privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்அரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் - வீடியோ

அரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் – வீடியோ

-

வீன வேதியியல் தொழில்துறை தற்போதைய நவீன உலகத்திற்கு மறுவடிவம் கொடுத்துள்ளது. அது புதிய எரிபொருட்கள், மருந்துகள் மற்றும் புதிய மூலக்கூறுகளை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் வேதியல் ஆய்வுமுறை மற்றும் கோட்பாடுகளுக்கான அடிப்படையை அறிய ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.

இன்று வானளவு கட்டிடங்களுடன் நவீனமாக தோற்றமளிக்கும் தோஹா, (கத்தார்) துபாய் மற்றும் இதர அரபு உலக நகரங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இப்படி இருந்திருக்கவில்லை. அரபுலகின் இன்றைய அனைத்து கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை அங்கு கிடைக்கும் எரிபொருட்கள் – வேதியியல் தொழில்துறை. அறிவியலுக்கும், நவீன வேதியியல் தொழில்துறைக்கும் இஸ்லாமிய அரபுலகம் அளித்த பங்களிப்பை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.

9 மற்றும் 14-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் அறிவியலில் ஒரு பொற்காலம் இருந்தது. அப்போது இஸ்லாமிய உலகின்  ஜபீர் இப் ஹய்யன் (Jabir Ibn Hayyan) மற்றும் அல்-ராஸி (Al-Razi) போன்ற அறிஞர்கள் அறிமுகப்படுத்திய கடுமையான சோதனை அணுகுமுறை நவீன அறிவியலுக்கு அடித்தளமிட்டன.

அறிவியலின் பொற்காலம் என்ற ஆவணப்படத்தின் இந்த அத்தியாயத்தில் கோட்பாட்டு அறிவியலாளர் ஜிம் அல் காலி (Jim al-Khalili) , அந்த அறிவியல் அறிஞர்கள் வெறும் மூடநம்பிக்கைகள் அடங்கிய ரசவாதமாக இருந்தவற்றை வேதிஅறிவியலாக மாற்றியமைக்கும் நடவடிக்கையை துவக்கி வைத்தனர் எனும் தேடலுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.

மலிவான உலோகங்களை தங்கமாக உருமாற்ற முயற்சி செய்த மத்திய காலத்தின் ரசவாதத்திலிருந்து ஆரம்பிக்கும் ஜிம் அல் காலி பின்னர் ஜபீர் இப் ஹய்யானின் பங்களிப்புகளை விவரிக்கிறார். பின்னர் அல்-கிண்டி (Al-Kindi), அல்-ராஸி (Al-Razi) மற்றும் இதர திறமை, செல்வாக்குமிக்க வேதியலாளர்களின் பங்களிப்புகளின் மூலம் நவீன வேதிஅறிவியல் எப்படி பரிணமித்தது என்ற கதையை விளக்குகிறார்.

அரபுலகம் அல்லது முஸ்லீம்கள் என்றாலே அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, எதற்கெடுத்தாலும் மதத்தின் பின்னே ஓடுவார்கள், பிற்போக்குவாதிகள் என்ற சித்திரமே இன்றைய உலகின் பொதுப்புத்தியில் உள்ளது. ஆனால் நவீன அறிவியலில் அரபுலகத்தின் பங்கு முக்கியமானது. தொழுகைக்கு முன்னர் கை, கால்கள் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற சடங்கின் விளைவாக சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இசுலாமிய உலகில்தான் முதன்முதலாக சோப்பு பயன்படுத்தப்பட்டது. சுத்தம் பற்றிய விதிகளை வகுத்தளித்த கடவுள் சோப் குறித்து சொல்லவில்லை. இப்படித்தான் இசுலாம் உலகில் நவீன வேதி அறிவியல் மலர்ந்தது.

நன்றி: அல்ஜசீரா

  1. பழம் பெருமை மூலம் , நடப்பு உலகின் தவறுகளை அழிக்க முயற்சிக்கிறார்கள் .

