Friday, June 21, 2024
முகப்புகலைஇசைமோடியை எதிர்க்கும் ரெக்கே எதிர்ப்பிசை ! வீடியோ

மோடியை எதிர்க்கும் ரெக்கே எதிர்ப்பிசை ! வீடியோ

-

மோடிக்கெதிரான ரெக்கே (reggae) எதிர்ப்பிசை : மோடியின் ஆட்சியில் கருத்து சுதந்திரத்தை காக்கும் போராட்டம் !

கருத்து சுதந்திரத்தித்தை பாதுகாப்பதற்கான போராட்டங்களை உற்சாகப்படுத்த ஒரு இந்திய ரெக்கே (reggae) இசைக்கலைஞர் ஜமைக்கா பாணியிலான ஒலி அமைப்புகளை உருவாக்குகிறார்.

தரு டால்மியா

இந்திய இசைக்கலைஞரான தாரு டால்மியா தனது ரெக்கே (reggae) இசை, அரசியல் எதிர்ப்பியக்கங்களில் முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நம்புகிறார். இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்களில் ஆர்ப்பாட்டங்கள் அலை வெடிக்கும்போது, இது செயல்படுவதற்கான தருணம் என அவர் முடிவு செய்கிறார்.

தன்னுடைய இசையை எதிர்ப்பு பேரணிகள் மற்றும் மக்களின் இதயங்களில் கொண்டுசொல்வதற்கு தேவையான பெரிய ஒலி அமைப்பை உருவாக்க நிதி திரட்டுகிறார்.

நரேந்திர மோடியின் இந்துத்துவ அரசு, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு எதிராக போராடுபவர்களுக்கு தனது கையால் கட்டப்பட்ட ஒலிப்பான் தொகுப்புகள் உதவுமென தாரு நம்புகிறார்.

தாரு முன்னதாக, நரேந்திர மோடி பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட பிறகு “மோடி உங்களுக்கு ஒரு செய்தி” என்ற தலைப்பில் ஒரு பாடல் காணொளியை தயாரித்துள்ளார். அது மிகவும் துணிச்சலாக நேரடியாக மோடியைச் சுட்டுவதாக இருந்தது. அந்த பாடலின் வரிகள் பின்வருமாறு,

“உங்கள் முட்டாகளாக்கும் செயலை நிறுத்துங்கள்
அது எங்கள் எதிர்காலத்தை அலங்கோலமாக்குகிறது
அதை நேராக்குவதற்கான காலமிது
நீங்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்”.
(“Stop your fooling around
Messing up our future
Time to straighten right out
You should have wound up in jail.”)

அவர் உலக ஒலியின் சக்தி என்றழைக்கப்பட்ட ஒரு திட்டத்திலும் ஈடுபட்டிருந்தார். அது சாதிய ஒடுக்குமுறைகள், அரசு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துதல் மற்றும் பாசாங்கு முதலாளித்துவம் (Crony Capitalism) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பாடல்களைக் கொண்ட இந்திய நாட்டுப்புற எதிர்ப்பிசையை ஜமைக்காவின் இசையுடன் ஒன்று கலக்க முயன்றது. அவ்வகையில் இந்திய மக்களின் எதிர்ப்பியக்கங்களுக்கு ஜமைக்கா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் இசையைக் கொண்டு சர்வதேச தன்மை கொடுக்க முயன்றது.

உள்ளூர் போராட்டக்காரர்களும் கலைஞர்களும் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி அவருக்கு உறுதியாக தெரியவில்லை. அவர்கள் தனது ஜமைக்கா பாணி இசையைத் தழுவிக்கொள்வார்களா அல்லது நாட்டினுடைய அரசியலோடு தொடர்பில்லாத வெளியாளாக பார்பார்களா?

ஆனாலும், தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார். அவரது இசை நிகழ்ச்சிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களும், போராட்டக்காரர்களும் மெய்மறந்து கூத்தாடுகிறார்கள். இறுதியாக

“சங்கவாதிகளிடமிருந்து விடுதலை
மனுவாதிகளிடமிருந்து விடுதலை
பார்பனியவதிகளிடமிருந்து விடுதலை”

டெல்லி ஜவர்கர்லால் பல்கலைக்கழகத்தின் விடுதலை முழக்கப் பாடலுடன் நிகழ்ச்சியை முடிக்கிறார்.

அவரது பயண வீடியோவை பாருங்கள், ஜமைக்காவின் ரெக்கே (reggae) இசையில் இந்து பாசிசத்திற்கொதிரான எதிர்ப்பைக் கேளுங்கள்.

  1. இதைப் பார்த்த மாத்திரத்திலேயே பக்தாள் ஆராய்ச்சி தொடங்கிவிடும் . தாருவிற்கு நிதியுதவி செய்யும் கிறித்தவ என்.ஜி.ஓ எது அல்லது இசுலாமியத் தீவிரவாத அமைப்பு எது என்று? உளவுத்துறை அறிக்கை ஏற்கனவே இவரைப் பற்றி எச்சரித்துள்ளது. எங்களிடம் தரவுகள் இருக்கின்றன என்று சங்கிகள் சலம்பலும் ஆரம்பமாகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க