Monday, January 25, 2021
முகப்பு செய்தி அரியலூர் தலித் சிறுமியை படுகொலை செய்த இந்து முன்னணி செயலாளர்

அரியலூர் தலித் சிறுமியை படுகொலை செய்த இந்து முன்னணி செயலாளர்

-

PP Logo

பத்திரிக்கைச் செய்தி

நாள் : 17.01.2016

ரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்த 16 வயது நந்தினி என்ற சிறுமியை இந்து முன்னணி ஒன்றியச்செயலாளர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து நிர்வாணமாக கீழமாளிகை கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். ஆறுமாத கர்ப்பத்தை, பெண்ணின் பிறப்புறுப்பை கிழித்து சிசுவை எடுத்து அந்த பெண்ணின் சுடிதாரில் வைத்து கொளுத்தியுள்ளனர். கடந்த 29-ம்தேதி மாலை காணாமல் போன நந்தினியின் உடல் 17 நாட்களுக்கு பிறகு பிணமாக அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீச மேலே வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமி நந்தினி
கொலை செய்யப்பட்ட சிறுமி நந்தினி

காணாமல் போன மறுநாளே 30-ம் தேதி நந்தினியின் தாயார் ராசக்கிளி இரும்புலி குறிச்சி காவல் நிலையத்தில் கீழ்மாளிகை இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீதுதான் சந்தேகம், அவன்தான் என்மகளை எங்கோ கடத்தி சென்று விட்டான் என புகார் மனு கொடுத்துள்ளார். போலீசார் பெயர் குறிப்பிடாமல் புகார் கொடுங்கள் என வாங்கி “கேர்ள் மிஸ்ஸிங்” என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

4-ம் தேதி மணிகண்டனை அழைத்து விசாரித்து அனுப்பி விட்டது போலீசு. நந்தினியை மீட்க பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் மாவட்ட எஸ்.பி-யிடம் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர்தான் இதற்கு எல்லாம் மூளையாக செயல்படுபவர் அவரை அழைத்து விசாரியுங்கள்,பெண்ணை கண்டு பிடித்து விடலாம் என புகார் மனு கொடுக்கின்றனர். அனைத்து கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கின்றனர்.

ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிக்கோ திவ்யன், பெண்ணின் தயார், பி.எஸ்பி. மற்றும் உறவினர்களை அழைத்து 8-ம் தேதி மாலை பேசுகிறார். உன் பெண் குளிக்காமல் இருக்கிறார் தெரியுமா என தாயாரை பார்த்து கேட்கிறார். அம்மா ராசக்கிளி தெரியாது என்கிறார். நீ எல்லாம் அம்மாவே கிடையாது ஆறுமாதம் கர்ப்பமாக இருக்கிறார் உன் பெண் என சொல்லியிருக்கிறார்.

ஜனவரி 15-ம் நந்தினி உடல் போஸ்ட்மார்டம் செய்ததில் குழந்தை இல்லை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். மணிகண்டனை அழைத்து விசாரித்து அனுப்பிய பிறகுதான் கொலை நடந்துள்ளது. போலீசார் முறையாக விசாரித்து இருந்தால் நந்தினியை காப்பாற்றி இருக்கலாம். இந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராஜசேகரை அழைத்து விசாரிக்க கூட முடியாது என இந்து முன்னணியின் பக்கம் அரியலூர் மாவட்ட போலீசு ஆரம்பம் முதலே உறுதியாக நிற்கிறது. கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் படுகொலையின் போது செந்துறையில் இரண்டு நாள் பேருந்து ஓடவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு தி.க கூட்டம் நடந்த போது அதை நடத்த விடாமல் தடுத்தவன் இந்து முன்னணி மணிகண்டனும் அவனது ரவுடி கிரிமினல் கூட்டமும்தன். அராஜகம் செய்வதே அவனது வாடிக்கை என சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.

நந்தினி 16 வயது, ஒன்பதாம் வகுப்பு படிப்பு, சித்தாள் வேலை, ஏழ்மையான குடும்பம், அப்பா கிடையாது அம்மாவும் கூலி, தலித், எது செய்தாலும் யாரும் கேட்க நாதி கிடையாது. நாம் இந்து முன்னணி, போலீசார் நம்மை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள், பணத்தை விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியும். நாம பார்க்காத கோர்ட்டா? கேசா? என்கிற காட்டுமிராண்டித்தனம்தான் நந்தினி படுகொலைக்கு காரணம்.