    ஐரோப்பா இருண்ட காலத்தில் இருந்த பொழுது , அரபுலகம் முன்னேறிய நிலையில் , நிறைய புத்தகங்களை சமக்கிருத,லத்தீன் மொழி பெயர்த்து படித்தார்கள்.

    மதம் வளர ஆரம்பித்த காலத்தில் , மதவாதிகளின் பிடி குறைவாக இருந்தது . ஆனால் இன்றைய சமூகம் மதவாதிகளின் பிடியில் இருக்கிறது .

    மதத்தை தாண்டிய கருத்துக்களை எளிதில் கூறி விட முடியாது.

    இந்தியாவில் மாட்டு கரி விவகாரத்தில் , இந்துக்களின் மீது மத புத்தகத்தை காரணம் காட்டி மக்கள் தலையில் கருத்தை திணிக்க முடியாமல் , அரசு இயந்திரத்தை பின்வாசல் வழியாக பயன்படுத்த வேண்டி இருந்தது . ஒரு விதத்தில் இது இந்து மதத்தின் ஜனநாயகம் இதில் வெளிப்படுகிறது.

    இதே போன்ற ஒரு விவாதத்தை இசுலாமிய மதத்தில், மத புத்தகத்தை தாண்டி எதுவும் செய்து விட முடியாது.

    ஓரளவு வெளிப்படையான துருக்கி போன்ற நாடுகள் இப்பொழுது மத புத்தகத்தை மேலும் மேலும் நாடி செல்கின்றன .

    • முதலாளித்துவ ஜனநாயகத்தை நிலபிரபுத்துவ இந்துமதம் பிற்போக்குத்தனதிற்காக பயன்படுத்துவதை இந்து மதத்தின் ஜனநாயகமாக கருதும் தங்களின் மேலான ஒப்பீடு சிறப்பாக இருக்கிறது.

      இனி முதலாளித்துவம் ஜனநாயகத்தை கட்டிகாக்கும் அருகதையை இழந்துவிட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக இதை நான் பார்கின்றேன்.

    • இந்து மத ஜனநாயகமாக பரிணமித்திருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் அதைத் தூக்கி பிடிக்கும் இராமனுக்கும் வாழ்த்துக்கள். அது,

      மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக தலித் மக்களையும் இசுலாமிய மக்களையும் கொள்கிறது.

      மட்டு மூத்திரத்தில் சாணியில் எல்லாமே இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் மன்றத்தில் பேசுகிறது.

      பிளாஸ்டிக் சர்ஜரி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டதாக கூறுகிறது.

      இல்லாத சரஸ்வதி நதியைத் தேடுகிறது. இராமனுக்கு பொருட்காட்சிவைக்க 100 கோடி செலவு செய்கிறது.

      இந்தியாவின் பன்முக கலாச்சார சிறப்புத்தன்மையை ஒழிக்கும் இந்து மத ஜனநாயகத்தை மெச்சும் இராமனின் அறிவைக் கண்டு விக்கித்து நிற்கிறேன்.

    • Gurumoorthi in a recent TV debate was telling that some people are still thinking that it is a sin to sell unproductive cow.The govt banks upon this irrational thinking and has no reply when the farmers tell about their non-affordability to feed unproductive animals.

    • அடராமா..மணிகண்டனின் குருநாதா…கட்டுரை பழ்ம்பெருமை பேசவில்லையப்பா வரலாற்றை பேசுகிறது.செல்வம் குறிப்பிட்டு காட்டியதைப்போல மூளை அவிந்த பொய்களையெல்லாம் யாரும் சிரிக்க மாட்டார்களா என்ற கவலை கொஞ்சமும் இல்லாமல் நாட்டின் பிரதமர் முதற்கொண்டு அவிழ்த்து விடும் வகையினதல்ல இது. விஞ்சானம் மருத்துவம் வானியல் என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய சமூகம் இன்று ஏன் அமெரிக்க ஐரோப்பிய காலடிகளில் மண்டியிட்டு கிடக்கிறது என்பது பல கேள்விகளுக்கு விடையளிக்கும் மிகப்பெரிய வரலாற்று ரகசியம். அபிசின்ன என்ற மருத்து நிபுணர்தான் இன்றும் ஐரோப்பிய மருத்து உலகத்தால் இன்றும் வியந்தோத்தப்படுகிற மருத்துவ பேரறிஞ்சர். இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாத தெரிந்துவிடக்கூடாது என்று வளர்க்கப்படுகிற கூட்டம்தான் நீங்கள். அதனால்தான் மாட்டு மூத்திரம் சர்வரோக நிவாரணியாக உங்களுக்கு தெரிகிறது.

