privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநேரலைLive updates : நேற்று ஜல்லிக்கட்டு - இன்று மாட்டை வெட்டு !

Live updates : நேற்று ஜல்லிக்கட்டு – இன்று மாட்டை வெட்டு !

-

நேற்று ஜல்லிக்கட்டு!
இன்று மாட்டை வெட்டு !
நாளை மோடி அரசே, நீ மூட்டை கட்டு!

தீயைத் தீயால் அணைக்கும் உத்தியைப் போல, தனது மூன்றாண்டு ஆட்சியின் படுதோல்விப் பட்டியலை மறைக்க புதிய பிரச்சினை ஒன்றைக் கிளப்பிவிடும் வகையிலும், பார்ப்பனப் பண்பாட்டை திணிக்கும் விதத்திலும், மோடி அரசு கால்நடைச் சந்தைகளை “முறைப்படுத்தும்” புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது. “கால்நடைகளைப் பாதுகாப்பது, இறைச்சி உண்போருக்கு தரமான இறைச்சி கிடைக்கச்செய்வது” என்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த புதிய விதிகளை கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறிக்கொள்கிறது.

இது கடைந்தெடுத்த பொய். இந்த அறிவிக்கையின் நோக்கம், மாட்டிறைச்சி தொழிலையும், தோல் தொழிலையும், கால்நடை வைத்திருக்கும் சிறு விவசாயிகளையும் சிறிய பால் வியாபாரிகளையும் முற்றாக அழிப்பதேயாகும். இவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் புரத உணவான மாட்டிறைச்சி என்பதையே சந்தையிலிருந்து முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டுவதுதான் இந்த அறிவிக்கையின் நோக்கம்.

மோடி அரசின் இந்த அறிவிக்கையை வேறொரு கோணத்திலும் நாம் புரிந்து கொள்ளலாம். பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி தடை என்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கொள்கையை இந்து மதத்தைச் சார்ந்த ஆகப்பெரும்பான்மையான மக்கள், நிராகரித்து விட்டார்கள் என்பதற்கு சான்றுதான், அதனை மறைமுகமாகத் திணிக்கின்ற இந்த புதிய விதிகள்.

பசுக்கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அக்லக், பெஹ்லு கான் போன்ற எண்ணற்ற முஸ்லிம்களும், துலினா, ஊனா போன்ற பல இடங்களில் தலித் மக்களும் இந்துத்துவ வெறியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருந்த போதிலும் பசு சென்டிமென்டைக் கிளறிவிட்டு, சாதி இந்துக்களைத் தன் பக்கம் ஈர்க்க சங்க பரிவாரத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

“இந்து” விவசாயிகள் தங்களிடமுள்ள பயன்படாத மாடுகளை வெட்டுக்கு விற்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தடுக்க முடியவில்லை. அதிக விலை கொடுத்து ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறி வாங்க முடியாத இந்துக்கள், மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்துக்கு மாறிக்கொண்டு வருவதையும், பார்ப்பன பனியா கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அக்லக்கை கொன்றது போல, மாட்டை விற்கும் விவசாயிகள் மற்றும் பால்மாடு வளர்ப்பவர்களையும், மாட்டிறைச்சி தின்னும் இந்துக்களையும் தனித்தனியே வெட்டிக் கொல்வது சாத்தியமில்லை என்பதால், ஒரே வெட்டில் அனைவரையும் கொல்லும் விதமாக இந்த புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது மோடி அரசு. இந்த விதிகளை, இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் தலித் மக்களுக்கு மட்டுமே எதிரானது என்று புரிந்து கொள்வது தவறு. இது பார்ப்பனப் பண்பாட்டை நிராகரிக்கின்ற, பெரும்பான்மை இந்து சமூகத்தினருக்கும் சேர்த்து மோடி அரசு வழங்கியுள்ள மரண தண்டனை.

நாடு முழுவதும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும் என்ற தமது நோக்கத்தை, பாஜக வினரால் பல மாநிலங்களில் நேரடியாக நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. பாஜக அல்லாத மற்ற  மாநில அரசுகளின் அதிகாரத்தின் வழியாகவும் தனது நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எனவேதான் கொல்லைப்புறமாக மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மோடி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்!

மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம்.

(பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும். இதுவரை மொத்தம் 73 செய்திகள் இந்த நேரலையில் உள்ளன)

  1. “இந்து மதத்தைச் சார்ந்த ஆகப்பெரும்பான்மையான மக்கள், நிராகரித்து விட்டார்கள் என்பதற்கு சான்றுதான், ” idhudhaandaa engal madham…

  2. பொது இடத்தில் மாட்டை வெட்டி, அதன் இறைச்சியை விநியோகித்த இளைஞர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம்!

    மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததை எதிர்த்து கேரளாவில் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கன்னூரில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த இளைஞர் பிரிவினர் பொது இடத்தில் மாட்டை வெட்டி, அதன் இறைச்சியை விநியோகித்தனர்.

    இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு “சிந்தனையற்ற, காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயலை, காங்கிரஸும் நானும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று ட்விட்டரில் கடுமையான கண்டங்களை முன்வைத்துள்ளார், ராகுல் காந்தி.

    மேலும், இந்த சம்பவத்தில் தொடருடைய மூன்று இளைஞர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ்.

  3. ப.ஜ.க தனது சவக்குழியை தானே தோண்டிக்கொண்டிருக்கிறது. இது தனது தோல்வியை திசைதிருப்பும் நடவடிக்கையோ அல்லது தனது இந்துத்துவ செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பகிரங்க பாய்ச்சலோ!… எதுவாக இருந்தாலும் பர்ப்பனியம் தனது வாழ்நாளில் கண்டிராத பேரிடியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது.

    இதற்கு மேலும் அவர்கள் யாரேன்று காட்டவேண்டியதில்லை. நாம் யாரென்று காட்ட வேண்டியதுதான் பாக்கி.

    • It is the fact that BJP is not losing the votes. They might lose some elections but big win in UP is making sure that next election they will get majority. Those who are eating beef are less in number and in voting they also divided due to the absence of alternative to BJP. There will be some changes due to this law in short term as the non vegetarian prices may go up. But things will stabilize. I am not opposing the ordinance though I am not opposing the people those who are eating Nonveg. But in many countries people are converting to veg after 40 years. There will be some impact in Tamil nadu,WB and Kerala but those people votes may not be needed for BJP

  4. This is a government of the hindus, for the hindus, by the hindus. others please go to pakistan.
    Some time back vinavu had written a article, explaining about the hospitality of pakistanis. I think if vinavu people go to pakistan, they might get a special treatment.

    • //This is a government of the hindus, for the hindus, by the hindus.//

      CORRECTION..this is a government by thr brahmins for the brahmins and of the brahmins…

      // others please go to pakistan.//
      We are native indians..an aryan immingrant does’nt have rights to tell this..

        • //and you can lot of beef there.//

          i don’t eat beef. But at the same i should not decide who should eat what!?

          Don’t impose your beliefs on others

    • ஆ..ஊன்னா இந்தியாவ விட்டு வெளில போங்கடான்னு சொல்றானுங்கய்யா…. இவனுகள எப்ப அடிச்சு வெறட்டபோறோன்னுதான் தெரியல….

        • Please don’t drive us out of the country as indians drove out the muslims out of the country, during independence. Please accept us, in the same way pakistanis accepted hindus.
          pakistanis are really great.

      • vinavu said that pakistanis are good in hospitality. If you go there, you will get better treatment there than in india. and you can lot of beef there.going to pakistan is good for you. they are very good people. they will take care of you very well. you will get a good life there, than in india. that’s why i am suggesting you to go to pakistan. as amir khan said tolerance level is going down in india. tolerance level is increasing in pakistan. so pakistan is good for you people

          • I am just suggesting you to go to pakistan to enjoy the rising tolerance there.According to vinavu, pakistanis are good in hospitality. they are very good people. they will take care of you very well. you will get a good life there, than in india. that’s why i am suggesting you to go to pakistan. as amir khan said tolerance level is going down in india. tolerance level is increasing in pakistan. so pakistan is good for you people.

            They are very tolerant people according to vinavu. I think, during Indian independence also, pakistan accepted many hindus into their country. I think, during Indian independence India forced muslims to move out of india.

            If staying in india is a suffering, then I think Pakistan will be a paradise for you. You can eat lot of beef there. But during ramadan month, please don’t eat beef during day time in pakistan. It is a general tendency for the human beings to move to a better place.

            Hope I have given you enough reasons to move to pakistan. Hope you will soon write an article in vinavu about your wonderful experience in pakistan.

            • இந்திய மண்ணின் மைந்தர்களான நாங்கள் ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் இந்திய மக்களை வெளியேற சொல்ல உமக்கென்ன உரிமை இருக்கிறது ஒய்.

              • Please don’t drive us out of the country as indians drove out the muslims out of the country, during independence. Please accept us, in the same way pakistanis accepted hindus.
                pakistanis are really great.Tolerance is rising in pakistan. Tolerance is decreasing in india.

            • நாங்க எங்க இருக்கணும், எங்க போகணும், எத சாப்பிடணுன்னு நீங்க ஆடர் போடுரீங்க பாத்திங்களா… இத நெனச்சாத்தான் இன்னும் ஆத்திரம் பொக்குது.

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க