Saturday, May 8, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ? சிறப்புக் கட்டுரை

நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ? சிறப்புக் கட்டுரை

-

துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகள், ஹோட்டல்களில் தங்கும் அறைகள், விடுதிகள், குளியலறைகள் ஆகிய இடங்களில் இரகசிய கேமராவை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் வக்கிரக் கும்பல்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இடங்களுக்குச் செல்லும் போது எச்சரிக்கையாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ’நமது வீட்டிற்குள் மட்டும் தான் நமது தனியுரிமைக்கும், அந்தரங்கச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு’ என்று எண்ணியிருந்திருப்பீர்கள். அப்படி ஒரு எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., இந்த நொடியிலும் கூட உங்களை ஸ்மார்ட் ஃபோன், அதிநவீன தொலைக்காட்சி மற்றும் கணினி மூலமாக உங்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து கொண்டிருக்கலாம். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ?

உங்கள் வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தின் இயங்குதளங்களுக்குள்  (Operating System) புகுந்து, உங்களது செயல்பாடுகளை ஒன்று விடாமல் பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பிவைக்கத்தக்க வகையில் மால்வேர்கள்(Malwares) என்றழைக்கப்படும் தீய மென்பொருள்களை உருவாக்கி அதனை வைத்து கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது சி.ஐ.ஏ. இதனை மறுக்க முடியாத ஆதாரங்களோடு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.

விக்கிலீக்ஸைப் பற்றி பெரியதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. முதன்முதலில், கடந்த 2010ம் ஆண்டு உலகப் பெரியண்ணன் அமெரிக்காவின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ். ஆப்கனிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் மற்றும் வீடியோப் பதிவுகளை அமெரிக்க இராணுவத்தின் சர்வர்களில் இருந்து ’ஹேக்’ (Hack) செய்து வெளியிட்டது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேவைப் பிடிக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெறி கொண்ட ஓநாய்களைப் போல இலண்டனில் இருக்கும் ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தின் வாயிலில் எச்சில் வழியும் நாக்கோடு இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றன.

அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தின் காண்ட்ராக்ட் ஊழியரான எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் ( NSA) ‘ப்ரிஸ்ம்’ என்னும் இரகசிய உளவு நடவடிக்கை குறித்து கடந்த 2013-ம் ஆண்டு அனைத்து ஆவணங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். அதன் மூலம் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தர்களின் கணினியிலிருந்து தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை திருடியதை அம்பலப்படுத்தினார். உடனடியாக அவரையும் கைது செய்யத் துரத்தியது அமெரிக்கா. ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்களில், ரசிய அதிபர் புதினை ‘நாய்’ எனத் திட்டி ஒரு அமெரிக்காவின் தூதரக அதிகாரி அனுப்பிய மின்னஞ்சலையும் சேர்த்து அம்பலப் படுத்தியதாலோ என்னவோ, ரசியா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

அதன் பிறகு தற்போது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ எவ்வாறு நாம் உபயோகிக்கும் மின்னணு சாதனங்களின் மூலம் நம்மை வேவு பார்த்து, நமது அனுமதியின்றியே நமது அந்தரங்கங்களைப் பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதன் முதல் பகுதியை வால்ட்-7 என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.

நமது கணினியில் செயல்படும் விண்டோஸ் (Windows), மாக்(MAC), லினக்ஸ்(Linux) ஆகிய இயங்கு தளங்களில் உட்புகும் வகையில் மால்வேர்களை (Malware) உருவாக்கி, அதனையே நம்மைக் கண்காணிக்க உபயோகித்து வருகிறது சி.ஐ.ஏ. . நமது கணினியின் அனைத்துத் தகவல்களையும் திருடவும், அதன் வெப்கேமராவையும் , மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் நமக்கே தெரியாமல் உபயோகித்து ஒலி, ஒளிப்பதிவு செய்து, தனது சர்வருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பிக் கொள்ளவும் ஏற்ற வகையில் இந்த மால்வேர்களை சி.ஐ.ஏ, உருவாக்கியிருக்கிறது.

உங்கள் கைப்பேசி உங்களைக் கண்காணிக்கிறது

கணினியைப் போலவே நமது ஸ்மார்ட் போன்களின் (Smart Phone) இயங்குதளங்களாகிய ஆண்டிராய்ட் (Android), ஐ.ஓ.எஸ் (IOS), ஆகியவற்றிற்குள் புகுந்து ஆக்கிரமிக்கும்படியான மால்வேர்களையும், செயலிகளையும்(Apps) உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் செயலிகளும் மால்வேர்களும் நமது அலைபேசியின் தகவல்களைத் திருடுவதோடு, நமக்குத் தெரியாமலேயே நமது செல்போனின் கேமராவையும், மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் ’ஆன்’ (ON) செய்து ஒளிப்பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பி வைக்கும்.

அது தவிர “ஜீரோ டேஸ்”(Zero Days) எனப் பெயரிடப்பட்ட இரகசிய நடவடிக்கைகளின் மூலமாக கடந்த ஆண்டு மட்டும் 24 ஆண்ட்ராய்ட் இரகசிய ஆப்களை சி.ஐ.ஏ. உருவாக்கியுள்ளது. இந்தச் செயலிகள் வாட்ஸப், டெலிகிராம், சிக்னல், வீபோ ஆகிய சமூக தகவல் பரிமாற்ற செயலிகளில் நாம் பகிர்ந்து கொள்ளும் குறுஞ்செய்திளையும், தொலைபேசி அழைப்புகளையும், வீடியோ அழைப்புகளையும், சி.ஐ.ஏ. சர்வருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கும். இதைப் போலவே ஐ.ஓ.எஸ்.-க்கான செயலிகளையும் சி.ஐ.ஏ. உருவாக்கியிருக்கிறது.

