“மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அரசு உத்தரவு சொல்லவில்லை. மாடு விற்பனையைத்தான் ஒழுங்குபடுத்தியுள்ளது” என்று பாஜக-வின் தமிழிசை சௌந்திரராஜன் ஊடக சந்திப்பில் பேசுகிறார். உடனே மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டு மாட்டிறைச்சியை உண்ணத் தடையில்லையே என்று கூறினால் மாட்டிறைச்சியை எப்படித்தான் சாப்பிடுவது என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள்.
உடனே தமிழிசையின் முகம் ரத்தக் காவியாக கொதிக்கிறது. உடனே அந்த செய்தியாளரைப் பார்த்து கழுத்து நரம்பு புடைக்க, “அதை சாப்பிடுவர்களிடம் போய்க் கேளுங்கள். அதை சாப்பிடாத என்னிடம் எப்படிக் கேட்க முடியும்? நாங்கள் மாடுகளை காப்பாற்றுவதைக் கொள்கையாக கொண்டவர்கள். என்னை ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்று அதிகாரம் இருந்தும் அந்த பத்திரிகையாளர்களை தண்டிக்க முடியவில்லையே எனும் கோபத்தோடு கத்துகிறார்.
இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக-வின் இலக்கண சுத்தமான இந்துத்துவ முகம். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு சாப்பிடுவதை தடை செய்யவில்லை என்று பச்சையாக புளுகுவதன் மூலம் இவர்கள் மாட்டிறைச்சியை நிரந்தரமாக தடை செய்வதே எங்களது நோக்கம் என்று பகிரங்கமாக கத்துகிறார்கள். அதை ஏற்கவில்லை என்றால் அத்லக் – பெஹ்லுகானுக்கு நடந்தது நமக்கும் நடக்கும். சென்னை ஐஐடி மாணவர் சூரஜ்ஜுக்கும் அதுதான் நடந்தது.
சூரஜை கொலை வெறியோடு தாக்கிய மணீஷ்குமார் கும்பலின் மனநிலை என்ன? மத்தியில் நமது ஆட்சி, இராணுவம், துணை இராணுவம், ஐஐடி, அனைத்தும் நம் கையில் இருக்கும் போது ஒரு சூத்திரன் அல்லது பஞ்சமன் தைரியமாக மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன ஒரு வெட்கக் கேடு? என்று கண்ணே போகுமளவு சூரஜை அடித்திருக்கிறான். தனது குற்றத்தை மறைத்து ஒரு பொய்க்கதை செட்டப் செய்து அதை ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் வானதி சீனிவாசனும், தமிழிசையும், கேடி ராகவனும் தமிழில் வாந்தியெடுப்பார்கள் என்பதும் கூட அவனுக்குத் தெரியும்.
ஏனெனில் அவனது குற்றத்தை மறைக்கும் அந்த பச்சைப் பொய்க் கதையின் லொகேஷன், காஸ்ட்யூம், வெப்பன்ஸ் அனைத்தும் கிராஃபிக்காக சொல்கிறார்கள் மேற்கண்ட இந்துத்வ நிலைய வித்வான்கள்.
ஆகவே மாட்டுக்கறி மீதான நமது உரிமையும் போராட்டமும் விவசாயத்தை காப்பது, விவசாயிகளை ஆதரிப்பதில் துவங்கி இறுதியில் மாடுகளைக் காப்பதோடும் தொடர்புடையது. மற்றொரு புறத்தில் முஸ்லீம், தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கும் மாட்டுக்கறி பயன்படுகிறது. பார்ப்பனிய இந்துத்துவத்தை ஒழிக்காமல் இந்தியாவில் ஒரு போதும் நிம்மதி இல்லை என்பது இனி நமது உயிர் வாழும் உரிமையோடு தொடர்புடையது.
தமிழகத்தில் இன்று முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி விழாவை ஒரு போராட்டமாக அறிவித்திருக்கிறது மக்கள் அதிகாரம்.
