Wednesday, April 21, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க குண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு !

குண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு !

-

மிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்கள் மீது குண்டாஸ் எனப்படும் ஆள்தூக்கி சட்டத்தை போட்டு ஒடுக்குகிறது தமிழக அரசு. கதிராமங்கலம் மீத்தேன் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசுக் கல்லூரி முன்பு துண்டு பிரசுரம் விநியோகித்த சேலம் மாணவி வளர்மதியை குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது தமிழக அரசு.

இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்க ‘மிசா’ என்னும் தடுப்புக் காவல் சட்டத்தினை பயன்படுத்தினார். அதற்கு பிறகு, தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் என தடுப்பு காவல் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், எதிர்கட்சிகளையும் எப்படி ஒடுக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறு.

குண்டர் தடுப்பு சட்டத்தை முதன் முதலில் 1982-ல் பாசிச எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்தது. தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் என சில பிரிவுகளில் துவங்கி, கடந்த 34 ஆண்டுகளில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் என பல பிரிவுகளையும் சேர்த்திருக்கின்றனர். இருப்பினும் தொழில் முறைக் கிரிமினல்களை விடுத்து அரசியல் ரீதியாக போராடுபவர்களைத்தான் இதில் கைது செய்து ஒடுக்குகிறார்கள்.

குண்டர் சட்டம் என்பது தடுப்புக் காவல் சட்டம் என்ற வகையில் வருகிறது. ஒருவர் குற்றம் செய்வதற்கு முன்பே, அவர் குற்றம் செய்வதை தடுக்கும் விதமாக அவரை சிறையில் அடைத்து வைப்பதுதான் இந்த குண்டர் சட்டத்தின் நோக்கம். இதைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதாவது திருட்டு, கொள்ளை, கொலை அதிகம் நடக்கும் போது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பழைய கிரிமினல்களை கைது செய்வார்கள். சந்தேக கேஸுக்குகாக வருவோர் போவோரைக் கைது செய்வது போன்றது இது. பிறகு ஊரறிந்த குற்றச் செயல்களில் தொடர்புடையோரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்து மக்களுக்கு ரிசல்ட் காட்டுவார்கள்.

அடிக்கடி குற்றம் செய்பவர்கள் என்ற வரையறைக்குள் வருவதற்கு ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. காவல் நிலையத்தில் அவர் மீது 2-3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் போதும். தடையை மீறி நோட்டிஸ் கொடுத்தார், இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்தில் பேசினார் என்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியிருந்தால் கூட, அந்நபர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட தகுதி உடையவர் ஆகி விடுவார்.

2012 -ம் ஆண்டு சென்னை மதுரவாயலில் காவல்துறையின் அராஜகங்களை தொடர்ச்சியாய் அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களை திரட்டி போராடியதால் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இரண்டு முன்னணி தோழர்கள் திவாகர், குமரேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள். அதேபோல சென்னை சந்தோஷ் நகர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த அசோக் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க முயன்றார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் போராடி காவல்துறையின் முயற்சியை முறியடித்தது. மக்களுக்காக போராடும் புரட்சிகர அமைப்பில் செயல்படும் தோழர்களை இழிவுப்படுத்தும்விதமாக கத்தியைக் காட்டி வழிப்பறித்தார்கள், பொதுமக்களை மிரட்டினார்கள் என பொய் வழக்கு போட்டார்கள்.

2014 -ல் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க நிர்வாகியான தோழர் சிவாவை தொழிலாளர் நலத்துறை ஆணைய அதிகாரியை மிரட்டியதாய் பொய் வழக்கு ஒன்றை தொடுத்தார்கள். குண்டர் சட்டத்தில் போடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கியதை கூட மதிக்காமல், குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் போராடியதன் விளைவாக, தமிழக அரசின் உள்துறை செயலாளர் தோழர் சிவாவின் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றார். 58 நாட்களில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் விடுதலையானது தமிழக வரலாற்றில் முதல் முறை.

