Friday, December 13, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆதார் கண்காணிப்பு : மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு

ஆதார் கண்காணிப்பு : மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு

-

போதை மருந்து கும்பல்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் நிதிமூலமாக கருப்புப்பணம் இருந்து வருகின்றது. எனவே, ஒரு நபரின் அடையாளத்தைப் போலி நகல் செய்ய முடியாத அளவுக்கு உறுதியான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மத்திய அரசு வழக்குறைஞர் முகுல் ரோத்தகி.

முகுல் ரோத்தகி

வருமான வரி செலுத்துவதற்கும், பான் அட்டைகள் எடுப்பதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் போது கடந்த மே 2ம் தேதி மேற்படி வாதம் அரசு தரப்பில் வாதமாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயன்பாட்டில் உள்ள பான் அட்டைகளில் நிறைய போலிகள் இருப்பதாகவும், போலி பான் எண்களின் மூலம் நடக்கும் வருமான வரி தாக்கலில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், இதுவும் கருப்புப்பணத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் அரசின் வாதம்.

மேலும் தனது வாதத்தை முன்வைத்த மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இதுவரை சுமார் 113.7 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது நாள் வரை வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளில் போலிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உயிரியளவு விவரங்கள் (Biometric information), கருவிழிப் பதிவு மற்றும் கைரேகை விவரங்களின் அடிப்படையில் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதால் போலி அட்டைகளுக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நெஞ்சறிந்து பொய் சொல்வது என்பதற்கு மத்திய அரசு வழக்கறிஞரின் மேற்படி வாதத்தை உதாரணமாக காட்டலாம்.

முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் களமாடியதற்கு சரியாக ஏழு நாட்கள் முன்பாக (ஏப்ரல் 26) குஜராத் மாநிலம் அகமதாபத் நகரைச் சேர்ந்த நிலேஷ் மிஸ்த்ரி என்பவர் கைது செய்யப்படுகிறார். நிலேஷ் ஏன் கைது செய்யப்படுகிறார்? அதற்கும் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதத்திற்கும் என்ன தொடர்பு?

அலோபதி மருந்துகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன் தன்னார்வலர்களாக முன்வரும் மனிதர்களின் மேல் பரிசோதிக்கப்படும்(Clinical Trials). மேற்படி சோதனைகளுக்கு முன்வரும் ஒருவர், அதற்கு முன் குறைந்தது மூன்று மாதங்கள் வேறு கிளினிக்கல் டிரையலுக்கு சென்றிருக்க கூடாது என்பது விதிமுறை. நிலேஷ் மிஸ்த்ரி வேலையிழந்த மென்பொருள் பொறியாளர். அவருக்குப் பண நெருக்கடி இருந்ததால் இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறி குறுகிய காலத்தில் மீண்டும் சோதனைக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக புது புது அடையாளங்களுடன் போலி ஆதார் அட்டைகளை உருவாக்கியுள்ளார். தனக்கு மட்டுமின்றி, தன்னிடம் அறிமுகமான வேறு 100 பேர்களுக்கும் போலி ஆதார் அட்டைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

போலி ஆதார் அட்டைகள் தயாரித்தற்காக கைது செய்யப்பட்ட வேலையிழந்த மென்பொருள் பொறியாளர் மற்றும் அவருக்கு உதவியவர்கள்

போலி ஆதார் அட்டைகள் உருவாக்க முடியாது என்பது பொய். சட்டப்பூர்வமான முறைகளிலேயே போலி பான் அட்டைகள் பெற முடியும் என்றால், ஆதாரைப் பொருத்தவரை சட்டப்பூர்வமற்ற முறையில் போலி செய்ய முடியும். மேலும், ஆதார் விவரங்கள் அனைத்துமே மையப்படுத்தப்பட்ட கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்பும் உள்ளது. உலகிலேயே அதிசக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையங்கள் கொண்ட கணினிகளுக்குள்ளேயே ஹேக்கர்கள் நுழைந்து விவரங்களைத் திருடுவது தொடர்பான செய்திகள் ஏராளமாக உள்ளது.

