Saturday, June 6, 2020
முகப்பு செய்தி யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்

யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்

-

மாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்று குற்றம் சாட்டிய சவுதி அரேபியாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறது அரபு உலகம். ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பததாக குற்றம் சுமத்தி கதாருடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் கடந்த ஜூன் 5 அன்று துண்டித்தன.

“ஹமாஸ் எதிர்ப்பு இயக்கமேயொழிய பயங்கரவாதமல்ல” என்ற தலைப்பில் டுவீட்டர், பேஸ்புக் விவாதங்கள்

அதனைத் தொடர்ந்து “ஹமாஸ் எதிர்ப்பு இயக்கமேயொழிய பயங்கரவாதமல்ல” என்ற தலைப்பில் டுவீட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியது. டுவீட்டுகளின் மையமாக பாலஸ்தீனம் இருந்தபோதிலும் கதார், ஜோர்டான், எகிப்து, அல்ஜீரியா, ஓமன், மற்றும் லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி விடுதலை பெறுவது பாலஸ்தீன மக்களின் உரிமை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹமாஸை பயங்கரவாத இயக்கம் என்று கூறுவது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இசுரேலுக்கு மறைமுகமாக உதவுவது போலாகிவிடும் என்றும் சவுதிக் கூட்டணியின் நிலைபாடுகளை கடுமையாக சாடியும் வருகின்றனர்.

அரபு உலகத்தின் இந்த எதிர்வினைகள் ஹமாஸ் எதிர்ப்பியக்கத்தின் நியாயமான செயல்பாடுகள் அரபு உலகத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

பாலஸ்தீன ஆய்வாளரான சரி ஓராபி (Sari Orabi) பேஸ்புக்கில் எழுதியது:

பிரச்சினைக்குரியதாக இல்லாத ஒன்றை விவாதிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கவில்லை. குற்றவாளிகளும் தரங்கெட்டவர்களுமே எங்களுடன் முரண்படுகின்றனர். அது அவர்களுக்கும் தெரியும்.

சலீம் அல்-மென்ஹாலி (Salim al-Menhali), ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியர்:

ஹமாஸ் எதிர்ப்பு இயக்கமேயொழிய பயங்கரவாதமல்ல. அது யாரையும் தாக்குவதில்லை; ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாலஸ்தீனத்தை பாதுகாக்க போராடுகிறது என்பது தான் யதார்த்தம்… எது எதார்த்தம் இல்லையென்றால்… எதிரியைத் திருப்திபடுத்துவதற்காக ஹமாஸ் தாக்கப்படுவது தான்.

பாலஸ்தீனைச் சேர்ந்த முன்னாள் சிறைவாசியான மஹ்முத் மெர்டேவே (Mahmoud Merdawe) டுவீட்டரில் எழுதியது:

ஹமாஸை பயங்கரவாத இயக்கம் என்று சவுதி அரேபிய அதிகார வர்க்கத்தினர் சிலர் கூறியதைக் கேட்டு [இசுரேலிய] ஆக்கிரமிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

டுவீட்டர் பயனர் ஆதம் ஷார்கிவி Adham Sharkawi):

ஹமாஸ் இசுரேலிடம் மட்டுமே சண்டையிடுகிறது. டெல் அவீவ் (Tel Aviv) மீது மட்டுமே குண்டு வீசுகிறது. பயங்கரவாதத்துடன் அதனை தொடர்புபடுத்தி பேசுவது என்பது இசுரேலுக்கு செய்யும் ஒரு இலவச சேவையாகும் மற்றும் நெத்தென்யாகுவின் (இஸ்ரேல் பிரதமர்) வார்த்தைகளை மூடத்தனமாக எதிரொலிப்பதற்கு ஒப்பாகும்.

பாலஸ்தீனிய ஆர்வலர் மற்றும் பதிவரான அகமது பைகாவி (Ahmed Biqawi):

ஒவ்வொருமுறையும், எல்லா இடங்களிலும் ஏற்கனவே தெரிந்த ஒரு விடயத்தை அது உண்மைதானா, உண்மைதானா என்று மீண்டும் உங்களிடம் கொடியவர்கள் எழுப்புகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது.

எகிப்திய அரசியல்வாதியான அய்யன் நூர் (Ayman Nour) தன்னுடைய அதிர்ச்சியை பதிவு செய்கிறார்:

சவுதி நிதியமைச்சரின் பாரிஸ் அறிக்கைகள் குழப்பம் நிலவிக் கொண்டிருப்பதற்கான சான்றாதாரங்கள்.

