மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற சென்னை ஐஐடி மாணவரை தாக்கி ஆர்.எஸ்.எஸ் கொலை வெறியாட்டம்!
சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி விழா நடத்தப்பட்டதை அறிவீர்கள். அதில் பங்கேற்ற மாணவர் சூரஜ் என்பவர் (அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட உறுப்பினர்) தனியாக இருந்த போது ஐ.ஐ.டி வளாகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் வட இந்திய மாணவ வெறியர்கள் கும்பலாகச் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற வேறு சில மாணவர்களுக்கு இந்த வட இந்திய ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு புகார் அளித்த பின்னரும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அவரது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது என்பதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வெறிநாய்கள் எப்படி குதறியிருக்கும் என்று தெரிகிறது. மாணவர் சூரஜ் சங்கர நேத்ராலாயாவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பார்ப்பனக் கோட்டையான ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு இன்று மாட்டுக்கறி விருந்து வரை வந்துள்ளது இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு கொலைவெறியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கொலை வெறியை தமிழ்நாட்டை விட்டே தூக்கி எறியவேண்டியது தமிழக மாணவர்களின் கடமை! தமிழகம் திருப்பிக் கொடுக்கும் பதிலடியில் இந்தியா திரும்பிப் பார்க்க வேண்டும்.
பெரியார் மண் இது என்று ஆர்.எஸ்.எஸ் நாய்களுக்கு காட்டுவோம்!
(இந்த தாக்குதலை நாடறியச் செய்து மாணவர்கள் இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு இந்த நேரலையை துவக்குகிறோம். பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)
நண்பர்களே,
ஐஐடி மாணவர் சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று நடந்த போராட்டங்களின் தொகுப்பை இந்த நேரலையில் நீங்கள் முழுவதுமாக படிக்கலாம். இதில் 87 குறுஞ்செய்திகள், படங்கள், முழக்கங்கள், மக்கள் கருத்துக்கள், டிவிட்டுக்கள், ஃபேஸ்புக் தகவல்கள், ஊடகங்களின் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் – மோடி அரசுக்கு எதிராக மாட்டுக்கறி நமது உரிமை என்று காலம் பதிவு செய்திருக்கும் ஆவணமாக இது இருக்கும். நாளை தமிழகம் முழுவதும் மாட்டுக்கறி விழாப் போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இன்றைய நேரலையை இத்துடன் முடித்துக் கொண்டு நாளை மீண்டும் ஒரு நேரலையில் சந்திப்போம்.
தமிழ், தேனாம்பேட்டை, வண்டிக்கடை வைத்திருக்கிறார்.
“அய்யருங்களே பீப் சாப்பிடுறானுங்களே அவிங்கள அடிப்பாங்களா!”
– வினவு செய்தியாளர்
கணேஷ், மாணவர் – நுங்கம்பாக்கம்
“அடிச்சவன் மண்டைய உடைக்கனும்ணா..”
-வினவு செய்தியாளர்
செல்வம் – மீன் கடை வைத்திருக்கிறார்.
முட்டையில இருக்க எல்லாமே பால்லயும் இருக்கு, ஆனாலும் குடிச்சிக்கிட்டு தான இருக்காங்க.. அடிக்கிற அளவுக்கு தைரியம் வந்திருச்சா இவிங்களுக்கு ?
– வினவு செய்தியாளர்
ரபீக், கறிக்கடை, போக் ரோடு, சென்னை
“லவ்டேகா பசங்க ஒத்தைக்கு ஒத்த நிக்காம கூட்டமா அடிச்சிருக்காங்க.
மெரினால போராட்டம் ஆரம்பிக்கனும்னு நினைக்கிறேன்”
-வினவு செய்தியாளர்