“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.
(பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)
தாம்பரம் , மறைமலை நகர் ,செங்கல்பட்டு பகுதிகளில் அல்லது அருகாமையில் எங்கே மாட்டு இறைச்சி உண்ணும் திருவிழா நடக்கிறது என்று தயவு செய்து கூறவும்……
IIT Bombay solidarity protest
http://indianexpress.com/article/india/maharashtra-iit-b-students-protest-against-hindutva-vigilantism-4683561/lite/
ஆர்.எஸ்.எஸ்.க்கு சவக் குழி தமிழ்ச் சமுதாயத்தால் தோண்டப்படுகிறது.மோடிக்கு சங்கு!எடப்பாடிக்கு செகண்டி மணி!தமிழ் நாடு மக்கள் அதிகாரத்தின் சோதனைச் சாலை!புலிவாலைப் பிடித்த மோடியே புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.மட்டைத்தான் தின்னும்.வடமொழியிசை.பொன்ரா, நவீன பார்ப்பனர்கள்.தமிழின துரோகிகள்! நேற்றய நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சியில்சூரஜ் மீது நடந்த தாக்குதல் பற்றி நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கேடி ராகவன்,பத்ரி சேசாத்ரி இரண்டு ஆர்.எஸ்.எஸ். பக்கிகளும் சூரஜ் உள் நோக்கத்தோடு ஜெயின் கேண்டீனுக்குச் சென்றார் என்று கிராபிக்ஸ்செய்கிறார்கள். இன்னொரு விவாதத்தில் பா.ஜ.க. பேரா.சீனிவாசன் மட்டுக்கறி தடையில்லை.ஆனால் இறைச்சிக்காக மாடு விற்கக்கூடாது என்றுதான் தடை என்கிறார்.சோறு சாப்பிடலாம் ஆனால் நெல் விளைவிக்கக்கூடாது என்பது போலத்தான்.இது விவசாயிகளின் நலன் கருதித்தானாம். நம்புங்கள் மக்களே மோடி சாம்ராஜ்யத்தில் கேப்பையில் நெய் வடிகிறது.பார்ப்பன கும்பல் அதிகார வர்க்க கும்பலைக் கையில் வைத்துக்கொண்டு ஆடுகிறது.மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்தால் அது தீப்பொறி.பார்ப்பனீய இந்து மத வெறிக்காடு வெந்து தணியும் வரை ஓயாது!
மாட்டுக்கறியை திருட்டுத்தனமா… … முக்காடு பாேட்டுக் காெண்டு மூக்குமுட்ட ஒரு பிடி பிடிக்கும் நிறையபேர்கள் நம்நாட்டில் உருவானதினால் அதன் விலையும் தற்பாே து உயர்ந்து விட்டது என்பதுதான் உண்மை நிலவரம்… தமிழிசை எல்லாம் சும்மா ஜுஜூபி … உளருவதற்காகவே உருவான ஒரு பிறவி . …. நல்லா ருசியா … காரம் சாரமா …நாம்வெளுத்து கட்டுவாேம் நமக்கு பிடித்த மாட்டுக்கறியை …தடைசெய்ய எந்த நாய்க்கும் உரிமை இல்லை
இந்து பாசிஸ்டுகள் தரப்பு லொகேஷன், காஸ்ட்யூம், வெப்பன்சோடு கிராஃபிக்கலாக விளக்கிச் சொல்லும் பொய் திரைக்கதை:
மாணவர் சூரஜ் மாட்டுக்கறியை சாப்பிடுகிறார். மறுநாள் ஜெயின் (சுத்த சைவ) மெஸ்ஸில் போய் உட்கார்ந்து சாப்பிடுகிறார். அருகிலிருந்த மணீஷ் சூரஜிடம் அங்கே மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு இங்கு வந்தும் சாப்பிடுகிறாயே என்று அன்பொழுக கேட்கிறார். அதற்கு சூரஜ், மாட்டுக்கறியை அங்கும் சாப்பிடுவேன்; அதை இங்கு கொண்டு வந்தும் சாப்பிடுவேன்; உன் வாயில் திணிக்கவும் செய்வேன் என்றிருக்கிறார்.
