Wednesday, July 8, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS - IPS அதிகாரிகள்

மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்

-

மோடி பதவியேற்று மூன்றாண்டுகள் முடிந்த தருவாயில், இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும், உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கப்படுகின்றனர். இந்துமத வெறியர்களால் சிறுபான்மையினரும், மனித உரிமை ஆர்வலர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்ச்சியாக தாக்குதலைச் சந்தித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகள் 65 பேர் ஒரு குழுவாக ஒரு திறந்த மடலை எழுதியிருக்கின்றனர்.

நாங்கள், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்திந்திய, மத்திய சேவைகளில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரிகளின் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள். எங்களது பணிக் காலகட்டங்களில் மத்திய மாநில அரசாங்கங்களுடன் இணைந்து பணி புரிந்திருக்கிறோம். ஒரு குழு என்ற அடிப்படையில் நாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்திராதவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் பாரபட்சமின்மை, மற்றும் நடுநிலைமைக் கொள்கையின் மீதும், இந்திய அரசியல் சாசனத்தின் மீதான பொறுப்புணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைதியற்ற உணர்வு தான் எங்களை இக்கடித்தை எழுதச் செய்திருக்கிறது.

எங்களது கருத்துக்களையும், சமீபத்திய நிகழ்வுகள் மீதான எங்களது மனக்கசப்புகளையும் பதிவு செய்யவே இக்கடிதத்தை எழுதுகிறோம். அப்படி என்ன தான் தவறு நடந்திருக்கிறது?.

மாட்டுக்கறியின் பெயரால் கொல்லப்பட்ட அக்லாக் (உள்படம்)

பிரதானமாக முசுலீகளின் மீது குறிவைக்கப்பட்ட மதச் சகிப்பின்மைச் சூழல் வளர்ந்து வளர்வதாகவே தெரிகிறது, உத்தரப்பிரதேசத்தில் சமீபத்திய தேர்தலுக்கு முன்னால், அருவருக்கத்தக்க, வெளிப்படையான மதவாத ஒப்பீடு, அங்குள்ள சுடுகாடுகளின் எண்ணிக்கைக்கும், இடுகாடுகளின் எண்ணிக்கைக்கும் இடையில் செய்யப்பட்டது. அது தவிர, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களின் மதத் திருவிழாவிற்கு மின்சாரம் ஒரே மாதிரியாகத் தான் வழங்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இவை அனைத்தும் எந்த ஒரு அடிப்படையோ, ஆதாரமோ இல்லாமல் எழுப்பப்படும் கேள்விகள். மாடு வெட்டும் நிலையங்களின் மீதான தடை குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைத்து, அவர்களது வாழ்வாதாரங்களைப் பாதித்திருக்கிறது. இத்தகைய சகிப்பினமையே, மதவெறி ஊட்டப்பட்ட சூழலில் கலவரங்களை உற்பத்தி செய்கிறது.உ.பி.யில் உள்ளூர் தலைவர் ஒருவரின் தூண்டுதலின் பேரில், போலீசு சூப்பிரன்டெண்டின் வீட்டைத் தாக்கி அவரது குடும்பத்தை பயமுறுத்தும் அளவிற்கு கலவரத்தை உற்பத்தி செய்திருக்கிறது. சட்ட அங்கீகாரமற்ற கும்பல்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது பரவிவருகிறது.

வீட்டில் வைத்திருந்தது மாட்டுக்கறியா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு அக்லக் கொல்லப்பட்டார். போதுமான ஆவணங்களைக் கையில் வைத்திருந்தும், இரண்டு பசுக்களை தனது இடத்திற்கு வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வரும் போது பெஹ்லுகான் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். ஜம்முவில் நாடோடி ஆட்டிடையர்கள், இடம்பெயர்ந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார்கள் பசுப் பாதுகாவலர்கள், தண்டனைப் பயமின்றி செயல்பட்டு வருகிறார்கள்.

