Tuesday, January 19, 2021
முகப்பு செய்தி மாணவர்களை காக்க உடனே மெரினாவுக்கு வாருங்கள்

மாணவர்களை காக்க உடனே மெரினாவுக்கு வாருங்கள்

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே

மெரினா கரையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கின்றனர். இருப்பினும் போலீசாரின் ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் கடலுக்குள் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா ராஜிவ் காந்தி சாலையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்நிலையை மீறி பட்டினப்பாக்கம் கடல் வழியாக மாணவகளை காக்க மக்கள் நூற்றுக்கணக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். எனவே இச்செய்தியை பார்க்கும் சென்னை மக்கள் எவ்வளவு நபர்களை திரட்ட முடியுமோ திரட்டிக்கொண்டு மெரினாவுக்கு விரைந்து வாருங்கள்.

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இதே போன்று வன்முறையாக கலைப்பாதாக செய்திகள் வருகின்றன. கோவை, மதுரையிலும் போலிசார் இதே போன்று வன்முறையை அரங்கேற்றி மாணவர்களை கலைத்தனர். அதை மீறி அங்கேயும் மக்களும் மாணவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  அங்கேயும் இதே போன்று திரண்டால் மாணவர் போராட்டத்தை காக்க முடியும்.

வேடிக்கை பார்க்கும் தமிழகமே வீதிக்கு விரைந்து வா!

 1. எங்கே போய் விடப்போகிறது இந்த
  அதிகாரவர்க்கமும், ஆளும் கட்சியும்!
  கிடைந்த தற்காலிக வெற்றியை கொண்டாடி
  பிரிவோம்…. நிரந்தரசட்டம் இரண்டு மாதத்தில்
  நிறைவேற்றாவிட்டால்
  மீண்டும் இணைவோம்….

  • உங்கள இணைய விட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பான். இனி எப்படிப்பட்ட சட்டங்கள் எல்லாம் கொண்டு வருவான் என பொறுத்திருந்து பாருங்கள்.
   தற்காலிக வெற்றி அல்ல .. நிரந்தர ஏமாற்று. இதை வெற்றி எனக் கொண்டாடுவது அறிவீனம்.
   என்ன ம**க்காக மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு ஒரு வாரத்திற்கு தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு கேட்டது ? அதற்கு எதுவுமே சொல்லாமல் உச்சிகுடுமி மன்றம் அதை ஏன் ஏற்றுக் கொண்டது ?.

   அது கூட்டத்தைக் கலைப்பதற்கான கண் துடைப்பு நடவடிக்கை. கூட்டம் கலைந்ததும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பிலே இந்து, இந்தியப் பீயை காகிதத்தில் வடித்துக் கொடுக்கும். தமிழன் நக்கிக் கொண்டு போக வேண்டும்/

   • அன்னியன், உங்கள் எச்சரிக்கை உணர்வை மதிக்கின்றேன்…. அதே நேரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் 9 வது அட்டவணையில் இந்த சட்டம் சேர்க்க படவேண்டும் அல்லவா? அப்போது தானே இந்த சட்டம் நிரந்தரமாக செல்லுபடியாகும்…அதற்கான நேரத்தை இரண்டு மாதங்களை நாம் அவர்களுக்கு-ஆளும் வர்கத்துக்கு அளிப்போம்…. அந்த நேரம் காலாவதி ஆகும் தருணத்தில் மீண்டும் போராடுவோம்… மீண்டும் யாராவது இந்த சட்டத்துக்கு எதிராக தடை ஆணையை நீதி மன்றத்தில் வாங்கினால் அந்த நேரத்தில் ஒரு வேலை மாணவர்களை மீண்டும் இணைக்க முடியவில்லை எனில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வராமலா போய்விடும்? அப்போது மக்கள்-மாணவர்கள் மீண்டும் போராடாமலா இருப்பார்கள்?

