Tuesday, September 28, 2021
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் விவசாயியை வாழவிடு - தஞ்சை மாநாடு நிகழ்ச்சி நிரல் - அழைப்பிதழ்

விவசாயியை வாழவிடு – தஞ்சை மாநாடு நிகழ்ச்சி நிரல் – அழைப்பிதழ்

-

விவசாயியை வாழவிடு…
விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு !

05.08.2017  சனிக்கிழமை காலை 10:00 மணி முதல்

மாநாடு

கருத்தரங்கம் – கலைநிகழ்ச்சி – நேருரைகள்

அழைப்பிதழின் ஃபிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்ய அழுத்தவும்

கருத்தரங்கம்

காலை அமர்வு : 10:00 மணி

தலைமை :
தோழர் மருதையன் பொதுச்செயலாளர் மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை :
தோழர் மாறன் மக்கள் அதிகாரம், தேவாரம்

நீர் மேலாண்மையில் அரசின் தோல்வி :
திரு.ஆர்.பரந்தாமன் தலைமைப் பொறியாளர் ஓய்வு, பொதுப்பணித்துறை,தஞ்சாவூர்

தோழர் வெங்கடராமய்யா தலைவர்,அகில இந்திய கிசான் மஸ்தூர் சங்கம், ஆந்திரா

பயிர்காப்பீடு- மானியம் – ஆதார விலை கடன் தள்ளுபடி – தீர்வாகுமா?
திரு மு.அப்பாவு மாநில தணிக்கைக் குழு உறுப்பினர், தி.மு.க.

அரசின் வேளாண் கொள்கையும், விவசாயத்தின் அழிவும்:
திரு. பி.கலைவாணன் உதவி இயக்குநர் (ஓய்வு, வேளாண் துறை, தஞ்சாவூர்

உணவு இடைவேளை 1-30 – 2:30
பிற்பகல் அமர்வு 2-30

வேளாண் ஆய்வுகளின் நோக்கும், போக்கும் :
பேராசிரியர் பவணந்தி அரசியல் அறிவியல் துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

விவசாயிகள் பிரச்சினையில் நீதிமன்றத்தின் பாராமுகம் :
வழக்கறிஞர் லஜபதிராய் உயர்நீதிமன்றம், மதுரை

பொது அரங்கம்

மாலை அமர்வு : 5:00 மணி

 • தலைமை :
  தோழர் காளியப்பன் பொருளாளர், மக்கள் அதிகாரம்
 • திரு ஆர்.நந்தகுமார் மாவட்டச் செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம், கடலூர்
 • திரு சின்னதுரை மாவட்டச் செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம், திருச்சி
 • திரு ஜி.வரதராஜன் துணைத் தலைவர் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, தஞ்சை
 • பசுமை ராமநாதன், நெடுவாசல் போராட்டக்குழு
 • தோழர் தத்தார் சிங் அகில இந்திய கிசான் மஸ்தூர் சங்கம், பஞ்சாப்
 • வழக்கறிஞர் பாலன், பெங்களூரு
 • வழக்கறிஞர் சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
 • நேருரைகள்
 • நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகள்
 • தப்பாட்டம்
 • ரெட்டிப்பாளையம் வீரசோழ தப்பாட்டக் குழு
 • மற்றும் ம.க.இ.க கலைக் குழுவின் பாடல்கள்
 • நன்றியுரை
  தோழர் மாரிமுத்து
  தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பு குழு
  மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
பேச :
99623 66321

 1. Nanbargale vanakkam.endha katchi verupadinri tanjavuril kooduvom.india vivasayigalin naadu enbadhai nirubippom.idhu vivasayigalin pratchanaya enna?soru undu vaalvadhal namadhu pratchanayum kooda.ayiram karuthu verupadugalai puram vaithu maanaatil thiralvom.athikaram padaippom.