பேஸ்புக் பயனர் ஒருவர்:

சவுதி மக்களை பொருத்தவரை தீவிரவாதம் என்பது பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு, ஈராக் மற்றும் அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளே ஆகும். தீவிரவாதம் என்பது முதல் கட்டமாக பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கிவிட்டு அதற்கடுத்து உங்களுடைய கதவுகளை இசுலாமிற்கு எதிரானவரான ட்ரம்பிற்கு திறந்து விடுகிறது……

செய்தி ஆதாரம்:

Arab world tweets: Hamas is resistance, not terrorism

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. வளமும் சொகுசும் உல்லாசமும் அரபு ஆட்சியாளர்களை குருடாக்கி பல காலங்கள் ஆகிறது.இனி அவர்கள் இந்த பிடியிலிருந்து விடுபடுவது மிகக்கடினம்.ஒரு கோரமான விளைவை அவர்கள் சந்திக்காதவரை இந்த உல்லாசத்தில்தான் மூழ்கி கிடப்பார்கள்

  • ஹமாஸ் அப்பாவி இஸ்ரேலிய மக்களை கொலை செய்தால் அது போராட்டமாம் ஆனால் அதுவே இஸ்ரேல் ஹமாஸ் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது மனித உரிமை மீறலாம் நல்லாயிருக்குயா உங்க நியாயம்.

   ஹமாஸும் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் எல்லாம் வினவு போன்ற மனித இன விரோதிகளுக்கு போராளிகள்

   • மணிக்குட்டி,

    முதலில் பாலஸ்தீனம் இசுரேல் குறித்த வரலாறு எதுவுமே தெரியாமல் அப்பாவி இசுரேல் மக்கள் ஹமாஸ் தீவிரவாதிகள் என்று உளற கூடாது.

    ஐ.எஸ்ஐ.எஸ் அல்.கைதா தீவிரவாதிகளை உருவாக்கிய அமெரிகாவிடம் எனைய உமது மோடி அரசு கொஞ்சி வாலை குலாவி ஆட்டிக் கொண்டிருக்கிறது? விகிலீக்ஸ் வெளியிட்ட டாகுமெண்டில் தெளிவாக தானே இருக்கிறது. அம்மையார் ஹிலாரியும் ஒப்புதல் வாக்குமூலம் சொல்லிட்டாரே. அப்புறம் என்ன ஹேருக்கு அமெரிக்க அமெரிக்க என்று பல்லிளித்து கொண்டிருக்கிறீர்? அமெரிக்கா ஒரு பயங்கரவதா நாடு …நாங்க ஏக பத்தினி நாடு… எங்களுக்கு அவாள்கிட்ட எல்லாம் தொடர்பு வேண்டாம்னு…..வெட்டு ஒன்ன துண்டு ரெண்டா சொல்லிபுட வேண்டியது தானே……சும்மா பினாத்திகினு….

    • திரு செல்வம் ,முதலில் பாலஸ்தினம் என்றால் என்ன ?இஸ்ரேல் என்றால் என்ன ?எவ்வளவு காலமாக இந்த இஸ்ரேல் இருக்கிறது ?இந்தியாவிற்க்கும் இஸ்ரேலுக்குமான உறவு என்று மலர்ந்தது? அதற்க்குமுன் இஸ்ரேலைப்பற்றி இந்தியாவின் நிலைப்பாடு என்ன ?என்ன காரணத்தால் பாலஸ்தின மக்கள் போராட ஆரம்பித்தார்கள் ?இன்று இஸ்ரேல் என்று ஒரு பகுதியை வைத்துக்கொண்டிருப்பவன் கள் அதற்க்குமுன் எங்கிருந்தார்கள்? இதைப்ப்ற்றி மனிதகுல மாணிக்கம் மணிகண்டனிடம் கேட்டுச்சொல்லுங்களேன்

    • உடனே ஆரம்பிச்சிட்டாங்கப்பா வரலாறு புவியில் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ்… அப்பாவி மக்களை கொலை செய்வது தீவிரவாதம் தான் ஹமாஸ் தீவிரவாதிகள் தான்.

     மேலும் அமெரிக்கா அதை செய்தது இதை செய்தது என்று சொல்லி ஹமாஸ் செய்யும் தீவிரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது.

