privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசங்கி நாராயணனை மங்கி-ஆக்கிய தோழர் மதிமாறன்

சங்கி நாராயணனை மங்கி-ஆக்கிய தோழர் மதிமாறன்

-

ங்கிகளை லேசாக சுரண்டினாலே போதும். அவர்களுக்கு உள்ளே இருக்கும் மங்கிகளை வெளியே கொண்டு வந்து விடலாம்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் 21.06.2017 அன்று நடைபெற்ற விவாதத்தில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணனின் சீட்டுக்கு அடியில் குண்டூசி வைத்து விட்டார் தோழர் மதிமாறன். மிருகம் வெளியே வந்து விட்டது.

யோகா – கலையா, மத அரசியலா என்பது தலைப்பு.

நாராயணன்தான் பேசத் தொடங்கினார். ஐநா சபையில் மோடி பேசினாராம். பருவ நிலை மாற்றம் புவி சூடேறுதலை தடுக்கலாம். மூலம், பவுத்திரம் உள்ளிட்ட சகலவிதமான நோய்களிலிருந்தும் விடுபடலாம். எங்களிடம் மருந்து இருக்கிறது. உலகத்துக்கே வழிகாட்ட தயாராக இருக்கிறோம் என்று பொளந்து கட்டினார். இந்தியாவில் மட்டும்தான் எதிர்க்கிறார்கள் என்றார் நாராயணன்.

அடுத்து பெருமாள்மணி. அவருக்குப் பெயர் யோகா ஆதரவாளராம். மதமாகவும் பார்க்கலாம், கலையாகவும் பார்க்கலாம் என்று வழுக்கினார். நெறியாளர் நெல்சன் சேவியர் நெருக்கிய பிறகு, அது கலைதான் என்றார். அப்புறம் நீண்ட நேரம் வழுக்கி விட்டு, கடைசியில் நெருக்கிப் பிடித்த பின், மோடி அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

நான் நாராயணன் இல்லை என்று நடித்த பெருமாள் கடைசியாக வேடத்தை களைந்தார்.

அப்புறம் ஒரு அம்மையார், யோகா டீச்சராம். அவுங்க ஆயிரக்கணக்கான – கவனியுங்கள் ஆயிரக் கணக்கான – வருசங்களுக்கு முன்னரே உடல் பிரச்சினைக்கு மனசுதான் காரணம் என்று நம் முன்னோர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். அந்த மேட்டரை அறிவியல் முந்தாநாள்தான் கண்டுபிடித்திருக்கிறது என்றும் அடித்து விட்டார். அப்புறம் மானாட மயிலாட வில் கலா மாஸ்டர் சொல்வது போல, வைப்ரேசன் அது இது என்று கொஞ்சம் அடித்து விட்டார்.

மேற்படி செட்டுதான் யோகா தரப்பு.

யோகா கலையை பாஜக கண்டு பிடிக்கவில்லை. அதைவைத்து ஆதாயம் தேடும் கலையை கண்டுபிடித்திருக்கிறது ஹெட்கேவார் பிறந்த நாளில்தான் இந்த நாளை அறிவிப்பது ஏன்?

சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர் கடலில் விழுந்து சாகட்டும் என்று ஆதித்யநாத் சொல்கிறாரே, திணிப்பு இல்லை என்றா இதற்கு பொருள்? என்றார் த.மு.மு.க-வின் ஹாஜா கனி.

ராம்தேவை வைத்து ஏன் யோகாவை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்டவுடன் நாராயணனுக்கு பி.பி ஏறத்தொடங்கியது.

பிறகு தோழர் மதிமாறன் துவக்கினார். ஏகபத்தினி விரதன் இருந்த நாட்டில்தான் எயிட்ஸ் அதிகம். உலகத்துக்கே யோகா சொல்லிக் கொடுத்த நாட்டில்தான் நோயாளி அதிகம் என்று தொடங்கி, உழைக்காத வர்க்கத்தினர், சாதியினர் உருவாக்கிய யோகாவை உழைப்பவர் மீது திணிப்பதை கேள்விக்குள்ளாக்கினார்.

உடம்புக்கு நல்லது என்பதனால் திணிப்பது சரி என்றால், சுன்னத் செய்வது சரியானது என்று மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டிருப்பதால் ஆண்கள் எல்லோரும் சுன்னத் செய்யவேண்டும் என்று உத்தரவு போட்டால் ஒப்புக்கொள்வார்களா என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

நாராயணனுக்குள் எரிமலை குமுறத் தொடங்கிவிட்டது. பெரும்பான்மையை இழிவு படுத்தினால் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஆளும்கட்சி நாராயணன் மதிமாறனை மிரட்டினார். யோகாவை விட்டு விட்டு சம்மந்தமில்லாமல் அவதூறு பேசுவதை எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று நெல்சனையும் அவர் மிரட்டினார்.

நெல்சன் அசரவில்லை. அவர் என்ன பேசவேண்டும் என்று நானோ நீங்களோ முடிவு செய்ய முடியாது. அவதூறு என்றால் வழக்கு போடுங்கள் என்றார்.

நாராயணனின் மிரட்டலை அம்பலமாக்கியது மட்டுமல்ல, நீங்கள் பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதி அல்ல, பார்ப்பனர்களின் பிரதிநிதி என்று டவுசரை உருவினார் மதிமாறன்.

என்னை பார்ப்பான் னு சொல்லிட்டாரு இத கேக்க மாட்டீங்களா என்று சாமியாடத் தொடங்கினார் நாராயணன். அப்புறம் நான் பூணூல் போட்ட பிராமணனா இருந்தால் உங்களுக்கென்ன என்று சட்டைக்குள் கையை விட்டு பூணூலை வெளியே எடுக்க முனைந்தார்.

ஜஸ்ட் மிஸ். பூணூலை வெளியே எடுத்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். நம் துரதிருஷ்டம். பூணூலை வெளியே உருவவில்லை.

நாராயணன், எச்.ராஜா, எஸ்.வி.சேகர், வெங்கடேஷ், கே.டி.ராகவன், சுமந்த்.சி.ராமன், ராமசுப்பிரமணியன், ரமேஷ் போன்ற ஹிந்துக்களுக்கு ஒரு பணிவான விக்ஞாபனம்.

மதிமாறனைப் போன்ற ஹிந்து விரோதிகளுக்கும், தமிழகத்தில் 0.0001 சதவீதம் அளவுக்கே உள்ள நாத்திகர்களுக்குப் பாடம் கற்பிக்கும் பொருட்டு, இனி ஸ்டூடியோவுக்கு வரும்போது திறந்த மார்பில் முப்புரி நூல் தரித்து வரவும். பொதுநலனை உத்தேசித்து ஸ்டூடியோவில் ஏ.சியை வேண்டுமானால் கொஞ்சம் கம்மி பண்ணச் சொல்லி விடலாம்.

அடுத்த விவாதத்தில் மதிமாறன் பேசுவதற்கு பாயின்ட் இருக்க கூடாது.

  1. தோழர் மதிமாறன் எப்போதுமே இந்த கூட்டத்தோடு விவாதிக்கும் பொழுது இவர்களை புரிந்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டேதான் வருகிறார். எதிராளியை உணர்ச்சிவயப்படுத்தி கூச்சல் குழப்பத்தோடு விவாதத்தை திருப்புவதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.ஆக யோகா என்ற மனம் ” பண்படுத்தும் ” கலைக்கு ஆதரவாய் பேசுகிறேன் பேர்வழி என்று வந்து உக்காந்து யோகாவை எதிர்ப்பவரின் நிதானத்தோடு போட்டிப்போட முடியாமல் ரத்தகொதிப்புக்கு ஆளாகி யோகா ஏஜெண்ட் கிளம்பிவிட்டார். ஆனால் ஒன்று ,ஒட்டுமொத்த காவி கூட்டமும் மானம் வெக்கம் சூடு சொரனை இல்லாத வாழும் கலையை நன்றாக கற்றிருக்கிறான் கள். இதில் இவன் களோடு உலகத்தில் எவனும் போட்டிப்போட முடியாது.

