Thursday, February 25, 2021
முகப்பு செய்தி நேரலை நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates

நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates

-

jallikattu vinavu live 1மோடி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜல்லிக்கட்டு மூலமாக கிளர்ந்தெழுந்திருக்கிறது தமிழகம். நான்கு நாட்களாக கடற்கரையில், ரயில் நிலையங்களில், அலுவலக வாயில்களில் உறுதியுடன் தொடர்கிறது போராட்டம். ஒவ்வொரு கணமும் போராட்டக்களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முழக்கங்கள், கவிதைகள், கோபங்கள், காட்சிகள் உதித்துக் கொண்டே இருக்கின்றன.

மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி விட்டனர். தமிழ் மக்களை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய பார்ப்பனியம், ஒடுக்கிய மோடி அரசு இங்கே எண்ணிறந்த முறையில் செருப்படி பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் ஆட்டம், பாட்டம், முழக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்னார்வத் தொண்டர்கள், உணவையும் – நீரையும் கேட்காமலேயே பகிரந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து வட இந்திய ஊடகங்களே கண்களை விலக்க முடியாமல் திகைத்து நிற்கின்றன.

கடற்கரையில் காளை மாட்டு கொம்பு விளக்கை சூடிய தலைகள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டன. இது தேவ அசுரர் யுத்தம். நூற்றாண்டுகளாக தொடரும் கோபம்.

ஒரு காளை மாட்டை கூட அடக்க முடியவில்லையா என்ற அந்த கோபம், பணமதிப்பிழப்பு, காவிரி நீர் உரிமை, கல்வியில் தனியார்மயம், வேலையின்மை என்று பல்வேறு பிரச்சினைகளில் ஏமாற்றப்பட்ட அவலங்களை புதைத்து விட்டு ஆவேசமாய் எழுந்திருக்கிறது.

 • ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு.
 • தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது.
 • முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
 1. Please this guys comment on this Nagarkoil Aravindan Neelakandan Pillai’s article
  https://www.vinavu.com/2017/01/20/live-updates-tamilnadu-jallikattu-vs-delh/#tab-comments

  Avatar
  Vijayaragavan Chakrapani • 8 hours ago

  Excellent article, Aravindan Anna !

  As a person born in Kaveri delta, I too support Jallikattu, for its cultural, ecological and social relevance. But as you rightly said, everyone is missing one very important point , which is also being overlooked by govt and media during this agitation.
  These youth who shout anti-India, anti national party slogans are our future voters in Tamil Nadu. All those nationalists, and patriotic Tamils who live now, are probably 45+, and will die in next 20 years. Tamil population between 30-45 are busy running behind money, unaware of their cultural values.
  Youth between 15-25 are now being misguided by separatists, with an alternate version of TN history, that challenges the very sovereignty of our nation.
  To be blunt, we are in danger of electing someone as idiotic as Seema/ Naam Tamilar in future.
  This is the reality. It is time Govt Of India wakes up. This might pave way as a spark for a secession movement sometime in future. None of us would want TN to turn into another Kashmir.
  During Dravidian secession movement struggle, there were no social network to spread false ideologies this fast. Also there was this one bold leader against anarchy, Mrs.Indira Gandhi.
  But now, or sometime in future, if any such protests pops up, can any Indian PM tackle it ?
  It is time the Indian Govt strategically starts eliminating Tamil nationalist leaders.

  Please read the last 10 lines. He wants to eliminate young Tamizh leaders. Please share this to as many people as possible.

  • இவினுங்க பேடி பயலுக யாராவது போராடும்போது தான் வருவானுங்க இவனுங்க அரசியலே அதான்

  • சீமான் அய்யா அவர்களை போராட்டத்தில் சேர்க்கவில்லை என்று கேள்விபட்டேன் அது உண்மையா ?

 2. நிலப்பிரபுத்துவகாலத்தின் சாதி ஆதிக்கத்தி்ல் எழுந்தது தான் இந்த ஏறு தழுவல் என்று RSS பானியில் பேசிவிட்டு இன்று என்ன பசப்பு வேலையா யாரை ஏய்க்க இந்த வாய் சவடால் அப்பகூட நீ தமிழகத்தில ஒன்னும் செய்யமுடியாது.

