கடந்த மே, 9 2017 அன்று காலை முதல் மணப்பாறை பகுதி வீரப்பூர் பெண்கள் சுமார் 100-பேர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வந்தனர். மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய இப்போராட்ட செய்தி அறிந்து அப்பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் அங்கு சென்று கலந்து கொண்டனர்.
அதன் பின் மக்களிடம் டாஸ்மாக் போராட்ட அனுபவங்கள் பற்றியும், மக்களின் விடாப்பிடியான போராட்டங்களே டாஸ்மாக் கடைகளை மூடும் என்று விளக்கியதை மக்கள் சொந்த அனுபவத்திலேயே புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆதலால் டாஸ்மாக்கை மூடும் அதிகாரம் நம்மிடம்தான் உள்ளது என மக்கள் புரிந்து கொண்டனர். அவர்களின் முழக்கமும் அப்படியாக மாறிவிட்டது.
இதையறிந்த போலீசு அப்பகுதி குடிகாரர்களின் துணையுடன் மக்களைக் கலைக்க முயற்சி செய்து வந்தது. அவற்றைத் தாண்டி பெண்கள் விடாப்பிடியாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக ஊர்சபை கூடி டாஸ்மாக்கை அகற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மணப்பாறை.
_____
விவசாயிகளை வாழவிடு ! மக்கள் அதிகாரம் மாநாடு !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மணப்பாறை.
நன்றி தோழர்
By
Manapparai
Makkal athikaram