றியோ இல்லை குறைந்த வாடகையுடன் கூடிய ஒலிப்பதிவு அரங்கங்கள், படப்பிடிப்பு கருவிகள், கட்டணமின்றி வாசிக்க கூடிய தொழிற்முறை இசைக் கலைஞர்கள் போன்றோரை ஏற்பாடு செய்து உதவுங்கள். இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084
செல்பேசி  – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நன்றி!

நட்புடன்,
வினவு

பாடல் வரிகள்

ஜல்லிகட்டு இல்ல – இது
டெல்லிக் கட்டு

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு – மாட்டை
அடக்கி விட்டோம் அன்று தொட்டு – இனி
வாடிவாசல் விட்டு விட்டு
மோடி அரசை அடக்கி காட்டு

காவிரியைத் தடுத்து எங்கள்
கழனியைக் கருக்கி, உழவன்
உயிர்களைக் குடித்து மண்ணைக்
கெடுத்தவனை எதிர்த்து மோது

தமிழினை அழித்து – செத்த
சமஸ்கிருதம் திணித்து – எங்கள்
பாடத்தை திரித்த – மோடி
வேடத்தை கலைக்கிறோம் பார்

பொங்கலுக்கு விடுமுறை ரத்து – நம்மை
சீண்டிப் பார்க்குது டெல்லிக்காத்து
வீரம் எங்கே, இங்கே காட்டு – காவிக்
காளையின் கொம்பை முறித்து வீழ்த்து.

 Lyrics

Not a Bull fight – this
Is a fight with Delhi

Yes, we tamed the bull since long
At Alanga nallur and so on
That’s not a big deal, oh… come on
Tame Modi, if you can.

HE is the one who blocks Cauvery
HE is the one who parches our fields
HE is the one who takes our peasants’ lives
Tame modi, if you can.

He sends Tamil to despair and death
Shoves Sanskrit down our throat
Distorts history present and the past
Unmask modi, Yes we can.

Teasing us  is the Delhi power
Throws our  Pongal  to the sewer
Show your valour here and now
Take the saffron bull  by its horn.

Share this song. spread the message. Please support us.

  1. ஜல்லிக் கட்டு போராளிகளின் மல்லுக்கட்டு பீட்டாவுக்கு எதிராக மட்டும் நின்றுவிடுகிறது.மக்களின் மஞ்சு விரட்டு,ஏறு தழுவுதல்,எருதுகட்டு அனைத்தும் மிஞ்சுகிறது உச்சுக்குடுமி தடையையும்,மோடி சதியையும்.வந்துபார் என்கிறது கிராமம்.அலங்காநல்லூரை தடிகொண்டு அடக்கிப்பார்க்கிறது காக்கிப் படை.ஆனால் பாஜகவும் அதிமுகவும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறது.சல்லித்தனம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க