  2. //சங்கிகளை லேசாக சுரண்டினாலே போதும். அவர்களுக்கு உள்ளே இருக்கும் மங்கிகளை வெளியே கொண்டு வந்து விடலாம்.//

    semma.

    • பெரியாரின் கடும் பிரயத்தனத்தால் பூணூல் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று எவ்வளவு தெனாவெட்டாக சட்டைக்குள் துலாவி வெளியே எடுக்க முனைகிறான் கள்? இது பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு அரசியல் நலனை முன்னிறுத்தி கொள்கைக்கு ஆப்பு வைத்துக்கொண்டவர்களின் தடுமாற்றம்தான். இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சம், பூணூல் காரன் களுக்கு சமீப காலமாய் கடும் வீரம் கொப்பளிக்கிறது. இந்த நாராயணன் எஸ்வி சேகர் எச் ராஜா இவர்கள்தான் “ஏய்..இங்கபாரு இங்கபாரு நானும் வீரந்தான் நானும் வீரந்தான் ” என்ற ரீதியில் ஓவர் சவுண்டில் காதை செவிடாக்குவ்து. தமிழிசையோ பொன்னாரோ இன்னும் “அவாள்” அல்லாதவ்ர்களா இவ்வளவு தூரம் துள்ளுவதில்லை. குடிமி நறுக்கப்பட்டதுகள் கூந்தல் விரித்துக்கொண்டு ஆடுகிறது. சிரிப்பாதான் வருது

      • இதை விட கேவலம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. பூணுலை ஒருவர் அணிக்கூடாது அல்லது வெளியில் கட்ட கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் ? நீங்கள் மசூதிக்கு குல்லா அணிந்து செல்கிறீர்கள் அதை யாராவுது கூடாது என்று தடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா ? அல்லது மசூதிக்குள் குல்லா அணிந்துகொள்ள வெளியில் ஏன் குல்லா அணிகிறாய் என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா ? அப்படி செய்தால் அதை பாசிசம் அடாவடித்தனம் என்று தானே கொள்வீர்கள்… அதேபோல் பூணலை பற்றி உங்களை போன்ற ஆட்கள் பேசுவது பாசிசம் அடாவடித்தனம், இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு உரிமையில்லை என்று RSS பிஜேபி சொல்வது சரி என்பதை உங்களை போன்ற ஆட்கள் நிரூபிக்கிறீர்கள்.

        • வா .. மணிகண்டா வா.. இப்போதுதான் சரியான திசைக்கு வந்திருக்கிறாய்.பூணூல் என்பது வெறும் அடையாளமாய் இருந்தால் பரவாயில்லை மணிகண்டா,குல்லா அணிவது லுங்கி அணிவது என்பது ஒரு அடையாளம் கலாச்சாரம். யாரும் அணியலாம் அணியாமல் இருக்கலாம்.அரசியலுக்காக ஒவ்வொரு கட்சிகாரனும் இப்தார் நடத்துகிறேன் என்று நோன்பு என்ற இறைவழிபாட்டை கேலிக்கூததாக்கும்போது அத்தனை பேரும் குல்லாதான் அணிந்திருக்கிறான்.கிறிஸ்த்துவனாய் இருக்கிற அத்தனை பெரும் சிலுவையை கழுத்தில் தொங்க போட்டுக்கொள்ளலாம். எந்த கிறிஸ்த்துவரும் ஆட்சேபிக்க மாட்டார். இந்துவாய் இருக்கிற அத்தனை பேரும் பூணூல் போட முடியுமா? பூணூல் என்பது மத அடையாளமா? மனிதனை தரம் பிரிக்கிற அடையாளமா? அதன் பின்னுள்ள லாஜிக் என்ன? அதுதான் இங்கு கேள்வி திருநீர் பூசிக்கொள்கிறார்கள் இதை கேள்வி எழுப்பினோமா? குங்குமம் வைத்துக்கொள்வதோ மொட்டை அடித்துக்கொள்வதோ அலகு குத்திக்கொள்வதோ இவை எதுவுமே யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.அது அவரவர் நம்பிக்கை வழிபாடு பாரம்பரியம். பூணூல் என்பது இவைகளில் ஒன்றா என்பதே மணிகண்டன் போன்றோர் சிந்திக்க வேண்டியது.

          • ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் பூணுல் பிராமணர்களின் அடையாளம் அல்ல, செட்டியார்கள் ஆசாரிகள் கூட அணிகிறார்கள், இதில் ஆசாரிகள் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்… பூணுல் அணிவதற்கான காரணங்கள் மிக தெளிவானவை.

            1. வேதம், உபநிடம், வாழ்வியல் நெறி, தருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷி, முனிவர்கள், ஆசிரியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நன்றியை குறிப்பது

            2. தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனையும் நினைவு படுத்துவது

            3. தான் வாழ உதவும் தேவதைகளான நீர், நிலம், காற்று,சூரியன், ஆகாயம், எனும் பஞ்சபூதமாகிய தேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியை நினைவு படுத்துவது

            பூணூல் என்பது ஒரு நபரின் சமூகக் கடமையை தினமும் நினைவூட்டும் ஒரு கயிறு இதில் எங்கே ஜாதி மற்றும் மனிதனை தரம் பிரிக்கும் செயல்கள் உள்ளது ?

            ஆவணி அவிட்டம் ஹிந்து பண்டிகை என்பதற்காக உங்களை போன்ற ஆட்கள் மட்டம் தட்டி கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் அதன் அர்த்தம் தெரிந்தால் அதை அனைவருமே கொண்டாட வேண்டிய பண்டிகை என்பது தெரியும்.

