privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2

நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2

-

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட் – 2

லையில் காவித் துண்டு கட்டிய சிறு கும்பல் அந்த மேடையின் அருகில் பெரும் கூச்சலோடு நிற்கிறது. ஒவ்வொருவரின் நெற்றியிலும் செந்தூரத் தீற்றலும், வாயில் டாஸ்மாக் சரக்கு வாடையும் தூக்கலாக இருக்கின்றன. அந்த வாய்களில் வழிந்த மட்டமான சாராய வாடைக்கு இடையே அவ்வப் போது பாரத மாதாவும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேடையில் இவர்களை உற்சாகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தான் அவன். அந்த நேரம் பார்த்து மேடைக்கு சற்றுத் தொலைவில் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்று கொண்டிருந்தார் ஒரு கருப்புச் சட்டைக் காரர்.

“டேய்… போடா போ… என்னிக்கு இருந்தாலும் உன்னோட நெஞ்சுல கடப்பாறையை விட்டுச் சொருகப் போறது நான் தாண்டா” என கருப்புச் சட்டையைப் பார்த்து மேடையிலிருந்தவன் மைக்கின் வழியே கூச்சலிடுகின்றான். கருப்புச் சட்டைக்காரர் ஒரு கணம் துணுக்குற்றுப் போகிறார்; அக்கம் பக்கத்திலிருந்த மக்களோ அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் எவருக்கும் எதிர்த்துக் கேட்கத் தோன்றவில்லை பயம்.

மக்களின் இந்தப் பயமும், ‘நமக்கேன் வம்பு’ என ஒதுங்கிச் செல்லும் குணமும் தான் மேடையில் நின்ற ரவுடியின் மூலதனம். அந்த மூலதனத்தின் விளைவு தான் சிறுகடம்பூர் நந்தினியின் பச்சைப் படுகொலை.

அந்த ரவுடி – ராஜசேகரன். இந்து முன்னணியின் அரியலூர் மாவட்டச் செயலாளர்.

Letter
ராஜசேகரனால் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தி.க பிரமுகர் முத்தமிழ்செல்வன் அளித்த புகார் கடிதம்

ராஜசேகரனால் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தி.க பிரமுகர் முத்தமிழ்செல்வனைச் சந்தித்தோம்.

“அவன் மேடையில் பகிரங்கமா கொலை மிரட்டல் விடுத்தது இப்ப ரெண்டு மாசத்துக்குள்ளே நடந்த விசயம் தான். உடனே நான் போலீசிலே புகார் கொடுத்தேன். இப்ப வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லெ” என்றார்.

“அரியலூர் மாவட்டம் திராவிட இயக்கங்கள் வலுவாக இருந்த பகுதி. அப்பேர்பட்ட ஒரு மாவட்டத்தில் இந்து முன்னணி வளர்வதை எப்படி அனுமதித்தீர்கள் தோழர்? ”

“அவனைச் சுற்றி எப்போதும் பத்துப் பதினைந்து ரவுடிகளை வைத்திருப்பான் தோழர். எல்லோரும் இருபதுல இருக்குற இளைஞர்கள். கஞ்சா, சாராயம், விபச்சாரம் என அந்த இளைஞர்களை சீரழித்து வைத்துள்ளான். அவங்களுக்கு எதிரா எங்களால பிரச்சாரம் மட்டும் தான் செய்ய முடிகிறது; இந்து முன்னணிகாரங்களுக்கு போட்டியா நாங்களும் கஞ்சா வாங்கிக் குடுத்து இளைஞர்களை கவர முடியாதே?”

தி.க, முற்போக்கு அமைப்பினர் மட்டுமின்றி பொதுவான வேறு சிலரிடம் பேசிப் பார்த்த போது இந்து முன்னணி அமைப்பைக் கட்டும் ரகசியம் நமக்குப் பிடிபட்டது. இவர்களுக்கு நந்தினியின் கொலையில் மட்டுமின்றி வேறு பல குற்றச் சம்பவங்களிலும் தொடர்பிருப்பதோடு எதிர்காலத்தில் இன்னும் பல கொலைகளையும் கூட்டு வல்லுறவு செய்யும் மிருகங்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள். இவர்களைப் புரிந்து கொள்வதே தமிழ்நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக இந்த பார்ப்பன பயங்கரவாத கும்பலை வேரறுப்பதற்கான முதல் படி.

சுமார் பத்துப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் ராஜசேகரன் ஒரு சில்லரைக் கிரிமினல்; போலீசால் அறியப்பட்ட சிறு ரவுடி. அது தான் அவனது அடையாளம். ஒரு கட்டத்தில் விசாரணை வழக்குகள் அதிகரிக்கவே போலீசுக்கு அஞ்சி ஊரை விட்டு சென்னைக்கு ஓடியிருக்கிறான். ஏ.சி மெக்கானிக் படித்திருந்த ராஜசேகர், சென்னை சிறிய அளவில் குளிர்சாதன இயந்திரங்கள் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளான். அந்த சமயத்தில் அவனுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியின் அறிமுகம் கிடைக்கிறது.

பெரியார் இயக்கங்களின் தாக்கத்தில் இருந்த அரியலூரில் தற்போது அவ்வியக்கங்கள் வீரியமிழந்து போயுள்ளன. அதே போல மார்க்சிய லெனினியப் பாதையிலிருந்து விலகி, குறுக்கு வழி புரட்சிக்கு முயன்ற குழுக்களும், கட்டப்பஞ்சாயத்து குற்றக் கும்பல்களாக சீரழிந்திருந்தன. இதனால் ஏற்பட்ட இடைவெளியில் பாமக வை ஆளும் வர்க்கம் திட்டமிட்டே வளர்த்தது.

Manikandan
இந்து முன்னணி பிரசுரத்தில் மணிகண்டனின் பெயர்.

சாதி அரசியல் இளைஞர்களை கணிசமாக ஈர்த்திருந்தாலும், பெரியார் இயக்கம் மற்றும் இடதுசாரி அரசியல் மரபின் தாக்கம் காரணமாக, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் அரியலூருக்குள் ஊடுருவுவது சவாலாகவே இருந்துள்ளது. இந்த மாவட்டத்தைக் கபளீகரம் செய்யத் தகுந்த தருணத்தையும் தளகர்த்தரையும் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காவிகளுக்கு ராஜசேகரன் பொருத்தமான தேர்வாக தெரிந்ததில் எந்த வியப்புமில்லை.

சென்னையில் தமக்கு அறிமுகமாகும் ராஜசேகரனிடம் அரியலூரில் இயக்கத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்து அவரை ஊருக்கு அனுப்பி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மற்ற கட்சிகளுக்கும் இந்து முன்னணிக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. அங்கெல்லாம் கட்சியில் சேர்ந்து ஒரு ஆளான பின்னர் ரியல் எஸ்டேட், கட்டபஞ்சாயத்து, ரவுடித்தனம் என வளரும் வாய்ப்பு உள்ளது. இந்து முன்னணி மற்றும் சங்க பரிவாரம் சார்ந்த அமைப்புகளில், ஏற்கெனவே தொழில்முறை ரவுடிகளாகவும் கிரிமினல்களாகவும் இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து பதவிகள் வழங்கப்படுகின்றன.

காலித்தனமும் கலவரமும்தான் இங்கே கட்சிப்பணி என்பதால், அதற்குப் பொருத்தமானவர்களை அந்தப் பதவிகளில் அமர்த்துகிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல்.

இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அரியலூர் திரும்பும் ராஜசேகரன் உடனடியாக தனது “கட்சிப் பணி”களைத் துவக்குகிறான். பொன்பரப்பி வட்டாரத்தில் உள்ள இரண்டு கிருஸ்தவ வழிபாட்டு நிலையத்தைத் தாக்கி உடைத்தது மற்றும் இசுலாமிய மசூதிகளில் பாங்கு ஒலிக்க கூடாது என தகராறு செய்தது என தனது பெயரை மக்களிடையே பதிய வைக்கிறான். அதோடு எந்நேரமும் தன்னைச் சுற்றி சில்லறை ரவுடிகள் கொண்ட பட்டாளம் ஒன்றையும் திரட்டுகிறான். இந்த ரவுடிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் தான் நந்திதினியைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்ற மணிகண்டன், மணிவண்ணன் உள்ளிட்டவர்கள்.

தன்னைச் சுற்றி இருந்த கிரிமினல் கும்பலின் பராமரிப்புச் செலவை ராஜசேகரன் ஈடுகட்டியது எப்படி?

சென்னையிலிருந்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கி அரியலூர் திரும்பிய அதே நேரம் அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திரங்களைப் பழுது பார்த்து பராமரிக்கும் காண்டிராக்ட் ஒன்றும் ராஜசேகரனுக்குக் கிடைக்கிறது. தனது நிறுவனங்களின் காண்டிராக்ட் வேலையை ஒரு லோக்கல் ரவுடியை நம்பி டால்மியா கொடுத்ததெப்படி?