 2. Manigandan sir மாட்டுக்காக மனிதர்களை கொள்ளும் உங்கள் பிஜெபி தான் மனித இன விரோதிகள்.

  • மாட்டுக்காக மனிதர்களை கொலை செய்வது பிஜேபியின் கொள்கையல்ல… அது ஒரு சிலரின் மூடத்தனத்தால் விளைந்தவை, இது ஒரு abberation என்றே நான் பார்க்கிறேன், 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் விறல் விட்டு என்ன கூடிய அளவிற்கு தான் இம்மாதிரியான செயல்கள் நடந்து இருக்கின்றன.

   ****

   • பாஸ்,

    சரிங்க சார். அந்த மூடத்தனம் எப்படி இந்துத்வா கும்பலுக்கு மட்டுமே இருக்கிறது. அதுவும் உணவு பழக்கத்திற்காக. பன்றிக்கறி சாப்பிட்டதற்காக கொல்லப்பட்டதற்கு எதாவது ஆதாரம் கொடுத்தால் இது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்றாக நாம் கருதலாம்.

    • ஹிந்துக்களுக்கு பசு புனிதம், இஸ்லாமியர்களுக்கு குரான் புனிதம். இஸ்லாமியர்களுக்கு பன்றி தீமை அதனால் பன்றி கறியை மற்றவர்கள் சாப்பிடுவதை இஸ்லாமியர்கள் எதிர்ப்பது இல்லை. குரானை அவமதித்து யாராவுது எதாவுது பேசினால் அவர் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பாத்வா அறிவித்து இஸ்லாமியர்கள் அவரை கொலை செய்கிறார்கள்… சல்மான் ருஷ்டி, பங்களாதேஷ் எழுத்தாளர் நஸிரீன் என்று எவ்வுளவோ உதாரணங்கள் இருக்கிறது;.

     • புரிகிறதா சகோதரர்களே இதுதான் மணிகண்டன். இஸ்லாமியர்களுக்கு குரான் புனிதம் போல இந்துக்களுக்கு பசு புனிதமாம்.என்ன அற்புதமான விளக்கம் எவ்வளவு அருமையான உதாரணம். கேட்டவன் செத்துவிட மாட்டான். இப்படியெல்லாம் பேசுவதற்க்கு நீங்கள் மூளையால் சிந்திக்க கூடாது மூக்குச்சளியால் சிந்திக்க வேண்டும். இதற்க்கு மேலும் நம்மால் விவாதிக்க முடியுமா? இது ஏதோ மணிகண்டன் என்ற தனிமனிதனின் சிந்தனை என்று நினைத்து விடாதீர்.இதுதான் இந்துத்துவம் தயாரித்துவிட்ட ஒரிஜினல் அக்மார்க் தயாரிப்பு. இப்படித்தான் மேலிருந்து கீழ்வரை உருவாகி வருகிறான் கள். எச்.ராஜா புகழ் “நான் சொன்னேனா நான் சொன்னேனா” புகழ் காமெடியை இன்றும் யூடிபில் பார்த்து ரசிக்கிறோம் இல்லையா அதேதான் இது.

 3. மணிகண்டனுக்கு பொறுப்பாய் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று இருக்கிற சிந்தனையயும் மழுங்கடித்து விடாதீர் மக்களே..நான் பலமுறை சொன்னதுபோல காவிகள் பொறித்து தள்ளிய பல்வேறு குஞ்சுகளில் மணிகண்டனும் ஒருவகை.கூர்மையான விவாதத்தை மொக்கையாக்கி திசைதிருப்பவென்றே தயாரித்து விடப்பட்டிருக்கும் அட்டைகத்திதான் இந்த மணிகண்டன். செல்வத்தின் மிக எளிமையான் கேள்விக்கு கொஞ்சம் மூளையை கொடுத்தால்கூட மணிகண்டன் மனிதனாக மாறிவிடலாம். அது நடக்குமா? மனிதத்தனமை எடுபட்ட கூட்டத்திலிருந்து வருபவர்களுக்கு ஏது மனித சிந்தனை..