            • பூணுலை வாணிய செட்டியார்கள் விஸ்வகர்மா என்று சொல்லப்படுகிற ஆசாரிகளும் அணிகிறார்கள் என்பதை நானும் அறிகிறேன்.இதற்க்கு என் இந்து நண்பர்கள் விளக்கம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் மற்றுமுள்ள பெரும்பான்மை இந்துக்களிடம் இந்த பழக்கமில்லையே ஏன்?வேதத்தையும் உபநிடத்தையும் வாழ்வியல் நெறியையும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான் அந்த முனிவர்கள் உபதேசித்தார்களா? “ஒரு நபரின் சமூக கடமையை பூணூல் நினையூட்டுகிறது ” என்றால் எந்த நபரின் சமூக கடமை? நீர் பட்டியல் போடுவதை பார்த்தால் முனிவர் ரிஷி என்று செத்து போனவர்களைத்தான் சொல்கிறீர். இதில் என்ன சமூக கடமை வாழுகிறது? மெய்யாகவே சமூக கடமை என்பது மூக்கை துளைக்கும் நாற்றம் கொண்ட சென்னை சாக்கடை குழாயில் இறங்கி ஒட்டு மொத்த நகர மக்களின் நரகத்தையும் அள்ளி எடுத்து சுத்தம் செய்துவிட்டு போகிறானே தொழிலாளி அவன் செய்வது ஆகச்சிறந்த சமூக கடமை அவன் முதுகில் நான் பூணூல் பார்த்ததில்லை.உச்சி வெய்யிலில் வானுயர்ந்த கட்டிடம் வளர்க்க மண்ணையும் கல்லையும் சுமந்து செல்கிறானே தொழிலாளி அவன் முதுகிலும் நான் பூணூல் பார்த்ததில்லை.முடி வழிப்பவன் மூட்டை சுமப்பவன் ரிக்ஷா இழுப்பவன் என்று சமூகத்திற்க்கு நேரிடையாக சேவை செய்யும் எந்த தொழிலாளி நெஞ்சிலும் நான் பூணூல் பார்த்ததில்லை. இவனுக்கு நன்றி செலுத்த தெரியவில்லையா? அல்லது இந்த ரிஷி முனிகளெல்லாம் இவனுக்கு சொல்லிக்கொடுக்கவே இல்லையா? சரி முனி ரிஷிகளெல்லாம் போய் சேர்ந்து விட்டார்கள். யோகா சொல்லிக்கொடுக்கிற ந்ம்ம பாபா ராம்தேவ் ஜக்கி வாசுதேவ் சிரி சிரி ரவிஷஙகர் போன்ற இன்றைய நவீன முனிகளாவது அவனுக்கு சொல்லிகொடுத்து பாவம் அவனுக்கும் பூணூல் மாட்டிவிடலாமில்லையா? ஏன் இன்னும் மொட்டையான உடம்போடு அவனை வைத்திருக்கிறீர்கள்? மாட்டிவிட்டால் அவனும் நம்ம நாராயணன் வாளை உறுவதுபோல் உறுவ எத்தனித்த பூணூலை எல்லா இந்துக்களும் உருவி இங்கிருக்கும் என்னை போன்ற த்தேஷவிரோதிகளை பூணூல் கொண்டே விரட்டலாமில்லையா?

              • ஹிந்து மத தர்மப்படி பூணுலை அனைவரும் அணிய வேண்டும், நான் மேலே சொன்ன விஷயங்கள் அனைவருக்குமே பொருந்தும் (மீரான் பாய் உட்பட)… மேலும் அந்த காலத்தில் கல்வி கற்க சென்ற பெண்களும் பூணுலை அணிந்தார்கள் இதற்கு பல உத்தரங்கள் காவியங்களில் உள்ளது.

                ஹிந்து மத கோவில்களுக்கு சென்றால் இதற்கான ஆதாரங்களை பார்க்கலாம் ஹிந்து கடவுளுக்கு மட்டும் அல்ல அசுரர்களும் பூணுல் அணிந்து இருப்பதை பார்க்கலாம். சென்னைக்கு அருகில் இருக்கும் மஹாபலிபுரம் சென்றிர்கள் என்றால் அங்கே இருக்கும் அர்ஜுனன் தபசு சிலையில் கூட பூணுல் இருப்பதை பார்க்கலாம்.

                பூணுல் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று ஹிந்து வேதங்கள் சொல்லவில்லை இதை அனைவரும் அணிய வேண்டும் அதற்கான காரணத்தையும் மிக தெளிவாக வேதங்கள் சொல்லியிருக்கிறது.

                • // பூணூல் என்பது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் உரிமையானது.அது அவர்களை ஒன்றினைக்கிறது.பல்வெறு வாழ்வேறு வாழ்வியல் த்த்துவங்களை உள்ளடக்கியது // என்றால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனக்குத்தெரிந்து நடைமுறை அப்படி இருப்பதாக தெரியவில்லை. பூணூல் இல்லாத பெரும்பானமை இந்துக்கள்தான் இதை விளக்க வேண்டும்.நான் வெளியில் இருந்து இதை மறுக்கவோ ஆதரிக்கவோ தகுதியற்றவன்

                  • பூணுலை ஒருவர் அணிய கூடாது அதை வெளியில் காட்ட கூடாது என்று சொல்வதற்கு ஒருவருக்கும் தகுதியில்லை என்று நான் சொன்னதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி… இம்மாதிரி பேசுவது பாசிசம் மட்டும் அல்ல இந்த நாட்டின் முக்கியமான பண்பாட்டை வேண்டும் என்றே அவமதிப்பது போல் இருக்கிறது.

                    • மணிகண்டன், வார்த்தையில் திமிர் தெரிகிறது.நான் மிகத்தெளிவாகவே என் கருத்தை எடுத்து வைத்திருக்கிறேன்.பூணூலின் பின் உள்ள தத்துவம் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக இந்துக்கள் என்று சொல்லப்படுகிற மக்களாலேயே இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே என் பூணூல் பற்றிய பார்வையை வெளிப்படுத்தி இருந்தேன். ” அப்படியெல்லாம் இல்லை. பூணூல் மிகச்சிறந்த வாழ்வியல் தத்துவத்தை விளக்குகிறது ” என்று அந்த மதம் சார்ந்தவர்க்ளே சொல்லும்போது எனக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லை. இதுவே என் நிலைப்பாடு. முஸ்லிம்கள் யாரும் பூணூலுக்கு எதிராக இங்கே கச்சைக்கட்டி கொண்டு வரவில்லை. உங்கள் பாஷையில் சொன்னால் 80 சதவீத இந்துக்களில் இருந்துதான் அந்த எதிர்ப்பு குரல் வருகிறது. ஆக அந்த இந்துக்களில் உள்ள பிரிவினர்தான் மணிகண்டன் மொழியில் பாசிஸ்டுகளாக இருக்க முடியும். பாசிஸ்ட்டுகளை வெளியில் விடுவது ஆபத்து. ஆளும், பூணூலுக்கு ஆதரவான மத்திய அரசை நிர்பந்தித்து பாசிஸ்ட்டுகளை பிடித்து உள்ளே தள்ள மணிகண்டன் ஆவன செய்தால் நியாயமாக இருக்கும் ஒன்று. அடுத்து “இந்த நாட்டின் முக்கிய பண்பாடு ” என்ற பூணூலை காட்டுவது இருக்கிறதில்லையா இது பக்கா திமிர். ஒட்டு மொத்த இந்துக்களும் பூணூலோடு அலைந்தாலும் அது இந்த நாட்டின் பண்பாடு ஆகவே ஆகாது.இந்த நாடு முஸ்லிகள் கிறித்துவர்கள் சீக்கியர்கள் பார்சிகள் ஜைனர்கள் என்று அனைவராலும் ஆனது. எந்த மதத்தின் அடையாளமும் இந்த நாட்டின் பண்பாடாக ஆகவே ஆகாது. பூணூலோ தொப்பியோ சிலுவையோ டர்பனோ( சீக்கியர் தலைப்பாகை) அந்தந்த மத மக்களின் அடையாளங்களாக இருக்க முடியுமே தவிர அதை அவர்கள் அணிந்து கொள்ளும் உரிமை இருக்கலாமே தவிர ஒரு போதும் நாட்டின் பண்பாட்டு சின்னக்கள் அல்லவே அல்ல.

                    • இதற்க்கு மேலும் பூணூல் இந்த நாட்டின் முக்கியமான பண்பாடு என்று ஒருவன் கூறுவானேயானால் அவன் இந்த நாட்டு மக்க்ளோடு இணங்கி இருக்க விருப்பமில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறான் என்றே பொருள். இந்த நாடு சிதறி சின்னாப்பின்ன மாகவேண்டும் என்று விரும்புகிறான் என்றே பொருள். அவனை உடனே அடையாளம் கண்டு நாட்டை விட்டே விரட்டி அடிக்க வேண்டும் என்றே எங்களைப்போல் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை.