அடுத்தபடியாக, உங்கள் வீட்டு ஸ்மார்ட் தொலைக்காட்சியின்(Smart Television)  மூளைக்குள்ளும் கையை விட்டிருக்கிறது சி.ஐ.ஏ. கடந்த 2014-ம் ஆண்டிலேயே, சாம்சங் நிறுவனத்தின் எஃப் 8000 ரக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஊடுறுவுவதற்குத் திட்டமிட்டு, அத்திட்டத்திற்கு ”அழும் தேவதை” (Weeping Angel) எனத் திருநாமம் சூட்டியிருக்கிறது. ஸ்மார்ட்  தொலைக்காட்சிகளில், பயனாளரின் வாய் வழி உத்தரவிற்கிணங்க சேனல்களை மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ‘மைக்’கின் கட்டுப்பாட்டை தனது கையில் எடுத்துக் கொள்கின்றன சி.ஐ.ஏ. மால்வேர்கள். இந்த மைக்கை நமக்கே தெரியாமல் எப்போது வேண்டுமானாலும் ’உயிர்ப்பித்து’ நாம் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பதிவு செய்து இணையத்தின் மூலம் சி.ஐ.ஏ. சர்வருக்கு நேரடியாக அனுப்பும் வகையில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் மென்பொருளிலும் மால்வேர்களின் மூலம் மாற்றம் செய்திருக்கிறது அமெரிக்கா. இதெல்லாம் ஹாலிவுட் படங்களில் கற்பனையாக பார்த்திருப்போம். இனிமேல் அவை வெறும் கற்பனையல்ல.

அமெரிக்க வல்லூரின் திருட்டுக் கண்கள் – சி.ஐ.ஏ.

உங்கள் கணினியையோ, அலைபேசியையோ நீங்கள் அதில் உள்ள இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் மூலம் அணைத்து(Shut down) வைத்தாலும், அவற்றை உண்மையாகவே அணைய விடாமல், அவை அணைந்தது போன்ற ஒரு போலித் தோற்றத்தை இந்த மால்வேர்கள் ஏற்படுத்தும். ஆனால் பின்னணியில் மைக் மற்றும் கேமரா ஆகிய உபகரணங்கள் சி.ஐ.ஏ.வால் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதைப் போலவே தொலைக்காட்சியை நீங்கள் ரிமோட் மூலம் அணைத்தாலும், அதன் மைக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்கள் பேச்சுக்கள் பதியப்பட்டு சி.ஐ.ஏ.விற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.

இதை விட முக்கியமாக, ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொலை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தைக் கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. பல நவீன கார்களில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார்களின் கட்டுப்பாட்டகத்தின் மென்பொருளை இணையத்தின் வழியாகவே மேம்படுத்தும் வசதியை வைத்திருக்கின்றன. அந்த வசதியைப் பயன்படுத்தி, கார்களின் மென்பொருளை ஹேக் செய்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வேலையையும் சி.ஐ.ஏ. செய்திருக்கிறது. இதன் மூலம் சி.ஐ.ஏ.-வால் காரின் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் தளர்த்தி தமக்கு எதிரானவர்களை சந்தேகத்திற்கிடமில்லாத படி கொலை செய்யவும் முடியும்.

சி.ஐ.ஏ.வின் இந்த பொறுக்கித்தன்ங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் நிறுவனர் அசாஞ்சே, சி.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கைகளின் பின்விளைவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். சி.ஐ.ஏ இவ்வாறு உருவாக்கி வைத்திருக்கும் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட மின்னணு சாதனங்களைச் சிறிது ஹேக்கிங் தொழில்நுட்பம் தெரிந்த யார் வேண்டுமானாலும் எளிதில் தவறாக உபயோகித்துக் கொள்ள முடியும். அடுத்தவர்களின் அந்தரங்கத் தகவல்களை சேகரிப்பது, அதனைக் கொண்டு மிரட்டுவது, பணப் பரிவர்த்தனையை முடக்குவது, வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது என அனைத்து வகையான மோசடிகளையும் செய்ய முடியும். ஆகவே தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல, இது பெரும் இழப்பையும், துயரையும் ஏற்படுத்தப் போகும் செயல் ஆகும் என்று எச்சரிக்கிறார் அசாஞ்சே.

உலக நாடுகளை வேவு பார்த்த பெரியண்ணனின் டவுசரைக் கிழித்த ஸ்நோடன்

இதற்கு முன்னர் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் ’பிரிஸ்ம்’ என்னும் தூதரகத் தகவல் திருட்டு நடவடிக்கை குறித்த ஆவணங்களை வெளியிட்டபோது, அதில் தமது நாட்டையும், தமது கணினியையும் உளவு பார்த்ததற்காக பிரேசில் நாட்டின் அப்போதைய அதிபர் தில்மா ரூசப், அமெரிக்காவிற்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ரசிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் அப்போதைய மத்திய அரசு என்ன சொன்னது தெரியுமா?  “ இதெல்லாம் சர்வதேச அரசியலில் சாதாரணமாக நடக்கக் கூடிய விசயங்கள் தான்” எனக் கூறியது. சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து, ’மக்களின் உரிமைகளைப் பறித்து கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே’ எனப் போராடினால், ”அது இந்திய இறையான்மைக்கு எதிரானது” என சவுண்டு கொடுக்கும் இதே அரசு தான் அமெரிக்க ஆண்டை தம்மை வேவு பார்ப்பதை அங்கீகரித்து, ”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!” என மம்மியைப் பார்த்த எம்.எல்.ஏ.-வாகப் பம்மியது.

தற்போது உலக மக்கள் அனைவரையும் வேவுபார்க்கும் அமெரிக்காவின் திட்டம் அம்பலப்படுத்தப்பட்ட போதும், ’தேஷாபிமானி’ மோடி தலைமையிலான மத்திய அரசு இது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்ய வில்லை. தங்களது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்ப்பது அயோக்கியத்தனம் என்றோ, இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றோ வாய் திறக்கவில்லை.

அதற்குப் பதிலாக, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அமெரிக்காவின் இணைய வலைக்குள் இந்திய மக்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ’மாமா’ வேலையைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் மோடி. அது தான் மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம். ஊர் ஊருக்கு சாலை இருக்கிறதோ இல்லையோ, வை-ஃபை யும், இண்டெர்நெட்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என மோடி கும்பல் துடியாய் துடிப்பதன் நோக்கம், மக்கள் அனைவரையும் தமது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது தான்.