  • ஏறுதழுவுதல் என்ற ஜல்லிகட்டு விளையாட்டு நிலபிரபுத்துவ சமுகத்து நிகழ்வு என்று வினவு கூறியது என்பது உண்மை தான். அந்த கருத்தும் உண்மை தான். அத்தகைய விளையாட்டை இன்று தமிழ் மக்கள் அனைவரும் வேண்டும் என்று கூறி போராடும் நிலையில் அந்த போராட்டத்தை ஆதரிக்காமல் இருபது என்பது தான் தவறே தவிர ஆதரிப்பதில் என்ன தவறு உள்ளது? விவசாயத்துக்கு உதவும் காங்கேயன் காளைகள் எண்ணிக்களை கடந்த 30 ஆண்டுகளில் 15 இலச்சத்தில் இருந்து வெறும் ஒரு இலசமாக குறைந்து உள்ள இன்றைய நிலையில் அது சிறு மற்றும் குறு விவசாயிகளை விவசாய பணிகளுக்கு இந்த அருகிவரும் நிலை பெரிதும் பாதித்து உள்ளது என்ற பின்னணியில் இந்த விசயத்தை பாருங்கள்….

   ஜல்லிகட்டு இதுவரையில் “வாடிவாசலில் வெளிவரும் மாமன் வீட்டு காளையை மச்சான் பிடிக்கும்” சாதி ரீதியான விளையாட்டு தான் என்ற நிலையில் இந்த தமிழகம் தழுவிய போராட்டத்துக்கு பின்னும் அது சாதி ரீதியாக தான் இருக்குமா அல்லது அனைத்து மக்களுக்குமான பொதுவான விளையாடாக உருவெடுக்குமா என்று பொருத்து இருந்து தான் பார்கவேண்டும்… இதற்கு-ஜல்லிக்கட்டில் சாதியை நீக்குவதற்கு இலக்கியன் தான் நேர்மையாக பதில் அளிக்கவேண்டும் உத்திரவாதம் கொடுக்கவேண்டும் …!

   • கி.செந்தில்குமரன்,
    தமிழக மக்கள் வாக்களிக்கும் அரசியலை ஏற்றுக்கொண்டு தேர்தலில் பெரும்பாலோனோர் வாக்களிக்கிறார். அதற்காக வினவு வாக்கு அரசியலை ஏற்று கொள்கிறதா. ஜல்லிக்கட்டை எதிர்த்து கட்டுரைகள் எழுதிவிட்டு இப்போது நாங்களும் போராடுகிறோம் என்பதுபோல காட்டவேண்டிதன் நோக்கமென்ன. நீங்கள் கூறும் காங்கேயம் காளைகளை வைத்து விவசாயம் செய்வதைவிட டிராக்டர் மூலம் அதிக விளைச்சல் எடுக்கலாம் என்பது போன்ற உற்பத்தி பொருளாதாரத்தை ஆதரிக்கும் வினவு தற்போது ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் நோக்கத்தை தாங்கள் தான் விளக்கவேண்டும். உண்மையில் வினவின் இந்த இரட்டை வேடத்தைவிட நடிகர் விஜய் யாருக்கும் தெரியாமல் மெரினாவில் மாணவர்களின் போராட்டத்தில் நின்றது பாராட்டப்படவேண்டியது.

    • வினவு இன்று ஜல்லிக்கட்டில் உள்ள சாதி அரசியலை பற்றிய அதன் முந்தைய விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு தான் தமிழ் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் ஜல்லிகட்டை ஆதரிக்கின்றது… வினவின் இந்த ஜல்லிகட்டு ஆதரவு என்பது தமிழ் மக்கள் சாதியத்தையும் மீறி ஒருங்கிணைவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்டையில் தான்…. இனி வினவின் ஆதரவு பொருள் உள்ளதாக இருக்குமா இல்லை ஜல்லிகட்டு என்பது இனியும் “மாமன் வீட்டு காளையை மச்சான் பிடிக்கும்” சாதிய விளையாட்டாக தான் இருக்குமா என்று தமிழ் மக்கள் தான் தங்கள் செயல் மூலம் பதில் அளிக்கவேண்டும்… மேலும் வினவின் பழைய கட்டுரையில் நான் முக்கிய கருத்தாக கொள்வது என்னவென்றால்……..

     தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு ஆதரவின் பின்னுள்ள சாதி ஆதிக்கத்தை எந்த அளவுக்கு அம்பலப்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு, அதைவிட இன்னும் அதிகமாக ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும். ஏனென்றால், முன்னவர்களை விட இவர்களது அரசியல் மிகவும் ஆபத்தானது.

