privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாசாவை இருளாக்கும் இசுரேல்

காசாவை இருளாக்கும் இசுரேல்

-

காசாவின் மீதான இசுரேலின் மின் தடையை எதிர்த்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் இசுரேல் எல்லையை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பத்தாண்டுகளாகவே ஹமாஸ் நிர்வகித்துக் கொண்டிருக்கும் காசாக்கரை மின் வெட்டுக்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரம் முன்பு ஹமாஸை முடக்குவதற்காக முற்றுகை பகுதிக்கு வழங்கி வந்த மின்சாரத்திற்கான நிதியை பாலஸ்தீனிய ஆணையம் குறைத்துக்கொண்டதால் மின்சாரம் வழங்குவதை மூன்று மணி நேரமாக இசுரேல் குறைத்து விட்டது.

இந்த கூடுதல் மின்வெட்டு பேரழிவான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளின் ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளரான ராபர்ட் பைபர். ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத தொடக்கத்திலேயோ எரிபொருள் முழுமையாக தீர்ந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

காசாக்கரை மக்களது வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் இந்த மின்தடை பாதிக்கிறது. குளிர்பதன பெட்டிக்குத் தேவைப்படும் மின்சாரம் இல்லாததால் உணவுப்பொருட்களை தினந்தோறும் வாங்க கூடிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாததாலும் மின்தொற்றிகளை இயக்க போதிய எரிபொருள் பற்றாக்குறையாலும் மருத்துவமனைகள் முடங்குகின்றன.

முற்றுகையில் இருக்கும் காசாக்கரையின் மின் பற்றாக்குறை மோசமானதால் காசாவின் எல்லையில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு கிடைக்கிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் மின்சாரத்திற்கான நிதியை பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவர் முஹம்மத் அப்பாஸ் மேலும் குறைத்து விட்ட பிறகு காசாவில் மின்வெட்டுக்கள் மோசமடைந்தது.

நீண்ட நேர மின்வெட்டுகளானது ஒரு “ஒட்டுமொத்த சீர்குலைவை” ஏற்படுத்திவிடும் என்று ஐ.நா அவை எச்சரித்திருக்கிறது.

காசாவை ஆளும் ஹமாஸ் இயக்கத்தினர்.

சுகாதாரம், நீர் மற்றும் துப்புரவுத் துறைகளின் இன்றியமையாத செயல்பாடுகளை கூடுதலான மின்வெட்டுக்கள் ஒட்டுமொத்தமாக செயலிழக்க செய்துவிடும் என்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கான ஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளரான ராபர்ட் பியர் ஞாயிறன்று கூறினார்.

மின்வெட்டிற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் இசுரேலின் தலைமை வழக்குரைஞர் இதில் தலையிடுமாறு ஞாயிறன்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் 16 இசுரேல் (தன்னார்வ நிறுவனம்) மற்றும் சர்வதேச அரசுசாரா அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அம்னஷ்டி இன்டர்நேஷனல் (Amnesty International), “மனிதாபிமான பேரழிவைத் தணிப்பது” என்ற ஒருத் தனி அறிக்கையில் எச்சரித்து இருக்கிறது.

நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க