குஜராத் ஊனாவில் தலித்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

அரசு இயந்திரத்தின் மறைமுக ஆதரவுடனோ அல்லது நேரடியான ஊக்குவிப்புடனோ அவர்கள் அவ்வாறு செயல்படுவதாகத் தெரிகிறது. வன்முறையைத் தூண்டியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதேசமயத்தில், கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. சட்ட அங்கீகாரமற்ற கும்பல்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதோடு, வழக்கறிஞர், நீதிபதி, மற்றும் மரணதண்டனை நிறைவேற்றுபவர் ஆகிய பாத்திரங்களையும் தாமே ஏற்றுச் சட்டம் மற்றும் நீதித்துறையின் முன்னால் சுதந்திரமாக உலாவுகின்றனர்.

அரசு மட்டுமே, தனது பல்வேறு உறுப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் மூலம் சட்டத்தை அமல்படுத்த அதிகாரம் கொண்டிருக்கும் போது, இவர்களின் இந்நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியையும், இந்திய அரசியல் சாசனத்தையும் தாழ்த்திவிடுகின்றன.

கைகளைக் கோர்த்துக் கொண்டு வெளியே செல்லும் இளம் தம்பதியினரையும், காதலர்களையும் ‘ரோமியோ எதிர்ப்பு அணி’ மிரட்டும் அளவிற்குச் சட்ட அங்கீகாரமற்ற கும்பல்கள் சட்டத்தைக் கையிலெடுக்கும் போக்கு பிரபலமாகியுள்ளது. பெண்ணின் தரப்பில் இருந்து மோசமாக நடத்தப்பட்டதாகப் புகார் வராத நிலையில் அந்தத் தம்பதிகளைத் தொல்லைபடுத்துவதை நியாயப்படுத்த சட்டத்தில் இடமில்லை என்ற போதிலும் ஹிந்து- முஸ்லீம் உறவுமுறையையும், திருமணங்களையும் பிரிக்க கிட்டத்தட்ட பகிரங்கமான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஹைதராபாத், ஜே.என்.யூ. போன்ற கல்விநிலையங்களில், சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மீது கல்லூரி நிர்வாகம் அரசாங்கத்தின் ஆதரவோடு தாக்குதல் தொடுக்கிறது. ஜோத்பூரில் மாணவர்கள் மத்தியில் நடைபெறவிருந்த ஒரு புகழ்பெற்ற கல்வியாளரின் சொற்பொழிவு, கல்லூரி நிர்வாகத்தின் நெருக்குதலால் இரத்து செய்யப்பட்டது. அதோடு அச்சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர் மீது ஒழுக்க நடவடிக்கையை எடுத்தது நிர்வாகம்.

ஜோத்பூரில் நடைபெற்றது மற்ற கல்வி நிறுவனங்களிலும் நடந்திருக்கிறது. பல்வேறு கருத்துக்களின் மீதான விவாதங்களும், கலந்துரையாடல்களும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, ஜனநாயகத்திற்கும் இரத்தம் போன்று அவசியமானவை. அவையனைத்தும் தடை செய்யப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளும், எதிர்க் கருத்துக்களும் தேச துரோகமாகவும், தேச விரோதமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இத்தகைய அணுகுமுறை சுதந்திரப் பேச்சு மற்றும் எண்ணங்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சில குறிப்பிடத்தக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், குடிமைச் சமூக அமைப்புகளும், வருமான வரிச் சட்டம் மற்றும் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. உண்மையாகவே அவ்வாறு அச்சட்டத்தை மீறுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அச்சட்டங்களால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்கள், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டுகள் எடுத்து, எதிர்கருத்துக்களை வெளிப்படுத்தியவை என்பதையும் சில வழக்குகளில் அரசுக்கு எதிராக நிற்கும் சமூகங்களை ஆதரித்தவை என்பதையும் இங்கே கண்டனத்துடன் பதிவு செய்கிறோம்.