     -vinavu.com
     https://www.vinavu.com/2016/02/05/jallikattu-alternative-view/

    • தமிழ் நாட்டின் இலச்ச கணக்கான இளைஞர்கள் சாதி பேதம் இல்லாமல் தான் இந்த ஏறு தழுவுதல் என்ற ஜல்லிகட்டை ஆதரித்து போராடிகிட்டு இருக்காங்க…. நிலமை அப்படி இருக்க ஒரு குறிப்பிட சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஜல்லிகட்டு நடைபெற்றது என்றால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவும் பொருளற்றதாக தான் போகும்… போராட்டத்தின் முழுமையான வெற்றி என்பது எப்படி நிரந்தர சட்டத்தில் மட்டுமே சாத்தியமோ அதுபோன்றே அனைத்து சாதி மக்களும் ஜல்லிகட்டில் கலந்துக்கொள்ள சமுதாயத்தில் அனுமதி-ஆதரவு கிடைத்தால் தான் என்னை பொறுத்தவரையில் அது முழுவெற்றி என்பேன்…

 3. திரளும் கூட்டம் ஜல்லிகட்டு என்ற விளைய்யாட்டிற்க்காகத்தான் என்று நினைப்பது பேதமை.மாநிலம் முழுக்க மக்களின் எழுச்சி மத்திய மாநில அரசுகள் மற்றும் அரசியல் அரசியல்வாதிகளின் கயமை தனங்களால் உண்டான எரிச்சலும் தங்களின் அடையாளத்திற்க்கும் உரிமைக்கும் உண்டான போராட்டமாகவும்தான் இருக்கிறதே தவிர ஜல்லிகட்டு என்பது அதன் புள்ளியாக ஒரு சாக்காகத்தான் இருக்கிறது.நேற்று முழுக்க காந்திசிலை அருகே நின்று பல மாணவர்களோடு கலந்துரையாடினோம்.மிகத்தெளிவானதாகவும் தொலைநோக்கானதாகவுமே அவர்களின் கருத்துகள் இருந்தது.வெறும் உணர்ச்சியால் உந்தப்பட்டவர்களும் இருந்தார்கள்.நான் சந்தித்த வரைக்கும் இளைஞ்சர்களின் கருத்தும் எண்ணமும் நெகிழ்ச்சியூட்டுவதாகவே இருந்தது.பீட்டாவை வெறுக்கும் அளவிற்க்கு பெப்ஸியையும் கோக்கையும் வெறுக்கிற அவர்களின் நிலைப்பாடு,நிச்சயம் நம்பிக்கையை ஏற்ப்படுத்துகிறது.பல்வேறுவகையான அதிருப்தியோடும் குமுறலோடும் இருந்த மக்கள் திரளுவதற்க்கு வாய்ப்பில்லாமல் தவித்த நிலையில் இந்த ஜல்லிகட்டு வாராதுவந்த வரமாய் வாய்த்ததில் கிளர்ந்து எழுந்து விட்டார்கள்.இதை வெறும் ஜல்லைகட்டுக்கான திரட்சி என்று நினைத்து ஆதிக்க சாதி வர்க்கம் தன் சாதி திமிரை காட்ட நினைத்தால் கண்டிப்பாய் இளைஞச்ர்கள் வேறு வடிவம் எடுக்கத்தான் செய்வார்கள்.எடுக்க வேண்டும்.நான் பார்த்தவரையில் என க்கு அந்த நம்பிக்கை துளிர்த்தது.நடக்கும் இன்ஷாஅல்லா

 4. ஜல்லிகட்டு என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல! சுய சார்புள்ள விவசாய பொருளாதாரத்திற்கு ஆணிவேர்! உழவன்,மாடு,நிலம்,நீர் சார்ந்த பொருளாதாரமே மனிதனின் அடிப்படை நாகரிகம்! நாடோடியாய் வேட்டையாடி திரிந்த காலம் காட்டுமிராண்டிகாலம்! நிலத்தை மாடுகளின் துணையோடு உழுது, அணைகட்டி நீர் மேலான்மை செய்து நாகரிகத்தில் உச்சியில்நின்ற சமூதாயம், வேதிய பார்பனர்கள் வருகையால், சோம பானம், சுராபானத்திற்கு அடிமையாகி, மாற்றார் தூண்டுதலால் சகோதர யுத்தத்தில் ஈடுபட்டு அழிந்து வருகிறது! மொக்ன் சோ தாரா முதல் இன்று வரை இதுதான் சரித்திரம்! அன்று ‘இந்திரன்’ அணைகளை உடைத்து விவசாயத்தை அழித்தான்; மக்கள் ஊர், புரங்களை துறந்து தெற்கே ஏகினர்; தொடர்ந்து வந்தது ஆரிய கூட்டம்! உழவுத்தொழிலை இழிதொழிலென்றது வேதம்; உழவனை இழிவு செய்கிறது ஆரியம் சார்ந்த ‘இந்து’ மதம்! மத்தியிலும், மானிலத்திலும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது! தொடர்ந்த விழிப்புணர்வு தேவை!