எனவே முகுல் ரோத்தகி பீற்றிக் கொள்வதைப் போல் அரசின் நோக்கம் போலி செய்யவே முடியாத ஆதாரின் மூலம் போலிப் பான் அட்டைகளை கட்டுப்படுத்துவது அல்ல என்பது அவரே முன்வைத்த பிற வாதங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்துவது மற்றும் அதற்காக உயிரியளவு விவரங்கள், கருவிழிப் பதிவு மற்றும் கைரேகைப் பதிவு போன்றவற்றைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது என்பது தனிநபர் ஒருவரின் தனியுரிமையில் (Privacy) தலையிடுவதாகும் என்றும், அவ்வாறு செய்வது ஒருவரின் உடலின் மேல் நிகழ்த்தப்படும் அத்துமீறல் என்றும் அது தனிநபர் ஒருவருக்கு அவரது உடலின் மேல் உள்ள உரிமையில் தலையிடுவதாகும் என்றும் தற்போது உச்சநீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்காடி வரும் எதிர்மனுதாரர்கள் வாதிட்டனர். இதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி பின்வருமாறு வாதிட்டுள்ளார் –

”சொல்லிக் கொள்ளப்படும் தனியுரிமை மற்றும் உடல் ரீதியான அத்துமீறல் என்பதே பொய்யானதாகும். தனிநபர் ஒருவருக்கு அவரது உடலின் மேல் அறுதி உரிமை ஏதும் கிடையாது” என்ற முகுல் ரோத்தகி, மேலும் தனிநபர் ஒருவரைக் கொல்லும் உரிமையே அரசுக்கு உள்ளது என்றும், கைரேகைகள் மட்டுமின்றி மரபணு மாதிரிகளையும் கூட ஆதார் விவரங்களுடன் இணைக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளதென்றும் வாதிட்டார். மேலும், “ஒன்று உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும்; இல்லையென்றால் நீங்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் – வேறு வாய்ப்புகள் எதையும் சட்டம் அனுமதிக்காது” என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்தில் தொனிப்பது திமிர் மட்டுமல்ல – இந்த நாட்டின் எல்லைகளுக்குள் வாழும் மக்கள் சகல வகைகளிலும் அரசு அதிகாரத்திற்கும் கீழ்படிய வேண்டும் என்கிற பாசிச வெறி. மக்களைக் கண்காணிப்பதற்கான அடிப்படை முறையாக ஆதார் அட்டையை முன்தள்ளுகிறது மோடி அரசு. கண்காணிப்பதே கட்டுப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதே நிரந்தர அடிமைகளாக்குவதற்கும் முன்தேவைகள் என்பதன் அடிப்படையில் தான் வெறித்தனமாக ஆதாரை கட்டாயமாக்க முனைந்துள்ளது மோடி அரசு. இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளின் குறுக்கே எதுவும் வந்து விடக்கூடாது – நீதிமன்றம் உட்பட – என்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ளது மத்திய அரசு. இதை அமல்படுத்த நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் கூட காற்றில் பறக்க விட துணிந்துள்ளது.

ஆதாருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பல்வேறு சந்தர்பங்களில் அதைக் கட்டாயமாக்குவதோ, அரசின் திட்டங்களுக்கு முன்நிபந்தனையாக்குவதோ கூடாதென உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. “ஆதார் அட்டை இல்லை என்பதற்காக எந்த தனிநபரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அரசின் சில துறைகள் தமது திட்டங்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என சுற்றறிக்கை விட்டிருந்தாலும், இறுதி தீர்ப்பு வரும் வரையில் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது” என 2013-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி அறிவித்தது உச்ச நீதிமன்றம். 2015 மார்ச் 16-ம் தேதி தனது முந்தைய வழிகாட்டுதலை அரசுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது உச்ச நீதிமன்றம். ஆதார் கட்டாயமில்லை என அரசே அச்சு மற்றும் மின் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என 2015 ஆகஸ்ட் 11-ம் தேதி அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2016 செப்டெம்பர் 14-ம் தேதி தனது முந்தைய உத்தரவுகளை உறுதிப்படுத்தியதுடன், கல்வி உதவித் தொகை பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என்கிற உத்தரவையும் அளித்தது