ஆதிக்கக் கருத்தாக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு மிரட்டல்களும், இணைய அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதை எவ்வாறு பேச்சு சுதந்திரமாக ஏற்றுக் கொள்ள முடியும்? எந்த ஒரு விமரிசனத்தையும் இரு வகைகளுக்குள் அடக்கும் மீமிகை தேசிய வாதம் வளர்ந்து வருகிறது: ”நீங்கள் அரசாங்கத்தோடு இல்லை என்றால் நீங்கள் தேச விரோதிகள்” என்பது தான் அது. ”அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கக் கூடாது” – என்பது தான் அவர்களது தெளிவான கருத்து காரணமுள்ள விவாதம், கலந்துரையாடல் மற்றும் எதிர்க்கருத்துக்களை அனுமதிக்காத யதேச்சதிகாரமும், பெரும்பான்மைவாதமும் வளரும் சூழலில், இப்போக்குகளைக் கவனத்தில் கொண்டு அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது அதிகாரிகளையும், பொது நிறுவனங்களையும், அரசியலமைப்பு நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறோம். நமது இந்தியாவை உருவாக்கியவர்களின் கனவிற்கிணங்க, நாம் இந்திய அரசியலைப்பின் ஆன்மாவைக் காக்கவும் மீட்டெடுக்க வேண்டும் .

தமிழாக்கம்: நந்தன்

செய்தி ஆதாரம் :

அதிகாரிகள் குழுவில் உள்ளவர்களின் பெயர்கள் :

1. Vivek Agnihotri, IAS (Retd.), former Secretary General, Rajya Sabha
2. S. Ailawadi, IAS (Retd.), former Chairman, Electricity Regulatory Commission
3. P. Ambrose, IAS (Retd.), Additional Secretary, Ministry of Shipping and Transport, GoI.
4. Ishrat Aziz, IFS (Retd.), former Ambassador to Brazil
5. Balachandran, IAS (Retd.), former Additional Chief Secretary, Govt. of West Bengal
6. Balachandran, IPS (Retd.), former Director General of Police and Chairman, Tamil Nadu Police Housing Corporation, Govt. of Tamil Nadu
7. Balagopal, IAS (Retd.), former Resident Representative, UNICEF, North Korea
8. Sundar Burra, IAS (Retd.), former Secretary, Govt. of Maharashtra
9. Chandramohan, IAS (Retd.), former Principal Secretary, Urban Development and Transport, Govt. of NCT of Delhi
10. Kalyani Chaudhuri, IAS (Retd.), former Additional Chief Secretary, Govt. of West Bengal
11. Anna Dani, IAS (Retd.), former Additional Chief Secretary, Govt. of Maharashtra
12. Vibha Puri Das, IAS (Retd.), former Secretary, Ministry of Tribal Affairs, GoI
13. Surjit K.Das, IAS (Retd.), former Chief Secretary, Govt. of Uttarakhand
14. Keshav Desiraju, IAS (Retd.), former Health Secretary, GoI
15. G.Devasahayam, IAS (Retd.), former Secretary to Govt. of Haryana
16. P.Fabian, IFS (Retd.), former Ambassador
17. Bhaskar Ghose, IAS (Retd.), former Secretary, Ministry of Information and Broadcasting, GoI
18. Hirak Ghosh, IAS (Retd.), former Principal Secretary, Govt. of West Bengal
19. Meena Gupta, IAS (Retd.), former Secretary, Ministry of Environment and Forests, GoI
20. Ravi Vira Gupta, IAS (Retd.), former Deputy Governor, Reserve Bank of India
21. Wajahat Habibullah, IAS (Retd.), former Secretary, GoI, and Chief Information Commissioner
22. Deepa Hari, IRS (Resigned)
23. Vivek Harinarain, IAS (Retd.)
24. Sajjad Hassan, IAS (Retd.), former Commissioner (Planning), Govt. of Manipur
25. K.Jaswal IAS (Retd.), former Secretary, Department of Information Technology, GoI
26. N.Kakar, IAS (Retd.), former Additional Secretary, Ministry of Surface Transport, GoI
27. John Koshy, IAS (Retd.), former State Chief Information Commissioner, West Bengal
28. Dhirendra Krishna, IA&AS (Retd.), former Financial Controller, Irrigation Department, Govt. of Uttar Pradesh
29. Ajai Kumar, Indian Forest Service (Resigned), former Director, Ministry of Agriculture, GoI
30. Arun Kumar, IAS (Retd.), former Chairman, National Pharmaceutical Pricing Authority