அரியலூரியில் இயக்கத்தைக் கட்டும் பொறுப்பை ராஜசேகரனுக்கு வழங்கிய இந்து முன்னணி மாநில தலைமை, டால்மியா நிறுவனங்களின் ஆடிட்டராக உள்ள குருமூர்த்தியின் (துக்ளக் ஆசிரியர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரான சுதேசி ஜாக்ரன் மன்ச்சின் முக்கிய தலைவர்) சிபாரிசு மூலம்தான் டால்மியா காண்டிராக்ட்டை ராஜசேகருக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. இந்த விவரத்தை நாம் சந்தித்த பலரும் கூறினர். பல நிகழ்ச்சிகளில் சங்க பரிவாரத் தலைவர்களுடன் ஒரே மேடையில் ராஜசேகர் பங்கு பெற்றுள்ளதையும் கூறினர்.

குளிர்சாதன இயந்திரங்களின் பராமரிப்பு (AMC) என்கிற பெயரில் மாதம் தோறும் சில லட்ச ரூபாய் வருமானத்துக்கு சங்க பரிவாரத் தலைமை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இது தவிர டால்மியாவில் ஏற்படும் தொழிலாளர் பிரச்சினைகளின் போது தொழிலாளர்களை மிரட்ட ரவுடி கும்பலின் துணை அந்நிறுவனத்திற்கு தேவைப் பட்டுள்ளது – ராஜசேகர் அந்த பணியையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளான் – இதற்காக கிடைக்கும் வருமானம் தனி.

இவ்வாறு ரவுடித் தொழில் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் கிடைக்கும் அளவுக்கு மிஞ்சிய வருமானம் மற்றும், இந்து முன்னணி என்கிற அமைப்பு பலத்தின் துணையோடு காவல் நிலையங்களில் செல்வாக்கை உறுதிப் படுத்திக் கொள்வதன் மூலம் தனது ரவுடித்தனத்துக்கு கிடைக்கும் பாதுகாப்பு ஆகியவற்றின் துணையோடு தான் அரியலூரில் இந்து முன்னணியை கட்டியுள்ளான் ராஜசேகர். கடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்ட பொன்பரப்பி வட்டாரத்தில் இந்தாண்டு ஐம்பதுக்கும் அதிகமான சிலைகளை ராஜசேகர் நிறுவியுள்ளான்.

டால்மியாவில் வேலை வாங்கிக் கொடுப்பதாக இளைஞர்களை வசியப்படுத்தும் ராஜசேகர், தன்னுடைய வட்டத்துக்குள் அவர்கள் வந்த பின் சொந்த செலவில் கஞ்சா, சாராயம் என ஏற்பாடு செய்து கொடுத்து சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளான். நந்தினி கொல்லப்படுவதற்கு சில வாரங்கள் முன் ஆசிரியர் ஒருவரை இரவில் மறித்து தோளில் வெட்டி வழிப்பறி செய்துள்ளது மணிகண்டன், மணிவண்ணன், மணிமொழி, வெற்றிச் செல்வன், திருமுருகன் உள்ளிட்ட இந்து முன்னணி கும்பல்.

சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் பொன்பரப்பியைச் சேர்ந்த வன்னிய சாதிப் பெண் ஒருவரை இந்த கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளது. பின்னர் இது ஊர் பஞ்சாயத்தில் விவகாரமான போது ராஜசேகரே தலையிட்டு பஞ்சாயத்து பேசியுள்ளான். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு விசயத்தை அப்படியே அமுக்கியுள்ளனர்.

Raja sekar
ராஜசேகரையும், மணிகண்டனையும் கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட சுவரொட்டி

ராஜசேகரின் துணையும் இந்து முன்னணி என்கிற அமைப்பின் பின்னணியும் தமக்கிருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம், எவரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்கிற துணிவு செந்துறை இந்து முன்னணி குண்டர்களுக்கு பிறந்துள்ளது.

எந்நேரமும் வேலை வெட்டியில்லாமல் ஊருக்குள் மைனர் தனம் செய்து திரிந்த இந்த கும்பலுக்கென்று பொன்பரப்பியில் ஒரு அறையை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்துள்ளான் ராஜசேகர். வெறும் முன்னூறு ரூபாய் வாடகைக்குப் பெறுமானமுள்ள அந்த வீட்டுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகையாக கொடுக்கப்படுகின்றது. பொன்பரப்பி வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் சிலரிடம் இந்த வீட்டில் இருப்பவர்கள் பற்றியும் அவர்களது செயல்பாடு பற்றியும் விசாரித்தோம். நாங்கள் கேட்ட அனைவருமே ஏதாவது உண்மையைச் சொன்னால் தங்களுக்கு ஆபத்து வந்து விடும் என அஞ்சினர். பெயர் வெளியிடப்படாது என்கிற உத்திரவாதத்தின் பேரில் சிலர் பேச முன்வந்தனர்.

சிறீரங்கத்தைச் சேர்ந்த குணா என்கிற குணசேகரனும் ராஜா என்பவரும் இந்து முன்னணியில் முழு நேர ஊழியர்களாக அந்த வீட்டில் தங்கியிருப்பதாகச் சொன்ன பகுதி மக்கள், நந்தினியை கொன்ற மணிகண்டனும், மணிவண்ணனும் அந்த வீட்டுக்கு தினசரி வந்து போவார்கள் என்றும் தெரிவித்தனர். அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் சிலிண்டர்களைத் திருடி விற்பது, பகுதியில் உள்ள ஆடுகளைத் திருடி அடித்துத் தின்பது என சில்லறைத் திருட்டுக்களை செய்வதோடு எந்நேரமும் கஞ்சா போதையில் இவர்கள் திளைத்துக் கிடந்துள்ளனர்.

மேலும், கஞ்சா போதையோடு இரவு நேரங்களில் விலைமாதர்களை அழைத்து வந்து இரவு முழுவதும் கொட்டமடித்துள்ளனர். இவர்களுக்காக ராஜசேகரே அரியலூரில் இருந்து விலைமாதர்களை தனது வெள்ளை நிற ஜைலோ காரில் அழைத்து வருவதுண்டு என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்களின் அருவெறுப்பான செயல்களில் மக்கள் ஆத்திரமுற்று இருந்தாலும், எதிர்த்துக் கேட்டால் நம்மை ஏதும் செய்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றனர்.

நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்ட காட்சிகளைக் காணொளியாக கண்ட போது நமது நெஞ்சே அடைத்துக் கொண்டது. ஒரு மனிதனால் இந்தளவுக்கு விகாரமாக கொலை செய்ய முடியுமா என திகைத்துப் போனோம். தன்னால் கருவுற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை நண்பனோடு சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து அவளது பிறப்புறுப்பைச் சிதைத்துக் கொல்வதை ஒரு ‘மனிதனால்’ செய்ய முடியும் என்பதைக் கண்ட போது விக்கித்துப் போனோம்.

கடந்த ஓராண்டாக ராஜசேகரின் ரவுடிப் படையிலும் இந்து முன்னணியிலும் முக்கிய தளபதியாக செயல்பட்டதே மணிகண்டனுக்கு அத்தனை கொடூரமாக நந்தினியை கொல்லும் வெறியை வழங்கியுள்ளது. மத்தியில் தமது சக அமைப்பு அதிகாரத்தில் இருக்கும் தெனாவெட்டு, போலீசின் துணை, பணம், இந்து அமைப்பின் பின்னணி, சாதித் திமிர் ஆகிய அனைத்தும் சேர்ந்து சில்லறைக் காலிகளாக இருந்த இவர்களை கொலை வெறியர்களாக்கியுள்ளது.

Nandini (6)
சிதைந்த நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படும் நந்தினியின் உடல்

நந்தினியைக் கொன்ற பின் அவளது உடலை ஒரு வெள்ளை எஸ்.யூ.வி மாடல் காரில் போட்டுத் தூக்கி வந்து தான் கிணற்றில் போட்டுள்ளான் மணிகண்டன். ராஜசேகரைத் தவிர மணிகண்டனுக்கு அறிமுகமான வேறு எவரிடமும் அந்த ரக கார் இல்லை என்பதை எமது விசாரணைகளில் உறுதிப்படுத்திக் கொண்டோம். நந்தினி கொலை விவகாரத்தின் பின்னுள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வர போராடி வரும் சமூக ஆர்வலர்கள் ராஜசேகரின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்திருந்த போதும், இதுவரை அவனை அழைத்து விசாரிக்க மறுத்து வருகிறது காவல் துறை.

ஏற்கனவே பொன்பரப்பியில் நடந்த பாலியல் வல்லுறவு விவகரத்தை பணத்தால் அடித்து தீர்த்தது போல் நந்தினியின் குடும்பத்தாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என ராஜசேகர் கணக்குப் போட்டுள்ளான். ஏழைகள் தானே பணத்தை விட்டெறிந்து விடலாம் மிஞ்சிப் போனால் தனது இந்து முன்னணி செல்வாக்கை கொண்டு சமாளித்து விடலாம் என ராஜசேகர் கணக்குப் போட்டிருக்கிறான்.

நந்தினியின் கொலையில் நேரடியாக தொடர்புடைய மணிகண்டனையும் அவனது கூட்டாளிகளையும் தற்போது கைது செய்துள்ளது காவல்துறை. ஆனால், இந்தக் கொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட ராஜசேகரோ வெளியில் சுதந்திரமாக நடமாடுவதோடு மணிகண்டனைப் போன்ற கொலைகாரப் பட்டாளம் ஒன்றையும் உடன் அழைத்துக் கொண்டு திரிகிறான். நந்தினிக்கும் பொன்பரப்பியைச் சேர்ந்த அந்த பெயர் தெரியாத பெண்ணுக்கும் நேர்ந்த கொடுமைகள் வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாதெனில் உடனடியாக இந்த கும்பலைக் கைது செய்து உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை.