இன்னும் ஏராளமான சமயங்களில் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை போட்டுள்ளது. ஆனால், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகள் அச்சிட்டப்பட்ட காகிதங்களைக் கொண்டு அதிகார வர்க்கம் மலம் துடைத்துப் போட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்திற்கும் தெரியாத ஒன்றல்ல. போகப் போக நீதிபதிகளின் பார்வை மாறி வருகிறது அல்லது மத்திய அரசின் நிலையை ஏற்கும் திசையை நோக்கி செல்கிறது.

கல்வி உதவித் தொகை, ரயில்வே தேர்வாணையத் துறை, மத்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறை உள்ளிட்டு, மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்கள், மாநில கல்வித் துறைகள், மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தொழிலாளர் ஓய்வூதியத் துறை, பொது விநியோகத் துறை என மத்திய மாநில அரசின் வசமுள்ள எண்ணற்ற திட்டங்களுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது அரசு. பால்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ளிட்டு பள்ளிக் குழந்தைகள் அனைவரின் மேலும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கித் திணித்துள்ளது அரசு. பிறகு எதிர்ப்புகள் வந்த பிறகு குழந்தைகளுக்கு தேவையில்லை என்று சமாளிக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் சகல துறைகளும் ஆதார் அட்டையைக் கோருவதால் மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய அசைவும், செயல்பாடுகளும் கூட ஆதார் இன்றி நிறைவேற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி நிறைவேற்றப்பட்டவை தாம்.

நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம், அதன் வரம்புகள் மற்றும் எல்லைகள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கு உட்பட்டது என்பது ஆதார் விசயத்திலம் நடக்கிறது. ஏனெனில் மைனர் குஞ்சுகள் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் இந்த அரசு என்கிற கட்டமைப்பின் நடுமத்தியில் இருக்கும் புனிதப் பசு தான் நீதித்துறை. எனவே அதன் சவடால்களை எந்தளவுக்கு மதிக்க வேண்டும் என்பதை தன்னுணர்வாகவே ஆளும்வர்க்கம் அறிந்திருக்கும் என்றாலும், நீதிமன்றத்திற்கு என்றே உள்ளதாக சொல்லிக் கொள்ளப்படும் ‘புனிதம்’ எனப்படும் கந்தாயத்தை பெயருக்காகவாவது பராமரிக்க வேண்டிய தேவை குறித்து கூட அவர்கள் கவலைப்படவில்லை.

கண்காணிப்புக் கருவியான ஆதார் அட்டையை மக்களின் மேல் திணித்து ஒரு எதேச்சதிகார பாசிச அரசாங்கத்தை நிறுவும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது மோடி அரசு – அப்படிப் போகிற போக்கில் ”நீதிமன்றத்தின் மாண்பு” மலக்குழிக்குள் இறக்கி விடப்பட்டிருப்பது ஒரு துணை விளைவு தான். ஒருவேளை மோடியின் அரசு தனது இலக்கை அடையும் நிலை ஏற்பட்டால், நாம் மீண்டும் வரலாற்றின் இருண்ட கட்டம் ஒன்றுக்குள் நுழைய வேண்டியிருக்கும்.

மோடியும் இந்துத்துவ பாசிஸ்டுகளும் தமது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார்கள்;
ஜனநாயக சக்திகளின் முன் மிக நீண்ட போராட்டம் ஒன்று காத்துக் கிடக்கிறது.