      • இன்னும் சொல்கிறேன் ராமன்..நான் சொல்வது கதையோ கற்பனையோ அல்ல வரலாறு. உமையாக்கள் அப்பாசிதுகள் ஆட்சிதான் மேற்சொன்ன அறிவுலக ஆட்சி.வலிமையிலும் உச்சம் தொட்ட ஆட்சி. பாரசீகம் பாபிலோனியம் பைசாந்தியம் போன்ற பேரரசுகளெல்லாம் அவர்களின் கீழே. மத்தியகிழக்கில் ஆரம்பித்து ஆப்பிரிக்க ஐரோப்பா- இத்தாலி ஸ்பெயின் வரை பரவியிருந்த வலிமை. கல்வி கேந்திரமாக விளங்கியது நகரங்கள்.பக்தாதில் உலக பிரசித்திபெற்ற கார்டோவா பலகலை கழகம் அனைத்து துறை ஆராய்ச்சிகளையும் முடுக்கி விட்டு உலகிற்க்கே கல்வி வெளிச்சம் பாய்ச்சியது.இன்றைக்கு “குண்டு தயாரிக்க சொல்லி கொடுக்கிறார்கள் ” என்று கூசாமல் சொல்கிறீர்களே அந்த மதரஸாக்கள் தான் இவ்வளவையும் அன்று கொடுத்தது. உங்கள் பாஷையில் சொன்னால் “பயங்கரவாத பாடம் கொண்ட” மதநூலான இதே குரான் தான் அன்றும் அவர்களிடம் இருந்தது.இந்த காலகட்டத்தைத்தான் ஐரோப்பிய உலகம் வரலாறின் இருண்ட காலம் என்று கூசாமல் அழைக்கிறது.உண்மை என்ன வென்றால் இருண்டிருந்த உலகம் மத்தியகிழக்கால் பிரகாசமடைந்தது. பிறகு ஏன் இன்றைக்கு இவ்வளவு வீழ்ச்சி? இந்த கேள்வியில் தான் உலக அரசியலின் சூட்சமம் ஒளிந்திருக்கிறது. படிக்க வேண்டும் ராமன்..தயவு செய்து உண்மை வரலாறு படிக்க வேண்டும்.எஙகளிடம் இருக்கும் மதநூல் முரட்டுத்தனத்தை முட்டாள்தனத்தை வளர்ப்பதாக தகவல் வந்தால் அது உண்மைதானா என்று அறிவதற்க்காகவாவது அதை படியுங்கள். மனம் முழுக்க வன்மத்தையும் குரோதத்தையும் வளர்ப்பவர்களை புறம் தள்ளி நீங்களாக வந்து உண்மையை கண்டுணருங்கள்.

        • //ஐரோப்பா இருண்ட காலத்தில் இருந்த பொழுது , அரபுலகம் முன்னேறிய நிலையில் , நிறைய புத்தகங்களை சமக்கிருத,லத்தீன் மொழி பெயர்த்து படித்தார்கள்.
          //

          //மதம் வளர ஆரம்பித்த காலத்தில் , மதவாதிகளின் பிடி குறைவாக இருந்தது . ஆனால் இன்றைய சமூகம் மதவாதிகளின் பிடியில் இருக்கிறது .
          //

          Hope you understand my point.Those days they had open mind. A curious person can even translate Sanskrit book. But today,it will be frowned upon. Today people argue,when religious book has everything, why to read any other book?

          Muslims moved out of those advanced thought process and moved towards more into religion and finally giving into radicals.

          Muslim Society limits free speech with blasphemy laws. Those days Arab scientist can explore the idea of earth is sphere without worrying about religion. Now they have to justify their ideas validates the religious book.

