சென்னை பல்கலையில் மாணவர்கள் நடத்தும் மாட்டுக்கறி திருவிழா !
பாஜ.க. மோடி அரசு உழைக்கும் மக்களின் உணவான மாட்டிறைச்சியை தடை செய்திருப்பதை கண்டித்து சென்னை ஐ.ஐ.டியில் மாட்டிறைச்சி விழாவிற்கு ஏற்பாடு செய்த மாணவர் சூரஜ் ஏ.பி.வி.பி காவி கும்பலால் தாக்கப்பட்டதை கண்டித்தும் 06.06.2017 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி விழாவும் ஆர்.எஸ்.எஸ் பாஜக பார்ப்பன மதவெறி கும்பலுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் நடக்கவிருக்கிறது. அனைவரும் வருக !
தகவல் : அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் (சென்னைப்பல்கலைக் கழகம்) – APSC (MU)
***
திருவாரூரில் மாட்டுக்கறி திருவிழா !
சென்னை IIT மாணவர் சுராஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும் மாட்டுக்கறி தடையை கண்டித்தும் திருவாரூர் மக்கள் அதிகாரம் சார்பாக திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி தலைமையில் 05.06.2017 அன்று காலை 11.30 க்கு திருவாரூர் தந்தை பெரியார் சிலை அருகில் உணவு திருவிழா நடைபெற்றது.
மூன்று வேன்களில் காவல் துறை அந்த பகுதி முழுவதிலும் குவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மாட்டுக்கறி பரிமாறப்பட்டது. இதைபார்த்த காக்கிகள் எலும்பை கண்ட நாயைப்போல் விரைந்து வந்து தோழர்களை இழுத்து சென்று மண்டபத்தில் அடைத்தனர். தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், திருவாரூர்.
***
கடலூரில் மாட்டுக்கறி திருவிழா ஆர்ப்பாட்டம் !
பார்ப்பன பயங்கரவாதி மோடி அரசின் மாட்டுக்கறி தடை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் போராடி வந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர் சூரஜை தாக்கிய பார்ப்பன மத வெறியன் பயங்கரவாதி மானீசை கைது செய்ய கோரியும், மாட்டுக்கறி தடைசட்டத்தை உடைத்தெறிய கோரியும் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டமும், மாட்டுக்கறி திருவிழாவும் நடைபெற்றது.
மக்கள் அதிகார வட்டார குழுவின் தலைவர் நந்தா தலைமையேற்க நகரின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி மாட்டுக்கறியை ருசித்து சாப்பிட்டனர். பேசியவர்களில் பலரும் நாம் என்ன விளையாட வேண்டும், என்ன உடை போட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிட வேண்டும் என்பது தனிமனித உரிமை. இதைத்தான் அரசியல் அமைப்பு சாசன சட்டம் வலியுறுத்துகிறது.
ஆனால் மோடி அரசு வந்ததிலிருந்து எந்த சாசன சட்டத்தை காப்பேன் என்று ரகசிய பிரமாணம் ஏற்று கொண்டு பதவியேற்றரோ அதையெல்லாம் கால் தூசுக்கு சமம் என்று இந்திய மக்களின் உரிமைகள் மீது கைவைக்கிறார். இங்கே காவிரியில் தண்ணீர் இல்லை, விவசாயிகளின் தற்கொலை பெருகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பற்றி கவலைப்பட மோடி உள்நாட்டு அளவில் தனக்கு நெருக்கடி வருபோதெல்லாம் ஏதாவது அறிவிப்பு செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுவது என்பதையே ஒரு பிழைப்பாக வைத்திருக்கின்றார். இவர்கள் ஏற்றுக்கொண்ட சட்டத்தை இவர்களே மதிப்பதில்லை. எனவே இவர்கள் போடும் சட்டத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். மாட்டுக்கறி தின்பது நமது உரிமை. கூலிவேலை செய்யும் ஒரு தொழிலாளி 400 ரூபாய் சம்பளம் வாங்கி 1000 ரூபாய்க்கு ஆட்டுக்கறி வாங்கி உண்ண முடியாது. என் உடம்புக்கு தெம்பு ஏற்றிகொள்ள வேண்டுமென்றால் எளிய வகையில் மாட்டுக்கறி மட்டுமே ஒரே உணவு. எனவே, இவர்களுக்கு அடிபணிய முடியாது என்றனர்.
