Wednesday, June 7, 2023
முகப்புகலைகவிதைவெறிக்கும் விழிகளும் உறிக்கும் பார்வைகளும்

வெறிக்கும் விழிகளும் உறிக்கும் பார்வைகளும்

-

மார்ச்  8 : வேண்டும் புதிய உலகம் !

ழைக்கும் மகளிரின்
உரிமைகள் பொசுங்கையில்
திளைக்கும்
மகளிர் தின வாழ்த்து மட்டும்
தெரிவித்தால் போதுமா?

எதையும் கொண்டாடும் வர்க்கம்
இதையும் கொண்டாடினால் தீருமா?
பெண்கள்
சதையும் கிழிக்கும்
இந்த சமூகக் கட்டமைப்புக்கெதிராக
உதையைக் கொடுக்கும் அரசியலின்றி
ஒருநாளும்… பெண்நிலை மாறுமா?

போராட்டத்தின் தேவைகளை
புதைத்துவிட்டு,
கொண்டாட்டத்தின் கூத்துகள் நியாயமா?

கண்டனமும்
கருத்தும் சொன்னதற்காகவே
ஜே.என்.யு. மாணவி குர்மெகர் கவுரை
பலாத்காரம் செய்யப்போவதாக
பகிரங்கமாக மிரட்டுகிறது ஏ.பி.வி.பி.

பெண்கள் பேசினால்
கருத்தையும்
வல்லுறவு செய்யத் துடிக்கும்
அந்தக் காவி பயங்கரத்தைத் தண்டிக்காமல்
மகளிர் தினத்திற்கு
பொருள் உண்டா?

பிறப்புறுப்பை அறுக்கும்
இந்து முன்னணி கயவர்களை
இந்த ஊரில் வைத்துக்கொண்டே
எனக்கும் மகளிர் தின வாழ்த்தா!
கேட்கிறாள் அரியலூர் நந்தினி?

எதற்கு குதரறப்பட்டேன்
எனும் விவரம்
இறுதி மூச்சடங்கும் வரை தெரியாது,
என்னிடம் அந்த மிருகம்
என்ன எதிர்பார்த்தது
என்பது புரியாது,
யாரையும்
தப்பாக நினைக்கத் தெரியாமல்
நட்பாக நம்பினோம் சமூகத்தை…

சிதைக்கும் பாலியல்
ஆணாதிக்க வெறி அடிப்படையின்
சிதைக்குத் தீ மூட்டாமல்,
ஆபாச இணையம், சினிமா, நுகர்வு வெறியை
அப்படியே வைத்துக்கொண்டு
எமக்கும் மகளிர் தினமா?
கேட்கிறார்கள்
எண்ணூர் சிறுமி ரித்திகாவும்
போரூர் ஹாசினியும்.

வெறிக்கும் விழிகளைச் சேர்த்து
வெட்ட வேண்டியிருக்கிறது
இளநீர் சீவும் பெண்.

உறிக்கும் பார்வைகளையும் சேர்த்து
தூசு துடைக்க வேண்டியிருக்கிறது
பழம் விற்கும் பெண்.

உரசும் சீண்டலை இடைமறித்து
லாவகமாக பேருந்துக்குள்ளேயே
பயணிக்க வேண்டியிருக்கிறது
வேலைக்குப் போகும் பெண்.

மேஸ்திரியின் ‘பிளானுக்கு
தப்பிவரும் தருணங்களில்
தலையில் அழுத்தும் கற்களைவிட
சுமக்க முடியாததாகிறது
சுயமரியாதையுள்ள
பெண் தொழிலாளியின் மனது.

காவல் அதிகாரியே ஆனாலும்
கலெக்ட்டரே ஆனாலும்
ஏன்! கடவுளே ஆனாலும்
பெண்ணைப் பிடித்தாட்ட
சீசன் தவறாமல்
ஈசன் வருகிறான்!