          • // ஐரோப்பா இருண்ட காலத்தில் இருந்த பொழுது அரபுலகம் முன்னேறிய நிலையில் நிறைய புத்தகங்களை சமஸ்கிருத லத்தீன் மொழி பெயர்த்து படித்தார்கள் // இதற்க்கு ஆதாரம் இருக்கிறதா ராமன்? யார் மொழி பெயர்த்தது? என்ன மொழியையெல்லாம் மொழி பெயர்த்தார்கள்? எப்படியாவது ஒருவனை குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்க்காக உங்கள் ஆசையை எல்லாம் வரலாறாய் ஆக்க கூடாது ராமன். சரி ஒரு வாதத்திற்க்கு நீங்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் “அரபுலகம் முன்னேறிய நிலையில்” என்றொரு வாசகத்தை குறிப்பிடுகிறீர்களே அரபுலகம் எப்படி முன்னேறியது உலகத்திலேயே ஆக இழிந்த நிலையில் இருந்த சமூகம் எப்படி முன்னேறிய நிலைக்கு வந்தது?கிபி 570 களில் அதாவது முகம்மத் பிறந்த காலங்களில் இருந்த அரபுலகின் நிலை தெரியுமா? கொள்ளையடிப்பதுதான் தொழில்.பெண் என்பவள் கால்நடைகளைப்போல ஒரு பிறவி.ஒன்று பெண் பிள்ளை பிறந்தாள் உயிரோடு புதைப்பான்.இல்லையென்றால் வளர விட்டு அனைவரும் அனுபவிப்பான்.மதுவிலேயே மிதந்தவர்கள்.இப்படிப்பட்ட ஒரு சமூகத்திற்க்கு உங்கள் மொழியில் சொல்வதானால் அடுத்தவனை கொல்லவும் கொளுத்தவுமே சொல்லிக்கொடுக்கிற மதப்புத்தமும் கையில் கிடைத்தால் அவன் நிலை என்னவாக இருக்கும்? லத்தீனிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள நூல்களை மொழி பெயர்த்து அறியும் நிலையிலா அவன் பயிற்றுவிக்கப் பட்டிருப்பான்? உங்கள் முரண்பாடு புரிகிறதா? // மதம் ஆரம்பித்த காலத்தில் மதவாதிகளின் பிடி குறைவாக இருந்தது// என்றொரு வாதத்தை வைக்கிறீர்கள்.இறைத்தூதர் சந்தித்த முதல் போரில் பிடிபட்ட கைதிகளுக்கு அவர் வைத்த முதல் நிபந்தனையே “உங்களில் எழுத படிக்க தெரிந்தவர்கள் அவர்கள் எங்கள் மக்களுக்கு கற்று கொடுப்பீர்களானால் உங்களுக்கு விடுதலை” என்பதுதான்.அந்த மத புத்தகத்தின் அடிப்படையில்தான் பெண்களுக்கு விடுதலையும் சொத்துரிமை விவாக உரிமை விவாகரத்து உரிமை என்று இக்காலத்தில் கூட இன்னும் முழுமையாய் சாதிக்க முடியாத அனைத்தும் கிடைத்தது.இன இழிவு உடனடியாக நீங்கி அனைவரும் சமம் என்ற நிலையும் வந்தது.திருக்குரான் நெடுக மக்களை நோக்கி “சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களா” என்ற சொற்றொடரே நிறைந்திருக்கும்.சரி…அரபுல முன்னேற்றத்திற்க்கும் பண்படுத்தலுக்கும் முகம்மதோ அவர் கொண்டுவந்த இஸ்லாமோ காரணம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் உங்கள் கூட்டம் உங்களுக்கு இஸ்லாம் குறித்தும் நபி முகம்மத் குறித்தும் உங்களுக்கு நடத்துகிற பாடங்கள் இருக்கிறதே…அவை உண்மைதானா என்பதை தெரியவாவது குரான் பக்கம் வாருங்கள்

            • //யார் மொழி பெயர்த்தது? என்ன மொழியையெல்லாம் மொழி பெயர்த்தார்கள்? //

              அரபு வரலாற்றை கொண்டாடும் நீங்கள் தான் , தேடி பிடித்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் .
              மத புத்தகத்தினால் அறிவு வரவில்லை.
              பல கடவுளர்களை வணங்கிய கிரேக்க ரோமானியர்களின் அறிவியல் , தத்துவ , இசை மற்றும் ஜனநாயகம் தான் இன்றைக்கும் காலத்தை வென்று மக்களை முன்னெடுத்து செல்கிறது .

