Thursday, April 2, 2020
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தென்னை விவசாயிகளும் திரளுங்கள் ! உடுமலை பொதுக்கூட்டம் !

தென்னை விவசாயிகளும் திரளுங்கள் ! உடுமலை பொதுக்கூட்டம் !

-

ஞ்சையில் வருகின்ற ஆகஸ்ட் -5 விவசாயியை வாழவிடு என்கிற மாநாட்டின் விளக்க பொதுக்கூட்டம்  கடந்த 16.07.17 அன்று உடுமலை வேங்கடகிருஷ்ணா ரோட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது .

இக்கூட்டத்திற்கு தோழர் சூர்யா தலைமை தாங்கினார். அவர் பேசும்போது “மக்கள் அதிகாரம் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை வைத்து மாநாடு நடத்தி குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே கடையை நாமே மூடுவோம் என்ற முழக்கம்  இன்று மக்கள்முழக்கமாக மாறி மக்கள் கடையை மூடி கொண் டிருக்கிறார்கள் . மக்கள் அதிகாரத்தின் முழக்கம் மக்கள்முழக்கமாக மாறுவதுதான் இன்று ஆள்பவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது.

அதிலும் உடுமலை காவல்துறையின் விசுவாசம் அதிகம். அதனால் தான் யாருமே இல்லாத இடத்தில் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது . அதுவும் போராடித்தான் பெறவேண்டியுள்ளது .ஒரு சந்தேகம் எல்லோருமே சோறு தான் உண்கிறோம் . இவருகளுக்கும் சேர்த்துதான் பேசுகிறோம் போராடுகிறோம் , இன்றைக்கு விவசாயி 300 பேருக்கு மேல் இறந்துள்ளனர் . ஆனால் அரசு 17 பேர் கணக்கு சொல்கிறது . போராடுவது பேஷன் என்கின்றன மத்திய மாநில அரசுகள்.

விவசாயின் நிலைமைகளை பற்றியெல்லாம் கவலை இல்லை. கார்ப்ரெட் முதலாளி பற்றித்தான் கவலை. இவர்களுக்கு கோடிக் கணக்கில் தள்ளுபடி. ஆனால் விவசாயி நடுத்தெருவில் , சரி இந்த தள்ளுபடி , மானியம் தீரவு ஆகுமா , ஆகாது .விவாசயி வாழ்வதற்கும் நம்முடைய விவசாயம் கார்ப்ரேட்டிடம் கொடுக்கவும்தான் நெடுவாசல் , கதிராமங்கலம் எல்லாம். எனவே ஆக-5 மாநாடு என்பது தீர்வுக்கான மாநாடு. நிதி கொடுப்பதோடு இல்லாமல் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.”என பேசினார்.

அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள்கட்சியை சேர்ந்த தோழர் விடுதலை மணி பேசும்போது பாரம்பரியம் என்பது  இன்றைக்கு அழிக்கப்பட்டு குளம் ஏரி வாய்க்கால் என எல்லாம் இந்த அரசால் சீர்குலைக்கப் பட்டுவிட்டது. இப்போது அரசு விவசாயியையும் அழித்து துரத்துகின்றது.” என பேசினார் .

அதன் பின் தோழர் மூர்த்தி  (மக்கள் அதிகாரம், கோவை ) பேசும்போது இன்றைக்கு வறட்சி மழை இல்லை என்கிறான் .ஆனால் வட மாநிலங்களில் உற்பத்தி அதிகமாகி நட்டத்தில் உள்ள விவசயிகள் போராடினால் அரசு அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி விரட்டுகிறது பாஜக அரசு. ஆக இந்த அரசு யாருக்கான அரசு. அதனால் தான் இது நமக்கான அரசில்லை. உழவருக்கு அதிகாரம் வேண்டும் அதுதான் தீர்வு.தோற்றுப் போன அரசிடம் கெஞ்சி பயனில்லை.வாருங்கள் மாநட்டிட்டுக்கு”, எனஅறைகூவல் விடுத்தார் .

அவரைத் தொடர்ந்து தோழர் சின்னப்பாண்டி   (மக்கள் அதிகாரம், திருப்பூர் ) பேசும்போது விவசாயின் அழிவு சமுகத்தின் அழிவு என்பது இன்றைக்கு திருப்பூரில் பார்க்கிறோம் விவசாயத்தை விட்டு வந்து நாடோடிகளாக வாழ்க்கை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். காட்சா  பொருள் இல்லையென்றால் இந்த தொழிலும் செய்ய முடியாது . GST வரியின் மூலமாக திருப்பூரில் தொழிலார்கள் வேலையிழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு சொந்த ஊருக்கும் போகமுடியாமல் இங்கேயும் இருக்க முடியாமல் நிலைகுலைந்துள்ளனர். அதனாலதான் சொல்கிறோம் . விவசாயின் அழிவு சமுகத்தின் அழிவு”,என்று என பேசினார்.

அடுத்து தோழர் மாறன் (வி. வி .மு கம்பம்) சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது இந்த தோற்றுப்போன அரசிடம் விவசாயிகள் கெஞ்சியதுபோதும், “இந்தியா  முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு  வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள  பஞ்சாப்பில்ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு  இருக்கிறார்கள். விளைவித்த  பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதில்லை, நாடு முழுவதும் வறட்சியினால்  மட்டும் இறப்பதில்லை. கடன் தொல்லையாலும் உரிய விலையின்மையினாலும் தான் இறக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். எனவே விவசாயிகளை தற்கொலைக்கு  தள்ளுவது  அரசுதான்.  மூடு டாஸ்மாக் முழக்கத்தை போல விவசாயியை வாழவிடு இந்திய மக்கள் முழக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின்  அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும். விவசாயியை வாழவிடு முழக்கம் எதிரிகளின் நெஞ்சை பிளக்கும்”,என்று  கூறினார். குறிப்பாக தென்னை விவசயிகளும் கூட ரோட்டுக்கு வந்தாக வேண்டும். அவர்களும் தயங்காமல் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்”. என அறைகூவல் விடுத்து பேசினார் .

இறுதியாக தோழர் மணிமாறன் நன்றியுரையாற்றினார்.

வந்திருந்த விவசயிகளும் பொதுமக்களும் மாநாட்டிற்றிக்கு கலந்து கொள்ளவேண்டும் என்கிற உணர்வோடு சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.

_____________

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்