Wednesday, January 20, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பன்னீரின் கண்ணீரும் சசிகலாவின் கைக்குட்டையும்

பன்னீரின் கண்ணீரும் சசிகலாவின் கைக்குட்டையும்

-

அம்மா சமாதி

ன்னீர் வடிக்கும்
கண்ணீரில்
அம்மா சமாதியே
அரை அடி உயரும்.

opsசசி துடைக்கும்
கைக்குட்டையில்
காவிரி டெல்டா
ஒருபோகம் விளையும்.

அம்மாவை நினைத்தாலே
அழத்தான் முடியும்.
அவர்களுக்கோ,
அழுகை
சிரிப்பின் முக்காடு
சிரிப்பு
அழுகையின் வேக்காடு.

அழுகைப் போட்டியில்
யாருக்கு முதல் பரிசு?.
தடுமாறுது தமிழகம்
அழுகாச்சி காவியத்தில்
அமுக்கி எடுக்குது ஊடகம்.

சிரித்ததனால்
நான் மனிதன் என்பது
பன்னீரு
சிரித்ததனாலேயே
நீ மனிதனில்லை
என்பது வெந்நீரு.

நீ
பெரிய  குளமென்றால்
நான்
மன்னார் குடி!

அம்மாவுக்கே
நான்தான் ஆன்மா
அடைக்கலம் தருமோ
அம்மா ஆன்மா?
மெரினா தியானத்தை
கலைக்கும்  சின்னம்மா!

பேயைப்  பற்றி
அதன் பாட்டியிடம்
புகார் சொல்வது போன்றது
சின்னம்மாவைப் பற்றி
பெரியம்மாவிடம்
முறையிடுவது.

sasikalaமுதலில்,
எனக்கு எதிரே
உட்காரும் தைரியம்
உங்களுக்கு எப்படி வந்தது?
கடைக்கண் பார்வைக்கு
கிடையாசனத்திலேயே கிடந்தவர்
அரியாசனத்திற்காக
பத்மாசனமா?
கோபத்தில் குமுறுது
அம்மாவின் ஆவி!

பேய்களை சமாளிக்க
ஒரே வழி
பேயாகி விடுவதுதான்.
பேய்களுக்கு கால்களில்லை
நிமிர்ந்து நிற்க முடியாது
நேரத்திற்கேற்ப நெளியலாம்.
இடம் தாவி அலைகின்றன
கரைவேட்டி ஆவிகள்.

பினைக்கைதிகளோடு
ஊரையே சுற்றுது
மன்னார்குடி பஸ்.
அம்மாவைச் சுற்றிவந்து
பழத்தைக் கேட்கிறார்
ஒ.பி.‍எஸ்.

நாம்
வாழ்வுக்கு வழி தேடுகிறோம்
அவர்களோ
சமாதி தேடுகிறார்கள்.

செத்தாலும் விடமாட்டார்
ஜெயலலிதா!
எச்சரிக்கைத் தமிழகமே
ஏய்ப்பவருக்கு
அம்மா சமாதி
ஏமாந்தவனுக்கு
அடுத்த சமாதி!

துரை. சண்முகம்

  1. இவர்களின் நிகழ்த்துக் கலைகளில் நிரம்பி வழியும் மகா காமடியைவிட உயர்ந்த தரத்தில் எந்தக் கலைவடிவமும் அமைந்துவிடாத வகையில் மேற்படிக் கலைஞர்கள் கவனமாக நாள்தோறும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.பேஷ்கார் பரிசு அவர்களில் ஒருவருக்குத்தான்.டி.எஸ்க்கு இல்லை.சாரி!எனவே மக்களே நடப்பைக் கூர்ந்து கவனித்து வாருங்கள். நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை.கூடுதலாகப் பாடமும் இருக்கிறது.
    எச்சரிக்கைத் தமிழகம் என்று இணைத்துப் படியுங்கள் அதற்கு ஒரு அண்மைப் பொருள் இருக்கிறது!

  2. இருவருமே கூட்டுக்களவானிகள்!மிடாஸ் சாராய்யக்கம்பேணி இத்தனை ஆண்டுகளாய் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சாகடித்தது [பன்னீருக்கு தெரியாதா?பயலலிதாவுக்கு தெரியாதா?அப்பெல்லாம் மூடிட்டு இருந்துட்டு இப்ப வீராவேசம் பேசும் வெந்நீர்ன் வேஷம் பலிக்காது!எல்லாம் அதிமுகவுக்கு ஓட்டு போட்ட முட்டாள்களை சொல்லணும்!

  3. super sir, arumaiyana thevaiayana kavithai, tamilnattin ullathai pirathipalikkirathu. Etho orenalil uthamanai mariya ops.sekarareddiyudan aditha mottaiyum, kollaiyum maranthu viduma enna!. Erandu kalavanigal modhalil oore vellaiaguthu.thanks.

  4. முகநூலில் எனது நேற்றைய காலைப்பதிவு
    எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? தமிழனின் தலைவிதி இப்படி ஆகிவிட்டது. இருவருடைய கடந்த காலத்தையும் பார்க்கும்போது ஊழலும் நடிப்பும் சதியும்தான் தெரிகின்றன. தமிழகத்தைத் தங்கள் சுயலாபத்திற்கு விற்பதற்கு இருவருமே தயங்குகிறவர்கள் அல்ல. இதில் ஒருவரை தமிழ் தேசிய வாதியாகச் சித்திரிக்கும் வேலை வேறு நடக்கிறது. அவர் தற்கொலை செய்துகொள்ள வைத்த பாலு செட்டியார் தமிழனா, சேட்டா, தெலுங்கனா?
    இதெல்லாம் போக, ஆயிரம் இரண்டாயிரத்துக்கே மக்கள் அல்லாடும்போது இப்போது மூன்று நாட்களுக்கும் மேலாக ரிசார்ட்டில் செலவுசெய்துவரும் கோடிக்கணக்கான பணம் எப்படி எளிதாகக் கிடைத்தது? அதை அரசு ஊழியர்களான எம்எல்ஏக்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? அதற்கு நடவடிக்கை எதுவும் இல்லையா? ஆயிரம் காரணங்களுக்காக ஆளுநர் தீர்ப்பை ஒத்திப்போடட்டும், இவர்களை இதற்காகவே கைது செய்யச் சொல்லி ஆணையிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஒருவேளை இந்த ஊழல் சட்டசபையைக் கலைத்துவிட்டு மீண்டும் (பெருமளவேனும்) ஊழல் அற்ற ஒரு மறுதேர்தலை நடத்துவதே நல்ல விஷயமாக இருக்கக் கூடும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க