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து ஜனவரி 14-ம் தேதி சிறியளவில் துவங்கிய போராட்டம் ஒரே வாரத்தில் தமிழகத்தின் வீதியெங்கும் மாபெரும் மக்கள் எழுச்சியாக வளர்ந்துள்ளது. மெரினா கடற்கரையிலும் தமிழகமெங்கும் இரவு பகலாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போராடினர். ஆண்களும் பெண்களும் பெருமளவில் குழுமியிருந்தாலும் ஒரே ஒரு சந்தர்பத்தில் கூட எவ்வித பாலியல் சீண்டல்களுக்கும் பெண்கள் ஆளாகவில்லை என்பதை அகில இந்திய அளவில் ஊடகங்கள் ஆச்சர்யமாக குறிப்பிடுகின்றன – இது தமிழகம் பெற்ற கவுரவம். அதே ஜனவரி 14-ம் தேதி தான் நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது அரியலூரில் உள்ள சிறுகடம்பூர் என்கிற குக்கிராமத்தில் உள்ள பெண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத அசம்பாவிதம் அல்ல. இது தமிழகத்தின் அவமானம்.

2002 குஜராத் இனப்படுகொலையின்போது கவுசர் பீ என்ற இசுலாமியப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அதே கொடுமையைத்தான் நந்தினி என்ற “இந்து” பெண்ணுக்கும் இழைத்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள். ஆர்.எஸ்.எஸ் ஒழுக்கசீலர் சண்முகநாதனிடம் கவர்னர் மாளிகை இருந்ததால் அவர் பாழுங்கிணற்றைத் தேடி அலையவில்லை. மணிகண்டன் சண்முகநாதனைப் போல இன்னும் வளரவில்லையாதலால், குற்றத்தை மறைக்க அவனுக்கு ஒரு பாழுங்கிணறு தேவைப்பட்டிருக்கிறது.

marna periyar
சங்க பரிவாரத்தின் விஷக் கொடுக்குகளைக் கிள்ளியெறியும் மாபெரும் வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது.

பாஜக பாசிஸ்டுகள் இசுலாமியர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் இனிமேலாவது சிந்திக்கவேண்டும். ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் ஒரு முடிவுக்கு வந்த பின் நாம் காளைகளின் கொம்பைப் பிடிக்கச் செல்ல வேண்டியதில்லை; சங்க பரிவாரத்தின் விஷக் கொடுக்குகளைக் கிள்ளியெறியும் மாபெரும் வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது.

அந்தக் கடமையை நிறைவேற்றுவீர்களா என்று நம்மைக் கேட்கிறாள் நந்தினி.

(நிறைவு பெற்றது.)

– வினவு செய்தியாளர்கள்.

முதல் பாகம் :
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

 1. இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய் சாதியம் என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறைகள் தொடர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அரசும் காவல் துறையும் பல நேரங்களில் பாதிப்பை உள்ளாக்குவோருக்குச் சாதகமாக நடந்துகொள்வது. இப்படியான சம்பவங்களில் சாதி, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் போலீஸார் நீதியை வளைப்பது ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்துவந்திருக்கிறது. நந்தினி கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் தப்புவதற்கே நிறைய வாய்ப்பிருப்பதாகப் பாதிக்கப்பட்டோர் கூறுவது கவலை தருகிறது. ஒரு நல்ல அரசு, அடிப்படையில் எல்லோருக்குமான அரசாக இருக்க வேண்டும். இப்படியான விஷயங்களில் கறாரான நிலைப்பாட்டை அது எடுக்க வேண்டும்.

  -தமிழ் தி ஹிண்டு தலையங்கம்

 2. நந்தினி காணாமல்போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதும், 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது என்பதும் 20 நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் காவல் துறையின் அலட்சியப் போக்குக்கு ஓர் உதாரணம். சாதியம் சார்ந்து நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கின்றனவே அன்றி குறையவில்லை. 2010-ல் தலித் மக்களுக்கு எதிராக 32,712 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருக்கும் தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகக் கணக்குப்படி, அதற்குப் பிந்தைய ஐந்து ஆண்டுகளில் 44% அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 1,782 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

  -தமிழ் தி ஹிண்டு தலையங்கம்

  • உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் எல்லாம் முட்டாள்தனமாக இருக்கிறது.
   ***************************************இன்று கூட கேரளாவில் கல்லூரி பெண்ணை சக மாணவன் பெட்ரோல் ஊற்றி கொலை செய்து இருக்கிறான், இதற்காக எந்த ஒரு அமைப்பையும் குறை சொல்ல முடியாது.

   இது பெண்களை வெறும் காமத்திற்காக பார்க்கும் பார்வையால் வரும் ஆணாதிக்க பிரச்சனை இதை உளவியல் ரீதியாக சமூகத்தின் அனைத்து தரப்பினரும் முயற்சி எடுத்து சரி செய்ய வேண்டும்…

   • மணிகண்டன்…,
    இந்து முன்ன்னணியை சேர்ந்தவர்கள் கூட்டு கற்பழிப்பு,கூட்டுகொலை ,கூட்டாக தடையங்களை மறைத்தல் என்று சமுகவிரோத செயலில் ஈடுபடுறீங்க…. மறுபக்கம் கள்ளகாதலில் தற்கொலை செய்துகொண்டவருக்கு(BJP worker) பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டே தற்கொலையை கொலையாக மாற்ற தடையங்களை ஜோடிக்கிண்றீகள்! அந்த பொய்யான தடையங்களிலும் தேசியகொடி தலைகீழாக பறக்குது…! மோடிக்கு வேற **** மாலை போட்டு இருக்கு! ஏங்க இப்படி? எப்படியாவது மத கலவரத்தை தூண்ட படாதபாடு படுறீங்களே! இந்த பொழப்புக்கு…..! சரி நானே ****************************************************************** போட்டுக்கிறேன்….

 3. ஆமா அந்த ராஜசேகர் என்பவன் என்ன சாதி என்று குறிப்பிடவில்லயே நீங்கள் மணிகன்டன் வன்னியர் என்று சொல்லும் மனத்துனிவு ராஜசேகர் என்ன சாதி என்று குறிப்பிடுவதில் என்ன தயக்கம் ராஜ சேகர் ஒரு வேளை எஸ் சி யா என்ற சந்தேகம் எழுகின்றது எனக்கு தெரிந்து எல்லா சாதியிலும் ரவுடிகள் இருக்கிறார்கள் அவர்களை அந்தந்த சாதி கட்சிகளும் லெட்டர் போர்டு கச்சிகளும் வளர்த்து விடுகின்றன இவர்களில் ஒருவந்தான் ராஜசேகர் என்பவனுனும் அவனை இந்து முன்னனி ஆதரிக்க வில்லை என்றாலும் ராமதாஸோ இல்லை விடுதலை சிருத்தைகளோ ஆதரித்து வளர்த்து விடுவார்கள் என்பதே உண்மை நிலவரம்

  • ஜோசப்பு,

   உங்கள் கருத்துக்களில் ஆதிக்க சாதித்திமிர் தான் வெளிப்படுகிறதே தவிர இந்து முன்னணி பொறுக்கி எந்த சாதியால் இருந்தால் நமக்கென்ன? தலித் ஒருவன் இந்து மதவெறி அமைப்பில் இருந்தால் அதை ஆதரிக்க முடியுமா என்ன?

   வன்னியப் பெண் ஒருவரையும் இந்த ராஜசேகர் கும்பல் வன்கொடுமைக்குள்ளாக்கியிருக்கிறது என்பதை வைத்துப்பார்க்கும்போது, ராஜசேகர் வன்னிய சாதி வெறியனாகவோ அல்லது ஏதோ ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும்.

 4. வன்னியபெண்னை கற்பளித்து விட்டால் அவனும் வன்னியனாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை கற்பளிப்பு செய்ய ஆம்ம்புளையா இர்ந்தா போதும் அதுக்கு சாதி தேவை இல்லை எனபதுதான் என் பார்வை

  சரி விடுங்க அவன் என்ன சாதியாக இருந்து விட்டுப்போகிறான் ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை ஒன்று இருக்கும் அவன் செய்த செயல்களுக்கான் எதிர் வினை காத்துக்கொண்டே இருக்கிறது அது ராஜ்சேகர் என்பவன் கொலையில் கூட முடியலாம்
  ****************************வினவுக்கும் அவர்கள் குழுமத்துக்கும் ராஜசேகர் என்ன சாதி என்று சொல்லுவதில் என்ன கஸ்டம் செத்துப்போன என் சகோதரி நந்தினையை தலித் பெண் என்று ஏன் பிரித்து எழுதுகிறார்கள் பெண்மைக்கே உரிய எல்லா ஆசைகளுடன் வாழ்ந்த அந்த சகோதிரியை சிதைத்தவன் எஸ் சி ஆக இருந்தால் விட்டு விடுவீர்களா என்பதுதான் நான் கேக்கும் கேள்வி இதில் எந்த ஆதிக்க சாதி திமிரை கண்டீர்கள் ராஜா

  நான் *************************** அது இசுலாமியர்கள் மட்டுமே மற்ற அனைத்து சாதியினரையும் எனக்கு சகோதரர்களே

  • கேள்வி 1: ராஜசேகர் தலித்தாக இருந்துவிட்டுப் போகட்டும் – வினவு உள்ளிட்ட அனைத்து முற்போக்க்கு அமைப்புகளும் ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கொண்டிருக்கவில்லையே …

   கேள்வி 2: இந்தியாவில் சாதிய வன்கொடுமைகளே இதுவரை நடந்திராதது போல, அல்லது அதைப்பற்றி துளியும் அறியாத அப்பாவி போல ஜோசப் அம்பி பேசுவதன் நோக்கம் என்ன ?.