– சாக்கியன்

மேலும் படிக்க:

  1. தவறான பரப்புரை

    போலி அட்டைகளை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் .
    அட்டையை மட்டும் ஏற்று கொள்ளும் நிறுவனங்களில் இது செல்லப்படியாகும் . அனால் அந்த நிறுவனம் அது உண்மையா என்று சோதிக்க விரும்பினால் செய்வது எளிது .

    ஹேக் செய்ய முடியும் என்பதால் பிறப்பு சான்றிதழ் முதல் , வங்கி பரிவர்த்தனை வரை காகிதங்களில் செயல் படுத்தலாமா ?

    சமீபத்தில் ஒரு பரோபகாண்டா வீடியோ பார்த்தேன் .
    திராவிட தலைவர்கள் குழந்தைக்கு உணவு முட்டை வழங்குவது போலவும் மோடி( உண்மையில் நீலகேனி -மன்மோகன் ) பிடுங்கிவதை போலவும் மக்கள் உணர்ச்சியை தூண்டி குளிகாய்கிறார்கள் .

    இந்தியாவின் தகவல் மேலாண்மையை ஒழுங்குபடுத்த இருக்கும் ஆதார் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.விபத்து ஏற்படும் என்று காரிலே போகாமலே இருந்துவிடுவீர்களா ? முகநூலில் எல்லா தகவலையும் தனியார் கம்பெனிக்கு கொடுத்துவிட்டு , ஆதார் அரசாங்கத்திடம் இருக்கிறதே என்று என்ன கவலை ?

    *******

    • காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது ஆதாரை அமல்படுத்த விடாமல் பாஜக கடுமையாக எதிர்த்தது ஏன் என்பதையும் சொல்லிவிடுங்கள்.

      • போலி கார்டுகளை பற்றி பேசுகீண்றீகள் ! ஆதார் என் வைத்து உள்ள ஒருவர் தன் பயோ மெட்ரிக் விவரங்களை மாற்றி (கண்ணில் சரிய லாசர் ஆபரேசன் , கை ரேகைகளை சிதைத்து மாற்றிக்கொண்டு) புதிய ஆதாரை பெறமுடியாதா என்ன? என்ன என்ன பித்தலாட்டங்களை பித்த்லாட்டகாரர்கள் செய்யபோகிறார்கள் பாருங்கள்….வங்கியின் பழைய ஆதார் விவரங்களை கொடுத்து கடன் வாங்கிவிட்டு பின்பு தன் பயோ மெட்ரிக் விவரங்களை மாற்றிகொண்டு “நான் அவன் இல்லை என்று” கூரபோகிரார்கள் பாருங்கள்….

        ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் அவர்களின் மைனாரிட்டி ரிப்போர்ட் படம் பார்த்து இருப்பிங்க என்று நினைகின்றேன்… ஆரோகியமான வெறுப்பற்ற விவாதத்தைஉங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்

      • கண்டிப்பாக அவர்கள் செய்தது தவறு தான் . இது மட்டும் அல்ல ஜீ எஸ் டீ வரியையும் எதிர்த்தார்கள் . ஜெ ஜெ போல வீம்பாக இல்லாமல் நாட்டுக்கு நல்லது என்று ஏற்று கொண்டதை வரவேற்கலாம் .

    • உங்கள் விவாதத்தில் நேர்மையும் இல்லை ஆழ்ந்த கருத்துகளும் இல்லை இராமன் !

      முதலில் வருமான வரி துறையில் ஆதாரையும் , பான் கார்டையும் இணைக்கும் விசயத்தை ஏற்கின்றீர்களா?

      இரண்டாவது குழந்தைகளுக்கு ஆதார் அவசியமா?

      மூன்றாவது ஓட்டர் id இப்பொது தேவை இல்லாமல் போனது போன்று ஆதார் கார்டும் செயலிழக்கும் நிலை வருமா?