 4. இந்த நாட்டை முஸ்லிகளாக இருந்த முகலாயன் பலநூறு வருடம் ஆண்டானே..அதுவும் முடியாட்சி.அவன் ஒன்றினைத்த நாட்டைத்தான் இன்று ஏக இந்தியா என்று பீற்றிக்கொண்டு திரிகிறீர்கள்.சரி..முழு நாட்டையும் கையில் வைத்து ஒரு பேரரசை நிவகித்த முகலாயன் எங்கேயாவது பன்றிகறி தடை தடைபோட்டதாக எங்கேனும் குறிப்புகள் உண்டா?பன்றிக்கறியை விடு..பசுமாட்டையே அறுக்க வேண்டாம் என்று பாபர் தன் மகன் குமாயூனுக்கு உயில் எழுதி வைத்ததாகத்தான் வரலாறு.இந்த உயில் ஆவணமாக பாபர்நாமா என்ற பெயரில் டெல்லி அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டதாக செய்தி. எந்த சர்வாதிகார மன்னனாக இருந்தாலும் மக்களின் உணர்வை அலட்சியப்படுத்திவிட்டு அவனால் ஆட்சியதிகாரத்தை தொடரமுடியாது.அது நிற்காது நிலைக்காது.இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல்தான் “ராமர்கோயிலை பாபர் இடித்தான் ராமர்கோயிலை பாபர் இடித்தான் “என்ற அவிந்த பொய்யெயை சொல்லி ரத்த ஆறு ஓட்டுகிறது ஓநாய் கூட்டம்.மொகலாய சாம்ராஜ்யத்தை ஊன்றிய பாபரே கோயிலை இடித்திருந்தால் அவனோடவே முகலாயர் கூட்டம் மூட்டை கட்டியிருக்கும்.ஆனால் நடந்தது என்ன? பாபருக்கு பிற்கு எவ்வளவு ஆண்டுகாலம் அவனின் வாரிசுகள் ஆண்டார்கள்.எவ்வளவு ஆழ்மான சுவடுகளை பதித்து சென்றிருக்கிறார்கள்.இறுதிவரை அவர்களும் இந்த மண்ணை விட்டு போகவில்லை இந்த மக்களும் அவர்களை விரட்டவில்லை.இந்த மண்ணோடு மண்ணாக இந்த மண்ணையே தாய் மண்ணாக புதைந்தார்கள்.அவர்களின் களியாட்டமும் உல்லாசமும் ஊதாரித்தனமும்தான் வெள்ளையன் நாடு பிடிக்க காரணமாக இருந்ததே தவிர மக்களின் வெறுப்பு அவர்களை வீழ்த்தவில்லை.ஆனால் பீரங்கி வெடிகுண்டோடு வந்த வெள்ளையன் நம் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டான்.வெள்ளையனால் பல நன்மைகள் இந்த மண்ணிற்க்கு கிடைத்தாலும் அவன் இங்கிருந்து நிறைய கொண்டு சென்றான். முகலாயன் எதையும் எடுத்துச்செல்லவில்லை. இந்த மண்ணையே தன் மண்ணாக உணர்ந்து மண்ணோடு மண்ணாக கரைந்து போனான்.உன் உணவு உனக்கானது அதில் எந்த தடையும் போட எவனுக்கும் அதிகாரமில்லை.உன் வீட்டில் வளர்த்து தெய்வமாய் நீ பூஜிக்கிற மாட்டை நான் வந்து பிடுங்கி கொண்டு போய் அறுத்து தின்றால் என் சங்கை அறுத்து என்னை கொல்.அதை விடுத்து மாட்டு இனமே எனக்கானது என்று காப்புரிமை போடாதே

  • பசு புனிதம். அதை உண்டால் கொள்ளுவோம். இது நியாயம்.

   காஷ்மீருக்கு உதவி செய்து அதை ஆக்கிரமித்த் அதன் மக்களை கற்ப்ழித்து தட்டி கேட்டால் கொல்லுவோம். இது நியாயம்.

   பாலஸ்தினை ஆக்கிரமிப்போம். அதன் மக்களை கொல்லுவோம். எதிர்த்தவன் தீவிரவாதி.

   உங்களை போன்று நாட்டை ஆக்கிரமித்த வெள்ளைக்காரனுக்கு கூட்டி கொடுத்தால் நல்லவர்கள். அப்படித்தானே மணிகண்டா?

   • முன்ன பின்ன காஷ்மீர் பற்றிய ஐநா தீர்மானத்தை படித்து இருக்கிறீர்களா ? ஐநா தீர்மானப்படி ஆக்கிரமித்த பகுதியில் இருந்து பாக்கிஸ்தான் விலகி அந்த பகுதிகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்த பிறகு இந்தியா சட்டம் ஒழுங்கை காப்பாற்ற குறைந்தளவு பாதுகாப்பு படைகளை நிறுத்தி காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    ஐநா தீர்மானத்தின்படி காஷ்மீரை ஆக்கிரமித்து இருப்பது பாக்கிஸ்தான்… இன்று வரையில் ஐநா தீர்மானத்தை மதித்து நடக்காத பாகிஸ்தானை குற்றம் சொல்வதை விடுத்து உங்களை போன்றவர்கள் இந்தியாவை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
    *****

    அப்படி உங்களுக்கு எல்லாம் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தே வேண்டும் என்றால் முதலில் பாகிஸ்தானை வெளியேற வேண்டும் என்று போராடுங்கள், பாக்கிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கல்லெறியுங்கள்…

    — இந்த கேள்விகளுக்கு உங்களை போன்றவர்களிடம் இருந்து பதிலை எதிர் பார்க்கிறேன்.