உண்மை என்ன?
ஐ.ஐ.டி மாணவர் வெங்கட்ராமன் கணேஷ் (தந்தி டிவி விவாதத்தில்):
மற்ற நாட்களில் தான் ஜெயின் (சுத்த சைவ)மெஸ் என்று தனியாக இருக்கும். இப்போது விடுமுறை காலம் என்பதால், ஜெயின் மெஸ் மூடப்பட்டுவிட்டது, அனைவருக்குமான பொது மெஸ் தான் இருக்கிறது. அதில் ஜெயின்னுக்கு(சுத்த சைவத்திற்கு) தனி கவுண்டர் தான் இருக்கிறது. அங்கு உணவு வாங்கிவந்து சாப்பிடுவார்கள். உணவு வாங்கிவந்து தனித்தனியாக சாப்பிடவேண்டும் என்பதில்லை, எல்லோரும் கலந்து உட்கார்ந்து தான் சாப்பிடுவார்கள்.
ஐ.ஐ.டி மாணவர் சதீஸ் (நியூஸ் 7 விவாதத்தில்):
சூரஜ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த மணீஷ், மாட்டுக்கறி சாப்பிட்ட நீ இங்கு ஜெயின் மெஸ்ஸில் எப்படி சாப்பிடலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சூரஜ், ஜெயின் (சுத்த சைவ) சாப்பாடும் பிடிக்கும், எனக்கு மாட்டுக்கறியும் பிடிக்கும் அதனால் சாப்பிட்டேன். உனக்கும் விருப்பமிருந்தால் நீயும் சாப்பிடு என்றிருக்கிறார். இதற்கு மணீஷ் என்னை எப்படி நீ சொல்லலாம் என்று அடித்துள்ளார்.
நியூஸ் 7: https://www.youtube.com/watch?v=CdFdy8pmAfU
தந்தி டிவி: https://www.youtube.com/watch?v=-vEFp4Kz3Zg
ஆர்.எஸ்.எஸ் விசிலடிச்சான் குஞ்சுகள் எங்கிருந்தாலும் மேடிக்கு வரவும்.
மகாராஷ்டிரத்தில் தேர்தல் அறிக்கையில் மக்களிடம் அறிவிப்பு விட்டு , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தடை செய்தார்கள். அது ஏற்புடையது .
ரூபாய் நோட்டு தடை போல , இதையும் தன்னிச்சையாக செய்து இருக்க்கிறார்கள் .
அரசாங்கம் தனி நபர் உரிமையில் தன்னிச்சையாக தலை இடுவது ஜனநாயக விரோதமானது .
நாடு இன்று எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினையில் இது தேவை இல்லாதது .
மாட்டு கறி/பன்றி கறி உன்ன விரும்பாதவர்கள் உன்ன வேண்டாம்.
மற்றவர்களும் அவர்கள் செய்வதை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரத்தனம் .
மது அருந்த தடை விதிக்க வேண்டும் என்று கோருவதும் இதே வகையை சேர்ந்தது .
அடுத்தவர்கள் யாரும் மது அருந்த கூடாது அதுதான் சமுதாயத்திற்கு நல்லது
அடுத்தவர்கள் யாரும் மாட்டு மாமிசம் உண்ண கூடாது அதுதான் சமுதாயத்திற்கு நல்லது
என்கின்ற இரண்டுமே அவரவர் பார்வையில் சமுதாயத்தை நெறிப்படுத்தும் சர்வாதிகாரத்தனம் தான் .
மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் உரிமை என்று கூக்குரலிடுபவர்கள் மதுவிற்கு எதிராக ஏன் போராடுகிறார்கள். மது குடிப்பதும் அவரவர் உரிமைதானே. அதுபோல் இந்தியை திணிக்க படிக்க கூடாது என்கிறார்கள். இதுவும் ஒருவரின் உரிமையில் தலையிடுவதுதானே! சற்று சிந்தித்தால் இது விளங்கும்!!!
மு.நாட்ராயன்…
என்னே உங்களது சிந்தனை. உங்களது கருத்துக்களை கல்வெட்டில் பொறித்து வைத்து அங்கேயே தவம் செய்யவும். நாட்டுக்கு ரொம்ப நல்லது.
மாட்டுக்கறி சாப்பிடுவதும் மது குடிப்பதும் ஒன்றா. உமது மூளை மழுங்கி விட்டதால் தொடர்ந்து மூன்று மாதங்கள் கோமூத்திரம் குடித்தும் கோடங் சாப்பிட்டும் வந்தால் உமது மூளை கூராகிவிடும் …
//அதுபோல் இந்தியை திணிக்க படிக்க கூடாது
நீர் ஒரு மூளையற்ற மூடர் என்பதற்கு இந்த வரிதான் சான்று……திணிக்க என்ற வார்த்தையை நீக்காமல் அப்படியே பதிவிட்டு விட்டீர்கள். ஒன்றை திணிக்கும் போது அதை எதிர்ப்பது உரிமையாக தானே இருக்க முடியும். ….
இராமன் மற்றும் மு.நாட்ராயன் இருவரின் மழுங்கிய மூளைகளுக்கு,
அப்புறம் சார்….
இவர்கள் தான் கோவில் நுழைவு போராட்டமும் நடத்தினார்கள்……ஆனால் இவர்கள் கடவுள் நம்பிக்கையவர்கள்.
கார்பரேட் நிறுவனங்களின் சுரண்டலை எதிர்க்கிறார்கள். சிறு முதலாளிகளுக்ககவும் குரல் கொடுக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் கோயில்களில் நுழைய கூடாது என்பது கூட பார்ப்பனர்களின் தனிப்பட்ட உரிமை தான்.
ஒரு பெண்ணின் உடலை காமவேட்டையாடும் ஆண் கூட பெண்ணின் உடல் ஆண்களுக்காக படைக்கப்பட்டது தான் என்று கூட உரிமை பாராட்டலாம். பாராட்டுகிறார்கள்.
அதனால் எந்த உரிமையும் குறிப்பிட்ட சமூக விதிகளுக்கு உட்பட்டது தான். சமூக விதிகள் சமூகத்தில் வாழும் பரந்துபட்ட மக்களால் உருவாக்கப்பட வேண்டும்.
//ஆர்.எஸ்.எஸ் விசிலடிச்சான் குஞ்சுகள் எங்கிருந்தாலும் மேடிக்கு வரவும்.
மேடைக்கு வந்தமைக்கு நன்றி.
குடிச்சுப்புட்டு தான் எந்த சாக்கடைல கிடக்கிறோன்னு கூட நினைவில்லாம கெடக்குறதும், மனைவி குழந்தைகள், பிறத்தியார்ன்னு அத்னைபோருக்கும் தெந்தரவு கொடுக்குறதும்
எனது விருப்பத்திற்காக இத சாப்பிடவேன்னு சொல்கறும் ஒண்ணா மிஸ்டர் ராமன்?
மிதியிழக்கச்செய்யும் மதுவ அரசாங்கமே நடத்துது அத தட்டிக்கேட்டா அது சர்வாதிகாரம்.
அடித்தட்டு மக்களின் புரத உணவான மாட்டுக்கறிக்கு தடைபோடுது அரசு அத எதுத்து நின்னாலும் அது சர்வாதிகரம்.
உங்க அதராதில சர்வாதிகாரம்கிறதுக்கு என்ன பொருள்ன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.