              மேற்குலகம் அரபுலகத்திற்கு நன்றி சொல்வதற்கு காரணம் அந்த புத்தகங்களை கொளுத்தாமல் மொழிப்பெயர்த்து முன்னெடுத்து சென்றது தான் .
              மத புத்தகத்தினால் அறிவியல் முன்னேறவில்லை . நீங்களே கீழே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தில் , மத புத்தகத்தை தாண்டி சிந்திக்க ஏதுமில்லை என்கின்ற சிந்தனை தான் உள்ளது . ஆனால் அன்றைக்கு இது போன்ற பிற்போக்கு சிந்தனை அரபுலகில் இல்லை .

              //கொள்ளையடிப்பதுதான் தொழில்.பெண் என்பவள் கால்நடைகளைப்போல ஒரு பிறவி.ஒன்று பெண் பிள்ளை பிறந்தாள் உயிரோடு புதைப்பான்.இல்லையென்றால் வளர விட்டு அனைவரும் அனுபவிப்பான்.மதுவிலேயே மிதந்தவர்கள்//

              அப்புறம் என்ன பாஸ் , மத புத்தகம் மனிதனை தெய்வமாக்கி விட்டது . அந்த தெய்வங்கள் வாழும் அரபுலகில் அமைதி தவழுக்கிறது …..
              மத புத்தகத்தின் மேஜிக் குறைந்துவிட்டதா ?

              //த்தீனிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள நூல்களை மொழி பெயர்த்து அறியும் நிலையிலா அவன் பயிற்றுவிக்கப் பட்டிருப்பான்//

              மதபுத்தகத்தின் கீழ் மக்கள் ஒன்று திரண்டு சாம்ராஜ்யம் அமைத்ததால் ,சிறு சிறு குழு சண்டைகள் குறைந்து , மக்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க தொடங்கினார்கள் . மதபுத்தகத்தை தாண்டி அறிவை தேடினார்கள்

              //என்பதுதான்.அந்த மத புத்தகத்தின் அடிப்படையில்தான் பெண்களுக்கு விடுதலையும் சொத்துரிமை விவாக உரிமை விவாகரத்து உரிமை என்று இக்காலத்தில் கூட இன்னும் முழுமையாய் சாதிக்க முடியாத அனைத்தும் கிடைத்தது//

              மத புத்தகத்திற்கு முன்னாள் , ரோமானிய காலத்திலேயே பெண்களுக்கு அந்த உரிமை இருந்தது .

              //பெண்களுக்கு விடுதலையும்//

              அது உங்கள் மதத்தில் இருப்பதாக நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் …..மன்னிக்கவும் .

              வெள்ளைக்கார கிழவி பூனைக்கு சொத்து எழுதியயாது போல தான் .

              கார் அவர்கள் பெயரில் இருக்கலாம் ஆனால் ஓட்ட முடியாது
              வீடு அவர்கள் பெயரில் இருக்கலாம் ஆனால் ஆணின் அனுமதி இன்றி விற்க முடியாது
              ஒரு ஆணின் அனுமதி துணை இன்றி வேலைக்கு போக முடியாது .
              ஆணுக்கு சமமாக மன்றத்தில் நின்று ஆணடவனை பிரார்த்திக்க முடியாது
              விரும்பிய இடத்தில விரும்பிய வண்ணத்தில் உடை அணிய முடியாது

              இதை எல்லாம் விடுதலை என்றால் …?