ஏற்கனவே, ஒட்டு மொத்தக் குடிமக்களுக்கும் ‘மாட்டிற்குச் சூடு போடுவது’ போல் கை, கண் அடையாளங்களை எடுத்து ஆதார் அட்டையைக் கொடுத்து அதனை அவரவர் வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கிறது இந்திய அரசு. நமது அன்றாட நடவடிக்கைகளில் அவசியமானதாக மாற்றப்பட்டுள்ள ஆதார் அட்டைக்கு நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களால் தவறாக உபயோகிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் அம்பலமானது.

நம்மைக் கண்காணிப்பு வளைக்குள் கொண்டு அந்து நமது தகவல்களைத் திருடி வியாபாரம் செய்யக் காத்திருக்கும் கூகுள், பேஸ்புக், மைரோசாப்ட் நிறுவன்ங்களின் தலைமை அதிகாரிகளான சுந்தர் பிச்சை, மார்க் சூக்கர்பெர்க், சத்யா நாதெலா வுடன் டிஜிட்டல் இந்தியா ‘மோடி’

நமது தனித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட தகவல்கள் எப்படி தனியார் நிறுவனங்களுக்கு கசியவிடப்பட்டன என்பது குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஸ்க்ரோல்.இன்(scroll.in) என்னும் இணையதளம் கேட்ட போது, அது அரசு இரகசியம் எனக் கூறி அது குறித்த தகவலை வெளியிட மறுத்தது மத்திய அரசு.

முதலாளிகளுக்கு  நமது சேமிப்பை அள்ளிக் கொடுக்க, தற்போது நம்மைப் பணமில்லாப் பரிவர்த்தனையை நோக்கி முட்டித் தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. பணமதிப்பு நீக்கத்தின் மூலமும், பணப் பரிவர்த்தனைக்கு எதிரான வங்கிகளின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும், இணையம் மற்றும் மொபைல் ஆப்புகளின் வழியான பரிவர்த்தனைகள் மூலமும் நம்மை அமெரிக்காவின் இணைய கண்காணிப்பு வலைக்குள் தள்ளிவிடுகிறது மோடி அரசு.

நாம் நமது அண்டை வீட்டுக்காரரைக் கூட நமது தனிப்பட்ட விவகாரங்களுக்குள் தலையிட அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கோ இருக்கும் அமெரிக்கா நமது படுக்கையறை வரை நமது ஒப்புதல் இன்றியே வந்து நமது அந்தரங்கங்களைப் படமெடுத்துக் கொள்ள அனுமதிக்கப் போகிறோமா?  அமெரிக்க ஆண்டையின் அத்துமீறல்களுக்கு இந்திய ஆளும் வர்க்க அடிமைகள்  வேண்டுமானால் ஒத்துழைக்கலாம், உழைத்து உணர்வோடு வாழும் நாம் ஒத்துழைக்கலாமா?

– நந்தன்

மேலும் படிக்க:

 1. இவர்களின் மால்வேர்களை பற்றி வெகுநாகளாக ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன். இவர்களின் கை வரிசை விண்டோஸ் & மேக்கில் வேண்டுமானால் 100% நடக்கலாம், ஏன்னென்றால் அது அவர்களின் கட்டுக்குள் இயங்கும் ஆப்ரேட்டிங் ஸிஸ்டம். ஆனால் லினக்ஸை பொருத்தவரை உளவு பார்க்கும் சாத்தியம் என்பது 20% மட்டுமே சாத்தியம், இந்த 20% கீலே குறிப்பிடும் காரணங்களிலால் தான் ஏற்ப்படுகிறது.

  *நீங்கள் தேர்வு செய்யும் லினக்கஸை டிஸ்ட்ரோவை பொருத்தது. டீபியன் & உபுன்ட் சார்புடைய அணைத்து லினக்ஸையும் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும், இவைகள் அமெரிக்காவின் கீழ் இயங்குகின்றன.

  *முழுக்க முழுக்க இலவச சாப்டுவேர்களில் இயங்கும் ஆப்ரேட்டிங் ஸிஸ்டமை தேர்வு செய்வது.

  *உங்கள் கணினியில் இயங்கும் ஆப்ரேட்டிங் ஸிஸ்டமை நீங்கள் தான் கட்டளையிட வேண்டும். அது உங்களுக்கு கட்டளையிட்டால் அந்த ஆப்ரேட்டிங் ஸிஸ்டமையோ அல்லது மென்பொருளையோ நீக்குவது நல்லது.

  *கணினி உலகை பொருத்தவரை ஊடுருவு முடியாதது ஏதும் இல்லை, ஆனால் தடுக்க முடியும்.

  மேல் இருக்கும் காரணங்களே லினக்ஸின் 20% தோல்விக்கு காரணம். இதற்க்கான ஆதார வீடியோ இனைப்பு, முழுக்க முழுக்க இலவச சாப்டுவேர்களில் இயங்கும் ஆப்ரேட்டிங் ஸிஸ்டத்தின் டவுன்லோடு லிங்ககை கீழே குடுத்துள்ளேன்.

 2. //அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அமெரிக்காவின் இணைய வலைக்குள் இந்திய மக்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ’மாமா’ வேலையைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் மோடி. அது தான் மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம்//

  மூளை சலவை கட்டுரைகளை எழுதும் பொழுது இப்படி அப்பட்டமாக உள்நோக்கம் தெரியும் படி எழுதாமல் சற்றே சுருதி குறைத்து எழுதுங்கள் 🙂

  • @ Raman,

   உங்களுடைய மறுமொழியின் நோக்கம் என்ன?

   விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள சி.ஐ.ஏவின் உலக மக்களை உளவு பார்க்கும் திட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?