மாணவி வளர்மதி

சமீபத்தில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். தற்பொழுது மாணவி வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.
“போலீசு நினைத்தால் இனி யார் மீது வேண்டுமென்றாலும், பொய்வழக்கு ஒன்றைப் போட்டு, குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் அடைக்கலாம்” என்ற பாசிச நிலை தான் உள்ளது. இந்த நிலையை கச்சிதமாக நிறைவேற்றியவர் மறந்த முன்னாள் முதல்வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் A-1 குற்றவாளியுமான ஜெயலலிதா தான்.

“2011 -ல் குண்டர் சட்டத்தில் 1,926 பேரை கைது செய்தார். ஆனால் 1,926 பேரில் 146 பேர் மட்டுமே ஓராண்டு சிறையில் இருந்து வெளியில் வந்தார்கள். 1,291 பேர் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவாலும், 489 பேர் அறிவுரைக் குழும ஆணைகளாலும் விடுதலையானார்கள். இதன் பொருள் எஞ்சிய 146 பேரும் குற்றவாளிகள் அல்லது குண்டர்கள் என்பதல்ல. அவர்கள் ஏழைகள் அவர்களால் ஒரு வழக்கறிஞரை வைத்து தங்களின் விடுதலைக்காக வாதடவோ போராடவோ முடியவில்லை. 2012 ல் 2140 பேர் கைது செய்யப்பட்டனர். 2013 -14 ல் சராசரியாக 2500 பேர் வரை கைது செய்யப்படலாம் என்று அரசுக்கு போலீசு பரிந்துரைத்து வழக்கு தயாரிப்பு செலவை நபர் ஒன்றுக்கு மூவாயிரத்திலிருந்து எட்டாயிரம் ரூபாயாக உயர்த்திக்கொண்டது.” ஜெயாவும் தாரளமாக நிதி ஒதுக்கினார்.

சராசரியாக ஆண்டுக்கு 2,200 பேர் என்ற அளவில் கேள்விக்கிடமற்ற முறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்குகள் நிலுவையிலே இருந்ததையொட்டி, அந்த வழக்குகளை விரைந்து முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அக்னிஹோத்ரி உத்தரவிட்டார். அதனடிப்படையில் இந்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு தனி டிவிஷன் பெஞ்ச் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர் 14-6-2014 அன்று இத்தகைய வழக்குகளை விசாரித்தனர். நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கி, மதியம் 2 மணிக்குள் 220 வழக்குகளை விசாரித்து 212 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இத்தகைய நிலையில் குண்டர் சட்டத்தில் அவசரமாக திருத்தம் கொண்டு வந்தார்கள். கேள்விக்கிடமற்ற வகையில், விவாதங்களுக்கு இடமில்லாத வகையில் வெளியிடப்படும் விதி எண் 110-ன் கீழ் 12-8-2014 அன்று 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக முன்மொழிந்து அமாலாக்கினார் ஜெயலலிதா.

அந்த மசோதாவில் முக்கியமானது குண்டர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம்.
இந்த திருத்தத்திற்கு முன்னர் குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு சட்டம் பல நிபந்தனைகளை விதிக்கிறது. அவற்றுள் ஒன்று, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி(IPC) தண்டிக்கப்படக் கூடியக் குற்றங்களைக் கொண்ட ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட ஒருவர் மீது தான் குண்டர் சட்டத்தை ஏவலாம். என்ற அந்த நிபந்தனையை நீக்கி காட்டாட்சி நடத்தினார் ஜெயா.

இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 95% -தினர் நீதிமன்றத்தால் பொருத்தமில்லாத வழக்கு என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் போராடுபவர்கள் மீது இந்த சட்டம் பாய்கிறது. இது தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பேசும் போது மக்களை போராடத் தூண்டுபவர்களை இப்படித்தான் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்வோம் என்று பகிரங்கமாக மிரட்டுகிறார்.