      நான்காவது ஒரு மனிதனின் பயோ மெட்ரிக் விவாரங்க்களை அரசு சேமிப்பது அரசியல் சாசன சட்டப்படி சரியா?

    • ராமன் ,போலி கார்டுகளை பற்றி பேசுகீண்றீகள் ! ஆதார் என் வைத்து உள்ள ஒருவர் தன் பயோ மெட்ரிக் விவரங்களை மாற்றி (கண்ணில் சரிய லாசர் ஆபரேசன் , கை ரேகைகளை சிதைத்து மாற்றிக்கொண்டு) புதிய ஆதாரை பெறமுடியாதா என்ன? என்ன என்ன பித்தலாட்டங்களை பித்த்லாட்டகாரர்கள் செய்யபோகிறார்கள் பாருங்கள்….வங்கியின் பழைய ஆதார் விவரங்களை கொடுத்து கடன் வாங்கிவிட்டு பின்பு தன் பயோ மெட்ரிக் விவரங்களை மாற்றிகொண்டு “நான் அவன் இல்லை என்று” கூரபோகிரார்கள் பாருங்கள்….

      ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் அவர்களின் மைனாரிட்டி ரிப்போர்ட் படம் பார்த்து இருப்பிங்க என்று நினைகின்றேன்… ஆரோகியமான வெறுப்பற்ற விவாதத்தைஉங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்

    • இன்று ஆதார் விவரங்களை அதன்டிகேசன் செய்து கொள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பாக தொலை தொடர்பு சிம் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்து உள்ள்ளது… இதில் என்ன என்னஊழல் நடக்கபோகிறது பாருங்கள்….நாம் aathar authentication செய்து கொள்ளும் போது நமக்கு ஆதர் சர்வர்ரில் இருந்து ஒரு மெயில் வரும் அல்லவா ? அதனை எத்தனை பேர் சென்று பார்ப்பார்கள் ? இப்ப விசயம் என்னவென்றால் நாம் கொடுக்கும் பிங்கர் பிரிண்ட் விவரங்களை நிறுவனங்கள் தங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளும் app வந்து உள்ளது. அதனை அவர்கள் பயன்படுத்தி போலியான அதன்டிகேசன் செய்து எத்துனை சிம் கார்டுகளை வேண்டுமானாலும் குப்பமா முனியம்மா பெயர்களின் வெளியிட முடியும்…. நான் ஏன் இந்த பெயர்களை பயன்படுத்துகிறேன் என்றால் அவர்கள் மெயில் id யில் சென்று aathar authentication போலியாக நடந்த விவரங்களை கண்டறிய சாத்தியங்கள் மிகவும் அரிது….. ராமன் மற்றும் செந்தில் குமரன் போன்ற பெயர்களை போலி ஆதார் அத்ண்டிகேசனுக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்று நாம் நம்பலாம்…!

    • வங்கிக் கணக்கை ஹேக் பண்றான், பிறப்பு சான்றிதழை ஹேக் பண்றான், அதெல்லாம் இருக்கத்தான் செய்யுது காலங்காலமா ..

      எங்க பிரச்சன அது கிடையாது … என்னோட கைரேகை, கண் ரேகை என்னோட தனிப்பட்ட, அடையாள அம்சம். அதை நான் எதுக்கு கண்ட கண்ட ’டேஷ்’ பசங்களுக்கு கொடுக்கனும்?.
      அடுத்தவன் பிறப்புச் சான்றிதழை ஹேக் பண்றதும் அடுத்தவன் புள்ளைய ஹேக் பண்றதும் ஒன்னா ?.
      வங்கிக் கணக்கை ஹேக் பண்ணுனா வச்சிருக்க காசு போகும். ஆனா ஆதார் கணக்கை ஹேக் பண்ணுனா, அதுல இருக்க என்னோட கைரேகை , கண் ரேகை அடையாளத்தை வச்சி என்ன வேணூம்னாலும் பண்ணலாம்.