   கருத்தை பிறருக்கு சொல்வதற்கு தான் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. நோகமின்றி எவையும் எழுதப்படுவதில்லை, சொல்லப்படுவதில்லை. ஏன் உங்கள் மறுமொழி கூட ’மூளைச் சலவை கட்டுரை’ என்ற கருத்தை படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க, கருத்தை கட்டமைக்க, அதாவது மூளைச்சலவை செய்ய தான் போட்டுள்ளீர்கள்.

   மரபு வழிப்பட்ட பத்திரிக்கைகள், காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி நவீன தகவல்தொடர்பு சாதனங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மக்களின் சிந்தனையை கருத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

   IoT, Smart appliances என்று விரியும் வலைப்பின்னல் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தும் நன்மைகளை விட அவர்களை கண்காணிக்கும் உளவு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதை உங்களால் மறுக்க முடியுமா?

   எதையும் ஆதாரப்பூர்வமாக மறுக்க வேண்டும் அமைச்சரே! ’நீர் என்ன விளக்கம் சொன்னாலும் என் மனம் ஏற்க மறுக்கிறது’ என்று சொன்னால் எப்படி சார்?

   • @அக்காகி @கி.செந்தில்குமரன்

    // எதையும் ஆதாரப்பூர்வமாக மறுக்க வேண்டும் அமைச்சரே! ’நீர் என்ன விளக்கம் சொன்னாலும் என் மனம் ஏற்க மறுக்கிறது’ என்று சொன்னால் எப்படி சார்? //

    மூளை சலவையாக பட்டது தொண்ணூறு சதம் உண்மையையும் பத்து சதம் திசை திருப்பும் விளக்கத்தையும் சேர்த்து ஊட்டுவது ஆகும் .

    அமேரிக்கா உளவு பார்த்த கதை வேறு. டிஜிட்டல் இந்தியா கதை வேறு .
    அதற்காகத்தான் இது என்று திசை திரும்புவதை தான் அவ்வாறு கூறி இருந்தேன்.

    எல்லா நாடுகளுக்கும் உளவு அமைப்பு இருக்கிறது . காலம் காலமாக உளவு செய்து தான் வருகிறார்கள் .

    கொஞ்சம் சோசியலிச ரஷ்யா காலத்திற்கு பயணித்தால் , அப்போதும் இருந்தது . தன குடிமக்களையே உளவு பார்த்தால் என்பது கம்யூனிசத்தின் தூண் . இன்றைக்கு அதையே முதலீடுத்துவ அரசாங்கங்கள் செய்கின்றன .

    அரசாங்கத்தை முழுமையாக நம்ப முடியாது என்பதால் தான் அமெரிக்காவில் ஆயுதம் ஏந்தும் உரிமை அரசியல் சாசனத்தில் தரப்பட்டு உள்ளது .

    அடுத்து நெருப்பினால் வீடு எறியவும் வாய்ப்பு உண்டு என்தால் உணவு சமைப்பதை நிறுத்திட முடியுமா ?

    மின்சாரத்தினால் உயிர் போக வாய்ப்பு உண்டு என்பதால் , மின்சாரம் இல்லாமல் இருந்திட முடியுமா ?

    மனித குளம் நன்மை தீமையை சீர் தூக்கி அடுத்த கட்டத்திற்கு செல்லும் . எல்லா காலத்திலும் ஆபத்து ஆபத்து என்று சொல்பவர்கள் மனிதனை கற்காலத்திற்கு தான் கொண்டு செல்வார்கள் .

    ஆதார் காம்ரமைஸ் பற்றி கவலை வேண்டாம் . ஏற்கனவே ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் என்று எல்லா தாகவுலும் அமெரிக்க்கவிடம் இருக்கிறது 🙂

    அடுத்து அமெரிக்கர்களின் வண்டவாளம் மட்டும் வெளியே வந்து இருக்கிறது . மற்ற நாடுகள் என்ன யுத்தி செய்கின்றன என்பது பற்றி தெரியாது .

    இந்த நவீன உலகின் டேகினாலஜி பிரச்சினையின் ஆரம்பத்தில் இருக்கிறோம் . இது இன்னும் ஏவால்வ் ஆகி செல்லும் தூரம் நிறைய இருக்கிறது .

    அடுத்து இணையத்தை குறை கூறுபவர்களின் எத்துனை பேர் அவை எல்லாம் வேண்டாம் என்று வாழ தயாராக இருக்கிறீர்கள் ? கீழே ஒரு பெண்மணி கூறியது போல சோசியலிச பிரகடனம் செய்துவிட்டு வழக்கம் போல வேலை செய்வார்கள் .

    //நவீன தகவல்தொடர்பு சாதனங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மக்களின் சிந்தனையை கருத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?//

    இப்பொழுதான் உண்மையை தெரிந்து கொள்ள முடிகிறது . இதற்கு முன்னர் பிரச்சார செய்தி மட்டும் அறியும் உரிமை இருந்தது . வினவுவில் நிறைய மக்கள் வாழ்க்கை அலசல் கட்டுரை வருகிறது . பொது ஜன ஊடகத்தை மட்டும் நம்பும் நிலை இருந்தால் நம் கதி அதோ கதி! அத்தகை ஒரு இன்பிரா ஸ்ட்ரக்சர் செய்து கொடுத்த கார்பரேட்களுக்கு நன்றி சொல்வோம்

  • சிம் கார்டுகள் வாங்க கடைகாரரின் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்படும் நம் கைரேகை விவரங்கள் ஆதார் விவரங்களுடன் ஒப்பீடு செய்யபடுகிறது அல்லவா? அதன் பின் அவைகள் save செய்யபட்டு பின்பு வேறு யார் மூலமாகவாது தவறான முறையில் பயன்படுத்தப்பட சாத்தியங்கள் உள்ளனவா இராமன் ?

  • இராமன் , இந்த விவாதங்களில் திருவாளர் மணிகண்டன் அவர்கள் நேரடியாகவே மோடியையும் பிஜேபியையும் பாதுகாக்கும் நோக்கில் பேசிக்கொண்டு உள்ளார்… அது அவரின் குறைந்த பட்ச நேர்மையை காட்டுகின்றது! ஆனால் நீங்கள்!