 2. மக்கள் அதிகாரம் தோழர்களே #விவசாயிகளை வாழ விடு# மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ,

  நிலம் உரிமையாக உள்ள விவசாயிகள் பிரச்சனை குறித்தே முதலாளித்துவ கட்சிளும் ,விவாசாய சங்கங்களும் ,பேசியும் போராடியும் வருகிறது .ஆச்சர்யபாட ஒன்றுமில்லை
  ,கம்யூனிச அமைப்பான தாங்கள் மாநாட்டில் கூட விவசாய கூலிகளின் தீண்டாமை முதல் கொத்தடிமை வரை ,கூலி சுரண்டல் முதல் கால நிர்ணயம் இல்லா உழைப்புவரை ,அரசு குறைந்தபட்ச விவசாயகூலியை நிர்ணயம் கூட நிர்ணயப்பதில்லை
  நிலம் வைத்துள்ள விவசாயக்கு பொயராளவிளாவது வெள்ள நிவரணம் ,வறட்சி நிவாரணம் அரசு கொடுக்கிறது
  நிலத்தை நம்பியுள்ள விவசாய கூலிக்கு அரசு வெள்ள ,வறட்சி நிவரணங்கள் கொடுப்பதில்லை
  ,தென்னை காய்ந்தால் நிலவுடமை விவசாயக்கு மரத்திற்கு 8000 ருபாய் நிவாரணம்
  தென்னை மரம் ஏறும் தொழிலாளிக்கு நையா பைசா நிவாரணம் உண்டா
  நில உரிமை குறித்து? குடிமனை பட்டா ?

  5 ஏக்கர் நிலம் முதல் ஆயிரக்கனக்கான நிலம் வைத்திருப்பவருக்கும் நிலவுடமை விவசாயிகளின் வங்கி கடன் ,டிரக்டர் கடன் கொடுக்கிறார்கள் தள்ளுபடியும் செய்கிறார்கள் .வறட்சியினால் விவசாய கூலி வேலையின்றி அல்லாலூறும் விவசாய கூலிகள் வாங்கும்

  சுய உதவி குழ கடன் தள்ளுபடி செயய கோரிக்கை வைக்க கூட நாதியில்லை

  என்பது். தாங்கள் அறியாதாது அல்லா ,விவசாயகூலிகளுக்கு சுயமரியாதையும் இல்லை ,சுரண்டாலை தட்டிக்கேட்க நாதியும் இல்லை,கம்யூனிஸ்டான தங்கள்மாநாட்டில் விவசாய கூலிகள்
  குறித்து தனி தலைப்பில் யாரவது உரையாற்றினால் மாநாடு முழ வெற்றியாடையும் ,

  வெல்லாட்டும் மாநாடு வாழ்த்துக்கள் மு.கார்க்கி சமத்துவ கழகம்

 3. திமுக ஆட்சியில இருந்த போதும் “விவசாயிகள் அழிவுக்கு என்னவெல்லாம் காரணம்ன்னு நீங்க சொல்லுறீங்களோ அதையெல்லாம் அவங்களும் செஞ்சவங்க தான். “தேர்தல் கட்சியின் மீது நம்பிக்கையில்லாமல் தான் உங்க கூட்டத்துக்கு மக்கள் வர்றாங்க நீங்களோ தி.மு.க காரங்களை மேடையில உட்காரவைக்கிறீங்க.உங்களை தி.மு.க சொம்பு ன்னு சொல்லுறதுல தப்பே இல்லை.

  • கதிர் அவர்களே,
   மக்கள் அதிகாரம் மேடைகளில் டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி அந்தந்த ஊர்களில் தேமுதிக,விசிக, சிபிஎம், சிபிஐ, காங்கிரசு போன்ற கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் கல்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாநாட்டில் பேச இருக்கும் திரு அப்பாவு கூட இதற்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.இந்த அரசமைப்பில் தீர்வு இல்லை, மக்களே தங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முழக்கத்துடன் பணியாற்றும் மக்கள் அதிகார மேடைகளில் குறிப்பிட்ட பிரச்சினைகளை ஒட்டி தொடர்புடைய கட்சிகள், சங்கங்கள், குழுக்கள், தனிநபர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். ஒரு பொதுப்பிரச்சினையை ஒட்டி ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதை ஒட்டித்தான் போராட்டங்கள் வெற்றியடையும், தனிமைப்படுத்த முடியாது. பாடகர் கோவன் கைதைக்கூட மேற்க்ண்ட கட்சிகள் கண்டித்திருக்கின்றன. பச்சையப்பா மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது கூட மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள் சென்று பார்த்திருக்கின்றனர். ஆகவே மக்கள் அதிகாரத்தின் முழக்கத்தை அவர்கள் வரம்பிற்குட்பட்ட அளிவில் ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரவிக்கின்றனர். இதனால் மக்கள் திரள் மக்கள் அதிகாரம் அமைப்பை விடுத்து அந்தந்த கட்சிகளை நம்புவார்கள் என்று நீங்கள் சொல்வது அபத்தம். ஏனெனில் இன்றும் பல ஊர்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மக்கள் அனைவரும், மக்கள் அதிகாரத்தைத்தான் நாடுகின்றனர். வேறு கட்சிகளை அல்ல!