மிசா, தடா போன்ற ஆள்தூக்கி கருப்பு சட்டங்களை மிகக் கடுமையாக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.கவின் விருப்பம். தற்போது அந்த விருப்பத்தை பா.ஜக -வின் அடிமையான எடப்பட்டி அரசு நிறைவேற்றி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தூண்டுவதற்காக தமிழகத்தில் இலட்சக்கணக்கான மக்கள், மாணவர், இளைஞர் போராடினர். எனில் இவர்கள் அனைவரையும் போராத் தூண்டுபவர்கள் என்று கைது செய்வார்களா? அத்தகைய எழுச்சி ஒன்றுதான் இந்த பாசிச ஆட்சிக்கு பதிலடியாக இருக்கும்.

– வினவு கட்டுரைகள், மற்றும் டி அருள் எழிலனின் குண்டர் சட்டத்தின் பிடியில் தமிழகம்: உணருமா இயக்கங்கள்?  கட்டுரையில் இருந்து தொகுக்கப்பட்ட செய்தித் தொகுப்பு.

_____________

இந்தப் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

 • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

 1. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுள்ள பிள்ளை வளர்மதியின் விசயத்தில் வதந்திகளை பரப்பும் போலிஸ்…

  தமிழத்தின் பிஜேபியின் பொம்மை முதல்வர் எடிபாடியார் அவர்கள் கூட கூறாத குற்றசாட்டை அதாவது அவரை நக்சலைட் என்று போலிஸ் கூறிக்கொண்டு பொதுமக்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டு உள்ளது தமிழக போலிஸ்….அந்த புரளியை தமிழகத்தின் மீது பிடித்த சனியன் ஊடகங்களும் மக்களிடையே பரப்பிக்கொண்டு உள்ளன…

  உண்மை நிலைமை என்னவென்றால் அவர் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்… அண்ணாமலை பலகலை கழத்தில் படிக்கும் போதே மாணவர்களுக்கான ஸ்காலஷிப் கொடுத்காத நிர்வாகத்தை கண்டித்து மணவர்களுடன் சேர்ந்து போராடி பெற்றவர்…விவசாயிகளை மிதித்து அவர்களின் வாழ்வாதரங்க்களை சிதைத்து அரசு செய்யும் மீதேன் எடுப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர்…அவர் மீது உள்ள ஆறு வழக்குகளும் அவர் மக்களுக்காக ஜனநாயக முறையில் போராடியதற்காக போடப்பட்டவையே… அந்த வழக்குகளையே காரணம் காட்டி இந்த தமிழக அரசு அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சியுள்ளது…

  அரசின் இந்த மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்கு உரியது மட்டும் அல்ல…. மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு போராட வேண்டிய விசயமும் கூட…

 2. தமிழ் நாட்டின் பிஜேபியின் பொம்மை முதலவர் எடப்பாடி அந்த பிள்ளை வளர்மதி மீது ஆறு கேஸ் இருக்கு என்று மொட்டையா சொல்லியிருக்கார்… என்ன கேசுன்னு விசாரிக்க வக்கற்ற ஊடகங்கள்!அனைத்து கேஸ்களுமே மக்களுக்காக பிள்ளை வளர்மதி போராடிய போராட்டத்துக்கான கேஸ்கள் தானே தவிர அதிமுக காரங்கள் மீது உள்ள, இருந்த கொலை, கொள்ளை, மற்றும் சொத்துகுவிப்பு கேஸ்கள் அல்லவே!

  வளர்மதி மீது ஆறு வழக்குகள் உள்ளதாக தமிழக பிஜேபியின் பொம்மை முதல்வர் கூறியுள்ள எல்லாம் ஆர்பாட்டம், மறியல் போன்ற போராட்ட வழக்குள் தானே.

  • இன்று போராட்டம் என்று சொல்வது நாளை அது ஆயுத போராட்டம் என்று மாறி சாதாரண மக்களையே பெரும் அழிவில் தள்ள கூடியது, அனைத்து வகையிலும் தமிழகத்தை நாசம் செய்ய கூடியது, அதனால் அரசு இவரை போன்றவர்களை கைது செய்தது சரியே.

   காலம் கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.