   • கணினி பேராசிரியரான நீங்கள் , டிஜிட்டல் இந்தியா திட்டம் அமெரிக்காவின் கைக்கூலி திட்டம் என்று நம்புகிறீர் என்றால் எந்த அளவு கல்ட் கல்ச்சுரலில் மூழ்கிவிட்டேர்கள் என்பதை காட்டுகிறது .

    மோடியை திட்ட வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு எல்லாவற்றையும் படிக்கிறீர்கள் , உங்களுக்கு எனது நேர்மையை அளக்கும் திறமோ அறமோ இல்லை.

    அடுத்து கருத்துக்கு பதில் கருத்தை வைக்காமல் தனி நபர் தாக்குதலில் இறங்கினீர்கள் என்றால் உங்களோடு விவாதிப்பதை தவிர்த்துவிடுவேன் .

    • மணிகண்டன் அவர்கள் மோடியை அவரின் ஹிந்துத்துவா கொள்கை அடிபடையிலும், அதனை ஒட்டிய செயல் பாடுகள் என்ற நிலையிலும் ஆதரித்துக்கொண்டு உள்ளார்..நான் மோடியை அதே கொள்கைகள் அடிப்டையிலும் , மக்கள் விரோத செயல்திட்டங்கள்/செயலபாடுகள் அடிபடையிலும் எதிர்த்துக்கொண்டு உள்ளேன்…! ஆனால் நீங்கள் இராமன்?

    • ஆனால் நீங்கள்……! சமிபகாலமாக மோடியின் கொள்கைகளையோ செயல்பாட்டையோ நேரடியாக ஆதரிக்காமல் ஆனால் அதே நேரத்தில் அதனை யார் எல்லாம் எதிர்கின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் எதிர்ப்பு கடிதம் எழுதிக்கொண்டு உள்ளீர்கள்! இது என்ன விதமான அணுகுமுறை இராமன் ? நான் அறித்துக்கொள்ளாலாமா? என் கருத்தில் தனிநபர் தாக்குதல் ஏதும் இல்லையே? எனவே உங்கள் பதிலை எதிர்பார்க்கலாமா????

     • நாம் எந்த ஒரு விவாதத்திலும் , ஒருவர் கூறும் கருத்துக்களை கொண்டு எடை போடாமல் யார் கூறுகிறார் என்பதை கண்டறிவதில் ஆர்வம் காட்டுகிறோம் .

      என்ன மாதிரியான ஆள் என்பதை வைத்து, அவரை எந்த இடத்தில வைப்பது என்று சுலபமாக கணக்கிட்டு அவரது மனவோட்டத்தை அளக்க இது உதவுகிறது .

      இவர் கருணாநிதி தொண்டர் , ஜெ ஜெ தொண்டர் என்று செய்யப்படும் நபரை மிக சுலபமாக இவர் என்ன பதில் கூறுவார் என்று தெரிந்த கொண்டே சீண்டலாம் .

      அடுத்து ஜெ ஜெ தொண்டரை ஜெ ஜெ செய்யும் தவறுகளுக்கு வக்காலத்து வாங்க வைத்து, அவர் வாயாலேயே முட்டாள் என அறிவிக்க செய்து வேடிக்கை பார்க்கலாம் .

      தொண்டர் என பிறரால் அறியப்படும் நபரும், அப்படி வக்காலத்து வாங்குவது தனது கடமை என்று எண்ணி , நியாயம் கற்பிக்க தவறமாட்டார் .

      நான் அப்படி பட்ட தொண்டன் கிடையாது . மோடி செய்தார் கேடி செய்தார் என்று பார்க்காமல் , என்ன செய்தார் எப்படி செய்தார் என்று செயலை மட்டும் அளக்கிறேன். அந்த செயல் நல்லதா கெட்டதா என்று விவாதம் செய்கிறேன் .

      மோடி அடிமையே , வெண்ணை அறிவாளியே என்று ஏகடியம் செய்து ரவுசு பண்ணலாமா வேண்டாமா என்கின்ற தயக்கம் உங்களிடம் வந்ததற்கு அதுவே காரணம் . 🙂

      உதாரணமாக மோடி வேலை உத்திரவாத திட்டத்திற்கு, இப்பொழுது அதிக பணம் ஒதுக்கி இருக்கிறார் . இது அவர் பண மதிப்பு நீக்கம் என்னும் தவறு செய்ததால் , ஏழை மக்கள் பாதிக்காமல் இருக்க செய்கிறார் . இந்த நஷ்டம் பண மதிப்பு நீக்கத்தின் நஷ்டத்தோடு கணக்கிட பட வேண்டியது . அவருடைய தவறான செயலால் ஏற்பட்ட நஷ்டம் .

      அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது எப்படி என்று பார்த்தால் , போர்டு உறுப்பினர்கள் சேர்ந்து திட்டம் இட்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல . ரகுராம் ராஜனை துரத்தி விட்டு தனி நபர் எடுத்த முடிவு . இது ஜனநாயக மாண்பை குலைக்கும் செயல் .

      தவறை மறைக்க அடுத்து ஜி டி பீ கணக்கீட்டை மாற்றி செய்ததையும் ஆதரிக்கவில்லை

      மோடி பக்தனாகி இவற்றுக்கெல்லாம் ஆதரிக்கவில்லை .

      அமெரிக்க காபிடலிசத்தை ஆதரிக்கும் நான் , அவர்கள் இசுலாமியரை தனிமை படுத்தி ஏர்போர்ட்டில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்புவதை ஆதரிக்கவில்லை .

      சரியான செயலா என்பதை மட்டும் பார்க்க முயலுகிறேன் .
      நீங்களோ அந்த தொண்டரை போல , கண்மூடித்தனமாக எதிர்க்கிறீர்கள். மோடி செய்தால் தவறு என்று ஒரு கருத்தோடு செயலை அளக்க முயலுகின்ரீர் .