              //….. நெடுக மக்களை நோக்கி “சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களா” என்ற சொற்றொடரே நிறைந்திருக்கும்//

              மத புத்தகம் சரி என்று தான் சிந்திக்க தூண்டும் ஒழிய, புதிய சிந்தனையை தூண்டி மனித குலத்தை வழி நடத்த சிந்திக்க சொல்லவில்லை

              //ஆனால் உங்கள் கூட்டம் உங்களுக்கு இஸ்லாம் குறித்தும் நபி முகம்மத் குறித்தும் உங்களுக்கு நடத்துகிற பாடங்கள் இருக்கிறதே//

              இசுலாமியர்களின் செயலை வைத்து தான் மக்கள் மதத்தை எடை போடுகிறார்கள் . சென்னை வெள்ளத்தின் பொது செய்த நல்ல செய்யலை வைத்தும் , பிற தீய செயல்களையும் அவதானித்து தான் உங்கள் சமூகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் .

              உங்கள் மத புத்தகத்தை படித்து உங்கள் மதத்தை யாரும் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளவும் .

              இதோடு எனது விவாதத்தி உங்களோடு முடித்து கொள்கிறேன் . மதவாதிகளோடு வருட கணக்கில் பேசி கொண்டே இருக்கலாம் . எனக்கு அதில் ஆர்வம் இல்லை .

              • தொடைநடுங்கி ராமா எனக்கும் உங்களைப்போன்ற கல்லுலிமங்கன் களோடு வாதம் பண்ணுவதில் விருப்பமில்லை.நான் எழுதியதின் அடிப்படையே புரியாமல் புரிவதற்க்கே மனம் கொள்ளாமல் உளறுவது எனக்கு புரிகிறது.ரோமானியர் காலத்தில் பெண்களுக்கு உரிமை இருந்தது என் கிறீரே என்ன மாதிரி உரிமை இருந்தது? சரி இருந்துவிட்டு போகட்டும்.பிறகு ஏன் உலகிற்க்கே வாழ்வு கற்று கொடுத்த இந்து மதம் நுரைதள்ளிய இந்தியாவில் போன நூற்றாண்டு வரை பெண்களை இழிவினும் இழிவாய் நடத்திக்கொண்டிருந்தார்கள்?சிறந்த பண்பாட்டு கூறுகள் எங்கிருந்தாலும் அவற்றை தன்னகத்தே கொண்டுவருவதற்க்கும் அந்த சமூகம் பண்பட்ட சமூகமாக இருந்தால்தானே சாத்தியம்.காட்டுமிராண்டிகளாக இருந்தவர்கள் கல்வி வாடையே இல்லாதவர்கள் உலகின் எந்த நாகரிக சமூகங்களோடும் தொடர்பில்லாதவர்கள் பண்பட்டவர்களாக மாறியது எப்படி? கிரேக்க ரோமானிய நாகரிகங்கள் இருந்தது உண்மை.அவை பன்னெடுங்காலங்களாக உருவாகி வளர்ந்தவை.ஆனால் அரபு சமூகத்திற்க்கு நிகராய் மிககுறுகிய காலத்தில் அடியோடு மாறிய சமூகம் எது என்று வரலாறில் காட்டமுடியுமா? மத புத்தகம் அறிவியல் விஞசானத்தை கற்றுக்கொடுத்தது என்று நான் சொல்லவில்லை அவர்களை தூண்டியது என்பதே என் வாதம். அறிவியலுக்கு நேர் முரணாக இன்னும் சொல்லப்போனால் அறிவிலாளர்களை கூண்டோடு கொல்லும் வேலையையே மதங்கள் செய்திருக்கின்றன. ஒருபோதும் இஸ்லாம் அறிவியலுக்கு எதிராய் இருந்ததே இல்லை.நான் இஸ்லாம் என்ற சித்தந்த தளத்திலிருந்து பேசினால் “பெண்களுக்கு கார் ஓட்ட லைஸென்ஸ் தரவில்லை வீடு பெண்கள் பெயரில் இருக்க முடியாது விரும்பிய வண்ணம் உடுத்த முடியாது” இந்த தகவலெல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது ராமா?மனைவியின் சொத்த்தை அவள் அனுமதியில்லாமல் அவள் கணவனும் தொடமுடியாது.மகராக(மணக்கொடை)கணவன் கொடுத்ததையும் அவன் எடுப்பதற்க்கு உரிமையில்லை. அவள் அவனை குலா(மணவிலக்கு)செய்தால் மட்டுமே அவன் தந்த கொடையை அவனிடம் திருப்பித்தரும் கடமை பெற்றவளாகிறாள்.நான் இஸ்லாம் பற்றி பேசுகிறேன் நீர் உமது பக்கத்து வீட்டு அப்துல்காதர் கதையை பேசிக்கொண்டு வராதீர். கட்டுரை இஸ்லாமிய உலகம் அறிவியல் துறையில் சிறந்து விளங்கியது என்பது பற்றியது.அதற்க்கு முதல் மறுமொழியாக “சமஸ்கிருதநூலை இலத்தீன் நூலை மொழி பெயர்த்து கொண்டார்கள் “என்று ஆரம்பித்தது நீர்தான். நான் கேட் கிறேன் சமஸ்கிருதம் உங்கள் நூலாச்சே அதை மொழி பெயர்த்தவனே இவ்வளவு உயர்வாக இருந்திருக்கிறானே நீங்கள் ஒரிஜினல் இல்லையா நீங்கள் எப்படி இருந்திருக்க வேண்டும்? ஏன் இன்னும் மாட்டு மூத்திரத்தை குடித்துக்கொண்டு மாடு கொண்டு போகிறவனை அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

