Monday, July 26, 2021
முகப்பு செய்தி விவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க - சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

விவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

-

ஐந்து விவசாயிகளை சுட்டுக்கொன்ற மத்திய பிரதேச – பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

த்திய பிரதேசத்தில் விவசாய விளைபொருட்களுக்கு நியாய விலை கோரியும், வங்கிக் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும் போராடிய விவசாயிகள் மீது ஆளும் பா.ஜ.க அரசு துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து, வள்ளுவர் கோட்டம் அருகே 15.06.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திரளான தோழர்களும், மக்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டலத்தின் உறுப்பினர் தோழர் அமிர்தா தனது தலைமை உரையில்…

“ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த விவசாயி, கடந்த 17 ஆண்டுகளில் அரசின் கணக்கீட்டின்படியே 2.5 லட்சம் பேர் நொந்துபோய் தற்கொலை செய்திருக்கிறார்கள். நெஞ்சு வெடித்து இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 47 விவசாயிகள் சாகிறார்கள். தற்கொலைகள் என்பதை விட, அரசு செய்த கொலைகள் என்பதே சரி!

தமிழகத்தில் 400 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அரசோ 80 என சாதிக்கிறது.  திருவாரூரில் ஒரு வி.ஏ.ஓ -விடம் பேசிக்கொண்டிருந்த பொழுது… “நானே விவசாயி மகன் தான். உண்மை எல்லாவற்றையும் நான் பேசமுடியாது. அரசு கேட்கிற படி தான் நான் அறிக்கை தரமுடியும். செத்த விவசாயி நோயினால் தான் செத்தார் என நான் கொடுத்துவிட்டேன் என்றால், நீங்கள் நீதிமன்றத்திற்கே போனால் கூட செல்லுப்படியாகாது” என திமிராக பேசினார். இப்படிப்பட்ட கணக்கெடுப்பில் தான் அரசு தருகிற இரண்டரை லட்சம் புள்ளிவிவரத்தின் லட்சணம்.

தற்கொலை செய்துகொள்கிற விவசாயி, தான் செத்தபிறகு யார் நம்ம குடும்பத்தை காப்பாத்துவது? என குடும்பத்தோடு செத்தாலும், நிலம் விவசாயி பேரில் உள்ளதால், அவர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார். குடும்ப உறுப்பினர்களை செத்த கணக்கில் அரசு சேர்க்காது.

இப்படி கொடூரமான நிலைக்கு காரணம், அரசு தான் திட்டமிட்டு விவசாயத்தை சிதைத்தது. அவர்கள் போட சொன்ன விதைகளை, உரங்களை தான் விவசாயிகள் மண்ணில் போட்டார்கள்.  அதிகாரிகள் எல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாக கொழுத்து திரியும் பொழுது, விவசாயிகள் மட்டும் வெந்து சாகிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்றால், விவசாயிகளை இந்த இழிநிலைக்கு மாற்றிய அரசிடமே கோரிக்கை வைத்துக்கொண்டிருக்க கூடாது. மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை அவர்களே கையில் எடுக்கவேண்டும். தம்மைப் போலவே போராடுகிற பிற வர்க்கங்களையும் இணைத்துக்கொண்டு போராடி வெல்லவேண்டும்”

சென்னை மண்டலத்தின் பொறுப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தனது சிறப்புரையில்…

“அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படுகிற விவசாயிகள் பலவகையிலும் போராடி பார்த்துவிட்டார்கள்.  மத்திய பிரதேசத்தில் பிஜேபி அரசு சுட்டுக்கொன்றாலும், மீறி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  மகாராஷ்டிராவில் போர்க்குணத்துடன் தொடர்ந்து போராடுவதால், கதிகலங்கி போன ஆளும் பா.ஜ.க. – சிவசேனா அரசு பணிந்து, விவசாயிகளுக்கான வங்கி கடனை தள்ளுபடி செய்கிறேன் என இப்பொழுது அறிவித்திருக்கிறது.

ஆளும் மோடி அரசு 2025 -க்குள் கிராமப்புறங்களையும் நகர்ப்புறமயமாக்குவது என்ற திட்டத்துடன் செயல்படுகிறது.  இதன் நோக்கங்கள் இரண்டு. ஒன்று. விவசாயிகளை விளைநிலங்களில் இருந்து விரட்டி, நிலங்களை கார்ப்பரேட்டுகளும், தரகு முதலாளிகளும் கைப்பற்றுவது, அதில் உள்ள மீத்தேன் போன்ற பல்வேறு வளங்களை சுரண்டுவது;  மற்றொன்று கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு விவசாயிகளை விரட்டி, மலிவு விலை கூலிக்கு தரகுமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும்  ஆள் பிடித்து கொடுப்பது!

மோடியின் திட்டங்களை முறியடித்து, பாதிக்கப்படுகிற நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்கவேண்டும்” எனப் பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க