      • Raman is carried away by the media reports (as usual false reports)He should not read headlines alone.Example-this news item dated 2nd Feb,2017 in Economic Times.The headline given by Economic Times for this “sensational”news item-“Arun Jaitley gives HIGHEST EVER ALLOCATION for MGNREGS in Budget,2017″Friends like Raman should read the news item fully.It runs like this-Arun Jaitley gave highest allocation for MGNREGS at Rs48000 crore.After reading the next line in the news item,our happiness about “highest”ever allocation evaporated.Yes, in the next line it has been stated that the Budget allocation for MGNREGS for 2016-17 was Rs47499 crore (original allocation was Rs 38500 crore and the remaining Rs8999 crore through supplementary budget allocation)Even after the supplementary allocations,pending wage dues to workers amount to Rs13000 crore as at Feb,2017.The Supreme Court came heavily on the Center for delayed payment to workers under the scheme last fiscal,the second consecutive year of drought.The supplementary allocations were made only after receiving the brickbats from SC.As of now,only 46% of payments have been made within the stipulated period of 15 days.The scheme itself was brought to remove hunger from poor workers.Yet,only 46% of payments have been made within 15 days in spite of much touted Aadhar linkage in the bank accounts of these workers.Read this link to know the fine prints-economictimes.indiatimes.com/news/economy/policy/highest-ever-allocation-for-mgnrega-at-rs-48000-crore-arun-jaitely/articleshow/56907695.cms I am quite happy in one respect.About an year back,Raman was criticizing MGNREGA scheme like Modi did in 2014.I had lot of arguments with him.Now Raman talks about higher allocation for the same scheme.

      • இராமன் உங்களின் நீண்ட ஆனால் வலுவில்லாத வாதத்துக்கு நன்றி! மோடியின் மீதான உங்கள் குற்றசாட்டுகள் மிகவும் மேலோட்டமானவை என்பதற்கு நான் பெரிய அளவில் வாதடவேண்டியது இல்லை என்றே நினைகிறேன். மண்ணில் ஒரு காலும் ,ஆற்றில் மறுகாலும் வைத்துக்கொண்டு மோடியை பற்றிய விமர்சனத்தை நீங்கள் வைப்பது மிக எளியதாவே உங்கள் வாதங்கள் மூலம் புலனாகிறது. ஒரு உதாரணத்தை இங்கு வாதத்துக்கு எடுத்துகொள்வோம் “மோடி வேலை உத்திரவாத திட்டத்திற்கு, இப்பொழுது அதிக பணம் ஒதுக்கி இருக்கிறார் “ என்று கடைதெடுத்த பொய்யை மோடிக்கு ஆதரவாக நீங்கள் முன்வைகிண்றீர்கள்! உண்மை நிலவரம் என்னவென்று சூரியன் அவர்கள் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.! படித்துவிட்டு அவரின் தெளிவான வாதத்துக்கு பதில் அளிக்க முயலுங்கள்…

       அடுத்ததாக இந்திய மக்களின் டிஜிட்டல் விவரங்கள் பாதுகாப்பாக தான் உள்ளனவா ? குறிப்பாக ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக தான் உள்ளனவா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். அதனை கூட இந்த கட்டுரை மீதான உங்கள் விமர்சனத்தின் அடிப்டையில் தான் எழுப்பியிருந்தேன். அதற்கு பதில அளிக்க முயன்ற நீங்கள் என்ன கூறினீர்கள் தெரியுமா?” ஆதார் காம்ரமைஸ் பற்றி கவலை வேண்டாம் . ஏற்கனவே ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் என்று எல்லா தாகவுலும் அமெரிக்க்கவிடம் இருக்கிறது” என்று கூறி புன்னகை பூக்கிண்றீர்கள் ! ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் ஆகிய இணைய பயன்பாடுகள் மூலம் அமேரிக்க அரசு இந்தியர்களை பற்றி பெறும் தகவல்களும் ஆதார் வியாவரங்ககள் அவர்கள் பெறுவதும் எப்படி சமனாக உள்ளது என்று பார்க்கின்றீர்கள்? இந்தியர்களின் கைரேகைகள் , விழி திரை விவரங்ககள் எதுவும் ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் மூலம் பெறப்படுவது இல்லை… ஆனால் ஆதாரில் உள்ள அந்த விவரங்கள் பாதுகாப்பாக தான் உள்ளனவா என்ற விசத்தில் வாய் திறக்க மாட்டேன் என்று ஒற்றைகாலில் நிற்கின்றீர்கள! ஏன் அப்படி ராமன்? இன்னும் சிந்தனை செய்யுங்கள் நண்பரே!

       • //உங்களின் நீண்ட ஆனால் வலுவில்லாத வாதத்துக்கு நன்றி//

        You cant grasp, I pity you.

        //
        மோடி வேலை உத்திரவாத திட்டத்திற்கு, இப்பொழுது அதிக பணம் ஒதுக்கி இருக்கிறார் “//

        When it is expected to be closed even status-quo will be considered excessive.

        //ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் ஆகிய இணைய பயன்பாடுகள் மூலம் அமேரிக்க அரசு இந்தியர்களை பற்றி பெறும் தகவல்களும் ஆதார் வியாவரங்ககள் அவர்கள் பெறுவதும் எப்படி சமனாக உள்ளது என்று பார்க்கின்றீர்கள்? //

        Agreed :). Facebook/linkedin has more information. What work one does, who works in military , when he started his job , when he got promoted. who are all working in ISRO, who works in Presidents office…

        //இந்தியர்களின் கைரேகைகள் , விழி திரை விவரங்ககள் எதுவும் ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் மூலம் பெறப்படுவது இல்லை//

        OK, I will spoon feed you again.
        Many phones are unlocked with finger prints. windows phone unlocks with retina scanning. and high pixel photo of a hand is enough to reproduce finger prints.
        And most of us have scanned the Aadhaar card and storing in email/whatsapp/google drive.