   இதனாலேயே நீங்கள் அதிமுக சொம்பு என்றோ பாஜக சொம்பு என்றோ நாங்கள் சொல்லவில்லை. ஆனால் உங்கள் தர்க்கப்படி இத்தகைய இரட்டை சொம்புப் பட்டம் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் அதை நீங்கள் தார்மீக ரீதியாக மறுக்க முடியாது. ஆகவே அனுதாபப்படுகிறோம்.

 4. நீங்கள் கூறுவது போல் அ.தி.மு.க வையோ பா.ஜ.க வையே நான் அதரிக்க வில்லை.அவர்களை நீங்கள் கூப்பிடலன்னு நான் கேக்கல.
  என்னுடைய கேள்வி எளிது .விவசாயிகள், விவசாயம் அழிவுக்கு எதையெல்லாம் காரணமா கூறுகிறீர்களோ அதையெல்லாம் ஆட்சியில் இருக்கும் போது திமுக கார்களும் செய்தவர்கள் தான் .அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த ஆட்சிகளில் கொள்ளை அடித்த கட்சியை சேர்த்தவர்களை ,கொள்ளை அடித்தவர்களின் உடன் இருந்தவர்களை மேடை ஏற்றுக்கிறீர்களே என்பது தான் கேள்வி அதற்க்கு நீங்கள் சொல்லுற பதில் “எல்லா கட்சியும் வேணும் வரும்புக்கு உட்பட்டு மக்கள்அதிகாரத்தை ஆதரிக்குறாங்க ன்றீங்க .”

  ஆட்சியில் இல்லாத போது அவர்கள் செய்த தவறை மறந்துருவீங்களா கோவனை ஆதரிக்குறதாலயே அவங்களை மேடையேற்றுவீர்களா?
  வடிவேலு கதையா இருக்கு அது போன மாசம் இது இந்தமாசம் போன மாசம்.

  தனியார்மய,தாராளமய,உலகமய திட்டத்தை ஆதரிச்சாங்க இயற்க்கை வளதிருட்டை செஞ்சவங்க அல்லது கண்டுக்காம கமிசன் வாங்கிட்டிருந்தவங்க .இப்ப அப்டி இல்ல (வேற ஒருத்தர் அதை செய்றாங்க )அதனால அதை எதிர்க்கிறோம் .அடுத்த முறை ஆட்சிக்கு வந்தா இதையெல்லாம் செய்ய மாட்டாங்கன்னு எந்த உத்திரவாதமும் இல்லதாங்க உங்களை தற்போத்து ஆரத்தித்தில் அதை ஏற்றுக்கொள்வீர்களா?

  ஏத்துக்கிறீங்க நல்ல கொள்ளை…

  (கருத்துசுகந்திரம் பற்றி நல்லா பேசுறீங்க உங்களுக்கு மாற்று கருத்து சொன்னா டெலிட் பண்ணிடுறீங்க . )

 5. திரு ”கதிர்” அவர்களே,

  ஓட்டரசியலில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சொந்த நலன்களும், அந்த நலன்களின் சொந்தக்கார வர்க்கங்களின் பிரதிநிதியாக கட்சிகள் இருப்பதும் யாருக்கும் தெரியாத விசயமல்ல .

  தி.மு.க புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சி. குடும்ப அரசியல் கட்சி. திடீர் பணக்கார அரசியல் ரவுடிக் கலாச்சாரம் உருவாக பங்களித்த கட்சி. ஊழல் செய்த கட்சி.

