திருப்பூர் 21-வது வார்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் : 1937) கடந்த 07.05.2017 அன்று அப்பகுதி பெண்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் உதவியுடன் மூடினர். வட்டாட்சியர் திரு சுப்ரமணி என்பவர் அக்கடைக்கு மக்கள் முன் சீல் வைத்தார்.
இந்நிலையில் நேற்று 10.05.2017 டாஸ்மாக் கடை முன்பு பார் உரிமையாளர், கூலிக்கு ஆட்களை அழைத்துவந்து மூடிய கடையை திறக்க வேண்டும் என ‘போராடியுள்னர்’. இந்த தகவலை அறிந்த அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை டி.எஸ்.பி. அண்ணாதுரை டாஸ்மாக் பார் உரிமையளருக்கு தனது ஆதரவை நிலைநாட்டும் வகையில் செயல்பட்டார். போராடும் மக்களிடம் முறைப்படி தாசில்தார் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தால் தான் கடையை மூட முடியும் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மக்கள் போராடினால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டியிருக்கிறார்.
நாளை (11.05.2017) கடை திறக்கும் போது யாரும் கடைக்கு முன்னால் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். வெளியூர் தீவிரவாதிகளை ( மக்கள் அதிகாரம் அமைப்பை ) உங்களுக்கு எப்படி தெரியும்? எந்தனை ஆண்டுகள் இந்த பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள்? சொந்த வீடு உண்ட? என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.
அவர்கள் (மக்கள் அதிகாரத்தினர்) உங்களை மூளைச்சலவை செய்து அவர்கள் இயக்கத்தில் சேர்த்துவிடுவார்கள் என்று ‘நல்ல’விதமாகவும் எடுத்துச் சொல்லியுள்ளார். பச்சையாகச் சொல்வதாக இருந்தால் பார் உரிமையாளருக்கு ஆதரவாக டி.எஸ்.பி. அண்ணாதுரை தான் போராடும் மக்களை மூளைச்சலவை அல்ல அதிகார வெறியுடன் பணிய வைக்க முனைகிறார்.ஆனால் அதிகார மிரட்டலுக்கும், நைச்சிய பேச்சுக்கும் மயங்காத பொதுமக்களும், பெண்களும் மீண்டும் கடை திறக்கப்பட்டால், சாராயக்கடை அடித்து நொறுக்கப்படும் என தங்கள் முடிவை அறிவித்துவிட்டு திரும்பியுள்ளனர். இது வேற தமிழ்நாடு! காக்கிகளே புரிந்து கொண்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்! தமிழகப் பெண்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கின் மீதான உங்கள் பாசத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர். தொடர்புக்கு – 9788 58526.
குடிகாரன்கூடதான்சேரக்கூடாதுன்னுசொல்லுவாங்க !யோவ் போலிசு நீசேர்ந்த இடம்தான் தப்பு !என்னய்யாஎல்லாமே தப்பு ,தப்பாசெய்றிங்கோ! போய்மக்கள்அதிகாரத்தாண்ட மன்னிப்பு கேட்டு அப்பால மக்களாண்டபோயிசேரு!அப்புறம் மறுக்காம அந்த கஸ்மால கடையை பூட்டிட்டு போ!அப்பால ஜனங்க ஒட்சுட்டா அதையும் அந்த தீவிரவாதிக ஒட்சாங்கன்னு சொல்லிக்கினுதிரிவே!