மொத்த சமூகமே
பெண்ணை உற்று உற்றுப் பார்க்கும்
ஒரு பொருளாக்கி விட்ட பிறகு
போதாது வெறும் உபதேசம்…
மனித உணர்வுகளையே
பண்டமாக்கி பிண்டமாக்கும்
முதலாளித்துவ கட்டமைப்பையே
அகற்றினால்தான்
இனி பெண்ணுக்கும் சுவாசம்.

– துரை.சண்முகம்

 1. //முதலாளித்துவ கட்டமைப்பையே
  அகற்றினால்தான்
  இனி பெண்ணுக்கும் சுவாசம்//

  கடைசியில் மங்களம் சொல்லி முடித்துள்ளீர்கள் 🙂

  இன்றைக்கு பெண் சுதந்திரமாக இருப்பதற்கு முதலீட்டுத்துவம்தான் காரணம்

  1. பெண்களுக்கு நாப்கின் கண்டு பிடித்து அவர்கள் வாழ்க்கையை இலகுவாக்கியது
  2. பிரிட்ஜ் வாஷிமேஷின் டிஷ் வாஷர் மைக்ரோவெவ் ஓவன் ரெடி மேட் உணவு என்று சமையல் அறையில் இருந்து விடுதலை கொடுத்தது
  3. வீட்டை துடைத்து பெருக்க ரூம்பா ரோபாட்டுகள்
  4. குழந்தைகளுக்கு டயப்பர் , பால பவுடர்கள் என்று சுமையை குறைத்து
  5. கருத்தடை சாதனங்களை கொடுத்து கணக்கற்ற மக்கட் பேரில் இருந்து விடுதலை

  சோசியலிசம் பெண் உரிமை பேசுவதோடு சரி

  • Capitalism gave napkins,fridge,washing machine,dish washer,micro wave oven,ready made food,rumba robots,diaper,milk powder,contraceptives etc to women when it was afraid that modern women may not do household chores after their office work and that burden may come on the men.It has,from time immemorial, men would be ready to make the women as Gods (Example-Kannagi)Raman may not understand that Kannagi,was not happy when she was worshiped as “KARPUKKARASI”.She had lot of disappointments as an average woman.She was worshiped by men only because she silently lost her marital life without any murmur about the extramarital escapades of Kovalan.Shortly before his eventual death at Madurai only,Kovalan returned to Kannagi,leaving Madhavi,that too to persuade her to go to Madurai to start a new life by selling Kannagi’s silambu.The poor Kannagi had life long suffering.Kavignar Pralayan staged the play, “VANJIKKOTTAM”to highlight this particular aspect of Kannagi’s life.Raman may not know the real reason for Kovalan discarding Madhavi.Kovalan never liked Madhavi insisting on chastity by both men and women.
   On the other hand,socialism has given the much wanted awareness and self-confidence to women.Capitalism exploits women by providing the modern gadgets.
   In yesterday “The Hindu”(9-3-2017),I read about a woman (28 years)who resides at Kolkata.Her father expired even before her birth.Her mother,left for Mumbai to work,leaving her three months old baby with her grand mother.Even though they were platform dwellers,that grand mother was very particular about educating her grandchild.But,to meet both ends,this girl had to do rag picking on part time basis.The girl kept her rag picking a secret with her classmates.Whenever the secret was out,due to frustration she had to drop out of school.But,due to her determination,she completed schooling and also became a graduate.She was born Muslim and having married a Hindu,had to encounter the social stigma also.Usually,such people who come up in life from humble beginnings would forget their past.But this woman never forgets her past life with the platform dwellers.She became a social activist.She has assisted a local research team who are making a study on the platform dwellers.When the Hindu reporter interviewed her she said that she did not know much about “Women’s Day”.She wanted her three month old baby daughter to be more courageous than her to face the real life.

   • ஐயா பெரியவரே! சோசியலிசத்தில் இப்படி பக்கம் பக்கமாக வசனம் பேசுவது தான் பெருமை மற்றபடி நடைமுறையில் ஒன்றும் இல்லை .

    வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தால் நீங்களும் ஒருநாள் மனைவிக்கு உதவுவதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள் அதுவே கையால் துவைக்க வேண்டும் என்றால் மாணவியை துவைக்க சொல்லி விட்டு இணையத்தில் கருத்து சொல்லி கொண்டு இருப்பீர்கள் .

    சரி உங்கள் வாழ்க்கையில் எத்துனை நாட்கள் உங்கள் வீட்டில் , உங்கள் மனைவிக்கு உதவி இருக்கிறீர்கள் ?
    அந்த காலத்தில் எத்துனை முறை கல்லில் மாவாட்டி இருக்கிறீர்கள் ?

    வியாக்கியானம் பேசும் உங்களை போன்ற சோசியலை வாதிகள் கூறுவது சர்க்கரை என்று எழுதினால் இனிக்கும் என்பதை போன்றது

    • First,you tell how many husbands help their wives in their house-hold chores after the advent of many equipments listed out by you.Capitalism breeds male chauvenism.Your listing of equipments is irrelevant to the poem describing the male chauvenistic acts.Again you show your insensitivity to the distress encountered by women in the hands of those barbarians.

     • //First,you tell how many husbands help their wives in their house-hold chores after the advent of many equipments listed out by you.Capitalism breeds male chauvenism//

      I am not talking or asking about bad Capitalist, it is about you wonderful Socialist.
      Please pass the mic to Mrs Sooriyan.. 🙂

  • மிகவும் முதிர்ச்சியற்ற பேச்சு. தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதாலேயே பெண்களின் பிரச்சனை தீர்ந்து விட்டது என இவர் பேசுவது எப்படி இருக்கிறதென்றால், பணக்காரன் ஆகி விட்டால் போதும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சில முதிர்ச்சியற்ற ஜென்மங்கள் பேசுவதை போல் இருக்கிறது. ராமன் தக்காட்டும் முதலாளித்துவ நாடுகள் பெண்களுக்கு வெறும் மைக்ரோ அவன், வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் போன்றவற்றை மட்டும் கொடுக்கவில்லை, இதனோடு சேர்த்து விபச்சாரத்தையும் தான் பரிசாக கொடுத்து விட்டு சென்றது. பெண்ணை பாலியல் பண்டமாகவும், நுகர்வு பொருளாகவும் மாற்றியதில் முதலாளித்துவத்தின் பெருமையை அவ்வளவு எளிதில் யாரும் விட்டு கொடுத்து விட முடியாது.

   பெண்களுக்கு தேவை தொழில்நுட்பங்கள் மட்டுமல்ல, சுயமரியாதையும், கவுரவமும் தான். இந்த இரண்டையும் பெண்களுக்கு அளித்ததில் வேறு எந்த நாடுகளையும் விட சோஷலிச ருஷ்யாவும் சீனாவும் தான் முன்னணியில் நின்றன. என்னை கேட்டால் பெண்களுக்கான மிக பெரிய சாதனையாக அதனை தான் கூறுவேன்.

 2. அட ரமா!உன் மனைவி(சதி,பத்தினி,தர்ம பத்தினி)யைக் கொஞ்சம் பேசச் சொல்.அப்படியே ராமாயணத்தையும் கொஞ்சம் படிக்கச் சொல்,கூடவே டொனால்டு டிரம்ப்பின் பெண்கள் பற்றிய பொன் மொழிகளையும் உன் பத்தினிக்குக் காட்டு. நீ மேலே சொன்ன பெண்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல்சாதனங்களை உற்பத்தி,விற்பனை செய்யும் சமூகசேவகர்கள் யாரை எப்படி வைத்து விளம்பரம் செய்கிறார்கள் என்றும் பார் ராமா.அகத்தைப் பார்த்து சமூகத்தை பார்க்க முடியாத விழிகண் குருடோ நீ ராமா?அட ராமா!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க