privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்இவர்களுக்கில்லை பொங்கல் !

இவர்களுக்கில்லை பொங்கல் !

-

சென்ற ஆண்டு மே 5, 2016 ஆம் தேதி, டாஸ்மாக் மூடுவிழா போராட்டம் நடத்தி பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்து வெற்றி கண்ட, சென்னை மதுரவாயல் – நொளம்பூர் மாதாகோவில் நகர் மக்கள் பொங்கல் தினத்தை, துக்க தினமாக கடைபிடித்தார்கள்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கீழ் இயங்கும், நொளம்பூர் பகுதி ஊர் பாதுகாப்பு கமிட்டியின் மூலம் ஊர் கூட்டம் கூட்டினர். அதில், தமிழகம் முழுவது தாங்கள் வைத்த பயிர் கருகியதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஊருக்கே உணவு தரும் விவசாயி-ன் வீடு, எழவு வீடாக இருக்கும் போது, நாம் பொங்கல் கொண்டாடுவது மிகவும் இழிவான செயல். எனவே இந்த பொங்கல் தினத்தை, துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என அனைவரும் தீர்மானித்தனர். அதன் அடிப்படையில், இன்று (14.1.2017) ஊர் முழுவதும் வீதிகளிலும், தங்கள் வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றி கருப்பு பொங்கலாகவும், துக்க தினமாகவும் அனுசரித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. பேச – 9445112675

______________

உழவன் வீட்டில் இழவு – பொங்கல் நாள் கருப்பு நாள் !

பொங்கல் நாளை போராட்ட நாள் ஆக்குவோம் !

என்று தஞ்சை மாவட்டம், குடந்தை வட்டம், அய்யாவாடி கிராமத்தில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றமும், கிராம மக்களும் இணைந்து கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

பருவ மழையும் ஏமாற்றி விட்டது. காவேரியில் தண்ணீர் விடாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. தமிழக அரசும் விவசாயிகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போடுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் 17 பேர் என்று கணக்கு காட்டுகிறது. மற்றவர்கள் குடும்ப பிரச்சனையால் இறந்தார்கள் என்று விவசாயிகள் தற்கொலையை அமைச்சர் கொச்சை படுத்தினார். இறந்த விவாசாயிகளுக்கு 3 லட்சமும், கருகிய பயிருக்கு 5600 ரூபாய் நிவாரண அறிவிப்பு ஒரு கண்துடைப்பு. விவசாயிகள் இறந்து விவசாயம் அழிந்த பிறகு எதை சாப்பிடுவார்கள் பணத்தையும், கட்டிடத்தையுமா….? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

Kutanthai (1)

Kutanthai (2)

கோரிக்கை:

  1. உயிரிழந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும்.
  2. கருகிய பயிருக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் வழங்க வேண்டும்.
  3. உயிரிழந்த விவசாய குடுபத்தினர் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும்.
  4. விவசாயிகளின் மின் கட்டணம்,கல்வி கட்டணம் அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  5. விவசாயிகளுக்கு மாதம் இரண்டாயிரம் வழங்க வேண்டும்.

 முழக்கம்

நமக்கு சோறு போட்ட விவசாயி
கொத்து கொத்தா சாகிறானே !
கருகிய பயிரை பார்த்துப்பார்த்து
சாகிறானே சாகிறானே
நெஞ்சு வெடித்து சாகிறானே !

உழவன் வீட்டில் இழவானால்
உனக்கும் எனக்கும்
எதற்குப் பொங்கல் !

மத்திய மாநில அரசுகளே
பதில் சொல் ! பதில் சொல்!

சோறு திங்கும் அனைவருக்கும்
சொந்தமான துக்கம் இது
விவசாயிகளின் மரணத்திற்கும்
கருகிப் போன பயிர்களுக்கும்
முழுமையான நிவாரணம்
பெறும்வரை போராடுவோம்

போராடுவோம் போராடுவோம்
பெறும் வரை போராடுவோம் !

பிச்சையல்ல பிச்சையல்ல
விவசாயிகளின் நிவாரணம்
உரிமையடா உரிமையடா
உரிமையடா உரிமையடா…..!!!!!!

 தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை. 9790215184.

______________

“உழவன் வீட்டில் எழவு விழுந்தால் உனக்கும் எனக்கும் எதற்க்குப் பொங்கல்”

திருவாரூர் மாவட்டம் குழிக்கரை பகுதி கிராம மக்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் இணைந்து பொங்கல் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி துக்க தினமாக கடைபிடித்தனர்.

3

2

1

தகவல் :
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க