பிணத்தை வாங்கு இல்லை என்றால் நாங்களே அடக்கம் செய்வோம் என போலீசு அதிக எண்ணிக்கையில் கும்பலாக சிறுகடம்பூர் கிராமத்திற்குள் சென்று நந்தினியின் அக்காவிடம் மிரட்டி கையெழுத்து வாங்கி சென்றுள்ளது. பிணத்தை வாங்குவதற்கு இன்று நண்பகல் 12 மணி வரை கெடு விதித்துள்ளது. சிறுகடம்பூர் இளைஞர்கள் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் நேரிடையாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று இன்று அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.

நந்தினி காணாமல் போன 5-ம் நாளே மணிகண்டனை விசாரித்த பிறகும் நந்தினியை இருப்புலி குறிச்சி போலீசார் ஏன் மீட்கவில்லை?ஆறுமாதம் கர்ப்பம் சிசுவை பற்றி ஏன் விசாரணை நடத்தவில்லை?. பிணத்தை, கூட்டாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் எது?,

இந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராஜசேகரை கைது செய்தால்தான் பிணத்தை வாங்குவோம் என்று போராடுகிறார்கள் மக்கள். அதனால் இன்று வரை பிணம் அரியலூர் அரசு மருத்தவமனையில் உள்ளது.

agitation
நந்தினியின் பிணத்தை வாங்காமல் போராடும் மக்கள்

ராஜசேகரை அழைத்து விசாரிக்க முடியாது என காவல்துறை உறுதியாக நிற்பது ஏன்? பொங்கல், ஜல்லிக்கட்டு சமயத்தில் இந்த பிரச்சினை வந்தால் அழுத்தி விடலாம் என போலீசார் இந்து முன்னணியோடு திட்டம் தீட்டி செயல்பட்டனரா?

இந்து முன்னணி மட்டுமல்ல, போலீசாரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். நந்தினியின் பிணத்தை நேர்மையான மருத்துவர்களைக்கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்துவதுடன் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தினியின் பிணத்தை வாங்காமல் மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களின் போரட்டம் மட்டுமே இக்கோரிக்கையை நிறைவேற்றாது. அனைத்து அமைப்புக்களும் கட்சிகளும் இக்கோரிக்கைக்காக போராட வேண்டும். நந்தினியின் படுகொலைக்கு காரணமான அனைத்து இந்து முன்னணி கொலைக்குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அது நம் அனைவரின் போராட்டத்தின் மூலமே சாத்தியம். இல்லையெனில் இந்த மிருகங்கள் அடுத்த நந்தினியை தேடிச்செல்லும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் ஒரு வார்டு கவுன்சிலராவதற்கு கூட பலமில்லாத இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கூட்டம் மத்தியில் ஆளும் அதிகாரத்தை வைத்து இப்படி ஆட்டம் போடுகிறார்கள். தலித் மக்களின் நண்பனாக வேடம் போடும் இப்பாசிசக் கூட்டம் குஜராத்தின் உனாவில் தலித் மக்கள் மீது எப்படி தாக்குதல் நடத்தியதோ அதையே இங்கும் செய்ய விரும்புகிறது. ஒரு அபலை தலித் இளம் பெண்ணின் கொடூரமான கொலையும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இந்த கொலைக்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்திலிருந்தே அகற்றப்பட வேண்டும்.

இப்படிக்கு
தோழர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

 1. இது போன்ற பொறம்போக்கு எல்லம் மக்களே வடநாட்டில் கொடுக்கும் தண்டனை போன்று நடுரோட்டிலேயே அடித்து துவைத்து அப்பறம் அவன் வாயாலேயே உண்மை வாங்கி காவல் துறையினரிடம் நீதிபதி முன்நிலையில் ஒப்படைக்கவேண்டும்.

 2. இந்தப் பிரச்சினையின் ஆணிவேர் சாதிவெறி, இந்துமதவெறியை அடிப்படையாகக் கொண்டது. தலித்துக்களையும் இந்துக்களென்று கூறிக்கொண்டே அவர்களையும் இந்துமதத்திற்குள் அடக்கிக்கொண்டு கூடவே ஆதிக்க சாதி வெறி கொண்டு அவர்களைத் துன்புறுத்திக் கொலை செய்வது என்ற கதை இன்னும் தொடர்கிறது.