                    • நீங்கள் (இஸ்லாமியர்கள்) சிறுபான்மையாக இருக்கும் நாடுகளில் செகுலரிஸ்ம் பேசுவீர்கள் அதுவே நீங்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் சிறுபான்மை மக்களை மனிதர்களாக கூட மதிக்க மாட்டிர்கள். இது தெரிந்த விஷயம் தானே

                    • உங்களுக்கு இன்னொரு தகவல் இந்த ஆவணி அவிட்டம் என்பது உலகில் பல நாடுகளிலும் வேறு வேறு பெயர்களில் கொண்டப்படுகிறது, மேற்கத்திய நாடுகளில் இதற்கு பெயர் “Thanks Giving Day” என்று சொல்வார்கள். பூணுல் அணிவதன் காரணமும் இயற்கை, ஆசிரியர், முன்னோர்களுக்கு நன்றி சொல்லுவதற்கு தான்.

                      பூணுல் இந்த நாட்டின் பண்பாடு என்பதை பெருமையோடும் உரிமையோடும் சொல்வேன்… கூடாது என்று சொல்வதற்கு ஒருவருக்கும் தகுதியில்லை.

                    • மணீகண்டன் நீ திருந்த வாய்ப்பே இல்லை மணிகண்டன் உனக்காக அனுதாபப்படுவதை தவிர வேறு வழியே இல்லை. காவி கறை மூளை முழுக்க படிந்துவிட்டது மணிகண்டா.. அவனுங்க என்ன ஏற்றி விட்டுக்கிறாங்கன் களோ அதை ஒப்பிப்பது மட்டுமே உன் வேலையாகிப்போனது. நான் இப்போது சொல்வதை உன் தலைவன் களிடம் போய் சொல். // நீங்கள் சிறுபான்மையராக இருக்கும் நாடுகளில் செக்கியூலரிசம் பேசுவீர்கள் //என் கிறாயே யாரை சொல்கிறாய்? இது என் நாடு. என் பாட்டன் முப்பாட்டன் போராடி பெற்ற நாடு. இதை என் அனைத்து மத சகோதரர்களுக்கும் உரியதாக என் முந்தைய சொந்தங்களால் மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட நாடு. மடத்தனமாய் // நீங்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் // என் கிறாயே யாரை சொல்கிறாய்? அரேபியனை சொகிறாயா? மலாய் காரனை சொல்கிறாயா? பாகிஸ்தானியை சொல்கிறாயே? இந்தோனேசியனை சொல்கிறாயா? யாரோடு என்னை சேர்க்கிறாய்? அறிவு கடுகளவும் இல்லாத கடைந்தெடுத்த அயோக்கிய ராஸ்க்கல்களான காவி கபோதிகள் வாந்தி எடுத்ததை, எடுத்து வந்து இங்கு கக்குகிறாயே எங்களை யார் என்று நினைத்தாய் இந்த மண்ணின் ரத்தமும் சதையுமாய் கலந்தவர்கள். எங்களின் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உங்களவர்கள்( காவிகள் ) எங்கள் காலை கழுவிக்குடித்தாலும் வராது. இஸ்லாம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட சித்தாந்தம். அதில் தெளிவோடும் பிடிப்போடும் இருப்பவர்கள். இஸ்லாம் என்ற சித்தாந்தம் எங்களின் மொழி உணர்வையோ எந்த நாட்டில் எந்த மக்களோடு இருக்கிறோமா அதன் நேசத்தையோ ஒருபோதும் குறைக்காது. இன்னும் சொல்லப்போனால் அது இன்னும் கூட்டும். அப்படித்தான் இந்த நாட்டின் சுதந்திர போராட்டத்தில் மற்ற மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடும்பொழுது யாரை காட்டிலும் எங்களின் வீரியமும் தீரமும் ஓங்கி உயர்ந்ததாய் இருந்தது.

        • பூணூல் போடுபவர்கள் மட்டும் தான் ஹிந்துக்கள்! அப்படி போடு சங்கி மங்கி!

          இல்லை எல்லோரும் ஹிந்துக்கள் என்றால், பார்ப்பன மேல் சாதி அல்லாதவர்கள் பூணூல் போட தடை செய்வது, அவர்களது உரிமையை மறுப்பது பூணூல் போடும் பார்ப்பனர்கள் தானே சங்கி மங்கி ?

          அப்படிப் பார்த்தாலும் பார்ப்பனர் அல்லாத இந்துக்களின் உரிமையை தடை செய்வது பூணூல் பார்ப்பனர்கள் தானே? அவர்களை எதிர்த்து நீரும், உம்ம ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியும் என்னத்த கிழிச்சீங்க? உம்ம ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியில பூணூல் பார்ப்பனர்கள் தானே அதிகமாக இருக்கிறார்கள்? அவர்களை என்ன புடுங்குனீங்க?

          ஆக, பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியும் பெரும்பாண்மை இந்துக்களுக்கே எதிரானவர்கள் என்று மதிமாறனும், இதர முற்போக்காளர்களும் சொல்வது சரி என்றும் பூணூல் போடாத பெரும்பாண்மை இந்துக்களுக்காக தான் மதிமாறனும், இதர முற்போக்காளர்களும் பேசுகிறார்கள் என்றும், நீரும், உம்ம ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியும் தான் நிரூபிக்கிறீர்கள்.

          சேம் சைடு கோல்! சேம் சேம் பார்ப்பான் சேம்!

        • பாயிண்டப் புடிச்சுப் பேசுறியே அம்பீ..

          என் தங்கக் கம்பி, நம்ம பூணூலப் பாத்தா இவாளுக்கெல்லாம் என்னதான் செய்யும்மோ தெரில, நானெல்லாம் வெளிய போகும் போது அப்படியே ’பேர் பாடில’ ஒரு ஜரிக அங்கவஸ்திரத்த போர்த்திண்டு பூணூலு நல்லா எடுப்பா தெரியிரமாதிரி தான் போட்டுட்டுப் போவேன் … ஒரு பய என்னைக் கேள்வி கேக்க மாட்டான்னா பாத்துக்கோவோய் ..

          நம்ம நாராயணன் திருப்பதி அய்யர்வாள் மதிமாறனை ஒரு பிடி பிடிச்சாரா இல்லையான்னு பாத்தியா ஓய்.. ”நான் பூணூல் போட்ட பிராமணன்”ன்னு சிலுத்துக்கிட்டு சொன்னாரே. என் உடம்பே சிலுத்துக்கிச்சின்னா பாத்துக்கோடா அம்பீ..

          இந்த திராவிட கருப்பன்களுக்கு நம்ம பூணூல் பெருமை எங்கடா அம்பீ தெரியப் போகுது?. இவனுங்களுக்கு தொப்புள் கொடி உறவுன்னா நமக்கு பூணூல் கொடி தாண்டா அம்பீ அந்தக் காலத்துல உசுறு ..