   கேள்வி 3: மணிகண்டன் தனது மகளைக் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து அப்பெண்ணின் தாய் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்கும் போது, அவ்வாறு கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மகளைக் காணவில்லை என மட்டும் புகார் கொடு என்று அந்த போலீசு ******கூறியதன் காரணம் என்ன ?.. மணிகண்டன் ஆண் என்பதாலா ?. அல்லது அவன் இந்து முன்னணியைச் சேர்ந்த ஆதிக்கசாதி *****என்பதாலா ?..

   கேள்வி 4: இந்துக்கள் அனைவரையும் ஏன் பிரிக்கிறீர்கள் என்று அப்பாவி போல் கேட்கும் ஜோசப்பு, முதலில் இதை பாப்பார ********* போய்க் கேளு, இந்த சாதி கோவிலுக்குள்ள வரக்கூடாது, இந்த சாதி தவிர வேற எந்த சாதியும் கருவரைக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லுற******* போயி ஏன் கேட்கல ?

   கேள்வி 5: நந்தினி ஒரு தலித் பெண் என்பதால் தான் மணிகண்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாள் என நான் கூறுகிறேன். அதற்கு நல்ல சாட்சியே புகாரை ஏற்றுக் கொள்ளாமல் மிரட்டினானே அந்த போலீசு அதிகாரி தான். அது ஒரு ஆதிக்கசாதிக்கார பண்ணையின் பெண்ணாக இருந்தால் அங்கு மணிகண்டன் முதலில் உயிரோடு இருந்திருப்பானா, போலீசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கும் என்பது ஊரறிந்த விசயம். ஜோசப்பு இதெல்லாம் தெரியாதது போல் நடிக்கும் காரணம் என்ன ?

   • வினவு முற்போக்கா ? ஏன் சார் இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க, ஹிந்து மதத்தை எதிர்ப்பதால் உடனே முற்போக்கு என்பதா ? ஹி ஹி ஹி nice comedy

    ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு, இங்கே நந்தினியை மணிகண்டன் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்ளவில்லை, அந்த பெண்ணின் சம்மதத்தோடு தான் உறவு வைத்து இருக்கிறான், கர்ப்பமான பின் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தியதால் அவனும் அவன் கூட்டாளிகளும் சேர்ந்து நந்தினியை கொன்று இருக்கிறார்கள்.

    இதில் எங்கே ஹிந்து அமைப்பு அல்லது மதம் வந்தது ? இரு தனி நபர்களின் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னை என்று தான் இதை பார்க்க வேண்டும்.

    ஹிந்து மதம் ஹிந்து அமைப்புகள் என்று இல்லாத conspiracy theory கொண்டு வருவது சரியல்ல, தலித் பிரமாணம் என்று சொல்வது எல்லாம் இல்லாத ஒரு கற்பனை குற்றசாட்டுகள்.

    • மணிகண்டன் மூளை கேட்ட முட்டாளாக பேசுவதனை விட இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இந்த விசயத்தில் என்ன கூறுகின்றது என்று படித்தால் தேவலாம்….

     //ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு, இங்கே நந்தினியை மணிகண்டன் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்ளவில்லை, அந்த பெண்ணின் சம்மதத்தோடு தான் உறவு வைத்து இருக்கிறான், கர்ப்பமான பின் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தியதால் அவனும் அவன் கூட்டாளிகளும் சேர்ந்து நந்தினியை கொன்று இருக்கிறார்கள்.//

     • இன்னமும் நான் சொன்ன விஷயத்தை பேசாமல் வேறு ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்… நீ தலித் நான் உயர் ஜாதி ஹிந்து அதனால் நீ என்னிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று மணிகண்டன் கட்டாயப்படுத்தி உறவு வைத்து இருந்தால் தான் நீங்கள் சொல்வது போல் ஹிந்து உயர் ஜாதி வெறி என்பது எல்லாம் வரும்.

      கல்யாணம் செய்து கொள்கிறேன், பணம் கொடுக்கிறேன் அல்லது வேறு எதாவுது ஆசை வார்த்தைகளை சொல்லி ஏமாற்றி உறவு வைத்து கொண்டால் அது இரு தனி நபர்களின் பிரச்னை, ஒழுக்கம் தவறியதால் ஏற்பட்ட பிரச்னை.

      http://www.hindustantimes.com/india/educated-women-cant-agree-to-physical-relationship-and-cry-rape-later-hc/story-sRvEg4rqG6E4pfigOhBHkJ.html

      https://jg.daman4men.in/doc/2017-01-09___HC-of-MAHARASTRA-at-MUMBAI___ANTICIPATORY-BAIL-APPLICATION-NO.-2221______J.-Mrs.MRIDULA-BHATKAR.pdf

      நீதிமன்ற தீர்ப்பை சரியாக படிக்கவும்.

      ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி உறவு வைத்தால், அதை கற்பழிப்பு என்று சொல்ல முடியும், ஒரு பெண்ணின் விருப்பத்தோடு உறவு வைத்து அதனால் கர்ப்பம் ஏற்பட்டு அதன் பிறகு இருவருக்கும் பிரச்னை என்று வந்தால் அப்போது அந்த பெண் ஆணின் மீது கற்பழிப்பு குற்றசாட்டை சொல்ல முடியாது. அப்போது அந்த ஆணின் மீது சொல்ல கூடிய குற்றசாட்டு தான் ஏமாற்றப்பட்டேன் என்பது தான் (கற்பழிக்கப்பட்டேன் என்று அந்த பெண் சொல்ல முடியாது) காரணம் இருவருமே சம்மதத்தோடு தான் உறவு வைத்து கொண்டார்கள்.

      மணிகண்டன் மீது நீங்கள் சொல்ல கூடிய குற்றசாட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் ஏமாற்றி கர்ப்பமாக்கி பிறகு கொடூரமாக கொலை செய்தான் என்பது தான்.

      • மணிகண்டனே பெரிய சட்டநுட்பமெல்லாம் இங்கே வேண்டாம்.அவன் யார்?இந்தியாவை ஆளும் ஒரு புண்ணிய கட்சியின் பல கிளையான ஒரு அமைப்பின் கூட்டு களவானிகளில் ஒருவன் இது ஒரு கூட்டு பலாத்காரம் என்ற வகையில்தான் அறியப்படுகிறது.தொடர்ந்து இந்த கிளை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் மேலிருந்து கீழ்வரை அடுத்தடுத்து இதுமாதிரி அசிங்கங்களிலும் வன்முறைகளிகளிலும் அத்துமீறலிலும் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.அகிம்சையில் நம்பிக்கைவைத்த ஒரு காந்தியவாதிக்கு(மணிகண்டன்)இவன் களுடைய இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய அக்கறை என்ன?ஒரு சாதாரண இந்து இந்துமுன்னணி காரனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு வருவானா?ரெண்டுபேர் மோட்டார்சைக்கிளில் வந்து மோதிக்கொண்டான் என்று வைத்துக்கொள்வோம் அதில் ஒருவன் இந்துவாகவும் இன்னொருவன் முஸ்லிமாகவும் இருந்துவிட்டால் போதும் அதை ஒரு இந்துமுன்னணி காரன் பார்த்துவிட்டால் அதை எப்படி திரித்து பற்றவைக்கிறான் என்பதை இன்று நாடே அறிகிறது.அப்படியிருக்க காந்தியின் அகிம்சாவழியை அடிக்குஅடி பின்பற்றும் மணிகண்டனுக்கு தெரியாதா? பிறகு ஏன் அந்த கேடுகெட்ட இயக்கத்தை காப்பாற்ற படாதபாடு படவேண்டும்?சரி…இந்துமுன்னணிக்காரன் செய்தான் இந்துமுன்னணிக்கும் இதற்க்கும் தொடர்பில்லை.நியாயம் என்பது ஒரு துளி இருந்தாலும் “நம் இயக்கத்தில் இருந்தவன் இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டானே இயக்கத்தின் பெயரையும் கெடுத்து ஒரு அபலையான அப்பாவி ஏழை சிறுமியின் வாழ்வை சூரையாடி அந்த குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிட்டானே”என்று பதறி அந்த குடும்பத்திற்க்கு தேவையான நியாயத்தையும் அந்த மிருகத்திற்க்கு தேவையான தண்டனையையும் வாங்கி கொடுக்க துடித்திருக்க வேண்டாம்?செய்ததா இந்துமுன்னணி? காந்தியவாதி மணிகண்டன் நந்தினிக்கும் நந்தினி குடும்பத்திற்க்குமல்லவா ஒழுக்க பாடம் நடத்துகிறார்.தூ…மிருகங்களா…நீங்களெல்லாம் வாழவே தகுதியற்ற ,மனித பிணம் திண்ணும் காட்டேறிகள்.