  இவையெல்லாம் யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல.

  இப்போது மக்கள் அதிகாரம் அமைப்பினர் புரட்சி செய்யவா தி.மு.க தலைகளை தேடிப் போனார்கள்? இல்லை. ”விவசாயத்தின் அழிவு” என்கிற ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைக்கிறார்கள்.

  தி.மு.க தனது சொந்த அரசியலின் இருத்தலுக்காகவாவது விவசாயிகளின் பிரச்சினையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிர் நிலை எடுத்துள்ளது – எனவே அந்தக் குரலையும் மக்கள் அதிகாரம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

  தி.மு.க நம்பும் / பின்பற்றும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே தற்போதைய விவசாயிகளின் அழிவுக்கு காரணம் என்பதும் இரகசியம் அல்ல. எனில், மேடையில் விவசாய அழிவுக்கு எதிராக தி.மு.க குரல் கொடுப்பது அந்தக் கட்சிக்குள் தான் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் (ஒன்று புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும் – அல்லது விவசாயத்தின் அழிவு பிரச்சினையில் பாரதிய ஜனதாவின் குரலை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும்)

  இது ரெண்டும் அல்லாமல் வழவழா கொழ கொழா என்று பேசினால் அந்தக் கட்சியின் இரட்டை நிலை அம்பலப்பட்டுப் போவதோடு – மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் செல்வாக்கு உயரும்.

  ஒரு பகுதிப் போராட்ட நிகழ்வுக்கு யாரை அழைப்பது யாரை அழைக்க கூடாது என முடிவெடுப்பது புரட்சி என்கிற முழுமை சார்ந்ததாக இருக்க முடியாது. விவசாய பிரச்சினையை பகுதி சார்ந்ததாக பார்க்கும் தெளிவு இருப்பதாலேயே அய்யாவு அழைக்கப்பட்டிருக்கிறார்.

  கொடூரமான பாசிஸ்டுகள், மக்கள் விரோதிகள், மதவெறியர்கள் தவிர ஓட்டரசியலில் இருக்கும் தி.மு.க போன்ற சக்திகளோடு பகுதிப் பிரச்சினைகளுக்கு கைகோர்ப்பது தமிழ்நாட்டிலேயே முன்பும் நடந்துள்ளது (தில்லை பிரச்சினை போன்று).

  உலகம் முழுவதும் கம்யூனிஸ்டு இயக்கங்களின் அணுகுமுறையும் இது தான்.

  போகட்டும்.

  நீங்கள் சொல்லும் அளவு கோளின் படி பார்த்தால், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வந்தவர்களில் சபரி மலைக்கு மாலை போட்டவர்கள் இருந்தால் விரட்டியடிக்க வேண்டுமோ? ஏனெனில் கம்யூனிஸ்டுகளுக்குத் தான் கடவுள் எதிரியாயிற்றே?

  குறிப்பு : உங்கள் சொந்தக் கடை ஓடவில்லை என்பதால் முக்காடு போட்டுக் கொண்டு இங்கே வந்திருக்கிறீர்கள். வந்தது தான் வந்தீர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் “கதிர்”?

 6. நத்தா
  உங்கள் பதில் ஏற்றுக்கொள்ளும் படி உள்ளது.குறிப்பிட்ட இந்த பிரச்சனையில் “எதிர்பாளர்களை”இணைத்துக்கொள்ளுவது என்ற நிலைபாட்டை .

  இனி அவங்க மாத்திபேசிட்டாக்க கட்சிக்குள்ள சுயமுரண்பாட்டை தோற்று விக்குறதெல்லாம் கற்பனை தான் . ஓவர் கான்பிடன்ஸ்.

  அதென்ன சொந்த கடை ன்றீங்க முக்காடுன்றீங்க வெட்கப்படாம ன்றீங்க
  நாம் தமிழர் கட்சியை கேள்வி கேட்டா” வந்தேறி”ன்னு முத்திரை குத்துவது போல உங்க கைவசமும் ஒரு முத்திரை இருக்கு போல.
  கேள்வி தான கேட்டான் ஏன் இவ்ளோ காண்டாகுறீங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க