                • இஸ்லாமிய பெண்களின் உடையே மேற்காசிய சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது, அங்கே அடிக்கடி மணல் காற்று புயல் வீசும், அதற்கு இந்த மாதிரி முகத்தை உடலை முழுவதுமாக மறைத்த உடை அணிந்தால் தான் அந்த மணல் காற்றில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் அதே மேற்காசிய உடையை இங்கே பெண்கள் மீது திணித்து அவர்களை அடிமைகளை போல் நடத்தும் நீங்கள் (இஸ்லாமியர்கள்) மற்றவர்களை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

                  • வா ராசா வா மணிகண்டா… வினவு தளத்தின் பவர்ஸ்டாரே.. கோமாளித்தனத்தாலேயே பிரபலமாகி ,பலரும் தேடும் காமெடியனாகி விட்டாய்.எந்த இஸ்லாமிய பெண் வந்து உன்னிடம் அழுதாள் மணிகண்டா? “ஐயையோ…பாலைவனத்தில் போடும் உடையை எங்களை போடச்சொல்லி எங்கள் வீட்டு ஆண்கள் வற்ப்புறுத்த்கிறார்களே” என்று முஸ்லிம் பெண்களெல்லாம் உன்னிடம் வந்து ஒப்பாரி வைத்தார்களா மணிகண்டா?இதே தளத்தில் உன் குருநாதர்களெல்லாம் கேட்டு கேட்டு, கொடுத்த பதில்களால் இனியும் இதை வைத்து ஓட்ட முடியாது என்று ஓடிபோக காரணமான துருப்பிடித்த கேள்வியை தூக்கிக்கொண்டு வராதே. போய் படியுங்கள் உருப்படியான பல விசயங்கள் இருக்கிறது..அதையெல்லாம் படியுங்கள்..பூணூல் போட்டவன் உங்களையெல்லாம் மடையர்களாக ஆக்கி வைத்துக்கொண்டு அவன் ப்ன்னெடுங்காலங்களாக ஏய்த்து ஏய்த்து பிழைத்து கொண்டிருக்கிறான் அதை உணர்ந்து சுய சிந்தனையோடு தன்னம்பிக்கையோடு உங்களை நீங்கள் அறிவுச்சிந்தனையால் வெளிப்படுத்துங்கள் மூத்திரத்தை மூச்சுமுட்ட குடிக்கும் முட்டாள்தனம் போதும்