    தற்போது உள்ள நீதிமன்ற வழக்கில் களைகளை காட்சி பொருளில் இருந்து விடுவிக்க நமக்கு சாதகமாக தான் பதில் வரும் என்று நினைகின்றேன்… காரணம் அந்த வழக்கை கையாளும் நீதிபதி அவர்கள் திருமதி பானுமதி அவர்கள்…. சென்னை உயர் நீதி மன்றத்தில் சிதம்பரம் கோவில் வழக்கில் தமிழ் நாடு அரசுக்கு சாதகமாக தீர்பு அளித்தவர்… Now Ball is on their Cort….. let them play ! WE wait for their reaction….

    • அதே பானுமதிதான் அவர்கள் தான் தமிழ்நாடு உயர்நீதி மண்ற நீதிபதியாக இருந்தபொழுது ஜல்லிக்கட்டுகு எதிரான தீர்ப்பு வழங்கியவர் என்று அறிகிறேன். உண்மையா?

     • ஆம் நீங்கள் கூறுவது உண்மைதான் பிரசாத்…. திரு பானுமதி அவர்கள் தான் ஜல்லிக்கட்டு வழக்கு தமிழகத்தில்(சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற போது) நடைபெற்ற போது அப்போட்டிக்கு தடை விதித்தார்…. 2005-ல் ஜல்லிக்கட்டில் பலியான ஒருவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்தார். 2006-மார்ச் 29-ல் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவரான கே.முனுசாமி தேவர் என்பவர் ரேக்ளா ரேஸ் நடத்த வேண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.

      இந்த இரண்டு ரிட் மனுக்களும் நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தன. கோரிக்கையோ ‘ரேக்ளா ரேஸை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்பது. ஆனால் நீதிபதி பானுமதியோ, சம்பந்தமே இல்லாமல் ‘ரேக்ளா ரேஸ் பந்தயங்களை எப்படி அனுமதிக்கலாம்…? இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திற்கு எதிரானது இந்தப் போட்டிகள். எனவே ரேக்ளா ரேஸ், எருது ஓட்டப் பந்தயம் மற்றும் ஜல்லிக் கட்டு ஆகியவற்றை தடை செய்வதாக’ திடீரென்று அறிவித்தார்.

      இது தொடர்பான வழக்கு மீண்டும் இப்பொது உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அவரை இந்த வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விடுவித்து விட்டார்…

 2. வேடிக்கை பார்க்கும் தமிழினமே வ்விதிக்கு வாருங்கள் என கோவை மாணவர்கள் ஆற்றாமையுடனும் வீங்கிய கண்களுடனும் மக்களை நோக்கி அழைத்தனர். ஆனால் அவர்களை கண்டு கொள்ள யாரும்தான் இல்லை. எல்லோரும் பைக்கில் பறந்துகொண்டிருந்தனர். இங்கே சென்னையில் மாணவர்களுக்கு ஆபத்து என்ற உடன் மீனவ மக்கள் ஓடோடி வந்தனர். உணவுகள் கொடுத்தனர். இதுதான் உழைக்கும் மக்களின் பண்பு.

 3. ஒருபெரும் மக்கள திரள் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்க வைத்த மனித பேரலை.அவர்களின் கட்டுப்பாடும் கண்ணியமும் கடல்கள் தாண்டி கவனம் ஈர்த்தது.அவர்களின் ஒழுங்கையும் ஒற்றுமையையும் பாராட்டாத வாய்களே இல்லை.அப்படிப்பட்ட கூட்டத்தையே இவ்வளவு மிருகத்தனமாய் கலைக்க முடிகிறதென்றால் சதாரண பின்புலமில்லாத அப்பாவி குடிமகனை இந்த காவல் வெறிநாய்கள் எப்படி அணுகும்?அவனுக்கு என்ன நீதி இந்த நாய்களிடம் கிடைக்கும்?ஒரு சிறு துளியாவது இவர்களிடம் நம்பிக்கை சுரக்குமா?ஆளும் கூட்டம் கடித்து வரச்சொல்லி விட்டதென்றால் குதறி எடுப்பதுதான் இந்த நாய்களின் வேலை என்றால் இதுகளை நம்பி சட்டம் ஒழுங்கு!?நாய்களா…சட்டத்தையும் ஒழுங்கையும் ஆறு நாட் களாக கண்ணாக காத்தவர்களின் கால்களை நக்கி பாடம் படிங்கடா…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க