      • அடிப்படை சட்ட அறிவேயின்றி பாலியல் வக்கிர மணிகண்டனுக்கு ஆதரவாக பேசும் மணிகண்டன் அவர்களே,

       நீர் சுட்டிக்காட்டும் தீர்ப்பு என்ன கூறுகின்றது? (If a woman is educated and above 18 years of age and yet does not exercise her right to say ‘no’ to a sexual relationship, then she cannot later allege rape when the relationship turns sour, the Bombay high court has held.) இதனை தானே? இங்கு உம் இந்து முன்னணி மணிடனால் பாலியல் வக்கிர வெறிக்கு பாதிப்பு உள்ளான நந்தினி என்ற பெண்ணின் வயது 16 கூட பூர்த்தி ஆகாத நிலையில் கற்பழிப்பு குற்றத்துக்கான தண்டனை சட்டம் என்ன கூருகின்றது என்றாவது உனக்கு தெரியுமா? படித்து பார்த்து விட்டு பதில் கூறும்….

       Section 375 in The Indian Penal Code :

       375. Rape : A man is said to commit “rape” who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following de-scriptions :

       6th description : . With or without her consent, when she is under sixteen years of age. Explanation.—Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offense of rape.

       சம்மதத்துடனோ , அல்லது சம்மதம் இன்ன்றியோ பதினாறு வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன்( நந்தினி) பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பதே பாலியல் பலாத்காராம் என்று இ பி கோ 375 ன் ஆறாவது விளக்கம் கூறுவதனை படித்துவிட்டாவது நீர் பேசும்.

       • செந்தில் இன்னமும் நீங்கள் பிரச்சனையை சரியாக பேசாமல் தாவிக்கொண்டு இருக்கிறீர்கள். மெஜோராக இருந்தாலும் சரி மைனராக இருந்தாலும் சரி இது இரு தனி நபர்களின் பிரச்னை அதில் நீங்கள் நந்தினியை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனையில் நீங்கள் ஹிந்து மதத்தை இழுப்பது தான் தவறு என்கிறேன். இதில் எங்கே இருந்து ஹிந்து மதமோ அல்லது ஹிந்து அமைப்போ வந்தது என்பதே என் கேள்வி, ஏன் இல்லாத ஒரு விஷயத்தை வைத்து ஹிந்து மதத்தை அவதூறாக பேசுகிறீர்கள் என்பதே நான் வைக்கும் வாதம்.

        இதில் நந்தினி என்ற பெண்ணிற்காக பேசுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது. அதை விடுத்து தலித், ஹிந்து மதம், ஹிந்து அமைப்புகளை தடை செய்ய வேண்டும், பிராமணியம் அது இது என்று சொல்லும் போது உங்களின் நோக்கம் நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது அல்ல, உங்களின் நோக்கம் இந்த பிரச்சனையை வைத்து ஹிந்து மதத்தின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பது போல் இருக்கிறது. உங்களுக்கு நந்தினியின் மரணம் an excuse to abuse hindu religion.

        • மணிகண்டன் நீர் வைத்துள்ள கீழ் உள்ள வாதத்தின் அடிப்படையில் தான் நான் இங்கு பேசிக்கொண்டு உள்ளேன்… கீழ் கண்ட உனது வாதத்தை படிக்காத முட்டாள் கூட பொதுவெளியில் வைத்து பேசமாட்டான். தந்தையின் பெயர் அறியாதவனாக இருப்பவனோ அல்லது தகாத உறவு முறையில் பிறந்த ஒருவனோ தான் இத்தகைய வாதத்தை முன்வைப்பான்…

         //ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு.//

         நந்தினியின் கர்பத்துக்கு அவள் தான் பொறுப்பு என்று கூறும் உன் பாப்பன மரபில் வரும் ஹிந்துத்துவா மனநிலையை தான் வினவில் அம்பல படுத்திக்கொண்டு இருகின்றேன்… பார்பன ஹிந்துத்துவா மனநிலையுடன் கூடிய பெண்களின் மீதான உனது பார்வை எப்படி பட்ட கேடுகெட்ட சிந்தனை என்பதனை உன்னுடைய வாதத்தில் இருந்து வினவு வாசகர்கள் அறிந்துக்கொள்வார்கள்…

        • மிஸ்டர்மணி நடந்த அக்கிரமத்தை பலவீனப்படுத்தி இந்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று திசைதிருப்பவேண்டாம்.இதை செய்த மிருகங்கள் இந்து மதத்தின் காவலர்களாக தங்களை வரிந்து கொண்டவர்கள்தான். விவாதம் நீடிக்க நீடிக்க கொடூர மணிகண்டனே இந்த மணிகண்டனின் வடிவில் வந்து பேசுவதாத்தான் உள்ளது.இதை செய்த இய்க்கத்தின் மூத்த சகோதர இயக்கமான பிஜெபி காரனே தலித் பெண்களுக்கு மிக சாதரண்மாக கொடுமைகள் இழைக்கப்படத்தான் செய்கிறது என்பதை வேறுவழியில்லாமல் நேற்று ஒரு டிவி விவாதத்தில் ஒத்துக்கொண்டார்.நேர்மை தவறி நியாயம் தவறி நடக்காதீர். அமபலப்பட்டு போகும்போதெல்லாம் வேறுவேறு அவதாரம் எடுப்பது சரியல்ல.இப்போது காந்தியவாதி அவதாரம் களைந்து கோட்சே அவதாரம் பச்சையாக தெரிகிறது.இது பச்சோந்தித்தனம்.நியாயவானாக இருந்தால் இந்த விவாதத்தை இவ்வளவு தூரம் கொண்டே வந்திருக்க கூடாது.நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய அவலம்.கலவி பொருளாதாரம் வயது சமூகநிலை என்று அனைத்திலும் பாதாளத்தில் கிடக்கிற ஒரு பரிதாபத்திற்க்குரிய பெண் புழுவைப்போல நசுக்கப்பட்டிருக்கிறாள். இதில் மற்ற கட்சிகளைவிட இந்துத்துவ கட்சிதான் முன்னே நிறிருக்க வேண்டும்.”இந்து இந்து நாங்கள் தான் இந்துக்களின் உரிமையை பேசுகிறோம் இந்த நாட்டின் வளத்தையெல்லாம் இந்துக்களுக்கு இல்லாமல் இஸ்லாமியன் சுரண்டி திங் கிறான்”என்றெல்லாம் அரசியல் செய்கிற இந்துத்துவர்களுக்கு அல்லவா அந்த பெண்ணின் குடுபத்திற்க்காக போராடுகிற கடமை முதலில் இருக்கிறது.அவளும் இந்துதானே..இதுபோக,இதை செய்தவர்கள் இந்துமுன்னணி என்ற இயக்கத்த்கினர் இதில் இன்னும் முனைப்பும் வேகமும் காட்டவேண்டிய கடமை அதிகமாகிறது.ஒரு காந்தியவாதியாகிய மணிகண்டனே இதையெல்லாம் உணர்த்த வேண்டாமா? இங்கே இந்து மதத்தை கரைபடாமல் துடைத்துவைக்க பார்க்கிறாயே!?அந்த பரிவார கூட்டதில் உள்ளவனின் வசனத்தைத்தானே பேசுகிறாய் மணிகண்டா…ஆனால் கந்தியவாதி என்று தடக்கென்று வேடத்தை மாற்றிவிடுகிறாயே…

        • மணிகண்டன்…,

         கணவனால் கைவிடப்படும் பெண்கள் அல்லது காதலானால் கைவிடப்படும் பெண்கள் இன்று சுயமாக நின்று வேலைசெய்து சம்பாரித்து தன்னையும் தன் குழந்தையையும் காத்துகொள்ளும் சுய சார்பு நிலையில் தான் எல்லா வர்கங்களிலும் இருக்காங்க…. கோர்ட்டுக்கு சென்று ஜீவானம்சம் கேட்பவர்கள் வெகு சிலர் தான்.. அதே சமயத்தில் பிறந்த குழந்தைக்கு தந்தையின் இனிசியல் வேண்டும் என்ற நிலையில் தந்தை யார் என்ற விசயத்தில் எந்த பெண்ணும் இனிசியலை விட்டுக்கொடுக்கமாட்டாங்க! இந்த நிலையில் இருந்து பார்க்கும்போது கூட உன்னுடைய வாதம் ,பார்வை , சிந்த்தனை { ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு} குடும்ப அமைப்பையே சீர்குலைக்கும் சித்தாந்தத்தை தான் முன் வைக்கின்றது.

         பார்பன ஹிந்து சித்தாந்தத்தின் அடிப்படையில் கோவில்களில் வேலை செய்த நாட்டிய பெண்கள் (தேவர் அடியார்கள்) பார்பன ஆண்களால் கருதரித்த நிலையில் குழந்தைகளுக்கு தந்தை யார் என்ற கேள்வியுடன் இருந்த சமுகத்தில் வேண்டுமானால் உன்னுடைய சிந்தனை “(கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு” சரியானதாக இருக்கலாம்…. ஆனால் இன்றைய நிலையில் உன்னுடைய சிந்தனை பிற்போக்கு தனமானது மட்டும் அல்ல பார்பன ஹிந்துத்துவா சித்தாந்தத்துடன் கூடிய அடிமுட்டாள் தனமானதும் கூட!