        Now why should American spies have to put extra effort to get what is already available to them ? 🙂

        //ஆதாரில் உள்ள அந்த விவரங்கள் பாதுகாப்பாக தான் உள்ளனவா என்ற விசத்தில் வாய் திறக்க மாட்டேன்//

        You cant grasp my previous answer.
        Many years ago American company decided to put deadly AC current inside the home. What would have told about that scheme had you lived on those days?

        Today bank accounts passwords can be stolen and hacked most of the time. What would be your approach? Till we find 100% foolproof solution , lets not do it?

        Humanity weighs the cost of benefit and if it outweighs cost of loss, that solution will continue.
        Benefit for Aadhar scheme is countless, you havent been to such a society and you cant understand.

        What is your worry about losing citizen finger print information?
        Foreign govt are not interested in Senthilkumarans finger print. That has no value for them.
        Hackers can get it and impersonate online. That is the cost for convenience. Few percent of people will be expected suffer .

        Now a real concern one should have for Aadhar is not hacking. It is about what will happen if govt falls under dictatorship or racist govt is elected. What will happen if govt queries ,find all muslim leaders /christian leaders/opposition party leaders like that. Those are the real problem of Aadhar. As of now govt has addressed this issue, by giving a constitutional rights for this authority. Their job is to identify citizen and need not give reports on those data.

        • //As of now,govt has addressed this issue,by giving a constitutional rights for this authority//
         How many constitutional authorities have lost their authority as of now?RBI has lost it in the matter of demonetization. UGC has already lost it.ISO has lost it and that is why fumbled GDP figures are released.By posting RSS affiliated heads,ICCR,ICHR,Film Institute of India and even Niti Ayog have lost it.Not tolerating its constitutional authority only,Planning Commission was dismantled.If this regime is not to be called dictatorship,what alternative word can be used to describe it?

        • //When it is expected to be closed even status-quo will be considered excessive//
         The mask he put to himself and for the present govt by Raman is removed by himself.He could not even pretend to talk for the poor.If a scheme brought in by the previous govt is watered down,then what name you can give for the present powers that be?

        • இராமன், உங்கள் வாதம் வலுவற்றது என்றேன்… அதக்காக என்மீது பரிதாபப்படுகிண்றீர்கள் ! முரணாக உள்ளதே உங்கள் பதில்.மீண்டும் வலுவான வாதத்தை எடுத்துவைப்பதனை நீங்கள் த்வீர்த்துவிட்டு விதண்டா வாதம் செய்கின்றீர்கள் இராமன் ! “மோடி வேலை உத்திரவாத திட்டத்திற்கு, இப்பொழுது அதிக பணம் ஒதுக்கி இருக்கிறார்” என்ற உங்களின் மேம்போக்கான வாதத்தை தெளிவாக விளக்கி பேசுவதனை விட்டுவிட்டு “அந்த MGNREGS திட்டம் மூடப்படும் நிலையில் இப்போது உள்ள அதன் நிலையே அதிகம்” என்று பேசுகின்றீர்கள்.. அந்த திட்டம் யாரால் மூடப்டும் நிலைக்கு தள்ளபட்டது? இதே மோடியால் தானே? அப்படி இருக்க அவரே அந்த MGNREGS திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார் என்று முரணாக பேசுகின்றீரே! உண்மையை கூறுவது என்றால் நீதி மன்ற உத்தரவுக்கு இணங்க பழைய பாக்கியை தான் மோடியின் அரசு பைசல் செய்து கொண்டு உள்ளது ! இந்த விவரங்கள் கூட தெரிந்துக்கொள்ள இயலாத உங்களுக்காக நான் உண்மையிலேயே பரிதாபப்படுகின்றேன்….

         அடுத்ததாக ஆதார் தகவல்களை பற்றிய பாதுகாப்பை பற்றி கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கு நீங்கள் கொடுத்து உள்ள விளக்கம் அறிவிற்கு முரணாக உள்ளது. Facebook/linkedin ஆகியவற்றில் நாம் கொடுக்கும் விவரங்கள்(என்ன வேலை செய்கின்றோம் ,எங்கு வேலை செய்கின்றோம் ,ராணுவத்தில் வேலை செய்கின்றோமா போன்ற விவரங்கள்) கட்டாயமானவை அல்ல…. நாம் பாதுகாக்க நினைக்கும் விவரங்களை இந்த பொது இணையவெளியில்-சமுக ஊடக்கங்களில் நம்மால் தவிர்க்க முடியும். ஆனால் ஆதார் விசயத்தில் நம்மால் அப்படி தவிர்க்க இயலாது. கண்டிப்பாக அந்த விழி திரை விவரங்களை, கைரேகை விவரங்களை நாம் அளித்தே ஆக வேண்டும்…

         புதிய தலைமுறை ஸ்மார்ட் போன்களில் உள்ள வசதிகளை பற்றி பேசுகின்றீர்கள்…. இந்த போன்களை கைரேகைகள் மூலமாகவும், விழி திரை செய்திகள் மூலமாகவும் பாதுகாக்க முடியும் என்கின்ரீகள்… உண்மை தான்… ஆனால் அதில் வேறு ஒரு உண்மையும் அடங்கியுள்ளது. இத்தகைய பயோமேட்ரிக் பாதுகாப்புகள் கட்டாயமானவை ஆல்;அல்லவே! நாம் விருப்பபட்டால் மட்டுமே இவற்றை பயன் படுத்திகொள்ல்லாம் அல்லவே? ஆனால் ஆதார் விசயத்தில் நம்மால் அப்படி தவிர்க்க இயலாது. கண்டிப்பாக அந்த விழி திரை விவரங்களை, கைரேகை விவரங்களை நாம் அளித்தே ஆக வேண்டும்…

         ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்ற என்னுடைய எளிய கோள்விக்கு நீண்ட பதிலை கொடுத்துக்கொண்டு உள்ளீர்கள்! என்னுடைய கேள்வியே மிக எளிதானது! ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் ஆம் அல்லது இல்லை என்று தானே இருக்கமுடியும் இராமன் ! அந்த ஆதார் விவரங்கள் சமுக முன்னேற்றத்துக்கு பயன்படுகிறதா/இல்லையா என்பது பற்றி நான் கேள்வியை எழுப்ப வில்லையே! இந்த கேள்விக்கு உரிய பொருத்தமான பதிலை விரைவில் அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்!

