கடந்த 2016 -ஆம் ஆண்டு நடந்த மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களும் வணிகர்களும் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் கடந்த ஜூலை 1, 2017 முதல் இந்தியா முழுமைக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) தடாலடியாக அமல்படுத்தியுள்ளது மோடி அரசு.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தப் போவதாகக் கூறி அதற்கான வரிவிகிதங்களையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்த நாளிலிருந்து சிறு வணிகர்கள், வியாபாரிகள், நெசவு மற்றும் ஜவுளித்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜி.எஸ்.டி.க்கு எதிராக கடுமையாகப் போராடி வருகின்றனர்.
அதோடு ஏற்கனவே வரிவிலக்கு அளிக்கப்பட்ட சுமார் 500 பொருட்களுக்கும் இந்த ஜி.எஸ்.டி. முறையில் சுமார் 5% முதல் 18% வரை வரி விதித்துள்ளது மோடி அரசு. இதன் காரணமாக வரும் நாட்களில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்படும். அதோடு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் கெடுபிடிகளாலும், சட்ட திட்டங்களாலும், சிறு நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கும், சிறு வியாபாரிகளும், குடிசைத் தொழில் செய்பவர்களும் வியாபர முடக்கம் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இதன் காரணமாகவே, இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி வரி முறைக்கு எதிரான போராட்டங்கள் கடந்த இரு வாரங்களாகவே தீவிரமடைந்து வருகின்றன. கடந்த 20.06.2017 அன்று, புதுடில்லியைச் சேர்ந்த சுமார் 75 சந்தைகளில் கடை வைத்திருக்கும் சிறுவணிகர்கள், முழு கடையடைப்பில் ஈடுபட்டனர். தலைநகரைச் சேர்ந்த மொத்த விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் அதற்கு 3 நாட்கள் முன்னதாகவே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டில்லியின் முக்கிய வியாபாரக் கூடங்களான சாந்தினி சவுக், சடார் பஜார், கரோல் பாக், சவ்ரி பஜார், கிர்த்தி பஜார், சரோஜினி நகர், லாஜ்பட் நகர், காந்தி நகர் மற்றும் கமலாநகர் ஆகிய பகுதிகளும் அன்றைய தினம் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.
புதுடில்லியில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜி.எஸ்.டி. குறித்துக் கூறுகையில், இந்த வரி விதிப்பு முறை மிகவும் குழப்பம் தருவதாகவும், நிறைய வரைமுறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 12.5% வரி, தற்போது ஜி.எஸ்.டி மூலமாக 28% வரியாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி, இது தங்களது தொழிலில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையில் அனைத்தையும் கணினி மயப்படுத்துவது அவசியமானதாக இருப்பதைக் குறிப்பிட்டு, இது சிறு – குறு வியாபாரிகளை ஒழித்துக்கட்டி விடும் என்றும் கூறியிருக்கின்றனர்.

அதே போல, சண்டிகர், உத்திரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினரும் கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2017) முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நாளில் உ.பி. -யில் உள்ள காஸியாபாத் பகுதியில் நடத்தப்பட்ட கடையடைப்பில் பங்கேற்ற வியாபாரிகள் சங்கத்தினர், போராட்டம் குறித்துக் கூறுகையில், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் வரிமுறை முகவும் குழப்பமிக்கதாக இருப்பதாகவும், அதனை சுலபமானதாக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக 15% தான் வரி விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் சிறு குறு வியாபாரிகளுக்கு இணையம் என்பது எட்டாக்கனியாக இருக்கும் போது, அவர்கள் மாதம் மூன்று முறை வரி கணக்கு இணையத்தில் செலுத்த வேண்டும் என்று கேட்பதும், வரிக்கணக்கு செலுத்துவதில் தவறு ஏதேனும் ஏற்பட்டால் சிறைத்தண்டனை என்று கூறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், ஜவுளி வியாபாரிகளும் கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை 1, 2017) முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், தென் தமிழகத்தில் பல இலட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பைக் கண்டித்து வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தொடர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக எந்தத் தொழிற்சாலையும் உற்பத்தியில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக, சுமார் 8 இலட்சம் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை இழந்து அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தறி உரிமையாளர்களுக்கும், கூலிக்காக, குடிசைத்தொழிலாக தறி ஓட்டுபவர்களுக்கும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல பெரு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்புப் பிரச்சினை காரணமாக இவர்களுக்கு நூற்பதற்கு நூல் தராமல் நிறுத்தி வைத்துள்ளன. பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய வரி விதிப்பின் காரணமாக விலை கட்டுப்படியாகாமல் மூடப்பட்டுள்ளன.