          நீயெல்லாம் சின்னப்பையண்டா அம்பி மணி.. ஸ்வாமி நம்ம ஹிஸ்டரியச் சொல்றேன் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுடா அம்பி ..நாஞ்சொல்லுறது ஒரு 2000 -2500 வருசத்துக்கு முன்னாடி இருக்கும். மத்திய ஆசியாவுல இருந்து கைபர், போலன் கணவாய் வழியா இந்த நாட்டுக்குள்ள வர்றச்சே நம்ம மாட்ட மட்டுந்தாண்டா அம்பி ஓட்டிட்டு வந்தோம். அத போற போக்குல மேயவிட்டு வளத்து அடிச்சு பிரியாணி போட்டுச் சாப்புட்ட்டு அப்படியே வந்து செட்டிலானோம்டா அம்பி, அப்போ மாட்டக் கட்ட கயிற எங்க போட்டு வைக்கிறது? . கட்டலைன்னா மாடு எங்கனாச்சும் ஓடிப் போயிடுமோன்னோ?. அதனால தான் லேசுக்குள்ள கழண்டுடாம இருக்க க்ராஸா போட்டு இந்த நாட்டுக்குள்ள வந்தோம்.
          இங்க இருக்க பூர்வகுடிங்க எல்லாம், நம்ம பாஷை தெரியாம போனா போகுதுன்னு தங்க இடம் கொடுத்தானுங்கோ வோய்..

          இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் பறிப்ப்பான்னு ஒரு பழமொழி தெரியுமா ஓய்.. அது நம்மள பாத்து தாம் ஓய் இந்தக் ’கருப்பனுங்க’ சொல்லி வச்சானுங்க. என்னங்கானு?. புரியலையா ?. லாங் டிஸ்டன்ஸ் ட்ராவல் பண்ற நாம அங்க இருந்து இங்க வரும்போது எல்லாரும் சிங்கிளாத் தான் ஓய் வந்தோம். இப்போ வந்தாச்சு, நாளைக்கு வம்சத்த பெருக்கனுமா இல்லையா ஓய்?. இங்க இருந்தே பொண்ண தூக்கிட்டோம் ஓய்.

          இப்ப்போ யோசிச்சுப் பாருங்க மணி அம்பீ … நம்மவாள் வீட்டுல பொம்மனாட்டிகளுக்கெல்லாம் ஏன் பூணூல் மாட்டிவுடலைன்னு இப்போ புரியுதா ?. அவாள்ளாம் நம்ம இரத்தம் கிடையாது ஓய்.. அங்க இருந்து இங்க வரும்போது மாட்டக் கட்டுறதுக்காக் நாம கட்டியிருந்த கயிறு, இப்போ நாட்டையே கட்டிவச்சிருக்கிறதுன்னா பாத்துக்கோ ஓய் .. இந்த பூணூலோட மஹிமைய ….

          மணி அம்பீ … இந்த தளத்துலயே நீ தான் சமத்தான பையனா இருக்காய் ..

          என்னோட மூளைக்குள்ள தூங்குறது எல்லாம், உன் கமெண்டைப் பார்த்ததுமே பொங்கி ஊத்றது..

  3. வழிபாட்டு சடங்கு மூலம் இச்சமூகத்தை வழிநடத்துவதாக பார்ப்பனீய கருத்தாக்கமிக்க சமூகம் பெரும்பானமை மக்களின் பண்பாட்டு நடவடிக்கையிருந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகின்றது
    நாகரீகம் தங்களின் பணி என்று தொனியில் தான் யோகாவை மத அரசியல் சக்திகளின் மூலம் வெளிப்படுத்துகின்றது. பூர்விக மக்களின் பண்பாட்டு மரபுகளை அழிப்பதும், மறைப்பதும், திரிப்பதும் வரலாற்றில் அதன் பணியாக உள்ளது.இதுதான் காவி அரசியலாக நாம் காண்கிறோம்

  4. யோக வின் யோக்கியத்தையும் பி ஜபி ஆர் எஸ் எஸ்ஸின் உண்மை முகத்தையும் பூணுல் நாரயணனே விவாதத்தில் நிருபித்துவிட் டார்.

  5. 45 நிமிடங்கள் சரியான திசையில் சென்றுகொண்டு இருந்த விவாதம் உத்திரபிரதேச முதல்வர் தலித் மக்கள் மீது காட்டும் தீண்டமை பற்றி தோழர் மதிமாறன் பேசும் போது நாரவாய் நாராயணனின் நாய்குரைப்பால் தடைபட்டது……யோகா செய்யும் நாராவாய் நாராயன் bp எகிற கத்துகின்றார்…. யோகாவை செய்யாத தோழர் மதிமாறன் நிதானம் காத்து விவாதத்தை அருமையாக கொண்டு செல்கின்றார் என்னும் நிலையில் யோகாவின் தேவை தான் இங்கு என்னவாக இருக்கிறது?

  6. நாரயணனை எப்போது விவாதத்தில் பார்த்தாலும் ஏதோ தெரு நாய் குரைப்பது போல தான் இருக்கும். இந்த விவாதத்தில் நாரயணனின் நடு மண்டையில் திரும்ப திரும்ப ஓங்கி கொட்டி விட்டதால் கொஞ்சம் … இல்லையில்லை … ரொம்பவே குரைப்பு அதிகமாகி விட்டது …

  7. இந்த சிகப்பு சிங்கிகளுக்கு எப்போதுமே இப்படி தான்.

    ஏகபத்தினி விரதன் இருந்த நாட்டில்தான் எயிட்ஸ் அதிகம்… இந்த நாட்டில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள் அதில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ? 2013ம் ஆண்டின் கணக்குப்படி 21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை 4.8 கோடி அதில் எய்ட்ஸ் நோயால் பாதிக்க பட்டவர்கள் 63 லட்சம் பேர் அதாவுது அவர்ளின் மக்கள் தொகையில் 18 சதவீதம்… இந்த கணக்கை வெளியிட்டவர்கள் ஐநா சபை

    ராமனை போன்ற ஒரு உதாரண புருஷன் எடுத்துக்காட்டாக வாழ்ந்ததால் தான் இந்தியாவில் இந்த மாதிரியான நோய்கள் தென் ஆப்பிரிக்காவை போல் பெருமளவில் பரவாமல் இருக்கிறது.

    இதெல்லாம் இந்த சிகப்பு சிங்கிகளுக்கு தெரியாது… அவர்களை பொறுத்தவரையில் ராமனையும் இந்த நாட்டையும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அவமதிக்க வேண்டும். சிகப்பு சிங்கிகளின் DNAவில் உள்ள விஷயம் இது மாற்ற முடியாது.

    • ‘ஏகபத்தினி’ விரதன் இருந்த நாட்டில் எயிட்ஸ் நோயாளிகள் இருக்கவே இருக்கக் கூடாது இல்லயா – என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது. உங்களுக்கோ, முதலிடத்திற்கு வராததற்கும், விகிதாசாரத்தில் குறைவாக இருப்பதற்கும் காரணம் ‘ஏகபத்தினி’ விரதன் வாழ்ந்தது என்று தோன்றுகிறது.

      உங்கள் நோக்கம் எயிட்ஸ்-சில் முதலிடத்திற்கு வருவது எனும் போது அது தானே சிந்தனையை தீர்மாணிக்கும்!

      எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடிக்கும் போட்டியில் தோல்வியை தழுவியதற்கு இங்கு ‘ஏகபத்தினி’ விரதன் வாழ்ந்தது தான் காரணமுன்னு சொல்லுங்க. மொத்த மக்கள் தொகையில் எயிட்ஸ் நோயாளிகள் விகிதாசாரத்திலும் தோற்றதுக்கு இங்கு ஏகபத்தினி’ விரதன் வாழ்ந்தது தான் காரணமுன்னு சொல்லுங்க.

      அல்லது, ‘ஏகபத்தினி’ விரதன் இருந்த நாட்டில் எயிஸ்ட் நோயாளிகள் அதிகமாக இருக்க காரணம், முஸ்லீம்கள் என்று அடித்து விடுங்கள்… சங்கியின் மாட்டு மூளையிடம் இருந்து இன்னும் பெஸ்ட்டா எதிர்பார்க்குறேன்.