31. Brijesh Kumar, IAS (Retd.), former Secretary, Department of Information Technology, GoI
32. Harsh Mander, IAS (Retd.), Govt. of Madhya Pradesh
33. Lalit Mathur, IAS (Retd.), former Director General, National Institute of Rural Development, GoI
34. Sonalini Mirchandani, IFS (Resigned)
35. Sunil Mitra, IAS (Retd.), former Secretary, Ministry of Finance, GoI
36. Deb Mukharji, IFS (Retd.), former Ambassador to Nepal
37. Ruchira Mukerjee, P&T Finance Accounts Service (Retd.), former Adviser, Telecom Commission, GoI
38. Anup Mukerji, IAS (Retd.), former Chief Secretary, Govt. of Bihar
39. Pranab Mukhopadhyay, IAS (Retd.), former Director, Institute of Port Management, GoI
40. Nagalsamy, IA&AS (Retd.), former Principal Accountant General, Tamil Nadu and Kerala
41. Hari Narayan, IAS (Retd.), former Chairman, Insurance Regulatory Authority, GoI
42. Amitabha Pande, IAS (Retd.), former Secretary, Inter-State Council, GoI
43. Niranjan Pant, IA&AS (Retd.), former Deputy Comptroller and Accountant General of India
44. Alok Perti, IAS (Retd.), former Secretary, Ministry of Coal, GoI
45. K.R.Punia, IAS (Retd.), former Principal Secretary, Govt. of Haryana
46. R. Raghunandan, IAS (Retd.), former Joint Secretary, Ministry of Panchayati Raj, GoI
47. K. Raghupathy, IAS (Retd.), former Chairman, Staff Selection Commission, GoI
48. Babu Rajeev, IAS (Retd.), former Secretary, GoI
49. Ramani, IAS (Retd.), former Director General, YASHADA, Govt. of Maharashtra
50. Julio Rebeiro, IPS (Retd.), former Adviser to Governor of Punjab and Ambassador to Romania
51. Sayeed Rizvi, IAS (Retd.), former Joint Secretary, Ministry of Environment and Forests, GoI
52. Aruna Roy, IAS (Resigned)
53. Manab Roy, IAS (Retd.), former Additional Chief Secretary, Govt. of West Bengal
54. Umrao Salodia, IAS (Retd.), former Chairman, Rajasthan State Roadways Transport Corporation, Govt. of Rajasthan
55. Deepak Sanan, IAS (Retd.), former Principal Adviser (AR) to the Chief Minister of the Govt. of Himachal Pradesh
56. A.S. Sarma, IAS, (Retd.), former Secretary, Department of Economic Affairs, Ministry of Finance, GoI
57. N.C.Saxena, IAS (Retd.), former Secretary, Planning Commission, GoI
58. Selvaraj, IRS, former Chief Commissioner, Income Tax, Chennai, GoI
59. Ardhendu Sen, IAS (Retd.), former Chief Secretary, Govt. of West Bengal
60. Rahul Sharma, IPS (Retd.), Govt. of Gujarat
61. Raju Sharma, IAS (Retd.), former Member, Board of Revenue, Govt. of Uttar Pradesh
62. Har Mander Singh, IAS (Retd.), former Director General, ESI Corporation, GoI
63. Jawhar Sircar, IAS (Retd.), former Secretary, Ministry of Culture, GoI, and CEO, Prasar Bharati
64. Sudershan K. Sudhakar, IAS (Retd.), former Secretary, Govt. of Punjab
65. Geetha Thoopal, IRAS (Retd.), former General Manager, Metro Railway, Kolkata

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. இதன் தமிழாக்கம்
  அருமையான பதிவு தீக்கதிரில்
  வாசித்தது.
  அறிவுசார் சமூகம்
  ஆதரவு நல்லது
  செலுத்துக
  யாவரும் ஆதரவை.

  • என்னண்ணே ராமனண்ணே!!

   மோடி என்ன அனந்த சயனத்துல இருக்காப்புலயா ?. ட்விட்டர்ல போட்டாத்தான் அய்யாவுக்கு தெரிய வருமோ, இந்தியாவுல இப்படி யெல்லாம் ந்டக்குதுன்னு ?.

   என்னமா கத வுடுற ?.. ஏன்ணே?.

   செய்யச் சொல்லி ரூட்டு போட்டு கொடுக்குறதே மோடியோட மாமா அமித்ஷா தானண்ணே?.. உனக்குத் தெரியாத மாதிரியே பேசுறியேண்ணே …

   குசும்பு….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க