      வங்கித் தகவல் திருடுறதும் என் தனிப்பட்ட அடையாளங்களைத் திருடுறதும் ஒன்னா ?..

      சுருக்கமா சொல்லனும்னா என்னோட கைரேகையை ஸ்கேன் பண்ணி ஜெராக்ஸ் போட்டு தயாரா வச்சிருக்கான். அதை எந்த நாய் வேணும்னாலும் உபயோகிச்சுக்கலாம். ஏன்னா, இந்த தகவல் போதுமே, இருக்குற டெக்னாலஜில என்ன வேணும்னாலும் பண்ணலாம்.

      அடுத்து நாட்டுல அதிகமா குசு விட்டு காற்று மாசு படுத்துறாங்கன்னு சொல்லுவான். அதனால ஒரு நாளைக்கு 5 க்யூபிக் மில்லிமீட்டரை விட அதிகமா குசு விட்டா காசு கொடுக்கனும்னு சொல்லுவான். ஆனா எல்லாரும் குசுவுக்கு காசு கட்டாம ஏமாத்திட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு, எல்லாருக்கும் டிக்கில மீட்டரை மாட்டப் போறேன்னும் சொல்லுவான்.

      வரிசையா போயி குனிஞ்சி நிக்க தயாராயிருங்க மோடி பக்தர்களே … பின்னால மீட்டரை சொருக..

  2. Holly “Cows” are better than human in India. I can assure one thing clearly – India is going to be divided in to pieces. BJP accelerate this process very well. Anyway, thank you USA and BJP for your contribution. Get ready to welcome new countries in South Asia.

  3. ஆதார் தேவையில்லாத ஒன்று (அல்லது) கட்டாயப்படுத்தக்கூடாத ஒன்று

    rarion வாங்குவதற்கெல்லாம் ஆதார் ஏன் தேவை என்று புரியவில்லை ? ஆதார் தேவை என்றால் ரேஷன் கார்டு எதற்கு ?

    ரேஷன் கடைகளை மூடுவதென்று முடிவாகி விட்டது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மூட முடியாது. one-by-one ஆக தான் போக முடியும்

  4. இராமன் அவர்களால் நேர்மையாகவே விவாதிக்க இயலாதா? உங்களுடைய முட்டாள் தனமான கருத்துகளை மட்டும் வினவு பின்னுட்டத்தில் எடுத்து வைத்தால் போதுமா? உங்கள் முட்டாள் தனமான கருத்துகளை நாங்கள் மறுதலிக்கும் போது அவற்றுக்கு பதில் அளிக்கும் பொறுப்பும் உங்களுக்கு இல்லையா? இல்லை பதில் அளிக்காததன் மூலம் உங்கள் கருத்துகளில் உள்ள முட்டாள் தனத்தை ஏற்கின்றீர்களா?ஆரம்பத்தில் வாத்தியாரா வேற நீங்க கல்லூரியில் வேலை செய்ததாக நினைவு! மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தான் விலகி ஒடுவிங்களா இராமன்

  5. போலி ஆதார் தயாரிக்க முடியாது என்று சொல்பவர்கள் கீழுள்ள செய்திகளை வாசித்து கருத்திடலாம்.

    http://timesofindia.indiatimes.com/city/bhopal/govt-orders-investigations-into-aadhaar-linked-pds-scam/articleshow/58554880.cms

    http://aadhaarcarduid.org/uidai-cancelled-3-8-lakh-fake-aadhaar-cards/

    https://aadharcarduid.com/fake-aadhar-card

    அனுமாரின் பெயருக்கே ஆதார் வழங்கியுள்ளனர்.