         இப்ப புரிகின்றதா? தேவரடியார்களுக்கு பிறந்த குழந்தைகள் மட்டுமே தந்தையின் இனிசியலை பற்றியோ அல்லது தந்தை யார் என்பது பற்றியோ கவலை படமாட்டார்கள்…. உன்னுடைய சிந்தனையும் அத்தகைய நிலையில் தானே இருக்கிறது…!

         • //தேவரடியார்களுக்கு பிறந்த குழந்தைகள் மட்டுமே தந்தையின் இனிசியலை பற்றியோ அல்லது தந்தை யார் என்பது பற்றியோ கவலை படமாட்டார்கள்// இப்படி நீங்கள் பேசுவது ஆச்சரியமாகவும் ஒரு வகையில் சந்தோசமாகவும் இருக்கிறது.

          உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன், திருமணத்திற்கு முன்பு உடல் உறவை மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு அப்படி ஒரு பெண் அந்த உறவை மறுக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி அந்த பெண் கவலைப்படவில்லை அல்லது ஏற்கிறாள் என்று அர்த்தம்.

          ஒரு பெண் மறுத்தும் ஆண் அந்த பெண்ணிடம் வற்புறுத்தி உறவு வைத்து கொண்டால் அது அந்த பெண்ணின் காதலனாகவே இருந்தாலும் அது கற்பழிப்பு.

          நீங்கள் (பெரியாரிஸ்ட்) திருமணம், கற்பு, தனிமனித ஒழுக்கம் அவசியம் இல்லை என்று சொல்லும் பெரியார் கொள்கை உடையவர்கள், பெரியாரை பொறுத்தவரையில் விபச்சாரி என்ற வார்த்தையே கூடாது என்று சொல்பவர்…

          திருமணம், கற்பு, ஒழுக்கம் அவசியம் என்று சொல்பவன் நான், அதனால் தான் ராமனை ஆதரித்து பல கருத்துக்களை சொல்லியிருக்கிறேன்.

          கற்பு பெண்களுக்கு அவசியம் இல்லை என்று சொல்லும் பெரியாரை ஆதரிக்கும் நீங்கள் எப்படி தந்தை இனிசியலை பற்றி கவலைப்படலாம் ? ஒரு வேலை selective பெரியார் கொள்கைகளை தான் ஆதரிக்கிறீர்களோ ?

          நீங்கள் பிரமணியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டு பெரியாரிஸத்தை எதிர்க்கிறீர்கள். நல்ல முன்னேற்றம் 🙂

     • மணிகண்டன் …….

      தாங்கள் பேசிய மேற்படி பேச்சு மிகவும் ஆணாதிக்க திமிருடன் கூடியது, இந்த வழக்கில் தவறென்பது நந்தினியின் மீது அணுவளவும் கிடையாது. மணிகண்டனின் நரித்தனமான பேச்சை கேட்டு, தன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வான் என்று பரிதாபமாக நம்பி, அவன் இச்சைக்கு பலியாகி விட்டார். அதனால் ஏற்பட்ட கர்ப்பம், அதை கலைப்பதற்கென்று மணிகண்டன் செய்த வக்கிரங்கள்,கூட்டு பாலியல் வன்புணர்வுகள் என்று அனைத்தும் சேர்ந்து இறுதியில் நந்தினியை பிணமாகியது. இதற்க்கு முழு காரணமும் மணிகண்டனும், அவனுக்கு இந்த அளவிற்கு தைரியம் கொடுத்த இந்து முன்னணி அமைப்பும் தான். நாம் இந்து முன்னணியில் இருக்கிறோம், மத்தியில் நடப்பது நமது காவி ஆட்சி தான், என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல் தான் மணிகண்டனை இவ்வாறு செய்ய வைத்தது. உண்மையும் அது தான். மணிகண்டனை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்துமுன்னணி அமைப்பையும் தடை செய்தால் மட்டுமே, இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்கும். ஆகவே தாங்கள் பேசிய மேற்படி விடயத்தை திரும்ப பெற்றுக் கொண்டு அதற்கான மன்னிப்பினையும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

      • Rebecca Mary நீங்கள் பேசுவதும் தவறு மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தாலும் மாநிலத்தில் இருப்பது அதிமுக அரசு, சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கடமை அதில் மத்திய அரசு தலையிட முடியாது.

       மேலும் ஒரு மனிதன் ஹிந்து இயக்கத்தில் இருக்கிறான் அது கொடுத்த தைரியத்தால் கற்பழித்தான் என்று சொல்வது என்றால் அனைத்து இயக்கங்களுக்கும் இது பொருந்தும், ஒரு இயக்கத்தில் இருக்கிறோம் அதனால் நாம் சட்டத்தை மதிக்க தேவையில்லை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல் அனைத்து இயக்கங்களிலும் சிலர் இருக்கிறார்கள், இந்த மாதிரியான ரௌடியைகளை அனைத்து இயக்கங்களும் வளர்த்து விடவே செய்கின்றன எனக்கு தெரிந்து இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதற்கு விதி விளக்கு இல்லை என்றே நினைக்கிறேன்… ஆனாலும் எந்த ஒரு இயக்கமும் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அனைவரும் தங்களை புனிதர்களாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

       ஒரு இயக்கத்தின் கொள்கை தலித் பெண்களை திட்டமிட்டு கற்பழித்து கொலை செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது அந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்கும், சும்மா ஒரு இயக்கம் ‘ஹிந்து’ முன்னணி என்று பெயர் வைத்து இருப்பதற்காக தடை செய்ய வேண்டும் என்று சொல்வது உங்களை போன்றவர்களின் பாசிஸ்ட் மனப்பான்மையை தான் காட்டுகிறது.

       குற்றத்தில் ஈடுபட்ட ரௌடியைகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் இதில் ஹிந்து மதத்தை இழுப்பது அல்லது ஹிந்து அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று சொல்வதோ சரியல்ல.

      • Rebecca Mary: இதில் ஆணாதிக்கமும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது, இது தான் இயற்கையின் நியதி…

       திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் உறவில் ஈடுபடும் போது, என்ன பின்விளைவு(கர்ப்பம்) ஏற்படும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் அப்படி தெரிந்தே அந்த உறவில் பெண் ஈடுபடுவதால் அதற்கான விளைவை பெண் தான் ஏற்க வேண்டும். இந்த உறவில் ஆண் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் என்று தான் பெண் சொல்லமுடியும்மே தவிர கற்பழித்து விட்டான் என்று சொல்ல முடியாது.

       • ரெம்ப நய வஞ்சகமா பேசுறார் மணிகன்டன் நந்தினியை குற்றப்படுத்துவதன் மூலம் மணிகன்டன் என்பவனின் கொடுற செயலிற்க்கு உண்டான மக்களின் கோவ உணர்வை குறைக்க செய்யும் தந்திரமான உரையாடல் கி செந்தில் குமரன் மணி கன்டனை தவிர்க்கவும் அவரு பாட்டுக்கு வாள் வாள் என்று கத்தி விட்டு போகட்டும் சூல் கொண்ட நாயை மாரக்ழி மாச ஆண் நாய் கூட உடலுறவு செய்யாது ஆனால் நாயை விட கேவலமாக தனது கற்ப்பை சுமக்கும் பேதை பெண்னயே கூட்டு வல்லுறவு செய்தவன் எவ்வளவு மகா கேவலமானவன் அவனை ஒரு வரியில் கூட கண்டிக்க வில்லை இந்த மணிகன்டன் ஒரு *********** என்பதே சந்தேகமாக இருக்கிறது
        இவருக்கு சகோதிரி இருக்கா இல்லை கல்யானம் ஆனவரா அவருக்கு பெண்டு பிள்ளை இருக்கானு தெரியல இல்ல எல்லாரும் இருந்து நந்தினி தலித் பெண் என்பதால் இயல்பான சாதித்திமிறோடு பேசுகிறா என்பது தெரியவில்லை எனவே தெரிந்தே நஞ்சை விதைக்கும் இந்த நயவஞ்சகத்தனை விவாதத்தில் இருந்து தள்ளி வைக்கவும் வேண்டுகிறேன்

        • கி செந்தில் குமரன் மணி கன்டனுடன் விவாதத்தை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது அவருடைய பார்ப்பனுய சாதி மடமையை தோலுறிக்கிறேன் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவர் நந்தினியினை அவமதிப்பு செய்வதை அனுமதிக்க கூடாது

        • ஜோசப் என் கருத்துக்களை நீங்கள் சரியாக படிக்கவில்லை, நான் மணிகண்டனை தண்டிக்க கூடாது என்று எந்த பதிவிலும் சொல்லவில்லை, இந்த மாதிரியான கூட்டங்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றே சொல்லியிருக்கிறேன். என் கேள்வியெல்லாம் மணிகண்டன் நந்தினி என்ற இரு தனிநபர்களின் பிரச்சனையில் ஏன் ஹிந்து மதத்தின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதே, ஹிந்து முன்னணியை தடை செய்யலாமா என்று என்னிடம் கேள்வி கேட்டு இந்த விவாதத்தை துவக்கியவர் செந்தில்.

