privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமீரட்டில் தொடரும் மதிய உணவுப் பணியாளர்கள் போராட்டம் !

மீரட்டில் தொடரும் மதிய உணவுப் பணியாளர்கள் போராட்டம் !

-

த்திரப்பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்வோம். அங்கு பணிபுரியும் தற்காலிக மதிய உணவுப் பணியாளர்களுக்குக் கடந்த 8 ஆண்டுகளாகவே  மாதச் சம்பளமாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை. கூடுதலாக பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்வது வரை அனைத்து உதிரி வேலைகளையும் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.

மாதிரிப் படம்

வேலை நிலைமைகளை மேம்படுத்தக் கோரியும், தங்களது சம்பளத்தை ரூ.5000ஆக உயர்த்தவும், தற்காலிகப் பணியாளர்களை, நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக் கோரியும் இவர்கள் கடந்த 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்று வரை அரசு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இதே போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-06-2017 அன்று அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள டிகோலிபுகோரியில் அனைத்து அஸ்ஸாம் மதிய உணவுப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அஸ்ஸாம் மாநில அரசு, மதிய உணவுத் திட்டத்தை “அக்சயப் பாத்ரா” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க கடந்த மே 9 அன்று சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. இந்நடவடிக்கையின் மூலம் மதிய உணவுத் திட்டத்தை தனது பொறுப்பிலிருந்து கை கழுவி விட்டு, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை ஊத்தி மூடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்கு எதிராகவும், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் சம்பளத்தை ரூபாய் 5000-ஆக உயர்த்தவும், இத்தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

ம.பி. விவசாயிகளைப் போன்ற போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் தான் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் என்பதை அமைதி வழியில் போராடும் மக்களுக்கு வேறு யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை. அவர்களது அமைதி வழிப் போராட்டங்களை உதாசீனப்படுத்தும் அரசே போதும்.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க