         • ////ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் ஆம் அல்லது இல்லை என்று தானே இருக்கமுடியும் இராமன்//

          I dont have time for trolls like you. I am really sorry for students getting their knowledge to build digital world from you.

          • தனி மனித தாக்குதலில் இறங்கக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டவர் அந்த ஒப்பந்தத்தை மீறுகின்றீர்கள்! என்ன ஆச்சு உங்களுக்கு இராமன் ? ஆம் , இல்லை என்று கூறுவதில் என்ன பிரச்சனை உங்களுக்கு இராமன் !

          • உங்கள் தனி மனித தாக்குதல்களை நான் ஏற்காவிட்டால் அது உங்களுக்கே வந்து அடையும் அல்லவா? நான் ஏற்க்கவில்லை! எனவே நீங்கள் தான் மானுடர்களுக்கு தீங்கிழைக்கும் குணத்துடன் (trolls), மானுடர்களுடன் இணைந்து செயல் ஆற்ற இயலாத ஈன இழி பிறவியாகவும் நீங்கள் தான் இங்கு காட்சி அளிகிண்றீர்கள் இராமன்

          • //ஆம் அல்லது இல்லை என்று தானே இருக்கமுடியும்//

           என்ன கைய புடுச்சு இழுத்தியா ? என்கின்ற ஜோக்கு தான் ஞாயபகம் வருகிறது . இது மாதிரியான டெக்கினிக்குகளை பயன்படுத்தியதால் தான் “தமிழ் ” என்பவரோடு விவாதிப்பதை நிறுத்தினேன் .

           You deserve it. After giving the answer and spoon feeding you, You keep on trolling. Read my answers 10 times, may be there is a chance you get it. This is my last reply to you and I am giving up on you for good.I have better things to do.

          • லூசு தனமாக பேசிக்கொண்டு உள்ளீர்கள் ராமன். ஆதார் விவரங்களை சிம் கார்டு வாங்க என்று பலவிதத்திலும் பயன் படுத்தும் போது அந்த விவரங்கள் பாதுகாப்பாக தான் இருகின்றனவா என்ற கேள்வியை முதலில் எழுப்பி இருந்தேன். அதற்கு என்ன பதில் அளித்தீர்கள் தெரியுமா? “ஆதார் காம்ரமைஸ் பற்றி கவலை வேண்டாம் . ஏற்கனவே ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் என்று எல்லா தாகவுலும் அமெரிக்க்கவிடம் இருக்கிறது”.
           அதற்கு என்னுடைய பதில் விழி திரை விவரங்கள் மற்றும் கைரேகை விவரங்கள் ஜிமெயில் யாஹூ வாட்ஸாப்ப் ஆகியவற்றால் கட்டாயமாக பதிவு செய்யபடுவது இல்லையே ! ஆனால் ஆதாரில்? இந்த விவரங்கள் கட்டாயமாக பதிவு செய்யபடுகின்றனவே! நூறு கோடி இந்திய மக்களை பற்றிய விவரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்ற என்னுடைய எளிய கேள்வியை பற்றி சிந்திக்க இயலாத நீங்கள் தானே மானுடர்களுக்கு தீங்கிழைக்கும் குணத்துடன் (trolls) பேசீக்கொண்டு உள்ளீர்கள்!

          • இராமன்!!!!, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விண்ணப்ப விவரங்களை, டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளதாக, அவரது மனைவி மத்திய அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த தோனி, சமீபத்தில் தனக்கு ஆதார் எண் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இப்பணியில் ஈடுபட்ட சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் இதை பெருமையுடன் டுவிட்டரில் போட்டோக்களுடன் வெளியிட்டது !

          • இராமன,ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் திருடப்படாமல், மத்திய அரசால் எப்படி தடுக்க முடியும்? வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அளிக்கப்படும் தகவல்கள் திருடப்படாமல் தடுக்கும் தொழில் நுட்பம் உள்ளதாக, அரசால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?

          • இனி, ரகசியம் என்பது எங்கே இருக்கிறது. தோனியின் விண்ணப்பம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள், பகிரங்கமாக இடம் பெற்றுள்ளது கவலை அளிக்கிறது

           -தோனியின் மனைவி சாக் ஷி

 3. அருமையான கட்டுரை, தொழில்நுட்பம் என்பது வளர்ச்சியின் குறியீடு என்கிற மூட நம்பிக்கையை உடைத்தெறிகிறது கட்டுரை. தொழில்நுட்பங்கள் என்பவை என்றுமே மக்களுக்காக உருவாக்கப்படுபவை அல்ல. முன்பு முதலாளிகளின் லாப வெறிக்காக உருவாக்கப்பட்டது, இன்று அரசின், உளவு அமைப்புகளின் ஊடுருவலுக்காக உருவாக்கப்படுகிறது. இன்று இருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களில் நூற்றுக்கு 90 சதவிகிதம் மனிதனுக்கு பயனில்லாதவைதான்.

  பிரிட்டிஷ்காரன் தன்னுடைய வர்த்தக நலன்களுக்காகவும், தான் பயணம் செய்வதற்காகவும் தான் இந்தியாவில் ரயில் பாதையை அமைத்தான், போகிற போக்கில் அப்படியே இங்கிருக்கும் மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தான். இது அப்படியே இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பொருத்தமாக இருக்கிறது. தொழில்நுட்பங்கள்(All Neo-technologies) என்பது இன்று நாம் வாழும் இந்த பூமியை மட்டுமல்ல, நமது ஆத்மாவையே அழித்து, இயந்திரங்களோடு இயந்திரமாய் மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆகவே தேவையற்ற போலி அறிவியல் தொழில்நுட்பங்களை ஒழிப்போம், இந்த பூமியை காப்போம், மனித தன்மையை வளர்ப்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க