 5. ராசா மணீகண்டா போ..போயி மாடுகளை எவனாவது ஓட்டிக்கிட்டு போகாம பார்த்துக்கோ..உனக்கு கணிணி தேவையில்ல உங்க மாடு ஆத்தா குடிக்க களனி இருக்கான்னு பாரு.நீ ஆத்தாவை கவனிக்காம இருந்தா அவன் அவன் அறுத்து தின்னுட்டு இருப்பான். இப்பபாரு இன்னிக்கி காலையில நானே மாட்டுக்கறிய நல்லா சுக்காவா பொறிச்சி கத்திரிக்காய் முருங்கக்காய் தக்காளி போட்டு ஒரு ஆனம்(குழம்பு).மாம்பழம் நறுக்கி வச்சி திண்ணேன். அதிகாலையில இத தின்றுதான் நோன்பு வச்சேன்.செமயா இருந்துது. கறி நல்ல இளங்கறி..அது பசுவா காளையா கன்னுகுட்டியா தெரியாது.ஆனால் மாட்டுக்கறி அது தெரியும். நீ உக்காந்து கணிணிய தட்டிக்கிட்டு இருந்தா மாட்டுக்கறி திங்கிறவன யாரு தட்டிக்கேக்கிறது மணிகண்டா?

  • இந்தியாவில் மதக்கலவரங்களுக்கு மூல காரணம் இஸ்லாமியர்கள் என்பதை மேலும் ஒரு முறை நீ நிரூபிக்கிறாய்

   குஜராத் கலவரத்திற்கு கோத்ர ரயில் எரிப்பு
   இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஏற்பட்ட கலவரத்தை தூண்டியவர்கள் இஸ்லாமியர்கள் (இது பற்றி ஜெர்மனியில் வசிக்கும் பாகிஸ்தானி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்)

   தற்போது உன்னை போன்ற ஆட்களின் ஹிந்து விரோத செயல்கள் அடுத்த கலவரத்திற்கு அடிபோடுகிறீர்கள்.

   • கண்டுபிடித்து சொன்னதற்க்கு பாராட்டு தம்பி.நான் இப்போது சொல்வதையும் நன்றாக குறித்துக்கொள்.உன் கூட்டம் அனைத்திற்க்கும் சொல்லிவிடு…இனியும் மாடு தெய்வம் மாட்டை அறுக்காதே திண்ணாதே என்று எவனாவது கூவிக்கொண்டு வந்தால்******உன் பசுஆத்தாவிற்க்காக நீ பலியாவது நன்மை என்றால் வா..வந்து மோது.ப்யிர் வளர களை புடுங்குவது தவறே இல்லை.********… நீ ரெடியா மணிகண்டா? வா… வா…. வா….

   • கோத்ரா ரயில் எரிப்பு இசுலாமியர்கள் தான் செய்தது என்பதற்கு என்ன ஆதாரம்?

    பாபர் மசூதியை இடித்துதானே ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் மதக்கலவரத்திற்கு தூபம் போட்டார்கள்.

    அப்புறம் சமஸ்கிருதம்,ஆரியம்,பசு இந்துத்வா எல்லாத்துக்கும் சமீபத்தில் வந்த ஜெனிடிக்ஸ் ஆராய்ச்சி ஆப்பு வைத்து விட்டதாமே அப்படியா?