         மேலும் திருமணத்திற்கு முன்பான ஆண் பெண் உறவில் பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு, என் இந்த கருத்தில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை, அதற்கான காரணத்தை நீங்கள் யாரும் சொல்லவும் இல்லை.

         கற்பு, தனிமனித ஒழுக்கம், திருமண பந்தம், குடும்ப அமைப்புகளை ஆதரிப்பவன் நான், உங்கள் பெரியார் கொள்கைகளுக்கு நேர் எதிர் திசையில் இருப்பவன் நான்.

    • மூளை கேட்ட முண்டம் மணிகண்டன் அவர்களே,

     Sex on false promise of marriage is rape: Court

     Holding that having sex with a girl on the promise of marriage and later refusing to tie the knot on flimsy grounds amounts to commission of rape, the Delhi High Court on Monday dismissed an anticipatory bail application of a boy who had tricked a girl into having sex with him on the promise of marriage and later refused to fulfill it on the ground that she had hidden her real gotra (lineage) from him.

     February 1, 2010
     https://indialawyers.wordpress.com

    • பாலியல் வக்கிர வெறி மணிகண்டனே,

     Having sex with woman on false promise of marriage is rape: High Court

     Having sexual relations with a woman against her will or without her consent also amounts to rape under the Indian Penal Code. If the consent was obtained on a false assurance or promise of marriage, the consent cannot be considered to be full and free and it would be a case of rape,” Justice R V Easwar said.

     June 09, 2013

     http://www.ndtv.com

    • இந்த மணிகண்டனுக்கும் அந்த மணிகண்டனுக்கும் பெயர் மட்டும் அல்ல வக்கிர பாலியல் உணர்வுகூட எந்த அளவுக்கு ஒரேமாதிரியாக உள்ளது என்பதனை பாருங்கள்…. என்ன கூறுகின்றான் இவன் என்று உற்று நோக்குங்கள் : { ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு} இந்த கருத்தை முன்மொழியும் இந்த மணிகண்டனுக்கு அறிவு மட்டும் இல்லையா அல்லது இதயமும் இல்லையா?

     அந்த மணிகண்டன் செய்த பாலியல் விகார நடவடிக்கைகளுக்கு இந்த மணிகண்டன் விளக்கு பிடித்து ஆதரவு தெரிவிக்கின்றான்… இவனுக்கும் ஆதரவு தெரிவித்து வினவில் பேசிக்கொண்டு இருக்கும் மேரியை போன்றவர்கள் மீண்டும் சிந்திக்கவேண்டும்

    • //இதில் எங்கே ஹிந்து அமைப்பு அல்லது மதம் வந்தது ? இரு தனி நபர்களின் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னை என்று தான் இதை பார்க்க வேண்டும்.//நன்னா பேசறேள் மணி கண்டன் அவா ரெண்டு பேரும் பரஸ்பர சம்மததோடுதான் செக்ஸ் வச்சண்டா சரிதான் ஆனா நந்தினியை திருமணம் செய்து கொள்ள விடாமல் மணிகன்டனை தடுத்தது எது ? அதுதான் சாதி ,சாதி என்பது இந்து மதத்தின் அங்கம்னு அம்பேத்கர் என்ற அறிஞர் சொல்லி இருக்கார் அவருக்கு சமஸ்கிருதம் எல்லாம் நன்னா தெரியும் அவ்ர் இந்து மத வேதங்கள் மற்றும் பகவத்து கீதை என்றந்நூலகளை எல்லாம் நன்னா படிச்சி ஆராய்ச்சி பன்னிதான் இதை சொல்லி இருக்கார்

     நீங்க ஆர் எஸ் எஸ் ,இல்ல இந்து முன்னனில இருக்கேளோ இல்லயே நேக்கு தெரியாது எனக்கு தெர்ந்த்து இந்து அமைப்புகள் சாதி ஒழிப்பு பத்தியெல்லாம் பெசறதே இல்லை ஒவ்வொறு சாதிக்கும் எதோ ஒரு வகையில் தனிச்சிறப்பு இருக்குன்றா மாறி பேசின்டு இருக்கா நீங்க அவாளான்ட கேட்டு சொல்லுங்கோ அவா கொள்கை என்னானு

    • அந்த மணிகண்டனும் , இந்த மணிகண்டனும் ஒன்றா என்று நான் சந்தேகம் எழுப்பிய போது இந்த மணிகண்டனுக்கு ஆதரவாக கொடிபிடித்து வினவில் தாண்டவம் ஆடியவர்கள் இப்ப இந்த மணிகண்டன் வைக்கும் வாதத்துக்கு இவனுக்கு ஆதரவாக பதில் அளிக்க தயாராக உள்ளார்களா?

     //ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு,//

     • ஏன் உங்களால் என்னிடம் வாதம் செய்ய முடியவில்லையா ? துணைக்கு ஆட்களை அழைக்கிறீர்களோ ? ஹாஹாஹா ஐயோ பாவம்.

      என் வாத திறமையால் நீங்கள் சொன்ன அதனை விஷயங்களையும் உடைத்து இருக்கிறேன், தோல்வியை ஏற்க முடியாமல் நீங்கள் இப்படி என்னை பற்றி கண்டபடி பேசி கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் அறியாமையை பார்த்து பரிதாபப்படுகிறேன்.

      • வெறி பிடித்த பைத்தியகாரனின் சிரிப்பை போன்று உள்ளது உமது சிரிப்பு…. உனக்கு ஆதரவாக பேசிய மேரிகள் வருவார்கள் என்று நினைகின்றேன்…. வறுத்து எடுப்பார்கள் என்று நினைகின்றேன்… பொருத்து இரு!“ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு” என்று நீர் கூறும் போதே உன்னுடைய யோக்கியதை /நியாய உணர்வு / பண்பாடு நிலைபாடு ஆகியவை தெரியவில்லையா எங்களுக்கு !

       • நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திருமணத்திற்கு முன்பான ஆண் பெண் உறவில் பெண் தான் பின்விளைவுகளை சந்திப்பவள் என்ற உண்மையை மறுக்க முடியாது.

        • உமது இத்தகைய மனப்பான்மையை /சிந்தனையை /பண்பாட்டு கூறுகளை தான் பார்பன ஹிந்துத்துவா மனப்பான்மை என்று கூறுகின்றேன் என்ற என்னுடைய கருத்தாவது உமக்கு புரிகின்றதா மணிகண்டன்?

     • செந்தில் நான் மணிகண்டனுக்கு ஆதரவாக பேசவில்லை, ஏன் இரு தனி நபர்களின் பிரச்சனையில் ஹிந்து மதத்தை இழுக்கிறீர்கள் என்பதே என் கேள்வி… உங்களை போன்றவர்களின் வாதம் தவறு என்பதை சுட்டி காட்ட தான் இவ்வுளவு விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.

      • நீயூஸ் செவன் தொலைக்காட்சியில் நந்தினி கொலை வழக்கு விவாதத்துக்கு வந்தது எவிடென்ஸ் கதிர் என்பாறோடு பலர் வாதாடினார்கள் எனக்கு டீவில நியூஸ் கேக்குற பழக்கத்தை தவிர்த்து இது போன்ற விவாத மொக்கைகளை கேக்கும் வழக்கம் இல்லை பட் இந்த விவாதம் எனக்கு என்னமோ நல்லா இருந்துச்சுனு தோனுச்சு அதுனால சொல்லுறேன் டீவிலயும் கொஞ்சம் பொருப்பா பேசுறானு நினைக்குறேன்