                    • ஒன்றும் மட்டும் நிச்சயம் சொல்லலாம் இஸ்லாமிய பெண்கள் மனம் முன் வந்து படுதா போர்த்திக்கொள்ளவில்லை. இஸ்லாமிய மதவாதிகளுக்கு பயந்து தான் படுதா போர்த்திக்கொள்கிறார்கள். இதை நான் சொல்வதற்கு காரணம் எங்கள் அலுவலகத்தில் எங்களோடு இஸ்லாமிய பெண் தோழி வேலை செய்கிறார், அவர் திருமணத்திற்கு போட்ட முதல் கண்டிஷன் மாப்பிள்ளை தீவிர இஸ்லாமிய மதவாதியாக இருக்க கூடாது, வெளியே செல்லும் போது பர்தா பொருத்திக்கொள்ள சொல்லி வற்புறுத்த கூடாது…

                      இதே போல் நான் படித்த கல்லூரியிலும் எங்கள் வகுப்பில் இருந்த இஸ்லாமிய பெண்ணுக்கும் இந்த பர்தா சுத்தமாக பிடிக்காது.

              • I presumed that you are inteĺigent and this opinion of yours confirms that you are a core idiot.Though you may get affented, I want to register my comment not on you, but on your comments.

      • திரு ஆர் , “இஸ்லாமிய மதத்தில் மத புத்தகத்தை தாண்டி எதுவும் செய்து விட முடியாது ” என் கிறீர்களே இஸ்லாம் என்றாலே அந்த புத்தகம்தானே.அதில் இல்லாதவைகள் இஸ்லாம் ஆகாது என்பதுதான் உண்மை.அதை ஏற்றுக்கொண்டவன் அதை பின்பற்றுகிறான்.அதில் இருக்கும் அனைத்து சட்டதிட்டங்களையும் சரி கண்டு ஏற்றுக்கொண்டவனை யார் என்ன சொல்ல முடியும்?அதே வேளை அதை நம்பாத மனிதன் மேல் அந்த புத்தகத்திற்க்கு எந்த அக்கறையுமில்லை.அந்த புத்தகமே அதை தெளிவுபடுத்தி விடுகிறது ” இதில் எந்த நிர்பந்தமும் இல்லை ” என்பதை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது கூடாது என்பதே இஸ்லாமிய நிலை.முற்றிலுமாக அந்த புத்தகத்தை நிராகரித்து வெளியேறியவர்களும் இருக்கிறார்கள் அதைப்பற்றியும் அந்த புத்தகத்திற்க்கு கவலையில்லை.அதேவேளை அது இறைவேதம்தான் என்று நம்பியிருந்தும் தனி மனித பலவீனத்தால் அதை கடைபிடிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். இதோ இந்த ரமளான் மாதம் முழுவதும் அனைவரும் நோன்பு நோற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? குரான் சொல்கிற நியாயமான காரணங்களன்றியும் நோன்பு நோற்காத பலர் திரிந்து கொண்டுதான் உலகம் முழுக்க இருக்கிறார்கள். யாரும் என்ன கழுத்தையா வெட்டினார்கள்.

  2. /தொழுகைக்கு முன்னர் கை, கால்கள் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற சடங்கின் விளைவாக சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது/ சிகப்பு கச்சிக்காரன் அல்லாவுக்கு அடிக்குற ஜால்ரா அல்லாவுக்கே புடிக்காது இசுலாமுக்கு முன்னாடி எவனும் குளிச்சதோ கை கால் கழுவுனதோ கிடையாது அல்லாவும் அவரது தூதரும் தான் கத்து குடுத்து சோப்பு கண்டு பிடிக்க சொன்னது அதுக்கு முன்னாடி முதலாளித்துவ அய்ரோப்பிய நாடுகளில் எல்லாம் கை கழுவ மாட்டானுக குளிக்க மாட்டானுகளாம் ஆங்க்க்க்,,,,,,,,,,,,,

  3. கி மு 2500 ஆண்டுகளுக்கு முன்பே சோப்பு பாபிலோனில் பயண்படுத்தப்பட்டதாக வரலாறு சொல்லுது அது போலி வரலாறா இருக்கலாம் இந்திய கம்மூனிஸ்டு கச்சி மாறி

  4. “தொழுகைக்கு முன்னர் கை, கால்கள் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற சடங்கின் விளைவாக சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது”

    This is too much.

Leave a Reply to meeransahib பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க