    • விபத்தே ஏற்படாத கார் வேண்டுமாம் வசந்தகுமாரனுக்கு !
      நோயே வராத மணப்பெண் வேண்டுமாம் வசந்தகுமாரனுக்கு !
      இடிந்தே விழாத வீடு வேண்டுமாம் வசந்தகுமாரனுக்கு !

      வசந்தகுமாரன் எப்பொழுது வீடு கட்டி , மனம் செய்து கார் வாங்கி வாழ்வார் என்பதை செந்தில் குமரன் தான் அறிவார் 🙂

      ஒரு தவறு நேரிடும் பொழுது ,

      அதை கண்டுபிடிப்பது எவ்வளவு எளிதானது
      அதை நிவர்த்தி செய்வது எவ்வளவு எளிதானது
      அது போன்ற தவறுகள் மீண்டும் நேரிடாமல் காப்பது எவ்வளவு எளிதானது

      என்பதை பொறுத்தே ஒரு அமைப்பு வலுப்பெறும் . தவறே நேராத அமைப்பு என்று ஒன்று உலகில் இல்லை.

      போபாலில் ஒருவருடைய ஆத்தன்டிகேசனை வைத்து 4000 பேருக்கு ரேஷன் கார்டு கொடுத்து இருக்கிறார்கள் . இதை செய்தது ஊழலை மலிந்த அரசு ஏஜென்சி.
      ஆதார் இருந்ததால் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவரே 4000 முறை ஆதென்டிகேசன் செய்ததை ஒரு கொரி போட்டு எடுத்துவிடலாம்

      இரண்டாவதாக மூன்றாவது பிழையும் ஆதார் கொடுக்க நியமிக்கபட்ட ஏஜென்சியின் பேராசையால் , கருவிழியும் கைரேகையும் இல்லாத ஊனமுற்றவர்களுக்குக்கான வசதியை வளைத்து , போலி கார்டுகளை உருவாக்கிவிட்டார்கள் .
      இந்த குறை கண்டுஅறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டது

      யாருக்கும் அடையாளம் தரலாம் என்பது தான் ஆதாரின் ஆர்கிடெக்சர். ஆரம்ப குறைகளை நிவர்த்தி செய்து இந்தியாவிற்கு ஒரு சிறப்பான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கும்.

      கார்டு கொடுக்க வேண்டிய ஏஜென்சி தவறுகள் தான் சுட்டி காட்டி உள்ளீர்கள் . மக்களே போலி லைசென்சு தயாரிப்பது போல தயாரிக்க முடியுமா , அதை வைத்து ஆத்தன்டிகேசன் செய்துவிட முடியுமா ?

      • //விபத்தே ஏற்படாத கார் வேண்டுமாம் வசந்தகுமாரனுக்கு !
        நோயே வராத மணப்பெண் வேண்டுமாம் வசந்தகுமாரனுக்கு !
        இடிந்தே விழாத வீடு வேண்டுமாம் வசந்தகுமாரனுக்கு ! //

        சார் தப்பா சொல்றீங்க..

        நீங்க தான் (உங்களைப் போன்று ஆதாரை ஆதரிப்பவர்கள்) இது
        “விபத்தே ஏற்படாத கார்”
        ”நோயே வராத மணப்பெண்”
        ”இடிந்தே விழாத வீடு”

        என்றெல்லாம் சொல்லிக் கொண்டீர்கள் 🙂

        ஆதாரை எதிர்ப்பவர்கள் அதை எதிர்ப்பதற்கு சொல்லும் பிரதான காரணம், அது மேலே சொல்லப்பட்டதைப் போல் அதற்குள்ளேயே இருக்க கூடிய டெக்னிக்கல் Glitches சார்ந்து அல்ல..

        மாறாக, அது ஒரு கண்காணிப்புக்கான கருவி என்பதால் தான். கண்காணிக்கப்படுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது மற்றும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனை என்பதைத் தான் கட்டுரை விளக்குகிறது.

        புரியும் என்று நினைக்கிறேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க