நிறைவாக பேசிய தோழர் ராமலிங்கம் இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராண இதிகாசங்களில் மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும் மட்டுமே போர்கள் நடந்துள்ளன. இவன் சொல்லுகின்ற பார்ப்பன இந்து மதத்தின் பொதுநோக்கோடு ஒரு கடவுளும், செயல்படவில்லை. ஆபாச குப்பைகளையே சமுதாய சேவையாக இந்துமத வரலாறுகள் விளக்குகின்றன. ஹரித்துவாரிலும், ரிஷிகேசியிலும் மனித கறி தின்கின்ற இந்த ஆர்எஸ்எஸ் அகோரிகள் மாடுகளின் மீது கரிசனப்படுவது எவ்வளவு வேடிக்கை? இந்த தாக்குதல் தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மீதானது மட்டுமல்ல.
120 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் சுமார் 15 முதல் 20 கோடி மக்கள் மாடுகளை நம்பியே வாழ்கின்றனர். விவசாயத்தை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு வளம்கொழிக்கும் தஞ்சை மண்ணை வியாபாரமாக்கினார்கள். மேய்ச்சல் நிலமின்ற காய்ந்துபோன கட்டாந்தரையை நக்கி நக்கி நாக்கு வறண்டு விவசாயிகளோடு உயிரை விட்டுகொண்டிருக்கிறது பசுமாடுகள் மற்றும் எருமைமாடுகள். இந்த அறிவிப்பின்மூலம் சந்தைகளில் நடக்கும் சிறுசிறு அளவிலான விவசாயிகளின் மாடு வியாபாரத்தை அடியோடு ஒழித்து உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மாடு விற்பனைக்கு பெருமளவில் ஒருமுனைவாக்கம் செய்யவும், வெளிநாடுகளிலிருந்து பாலுக்கும், பால்பொருட்களுக்கும் கையேந்த வைப்பதுதான் இந்த அறிவிப்பு.
எனவே இது மாட்டுக்கறிகான பிரச்சனை என்பது மட்டுமல்ல, தண்ணீர் பிரச்சனை, உணவு பிரச்சனை, உயிர்வாழும் உரிமை ஆகியவற்றுக்கான பிரச்சனை. நம்முடைய விவசாயிகளின் பிரச்சனை என ஒன்றோடு ஒன்று இணைந்தது தான் இவை. இவர்களை வீழ்த்த வேண்டுமெனில் களத்தில் நின்று மோதிப்பார்க்க தயாராக வேண்டும் என்று தனது உரையை முடித்தார்.
Jpeg
Jpeg
Jpeg
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், கடலூர்.
***
“மாட்டுக்கறி துண்ணுவோம். அதகேக்க மோடி யாரு?” – நொளம்பூர் மக்களின் மாட்டுக்கறி திருவிழா!
சென்னை மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் 4.6.2017 அன்று மாட்டுக்கறி திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றது.
மாலை 4:00 மணிக்கு மாட்டுக்கறி உணவு தயார்செய்யப்பட்டதை மோப்பம் பிடித்து சமைக்கும் இடத்திற்கே வந்துவிட்டது போலீசும் உளவுத்துறையும். தோழர்கள் பறையிசை ஊரின் அனைத்து வீதிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. “மாட்டுக்கறி விருந்து ஆரம்பிக்க போகிறது சீக்கிரம் வாங்க அக்கா” என்று ஊர்மக்களை திருவிழாவிற்கு அழைத்தனர். அந்த பகுதி பு.மா.இ.மு செயலர் கணேசன் தலைமையில் திருவிழா நடைபெற்றது.
விழாவில் மாட்டுக்கறியை கடித்துக்கெண்டு “மாட்டுக்கறி துண்ணுவோம். அதகேக்க மோடி யாரு?” என பலரும் முழங்கினர்.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மாட்டுக்கறியை சாப்பிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
A good read related to this article.
The Most Intolerant Wins: The Dictatorship of the Small Minority
https://medium.com/incerto/the-most-intolerant-wins-the-dictatorship-of-the-small-minority-3f1f83ce4e15