    • இந்த காவி பொறம்போக்கு என்ன சொல்லுது என்றால் தோழர் மதிமாறன் அந்த விவாதத்தில் சொன்ன விசயத்தையே சற்று உல்டா செய்து பேசுது…..உண்மை என்னவென்றால்……

      “India has the third largest number of people living with HIV in the world”

      “HIV treatment coverage is only 36 per cent in India”

      “The proportions of people who do not have access to antiretroviral therapy treatment are 64 per cent in India.”

      -The Hindu Updated: April 22, 2016 02:05 IST

      இது தான் இந்தியாவின் நிலைமை….

      மணிகண்டா…., ராமனை போன்ற ஒரு “உதாரண புருஷனனை” எடுத்துக்காட்டாக கொண்டு வாழ்ந்ததால் தான் இந்தியா எயிட்ஸ் நோயில் வெங்கல பதக்கம் பெற்று உள்ளது என்று முடிவுக்கு வரலாமா? மணிகண்டா மாட்டு மூத்திரம் குடிக்கும் உனக்கு அறிவு க்ம்மியாகதானே இருக்கும்!

      • சிங்கிகளை விட்டால் ஒட்டு மொத்த இந்தியாவும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னாலும் சொல்விர்கள்.

        உங்கள் கணக்குப்படி பார்த்தால் கூட நாட்டின் மக்கள் தொகையில் 0.5 சதவீதம் கூட வரமாட்டார்கள் உலகளவில் இது மிக மிக குறைவு.

        இதற்கு காரணம் ராமனை போன்ற ஒருவரை பற்றி கதைகளாகவும் காவியங்களாகவும் சொல்லி மக்கள் மனதில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதே சிறந்தது என்று பெரியவர்கள் சொல்லி வளர்த்து இருக்கிறார்கள்.

        மேலும் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு குற்றங்கள் கூட உலகாவில் மிக குறைவே இன்றும் கூட பல கிராமங்களில் காவல்துறை கிடையாது திருட்டு பயம் இல்லை.

        உலகிலேயே சிறந்த நாடு இந்திய நாடு… ஆயிரம் வருடங்கள் அடிமை ஆட்சியால் வறுமை உள்ளது அதுவும் கூட இன்னும் சில வருடங்களில் போய்விடும், பிறகு Golden age of India will be back உங்களை போன்ற ஆட்கள் அப்போதும் இந்தியாவை பற்றி மட்டம் தட்டி குறை சொல்லி கொண்டு தான் இருப்பீர்கள்.

        • மணிகண்டன்,

          ஜப்பான்,ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் எய்ட்ஸ் சராசரி பரவல் இந்தியாவை விட குறைவாக இருக்க காரணம் என்ன? அங்கே இராமன் பிரஞ்சிருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறன்.

          • சீனா ஜப்பான் மற்றும் பல கிழக்காசிய நாடுகளில் இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு பரவியுள்ள நாடுகள் என்பதை மறந்து விட்டு பேசுகிறீர்கள்.

            • ஹஹஹா …..சூப்பர் அப்பு..

              சீதைக்கு இராமன் சித்தப்பன்னு இந்திய கலாச்சாரம் சொல்லுதமே….அப்பனே மகளை களவாடுன கலாச்சாரம் தான்யா ஒங்க கலாச்சாரம். அதை இந்திய கலாச்சாரம் னு அடச்சு உடறீங்களே கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம.

            • ஆமாண்டா அம்பீ..

              கரெக்டா சொன்னாய்..

              கந்த புராணத்துல ஸ்கந்தன் பிறந்த கதையில் சில விசயத்த இந்த வெஸ்டர்ன் ஆர்கியாலஜிஸ்ட்லாம் சேர்ந்து வெஸ்டர்ன் கான்ஸ்பிரசியில் மூடி மறச்சிட்டாவோய்..
              கந்த புராணப்படி,
              சிவபெருமான் பல ஆண்டுகளாகப் பார்வதியை $$$$$$$$$$$$ (சென்சார் போர்டு வேலையை நிறைய செய்ய வேண்டியிருக்குடா அம்பீ – யாருடா சொன்னா நம்மவாள்ளாம் தயிர் சாதம்னு?.. கடவுளேயானாலும் ’அந்த’ விசயத்த ரசிச்சு ருசிச்சு எழுதுறதுல நம்மாவாள்ளாம் பீஃப் பிரியாணி மாதிரிடா அம்பீ.. ஹி ஹி ஹி ) கடசியா ஒரு வழியா ஸ்கலிதத்தை பீச்சி அடிச்சதுல அது ஆறு இடத்துல விழுந்து வந்ததா தான் நாமெல்லாம் கந்த புராணத்துல படிச்சிருக்கோம்.. அங்க தான் ஓய் , வெஸ்டர்ன் கான்ஸ்பிரசி இருக்குங்குறேன்…
              அது வெறும் ஆறு இடத்துல விழுகலடா அம்பீ… 2 டு தி பவர் ஆஃப் 6 இடத்துல விழுந்தது.
              அதுல நீ சொன்ன சீனா, ஜப்பான், ஹாங்காங், கிங்காங், யுவான்சுவான் மாதிரியான நாடுகளும் அடக்கும். இன்னும் இருக்கு .. வாய்க்குள்ள தான் பேரு வரமாட்டேங்கிது ஓய்..

        • சரி மணிகண்ட காவியர் அவர்களே…, இந்த விசயத்தில் பிரச்சனையை ராமன் மீது போட்டு விட்டு விலக முயலுவது ஏன் ? ராமன் எந்த ராமாயணத்தில் ஏக பத்தினி விரதனாக இருந்தான்? எந்த ராமாயணத்தில் பல பெண்களுடன் மையல் கொண்டு இருந்தான் என்ற விசயமாவது உங்களுக்கு தெரியுமா? ராமாயணத்தின் மூல நூலான வால்மீகி ராமாயணத்தின் அவன் பல பெண்களுடன் ஆட்டம் போட்டவன் தான்…. அந்த நூலின் தமிழ் பதிப்பான கம்ப ராமாயணத்தில் மட்டுமே அவன் ஏக பத்தினி விரதன் என்ற நிலையில் உள்ளான்…

          இப்ப சொல்லுங்க எயிட்ஸ் இந்தியாவில் பரவ அல்லது பரவாமல் இருக்க ராமன் எப்படி காரணம் ஆகிறான்?

          • மணிகண்டன் , இப்படி எஸ்கேப் ஆனால் எப்படி…? ராமாயணத்தின் மூல நூலான வால்மிகியின் ராமாயணத்தில் ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல என்ற உண்மைகள் இருக்கின்றனவே? அவற்றின் அடிப்டையில் தான்இந்தியாவில் எயிட்ஸ் பரவுகிறது என்று கூருகின்ரீரோ?

            வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.

            இதற்கு பதில் சொல்லு காவி வெறிபிடித்த மணிகண்டா!

        • //ஆயிரம் வருடங்கள் அடிமை ஆட்சியால் வறுமை உள்ளது அதுவும் கூட இன்னும் சில வருடங்களில் போய்விடும், பிறகு Golden age of India will be back ///

          கரெக்டா சொன்னடா அம்பீ.. சோழர்கள் காலம் பொற்காலம்னு சும்மாவா சொன்னா நம்மவாள்ளாம்?.