 5. இப்போது விவ்சாயியின் நிலைமை கவலைக்கிடம்! தொடர்ந்து வந்த மக்கள் விரோத ஆட்சியாளர்கள் விவசாய திட்டங்களுக்கு முன்னுரிமை தராமல் , சுரண்டல் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால், நாட்டின் வளமை சுரண்டப்பட்டு வெளினாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது!

  அரேபிய எண்ணை வளத்தை சுரண்டவே , அரபுநாடுகள் சர்வாதிகாரிகளால் ஆட்டுவிக்கப்படுகிறது! உலகிலேயே சீனத்திற்கு அடுத்த பெரிய ‘எண்ணைநுகரும்’நாடாகிய இந்தியாவும் சர்வாதிகார பாதையில் சென்று அமெரிக்க மேலாண்மைக்கு பட்டுக்கம்பளம் விரித்துவிட்டது!

  விவசாயிகள் மன்சாண்டொ முதலிய பன்னாட்டுநிறுவனங்களை இப்போது அடையாளம் கண்டுவிட்டார்கள்!நமது ‘ஜனனாயகத்தை’ கேலி கூத்தாக்கும் ‘திரைமறைவு’ ஆட்சியாளர்களை அடையாளம் கண்டுகொண்டால் தீர்வு எளிதில் கிடைக்கும்!

  இந்திய சுதந்திரம் ஆங்கிலேயரை வெளியேற்றியது என்னவோ உண்மைதான்; ஆனால் தொடர்ந்து ‘பெட்ரொல் பொருளாதாரத்தை’ உருவாக்கி , அமெரிக்க சார்புநாடாக மாற்றியது தான் உண்மை!

  கம்பியூடர் மனிதவளத்திற்கு மெருகூட்டும்! ஆனால் தொடர்ந்த வேலை வாய்ப்பு அற்று போகலாம்!

  டிராக்டர் விவசாயியின் வேலைப்பளுவை குறைக்கலாம்! அடுத்த பருவத்திற்கு இயற்கை உரமளிக்காது! செய்ற்கை உரமும், பெட்ரோலிய செலவும், கடன் வட்டியும் விவசாயியை வாழவைக்காது!

  ஆகவே முதல் போராட்டம்நில அபகரிப்பை எதிர்த்தும், அடுத்தகட்டம் தேவையானநீராதார உறுதியளிப்பிற்கும் , மூன்றாவது கட்டம் குறைந்தது 12 வகுப்பு வரை இலவச அரசு கல்விக்கு மாக இருக்க வேண்டும்!

 6. அய்யாமார்களே!
  நான் வினவை முழுமையாக ஆதரிப்பவன் இல்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி. பார்ப்பனர்களை எதிர்த்துவிட்டு, மூடநம்பிக்கைகளை எதிர்த்துவிட்டு ஏண்டா சிதம்பரம் கோவில் போராட்டத்தை எடுத்தீங்க என்று நீங்கள் கேட்டால் எவ்வளவு ’அறிவான’ செயலோ, அதே போன்றது தான் இதுவும்.

 7. https://swarajyamag.com/politics/the-pro-jallikattu-movement-shouldnt-turn-into-mindless-anarchy

  மேற்கோள் காட்டப்பட்டுள்ள அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் முசுலிம்களாக நடித்தவர்கள் இந்து முன்னணி ABVP யை சேர்ந்த மதவெறியர்கள் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார் தோழர்.தனசேகரன் அண்ணாமலை.

  பார்க்க,https://www.facebook.com/dhanasekaran.annamalai/posts/10208350595310697

  RSS-காலிகள் எத்தனையோ முறை பொய்யுரைத்து கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறார்கள்.ஆனாலும் திருந்தியபாடில்லை.தூ ..மானங்கெட்டவர்கள்.

  • அப்ப போலீஸ்காரர் ஜார்ஜ் கூறும் சமுக விரோதிகள் என்போர் இந்த RSS –BJP அடியாட்ட்ட்கள் தான் என்பது நிருபனம் ஆகின்றது… ஒரு பக்கம் போலிசு பொது சொத்துகளை எரிக்க மறுபக்கம் இவர்கள் (RSS –BJP) எரிக்க ….. சரியான கூட்டணி தான்… சமாஷ் ! பேஸ் பேஸ் நன்னா இருக்கு அப்பிகளா!

  • இது அவர்களுக்கு புதிதா என்ன ? பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார்களே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க