இதற்கு எதிராக ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கடந்த ஒருவாரகாலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவுளி வியாபாரிகள் சங்கம், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5% வரிவிதிப்பை இரத்து செய்யக் கோரி ஜூலை 5 வரை மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளனர். வரியை இரத்து செய்யவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறன்று (02.07.2017) தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டியில் காப்பீட்டுக்கு வரி 18%மாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களின் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. 28% -த்தோடு மாநில அரசின் கேளிக்கை வரி 30% -மும் சேர்ந்து மொத்தம் 58% வரி சினிமாத் தொழிலை முடக்கி விடும் என்று கூறி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திங்கள்கிழமை (03.07.2017) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளது.
இத்தனைப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்க, ஜி.எஸ்.டியால், விலை குறையும், ஜிஎஸ்.டியால் வேலை வாய்ப்பு பெருகும் என, ஒரே ரெக்கார்டையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறது மோடி கும்பல்.
பணமதிப்பு நீக்கம் எப்படி மக்களின் வாழ்வாதாரங்களை, சிறு குறு வியாபாரிகளை அழித்ததோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல், ஜிஎஸ்டியில் மத்திய அரசு கைக்கொண்டிருக்கும் எதேச்சதிகாரப் போக்கும், சிறு தொழில் விரோதப் போக்கும், சாதாரண மக்களுக்கு விலைவாசி உயர்வையும், குடிசைத் தொழில், சிறு வணிகம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதார இழப்பையும், கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தி ஆதாரம் :
மணிகண்டன் போனற ஒரு முட்டாள் பிஜேபிகாரர் ஏழைகளின் கடளைமிட்டாயிக்கு 18% அதிக வரியையும் பணக்காரர்கள் உண்ணும் பிசாவுக்கு 5% குறைந்த வரியையும் நியாயப்டுத்தினார்….பிசாவுக்கு விலை அதிகமாம்… கடலை மிட்டாயிக்கு விலை குறைவாம்… அதனால் அந்த வரியில் இத்தகைய ஏற்ரதாழ்வாம்…
அப்ப நான் கூறினேன்….
காசு வைத்து இருகவனுக்கு பிசா சாப்பிட வரி குறைவு என்றால்…, காசு இல்லாதவன் கடலைமிட்டாய் சாப்பிட வரி அதிகம் என்றால்…. இது யாருக்கான அரசு?
பணகாரர்களுக்கா அரசு தானே இது?
மூடிகிட்டு சென்றார் அவர்…. இப்ப வாய திறந்துகிட்டு மணிகண்டன் வகையறாக்கள் வரலாம் விவாதத்துக்கு! தூ……
பிஜேபி அரசு என்ன செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து திட்ட தான் போகிறீர்கள், இதற்கு எதற்கு விவாதம். உங்களை (கம்யூனிஸ்ட்) போன்ற ஆட்கள் காஷ்மீரை தனியாக பிரிக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறீர்கள் ஆனால் ஜிஸ்டீ அதை மாற்றி ஒரே தேசம் ஒரே வரி என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி தேசத்தை மேலும் வலுவாக ஒன்றிணைத்து இருக்கிறது, என்னை பொறுத்தவரையில் இது சந்தோசமான செய்தியே ஆனால் தேசத்தை பலவீனப்படுத்த வேண்டும் பார்க்கும் வினவு கூட்டங்களுக்கு தேச ஒற்றுமை நல்ல செய்தி அல்ல, அதனால் நீங்கள் எதிர்க்க தான் போகிறீர்கள்
என்ன மணிகண்டன் “இந்திய எதிரி” சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவுக்கு 50 பில்லியன் டாலர் deficit (பற்றாகுறை) ஏற்படுத்தும் பிஜேபி அரசின் செயல் தான் உன்னை பொறுத்தவரையில் டேஷ் பக்தியா? தூ… இந்த பிழைப்புக்கு நீங்க பன்னி மூத்திரம் குடிக்கலாம் அல்லவா மணிகண்டன் ?
குறிப்பு:
1.சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 10 பில்லியன் டாலர் அளவுக்கு இந்திய உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவை(மென்பொருள் போன்ற சேவைகள்).சீனாவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகள்…அப்படிஎன்றால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதி ஏற்றத்தாழ்வு (பற்றாக்குறை)(deficit )50 பில்லியன் டாலர்.அப்படி என்றால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பதே இந்தியா மீதுசீனா செய்துகொண்டு உள்ள பொருளாதார யுத்தம் தானே ?
2. மணிகண்டன் போன்ற பிஜேபி வகையராகளை பன்னி மூத்திரம் குடிக்க சொல்வற்ற்கு காரணமும் இருக்குங்க…. அதிகாரத்தில் உள்ள ஒரு மத்திய பிஜேபி மந்திரி சொல்றாங்க ஓட்டலில் GST வரி போட்டால் வீட்டில் சமையல் செய்து சாப்பிடு என்று… இந்த திமிர் தனமான பேச்சுக்கு தான் என் பதிலடி மணிகண்டன் போன்ற பிஜேபி வகையராகளை பன்னி மூத்திரம் குடிக்க சொல்வது…
பாஸ், #இந்துத்துவத்தை கொத்து புரோட்டா போட்டுக்கிட்டு இருக்காங்க….போய் பாருங்க……