          நம்ம வாழ்வென்ன ?. பவுசென்ன ?. சும்மா உக்காந்து செத்த நாழிய போக்குறதுக்காக அரசன் செலவுலயே கோவிலக் கட்டவச்சி, அதுல பெரிய பெரிய திண்ணைய வச்சி, குளுகுளுன்னு உக்காந்து கத பேசுன காலமெல்லாம் போச்சேடா அம்பீ..

          நீ கேட்டிருக்கியாடா அம்பீ … இந்த மங்கலம் பாடுறது, மங்கலம் பாடுறதுன்னு சொல்றாளே..

          அது தாண்டாம்பீ… ஓசியில் உக்காந்து திங்க ஆட்டையப் போடுறது,, அந்த வார்த்த மங்கலம் பாடுறதுங்கிறது எங்க இருந்து வந்ததுன்னு தெரியுமோ நோக்கு?.
          சோழர்கள் ஆட்சிக்காலத்துல நம்மவாள்ளாம் டாமினேஷன்ல இருக்கும் போது, நம்ம அனுபாத்தியதைக்கு சோழ நாட்டு மன்னன் பல மங்கலங்களை உருவாக்கிக் கொடுத்தான். நம்மவாளும் உக்காந்து நன்னா மங்கலம் பாடுநா ..

          ஆனா இப்போ ?.. இப்போ ஒண்ணும் கொறஞ்சி போயிடலை.. நம்மவா தான் எல்லா டாப் போஸ்ட்லயும் இருக்கா, என்ன ஒரே கொறை, வீட்டுலயே உக்காந்து பொண்டாட்டி புள்ளயாண்டானோட சும்மா உக்காந்து மங்கலம் பாட முடியறதில்லை… பேருக்க்காகவாவது ஆபீஸ் போக வேண்டியிருக்கிறது..

          ஆமாண்டா அம்பீ, நீ நெசம்மாதான் சொல்றியா? சில வருசத்துல நம்மவாளுக்கு ஓசியில் மங்கலம் பாடுற வாய்ப்பு கெடச்சிடுமா ஓய் ?.. இப்போ நெனச்சாலே மனசு எவ்ளோ குளுகுளுன்னு இருக்கு தெரியுமாடா அம்பீ ?.

          “மாடத்திலே கன்னி மாடத்திலே.. $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
          கூடத்திலே நடு கூடத்திலே… ராஜா போலா அய்யராத்துப் பிள்ளே …
          $$$$$$ $$$$$ $$$$$ $$$$$$$
          $$$$$$ $$$$$ $$$$$$ $$$$$

          ”டிங்கு டாங் .. டிங்…” —— ”டிங்கு டாங் .. டிங்…”

          ///// Golden age of India will be back ////

    • மணிகண்டன், 45 நிமிடங்கள் சரியான திசையில் சென்றுகொண்டு இருந்த விவாதம் உத்திரபிரதேச முதல்வர் தலித் மக்கள் மீது காட்டும் தீண்டமை பற்றி தோழர் மதிமாறன் பேசும் போது நாரவாய் நாராயணனின் நாய்குரைப்பால் தடைபட்டது……

    • ஏக பத்தினி விரதன் .. உதாரண புருஷன் ஏன் தன் மனைவியை பரிசட்சித்து பார்க்க அக்னி பிரவேசம் செய்யவைத்தான் என்பதில் அடங்கியுள்ள விவரம் என்ன ….? ஏக பத்தினிவிரதனுக்கும் சந்தேகம் வரலாமா …?

      • ராமன் சீதையை சந்தேகப்படவில்லை. சீதையை பற்றி நாட்டு மக்கள் சந்தேகப்பட்டதால் தீக்குளிக்க சொன்னான்… முதலில் ராமாயணத்தை ஒழுங்காக படித்து விட்டு பேச வாருங்கள்.

        • அம்பீ,,

          நன்னா இருக்கியாடா … நம்ம மதத்தை இந்த அபிஸ்டுகள்ட்ட இருந்து காப்பாத்த நீயாவது இருக்கியேடா அம்பீ..

          ” நாட்டு மக்கள் சந்தேகப்பட்டதால பொண்டாட்டிய தீக்குளிக்கச் சொல்லலாமா? யோக்கியன் செய்யுற வேலையா இது?”ன்னு ஒரு பொடிப்பய எங்கிட்ட வந்து கேட்டாண்டா அம்பீ…

          என்ன சொல்றதுன்னே தெரில .. விடுவேனா நானு … நம்ம காரக்குடி அம்பி எச்சி.ராஜா தான் சட்டுன்னு ஞாபகம் வந்தார் .. கேட்டவனப் பாத்து சொல்லிட்டேன்.. “ போடா, படவா .. யூ ஆர் அன் ஆண்டி நேஷனலிஸ்ட்டுன்னு”

          அப்புறமும் விட்டானா பாரு அவன்… இன்னொரு கேள்வியக் கேட்டுட்டான் ..

          ” ஏன் சுவாமி, நம்ம இராமனை அவன் பொண்டாட்டி ’நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?’ன்னு கேட்டதா வால்மீகி இராமாயணத்துல இருக்குதே, மக்கள் சந்தேகப்பட்டாங்கன்னு பொண்டாட்டிய தீக்குளிக்கச் சொன்ன ராமன், பொண்டாட்டி சந்தேகப்பட்டான்னு – அதுவும் ‘இந்த’ மாதிரி சந்தேகப்பட்டான்னு இராமன் தீக்குளிக்கலையா “

          அவன் கேள்விய முடிக்கிறதுக்குள்ள எனக்கு பி.பீ ஏறிடுச்சு ?. கேள்விய கேட்டு முடிச்சுட்டான்னா பதில் சொல்லியாகனுமேன்னு பயம் வேற வந்துடுத்து.. விடுவேனா ?. நம்ம பாஜக நாராயணன் நினைவுக்கு வந்துட்டார்டா அம்பி ..

          ”எப்படி ஒரு அவதாரப் புருசனப் பத்தி பேசலாம்னு” கத்திண்டே ,, ”நான் பூணூல் போட்ட பாப்பாண்டா”ன்னு கத்திக் கதறிண்டே… எஸ்கேப் ஆகிட்டேண்டா அம்பீ ..

          வரவர எல்லாரும் ரொம்பக் கேள்வி கேக்குறா டா அம்பி .. என்ன பண்றது ? கலி முத்திடுத்து..

        • ஓ ! ஏக பத்தினி விரதன்னா, பொண்டாட்டிய தீ குளிக்க சொல்லுவாய்களோ… ! .. தல நீன்க எப்படி…

        • வாரே வா…சூப்பர் தலைவா பின்னறீங்க..

          சரிங்க….நீங்க எப்படி.. யாராச்சும் உங்க பொண்டாட்டிய பத்தி எதாச்சும் சொன்னா இராமனை தான் பின்பற்றுவீங்கள?

        • அப்பாே நாட்டு மக்கள் சநதேகப்பட்டால் ஏக பத்தினி சங்கி மங்கிகளும் மனைவிகளை தீக்குளிக்க வைப்பீர்களா ….? ராமாயணத்தை ஒழுங்காக கரைத்து குடித்தவரே .. வாயைக் காெடுத்து மற்றதை புண்ணாக்கி காெள்ளாதீர்கள் …!

          • இதற்கான பதில் ராமாயணத்திலேயே இருக்கிறது போய் படித்து பாருங்கள்.

            உங்களை போன்ற பெரியார் ஆட்களுக்கு (ஆங்கில அடிமைகளுக்கு) சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று சொன்னால் உடனே என்ன தத்துவம் என்ன தத்துவம் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் தான்யா என்று சொல்லி கொள்வீர்கள் ஆனால் அதுவே ராமனாக இருந்தால் அவதூறு பேசுவீர்கள்.

