Friday, December 13, 2024
முகப்புசெய்திவிழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் !

விழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் !

-

விழுப்புரம் மண்டலம் திருவெண்ணைய்நல்லூர் வட்டாரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காரப்பட்டு, இருவேல்பட்டு, பொய்கைஅரசூர் ஆகிய கிராமங்களில் 22-04-2017 அன்று கிளை தொடக்கமும் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பொய்கைஅரசூரில் மாலை 4 :00 மணியளவில் மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் ஞானஒலி  தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  ராஜு   கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார் இறுதியில் மக்கள் அதிகாரம் உறுப்பினர்  தோழர்  மாயவன் நன்றியுரையாற்றினார்.

அதன் பின்னர் காரப்பட்டு பகுதியில் மாலை 5:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி   தலைமை தாங்கி துவங்கி வைத்தார். பின்னர் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  ராஜு   கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இறுதியாக தோழர் மாரிமுத்து நன்றியுரையாற்றினார்.

மாலை 6:00 மணிக்கு இருவேல்பட்டு பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்  தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  ராஜு   கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இறுதியாக  மக்கள் அதிகாரம் உறுப்பினர் தோழர் பழனி நன்றியுரை ஆற்றினார்.

இந்த கொடியேற்றும் நிகழ்வுகளில் ஒவ்வொரு பகுதியிலும்திரளான பொது மக்களும், மக்கள் அதிகாரம் உறுப்பினர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.தொடர்புக்கு – 73738 26544.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க