 6. ஏங்க செல்வம் வீண்விரயம்ங்க…ஏதோ அறியாமையில இருக்கிற ஒரு வெகுளி என்றால் நீங்க விளக்கலாம். மனசு நிறைய வெறுப்ப நிறைத்துக்கொண்டு திரிகிற கூட்டத்திற்க்கு நீங்க என்ன பாடம் நடத்தி என்னத்துக்கு? அவனுங்க நோக்கம் அறிஞ்சி மட்டம்தட்டிக்கிட்டே இருக்கனும். அவனுங்க நம்மை பைத்தியக்காரனா ஆக்குற மூடில்தான் எப்பவுமே இருப்பானுங்க.வெறும் பொய்யை வைத்துக்கொண்டு அதை எப்படியும் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவன் உண்மையை கண்டால் சும்மா இருப்பானா? உண்மைதான் அவனுக்கு வேப்பங்காய். உண்மை மட்டும் எழுந்து விடக்கூடாது உண்மை வெளிவந்து விடவே கூடாது.பொய் மேல் பொய் போட்டு உண்மையை மறைக்க போராடிக்கொண்டே இருப்பான். அது நடக்குமா ? பொய் பல்லிளிக்கும். ஆனாலும் கவலைப்பட மாட்டான். “எவனாவது ஒருவன் கிடைக்க மாட்டானா “என்ற முயறச்சியை தொடர்ந்து கொண்டே இருப்பான்.மீண்டும் சொல்கிறேன் பொறுப்பாக பதில் சொல்கிறேன் பேர்வழி என்று கல்லுளிமங்கன் மணிகண்டனுக்கு சீரியஸ் பதிலை சொல்லவே சொல்லாதீர்கள். கஞ்சி காய்ச்சி ஓடவிடுங்கள்.

 7. ஒருவரோடு விவாதிக்கிறோம் அவர் குறிப்பிட்ட கருத்தில் நம்மோடு மாறுபட்ட நிலையில் இருக்கிறார்.நம்முடைய விவாதம் தொடரும்போது மாறுபடுகிற அவரின் கோணத்தை நம்மால் உணரமுடியும்.இது நம்முடைய சிந்தனையை வேறு ஒரு தளத்திலிருந்து பார்க்க நமக்கு கற்றுத்தருகிறது. உண்மையில் நம்முடிய அறிவை விசாலப்படுத்துபவர்கள் நம்மோடு முரண்படுகிறவர்கள். இது ஆரோக்கியம். ஆனால் இந்த மணிகண்டனை இந்த பட்டியலில் வைத்து பார்க்க முடியுமா? பாலஸ்தின போராளி இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என் கிறார். சரி ஒருவேளை அவர்கள் வரம்புமீறி நடந்து கொண்டவைகளையோ அல்லது நமக்கு தெரியாமல் சில பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததையோ சுட்டிக்காட்டினால் ஒன்று அதை பற்றி விளக்கி அவர் கருத்தை மாற்றலாம். அல்லது அவரின் நியாயமான வாதத்தால் நம் நிலைப்பாடு மாறலாம். அல்லது காரசாரமாக கருத்து மோதல் நடத்தி அவரவர் அவரவரின் நிலைப்பாட்டில் இருந்தாலும் பல தவகல்கள் விவாதத்தின் மூலம் கிடைக்கலாம். மணிகண்டன் விவாதம் இதில் எந்த பயனையாவ்து நமக்கு தருமா? ” இஸ்ரேல் எப்படியா வந்தது கமாஸ் ஏன் உருவானது அவர்கள் ஏன் இஸ்ரேலை எதிர்க்க வேண்டும்?”” அதெல்லாம் சொல்ல மாட்டேன் . அவனுங்க தீவிரவாதி ல்ஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி வினவு தீவிரவாதி ” இது திமிர்தானே..நீங்க வாதாடுவீங்க.? ” உனக்கு குரான் புனிதம் எனக்கு மாடு புனிதம் நீ மாடு திண்ணாதே நான் குரானை கொளுத்த மாட்டேன் ” கொஞ்சம் மூளை உள்ளவனும் இப்படி பேசுவானா? தனிப்பட்ட ஒருவன் அவனாக உண்டாக்கி வைத்திருக்கிற ஒரு புத்தகத்திற்க்கும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான காடு மலை மரம் செடி கொடி ஆடு மாடு கழுதை குதிரை இவைகளை ஒருவன் சொந்தமாக்கி கொள்வதும் ஒன்றா? ஒருத்தன் குதிரைய புனிதம் என்பான் இன்னொருத்தான் கோழியை புனிதம் என்பான் இவனுங்களுக்கு இதையெல்லாம் யார் புனிதமாக்கி தருவது. உடம்பு முழுக்க திமிர் திரண்டு இருந்தால்தான் இப்படியெல்லாம் பேச வைக்கும் அதை முதலில் கரைக்க வேண்டும் கரையவில்லையென்றால் அடுப்பில் தூக்கி வைத்து நெருப்பில் உருக வைக்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க