            • அம்பி மணிகண்டன் , வால்மீகியின் ராமாயணத்தை படித்த பின் தான் உன்னை போன்ற மோடியின் சகிகளிடம் பேசிகிட்டு இருக்கேன்…வால்மிகி ராமாயணத்தில் ராமன் பல பெண்களுடன் ஆட்டம் போட்ட காமுகன்…

              இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

              இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

              • செந்தில் இதற்கான பதிலை ஏற்கனவே பலமுறை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் திரும்ப திரும்ப அரைத்த மாவையே அறைக்காதீர். உங்களை போன்ற ஆட்களின் ராமனை பற்றி அவதூறு பேசுவதால் ராமனுக்கு ஒன்றும் ஆகிவிட போவதில்லை ஆனால் இந்த மாதிரியான பொய் அவதூறுகள் மூலம் சமூத்திற்கு தேவையான நல்லோழுக்கத்திற்கான உதாரணத்தை “Character assassination” செய்கிறீர்கள்.

                ராமனை “Character assassination” செய்து விட்டு பெண்களுக்கு கற்பு கூடாது என்று சொன்ன பெரியாரை முன்னிறுத்துகிறீர்கள்… நான் கம்யூனிஸ்ட்களை வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்

                • லூ சு மணிகண்டன்…,நான் கூறிய ராமனை பற்றிய அயோக்கிய தனங்கள்- விசங்கள் எல்லாம் வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுத்து கொடுத்த கருத்துகள்…. முடிந்தால் பதில் சொல்லு…அதனை விட்டுவிட்டு Character assassination அது இதுவென்று என்னத்துக்கு அழுதுகிட்டு இருக்க…! முடிந்தால் நான் கூறிய விசயங்கள் எல்லாம் வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்று நிருபித்து கொள்…

                • லூசு மணி அறிவிலியே!…, வால்மீகி ராமாயத்தை பற்றி கூறும் போது அது எப்படியா பெரியாருக்கு தொடர்பு உடையதாக இருக்கும்? அது எப்படி கம்ம்யுநிசுட்களுக்கு தொடர்பு உடையதாக இருக்கும்? வால்மீகி ராமாயணத்தில் ராமனை பற்றி என்ன சொல்லபட்டு இருக்கிறதோ அவற்றை தான் உனக்கு கொடுத்து இருக்கிறேன்… முடிந்தால் பதில் சொல்லு… இன்று போய் நாளைவா!போ போ…. போய் வால்மிகி ராமாயணத்தை படி… அறிவிலியே!

                  • செந்தில் ஏற்கனவே பலமுறை உங்களின் இந்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறேன் மீண்டும் ஒரே கேள்விக்கு பதில் அழிப்பது போர் அடிக்கிறது,,, நீங்கள் ராமனை “character assasination” செய்வதன் மூலம் சமூகத்திற்கு தீமையை தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் வேறு ஒன்றும் இல்லை.

                    இப்பிறப்பில் வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் நினையேன் என்று வாழ்ந்தவர் ராமன், ஆணுக்கும் கற்பு ஒழுக்கம் உண்டு என்பதற்கு ஒரு உதாரணம் ராமன்… சமூக நலனுக்கு இம்மாதிரியான உதாரணங்கள் மிக அவசியம் என்று நான் நம்புகிறேன்.

                    உங்களை போல் கம்யூனிசம் மற்றும் பெண்களுக்கு கற்பு கூடாது என்று சொல்லும் பெரியாரிஸ்ம் பேசுபவர்களுக்கு இது புரிய போவதில்லை.

                    • அறிவின்றி மண்டையுடன் நிற்க்கும் மணிகண்டா,,, ராமனின் அந்த பெருமைகளை தானே வால்மீகி ராமாயணத்தில் இருந்து படித்து அறிந்து கொள்ள சொன்னேன்… அதனை விட்டுவிட்டு கிளிபிள்ளை மாதிரி சொன்னதையே (“character assasination” ) சொல்லிகொண்டு இருந்தால் எப்படி பொய்கண்டன்?

                      முதல் விசயம் வால்மீகி ராமாயணத்தை நீர் நம்புகின்றீரா இல்லையா?

                      2. நீர் கூறுவது படி கம்ப ராமாயணத்தில் தானே ராமனை பற்றி அப்படி புகழ்ச்சியுடன் கூறப்பட்டு உள்ளது…ஆனால் ராமாயணத்தின் மூல நூலான வால்மீகி ராமயத்தில் ராமனை பற்றி அவன் குடிகாரன் , பெண் பித்தன் என்று தானே கூறப்பட்டு உள்ளது…

                      3.அறிவிலி மணிகண்டன் மூல நூல் கூறுவதனை நீர் நம்பாமல் அதன் அடிபடையில் எழுதபட்ட கம்ப ராமாயணத்தை நீர் நம்பும் மர்மம் என்ன?

                    • மணிகண்டன், முடிந்தால் பதில் சொல்லு… இன்று போய் நாளைவா!போ போ…. போய் வால்மிகி ராமாயணத்தை படி… அறிவிலியே! வால்மீகி ராமாயணத்தை படிக்கும் துப்பின்றி என்னத்துக்கு வினவில் உன் பெனாத்தல்களை அவிழ்த்துவிட்டுகொண்டு இருகின்றாய் மதி அற்ற மணிகண்டனே?

              • ஐயையோ … மணி மாமா,

                ராமனோட கோவணத்தை அவுந்துடுச்சு ,, சீக்கிறம் ஓடி வா ..

            • அடியே மோடியின் சகி மணிகண்டன்…, வால்மீகி எப்பலே வெள்ளைக்காரன் ஆனாரு?வால்மிகியின் ராமாயந்தில் உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27 , உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1 மற்றும் உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8 ஆகியவற்றை படித்துவிட்டு வந்து வினவில் உனது பெனாத்தல் வேலையை ஆரம்பியும்…!

        • மணிகண்டன்…, மாட்டுடன் தாயை ஒப்புமை படுத்தி பேசிய மொக்கை அறிவுகெட்ட காவியே…, இப்ப விசயத்துக்கு வருவோமா? உன் தாயை அல்லது மனைவியை ஊரார் (நாட்டு) மக்கள் சந்தேகப்பட்டதால் தீக்குளிக்கத்தான் சொல்லுவீயா நீயி? அப்படி நீ செய்தால் உன்னை சுற்றம் நண்பர்கள் செருப்பால் அடிக்க மாட்டார்களா? சக மனிதன் என்ற முறையில் நானே அடிப்பேன் உன்னை….

  8. ///பூணுல் இந்த நாட்டின் பண்பாடு என்பதை பெருமையோடும் உரிமையோடும் சொல்வேன்… கூடாது என்று சொல்வதற்கு ஒருவருக்கும் தகுதியில்லை.////

    ஆம் பூனூல் போடாதவர்களுக்கு தகுதியில்லை.

    பூனூல் போட்டுண்டு வாங்கோ அப்புறம் பேசலாம். மணிகண்டன் அட்ரஸ் குடுப்பாரு, வர்ற ஆவணி அவிட்டத்தன்னிக்கு அவர் ஆத்துக்கு போங்கோ அங்க அவர் உங்க எல்லாத்துக்கும் பூனூல் போட்டுவுடுவாரு. அப்புறமா, நீங்க அவா ஆத்து பொண்ண கட்டிக்குடுன்னு எல்லாம் கேட்கப்பிடாது சொல்லிப்புட்டேன்.

Leave a Reply to meeransahib பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க