  தலித்துக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என்பதற்கு அவர்களின் தலைமைகளே சிறந்த உதாரணங்களாகின்றனர். இவர்கள் கம்யூனிஸ்டாக மாறும் போது மட்டுமே சாதித்தீண்டாமையை ஆணிவேரோடு ஒழிக்க முடியும்.

  அடுத்ததாக காவல்துறையில் மேலாதிக்கம் செலுத்துவதும் இதே ஆதிக்க சாதியினர் தான். ஒட்டுமொத்த அரசு எந்திரமும் சாதிவெறி மற்றும் அதைப்பாதுகாக்க இந்துமதவெறி என்று இரண்டாக இருக்கும்போது, இரண்டையும் ஒரு சேர எதிர்த்தால் தான் வெற்றிபெற முடியும். வெறும் சாதியை மட்டும் எதிர்ப்பது, திருமா, கிருஷ்ணசாமி, ராம்விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்ற பிழைப்புவாதிகளையே உருவாக்கமுடியும்.

 3. இந்தப் காவிக் காமவெறி பொறுக்கி மணிகண்டனின் புகைப்படத்தை வெளியிட்டால், ஒருவேளை அவனைக் காணும் பட்சத்தில் அவனை அனுப்பி வைக்க ________உதவும்….

  • காவிக்கும்பல்கள் அனைத்தும் பொறுக்கி கும்பல்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.

   இதனை அம்பலபடுத்த வேண்டிய ஊடகங்கள் மொவுன சாமியாராகி விட்டன. இன்றைய தினத்தந்தியில் ஜல்லிக்கட்டு பற்றியும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பற்றியும் தான் முழுக்க செய்திகள். அப்புறம் ஊறுகாய் போல கள்ளகாதல் பற்றி சில செய்திகள்….

 4. நல்லவன், நேர்மையானவன்,ஒழுக்கமானவன்,ஊழலுக்கு அப்பாற்பட்டவன், நியாயமானவன்.சட்டம் ஜனநாயகத்தை மதித்துக் கடைபிடிப்பவன்,சமூக சேவகன் என்றெல்லாம் ஊடகங்களில் பரப்பும் ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் சேர்க்கும் உறுப்பினர்களின் அடிப்படைத் தகுதி கேடி கிரிமினல்.அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மது,மாது,கஞ்சா போதை,பணம்,காவல்துறையில் செல்வாக்கு.இதைத் திரை மறைவிலிருந்து ஏற்படுத்திக்கொடுப்பவர்கள் வெளிப்படையாகத் தங்களை ஆர்.எஸ்.எஸ். வார்ப்பு என்று சொல்லிக்கொள்ளும் பெரிய்ய்ய மனிதர்கள்.அவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை அப்பட்டமான பாசிசக் கொடுங்கோன்மை.புராண காலத்திலிருந்து இன்றுவரை அப்படித்தான்.2002 -ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையையும் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி கூட்டுப்பாலியல் படுகொலையையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.தமிழ் மண்ணை விழுங்க மோடி கடைபிடித்து வரும் ஒரே வழிமுறை கண்மூடித்தனமான ஒடுக்குமுறை- அனைத்துத் தரப்பினர் மீதும்.இது தமிழ் சமுதாயத்துக்குத் தெரிய வேண்டும்.ஆனால் ஊடகங்கள் அவர்களை சாந்த சொரூப மித்ர பரிபாலன புண்யாத்மாக்கள் என்று சொல்லவேண்டும்.இது தான் சங்கப் பரிவாரங்களின் அஜெண்டா.வா தமிழா!வணக்கம் தமிழா!வா நண்பா!தூய்மை இந்தியா! நில் இந்தியா! நட இந்தியா! படு இந்தியா!பாழாப் போச்சு இந்தியா!!

 5. இது போன்ற பாலியல் வன்கொடுமையின் குற்றவலிகளை கண்டிங்க கடுமையான. சட்டம் வரவேண்டும் அதுவும் மக்கள் அனைவரும் பார்க்கும் படி மிக கொடுமை யாக இருக்க வேண்டும் .ஒவ்வொருக்கும் அந்த சட்ட.தின் மேல் பயம் வேண்டும் இறங்கம் இல்லாதவன் இடம் இறங்கம் காட்டுவது ஞாயம் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க