எனக்குத்தெரிந்து ஆளும் வர்கத்தின் அயோக்கியத்தனங்களுக்கு ஜால்ரா அடிக்கும் சராசரி மீடியா மனநோநிலைதான் இது. இந்த மாமாத்தனத்தனம்தான் சர்வாதிகார்த்த விட கொடூரமானது.
அய்யா இராமரே,
ரெட் லைட் ஏரியா – டாஸ்மாக் சாராயம்…ரேப் செய்வது – கள்ள சாராயம்…..
இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கை.
ரெட் லைட் ஏரியாவை ஒழித்து விட்டால் கள்ள சாராயம் பெருகிவிடும் என்று உங்களை போன்றவர்களின் ஊளை சவுண்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
இதில் சில பதிவுகளில் இதில் அறிவியலில் வேறு பொலந்து கட்டுகின்றீர்கள். சாராயம் குடித்தால் அதுவும் குறிப்பாக இருப்பதிலேயே மட்டமான டாஸ்மாக் சாராயம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் மனித மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களால் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள அறிவியல் எதுவும் தேவையில்லை. பெண்களும் குழந்தைகளும் தங்களது சொந்த அனுபவங்களின் மூலமே அதை புரிந்துள்ளனர்.
மது அருந்தினால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களும் மாட்டிறைச்சியினால் மூலையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களும் ஒன்றா?
மது அருந்துவதையும் இறைச்சி உண்பதையும் ஒரே தராசில் நிறுத்தி பார்க்கும் உமது யோக்கியதை பல்லிளிக்கிறது. உங்களை போன்றவர்களுக்கு மாட்டிறைச்சியை ஆதரிப்பது போல நிச்சியமாக அனைத்தையும் புகுத்தி விடுவதே வாடிக்கையாக உள்ளது.
மன்னிக்கவும் சிறிய திருத்தும்..
ரெட் லைட் ஏரியாவை ஒழித்து விட்டால் ரேப் பெருகிவிடும்* என்று படிக்கவும்…
மாட்டுக்கறியும் மதுவும் ஒன்றா? எந்த மருத்துவம் விஞஞானம் இதை சொல்லித்தந்தது.எப்படியாவது தான் பைத்தியக்காரத்தனமாய் நம்பும் ஒன்றை அடுத்தவர்களிடம் திணித்து ஆகவேண்டும்.அதற்க்கு எந்த எல்லைக்கும் போகலாம்.எதை சொல்லியாவது எதை செய்தாவது தன் கூறு கெட்ட சித்தாந்தத்தை பொதுவில் வைக்க வேண்டும்.பரிதாமபாய் இருக்கிறது ராமா உங்களின் நிலைமை.
ஒருத்தன் சட்டம்போட்டு தடுக்குறான், பலபேர் அத எதுத்து போராட்ட மெல்லாம் நடத்துராங்க….
அப்படி என்னதாங்க இருக்கு மாட்டுக்கறில..! ன்னு பதுசா சாப்பிடத்தொடங்கியனவர்கள் பலபேர்.
மோடிக்கு வால்பிடிக்கும் முண்டங்களுக்கு,
மாட்டுக்கறியை விரும்புபவர்கள் சாப்பிடட்டும் என்கிறோம். விரும்பாதவர்கள் சாப்பிடத் தேவையில்லையே.
அதுபோல இந்தியைப் பிடிப்பவர்கள் படித்துக் கொள்ளட்டும். திணிக்கக்கூடாது என்பதுதான் கருத்து.
குடிப்பவர்களும் பிறருக்குத் தொல்லையின்றி வீட்டில் குடிக்கட்டும் என்றுதான் சொல்கிறோம். டாஸ்மாக் கடையின் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்து பெண்களுக்கும் மாணவர்களுக்கும் தொல்லை கொடுக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.
இதுகூடப் புரியாத முண்டங்கள் பேசவந்துவிட்டன.