     • ஒருமனிதன் அடிப்படையில்லமால் வசைபாடப்படும்போதோ அவதூறுக்கு ஆளாகும்போதோ அவன் பக்கம் நின்று பேசுவது அனைவரின் கடமை.அதற்க்காக அவனின் செயலகள் அனைத்தையும் ஆதரிக்கிறோம் என்பதாகாது.யாரின் குற்றச்செயலகளுக்கும் நாம் குடைபிடிக்க முடியாது.மணிகண்டன் விசயத்திலும் அதேதான்.ந்ம்மோடு விவாதிக்கும் மணிகண்டன், நந்தினியை குதறியை மணிகண்டனை மெதுவாக கழற்றிவிட்டு விட்டு பிறகு நந்தினியையே குற்றவாளியாக்குகிற நரித்தனத்தை செய்கிறது.இதுவும் காவிகளின் பாலபாடம்தான்.முதலில் தங்கள் கூட்டம் செய்த கேவலங்களை மிருகத்தனத்தை மறைக்கப்பார்ப்பார்கள். இல்லை என்று சாதிப்பார்கள்.வகையாக மாட்டிக்கொண்டு தப்பிக்க வழியற்று போகும்போது மாட்டியவனை கழட்டிவிட்டு அவனுக்கும் எங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று ஒரேபோடாக போடுவது.கொஞ்சநாளில் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து கும்மாளமடிப்பார்கள்.ஸ்வாதி கொலையில் என்ன நடந்தது?பிலால்மாலிக் என்று கொளுத்தி போட்டு…. நல்லவேளை பெரிதாக பற்றவில்லை.உடனடியாய் பல மாதிரியாய் பல்டியடித்து எங்கெங்கோ கொண்டுபோய் கதையை முடித்தான் கள்.போனவாரம் பொம்பளை விசயத்தில் ஒரு பிஜேபி காரன் நாண்டுகொண்டு செத்திருக்கிறான்.கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அவனை அழகாய் ஜோடித்து முஸ்லிம் பயங்கரவாதி கொன்றான் என்று கதையளக்க திட்டமிட்டு கடைசியில் குட்டு வெளிப்பட்டு அப்போதும் வெட் கமில்லாமல் அடுத்த கதைக்குத்தான் அலைய ஆரம்பிக்கிறான்.நம்மோடு விவாதிக்கிற காந்தியோடு பூந்தி தின்ற மணிகண்டன் என்ற சிந்தனை குருடிற்க்கு இதெல்லாம் தெரியாதா? தெரியும்.ஆனால் பயிற்ச்சி…வண்டியில் பூட்டும் காளைக்கு முதல் வேலையாக காயடிப்பது போல காவி கூட்டத்தின் அங்கத்தினராக முதலில் செய்வது மனசாட்சியை காயடிப்பது.மனிதநேயம் இரக்கம் நியாயம் போன்ற உணர்வுகள் சுரக்கும் சுரப்பியையே நிமிண்டி எறிந்துவிட்டுத்தான் பரிவார கூட்டத்தின் அங்கமாக முடியும்.பிறகு இந்த மணிகண்டனின் மூளை மட்டும் எப்படி இருக்கும்?எப்படி வார்க்கப்பட்டதோ அப்படியே உள்ளது.இதில் அதிர்ச்சிஅடைய ஒன்றுமில்லை.

     • நீர் வைக்கும் கீழ் கண்ட வாதத்துக்கு சட்ட பூர்வமான அங்கிகாரம் IPCல் எங்கு உள்ளது என்று கூறும்!

      //ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு//
      என்ன திறமை உமக்கு ! மெய் சிலிர்க்கின்றது போ! இந்து வெறியர்களின் செய்த கிரிமினல் குற்றத்துக்கு வினவில் வந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக விளக்கு பிடிக்கும் ஈன வேலையை தானே செய்து கொண்டு இருகின்றாய்!

      பதினாறு வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் (நந்தினி)பாலியல் உறவு வைப்பத்தே பாலியல் பலாத்காரம் தான் என்ற சிறிய உண்மை கூட உமக்கு தெரியவில்லை…

      • செந்தில் பேச்சை மாற்ற வேண்டாம் சில நாட்களுக்கு முன்பு தான் ஹிந்து அமைப்பை தடை செய்யலாமா என்று என்னிடம் கேள்வி கேட்டிரு அதற்கு தான் விளக்கம் கொடுத்தது இருக்கிறேன். இரு தனி நபர்களின் பிரச்சனையில் எப்படி ஹிந்து மதம் அல்லது அமைப்பு பொறுப்பாக முடியும் ?

       அதை பற்றி பேசாமல் மணிகண்டனை நான் ஆதரிக்கிறேன் என்று இல்லாத ஒரு விஷயத்தை வைத்து என் மீது அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறீர்.

       நீங்கள் மணிகண்டன் என்ற தனி நபர் மீது குற்றம் சொல்லி அவனை தண்டிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் அதில் நியாயம் இருந்து இருக்கும், அதை விடுத்து ஹிந்து அமைப்பை தடை செய்யலாமா என்று கேட்பது எந்த வகையில் நியாயம். இந்த பிரச்சனைக்கும் ஹிந்து அமைப்புகளுக்கும் என்ன சம்பந்தம் ?

       உங்களின் நோக்கம் நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட இந்த பிரச்சனையை வைத்து ஹிந்து மதத்தின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. அது முடியவில்லை என்பதால் என் மீது கோபப்படுகிறீர்

       • முட்டாள் தனமான ,பெண்ணடிமை தனத்தை ஆதரித்து பார்பன ஹிந்துத்துவா சித்தாந்தப்படி கீழ்கண்டவாறு பேசியது யார்? நீர் தானே?// //ஒரு பெண் என்பவள் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளூக்கு (கர்ப்பத்திற்கு) அவள் தான் பொறுப்பு//// ஆண் பெண் உறவில் ஏற்படும் கர்பத்துக்கு பெண் மட்டும் தான் பொறுப்பு ஏற்ர்கவேண்டும் என்று நீர் கூறும் நிலையிலேயே உன்னுடைய அறிவிலித்தனம், பார்பன சிந்தனை வெளிப்டுகின்றதே அதற்கு யார் என்ன செய்ய முடியும்? இதற்கு நீர் முதலில் பதில் அளிக்கவும்…

        பின்பு நான் வைக்கும் பாப்பன ஹிந்துதுவாக்கள் தான் நந்தினியின் மீதான பாலியல் பலாத்காரத்துக்கும் ,கொலைக்கும் காரணம் என்ற என்னுடைய நேரடியான குற்றசாட்டுக்கு விளக்கம் கொடுக்கின்றேன்…

 5. அந்த மணிகன்டனுக்கு போலிஸ் லாடம் கட்டனும் அனானியன் லாடம் கட்டுறதுனா தெரியுமா நானே ஒரு தடவ லாடம் கட்டுற டிரிட்மென்ட்ட பாத்துட்டு பயந்து ஓடி வந்து இருக்கேன்

  இது மாறி பொம்பள கேஸ்ல மாட்டுறவன ஒரு போலீஸ் நன்னா அவனோட ரெண்டு கையையும் லாக்கப் கம்பி வழியா இழுத்து பிடிச்சுப்பார் இன்னொறு போலிஸ் பெரிய லட்டியால உள்ளங்காலில் இருந்து அடிச்சுன்டே இன்சு பை இன்சா மேல வரை அடிச்சுன்டே வருவார் அடி வாங்குறவன் வேர்த்து விறுவிறுத்து போவான் அவன் தண்னி கேட்டாக்கூட குடுக்கமாட்டா

  அப்பிடி ஒரு டீரிட்மென்ட் குடுத்துட்டா அவனுக்கு அடுத்து எந்த பொண்ன பாத்தாலும் டவுசர் ல ஒன்னுக்கு வந்துடும் சிலருக்கு லாடம் கட்டும்பொதே ஒன்னுக்கு வந்துடும்ன்றது வேற விசயம்

  மணிகண்டனுக்கு லாடம் கட்ட விடாம இந்து முன்னனி தடுத்து இருக்காலம் என்ன செய்ய நம்ம போலிஸு இந்த மாறி கேஸ்ல மாட்டுனவன் எஸ் சி யா இருந்தா உடனே லாட்டிய தூக்குது மெல் சாதிக்காரன் என்றால் கொஞ்சம் யோசிக்கிறானுக எனென்றால் அவனுக்கு பின்னாடி அரசியல் அதிகாரம் இருக்கு யெவனாது கவுன்சிலரோ இல்ல வட்ட செயலாளரோ வந்து அடிக்க விடாம பாத்துக்கறா

  பொம்பள கேஸ்ல மாட்டுறவன் எந்த சாதியா இருந்தாலும் அவனுக்கு சப்போர்ட் வரவன முதல லாடம் கட்டனும்னு சட்டம் போடனும்யா

  அப்புறம் அம்பின்றேலே அம்பினா என்னை என்னை உங்களை விட சின்ன பையன் என்பதற்க்காக அழைக்கிறீர்கள் என்ற அளவில் புரிந்து கொள்ளுகிறேன் அம்பி என்பது தம்பியின் மாற்று சொல்லாக பார்க்கிறேன்

  அப்புறம் இந்த தாழ்த்தப்ப்ட்டோர் ஆனையம் ,மனித உரிமை ஆணையம்னு இருக்கே இவாலெல்லாம் என்ன பன்றா பிரியானி தின்னுட்டு பல்லு குத்தின்டு இருக்காலனு தெரியல

  ஆனாலும் இதுல ஏன் பாபான இழுக்குறேல் பாப்பானே திருந்திட்டாலும் ஆதிக்க சாதிக்காரனும் அரசியல் வாதியும் திருந்த மாட்றா அல்லது இவனுகள திருந்த விடாம முட்டாளாவே பார்ப்பனியம் வச்சுண்டு இருக்கானு தெரியல அதாவது கோழில இருந்து முட்டை வந்தான்ற மாறி நீங்க என்னை அம்பினு சொன்னதால் அவா பாஸைலயே இந்த கமென்ட் போட்டேன் வேற ஒன்னும் இல்ல மத்த படி நீங்க நன்னா பேசுறேல்

 6. காமராஜர் பீ சி யா இருந்தாலும் போலிஸ் மந்திரியா கக்கன்ற எஸ் சி யை நியமித்தார் ஆனா இப்ப யாருமே திமுக அதிமுக ரெண்டுமே அவாவா கச்சில யாரு சிஎம் ஆ இருக்காலோ அவாளே போலிஸ் மந்திரியையும் வச்சுக்கறா எப்பவுமே எஸ் சி கு ஆதிதிராவிடர் நலத்துறையோ இல்ல மாட்டு நலத்துறயோதான் குடுக்குறா இந்த லச்சனத்துல சமூக நீதிய சாக்கடைலதான் தேடனும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க