    • இந்த போராட்டம் நடத்துபவர்களின் பின்னணி நோக்கம் எல்லாம் தெரிந்த பிறகு யாராக இருந்தாலும் தமிழகத்தின் நிலை குறித்து வருந்தவே செய்வார்கள்

     • பின்னணி நோக்கத்தை கொஞ்சம் மயிர் பிளக்கும் விளக்கங்களோடு விளக்குங்களேன் மணிகண்டன்.

      வெளக்குனீர்கள் என்றால் நாங்களும் தெரிந்து கொள்வோம் அல்லவா ?

     • வெளக்குமாறு எடுத்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

     • மணிகண்டன் .., நீங்க உங்க அம்மாவை மாட்டுடன் ஒப்புமை செய்து அதே அம்மாவை (மாட்டை) வெட்டி கூறுபோட்டு வெள்ளைகாரனுக்கு ஏற்றுமதி செய்து அமெரிக்க டாலரின் பணம் பார்க்கும் விபச்சார கூட்டத்தை சேர்த்த மகா கொடூரன் தானே நீங்க…? அப்ப உங்க சிந்தனை இப்படி தான் இருக்கும்…

      குறிப்பு: மாட்டை அம்மாவுடன் ஒப்புமை செய்த அறிவிலி தான் இந்த மணிகண்டன்…வேணுமானால் மாடு மணிகண்டன் அம்மா என்று வினவில் தேடிப்பாருங்கள்….!

     • பாருங்க யாருக்குமே உண்மை தெரியல. எல்லாரும் விளக்கம் தான் கேக்குறாங்க. அவுத்து விடுங்க உங்க தேச பக்திய !!!!

   • போராட்டம் என்றாலே ஏன் அலறுகிறீர்கள்? நோட்டீசுக்கே உச்சா போகும் உங்களைப் போன்றவர்களை எதில் சேர்ப்பது?

 3. Mr. CM, I am well. I wish you the same. In an Inevitable circumstances, We should support people who are affected by central Government’s ONGC embankment of Oil wells in Tanjai and Nagai Districts of our Mother Tamilnadu. Will you hands together with us? History writes who is hero and who is Villan in its pages…

  திரு தமிழக முதல்வர் அவர்களே, தவிர்க்கவே இயலாத சூழலில் நாம் மதிய அரசின் ONGC தோண்டும் எண்ணை கிணறுகளால் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டு வாடும் நம் தஞ்சை மற்றும் நாகை மாவட்ட மக்களுக்காக ஜனாநாய பூர்வமாக போராட வேண்டியுள்ளது… நீங்களும் நம் மக்களுக்காக நம் மக்களின் போராட்டங்களில் கைகோர்பீர்களா ? வரலாறு அதன் பக்கங்களில் யார் உண்மையில் நாயகன் யார் வில்லன் என்று எழுதத்தான் போகிறது…

  குறிப்பு: CM Said : ஜனநாயகத்தில் போராடு வதற்கு உரிமை உண்டு. ஆனால், மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக் கும்போது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும்.

 4. ஜனநாயக கருத்துரிமையின் அடிப்படையில் மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் இந்த பெரு வதை (great Cruelty)தழிழக அரசை உச்ச /உயர் நீதி மன்றங்கள்,மனித உரிமை ஆணையகம் ஆகியவை கண்டும் காணமல் தூங்கிகொண்டு உள்ளனவா?

 5. பிஜேபியின் பினாமி அதிமுக அம்மா தமிழக அரசால் கைது செய்யபட்ட சமுக செயல்பாட்டார்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் பட்டியல் திருமுருகன் காந்தி, வளர்மதி, குபேரன்,திவ்ய பாரதி என்று தொடர்கின்றது….முதல்வர் எடப்பாடியாரின் ஜனநாயக மறுப்பு கொள்கை மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பளிச்சென்று வெளிப்படுகிறது…! மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இந்த கொடுர தமிழக அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்…..

  அடுத்த கைது யார்….? அது நீங்களாக கூட இருக்கலாம்…. நானாக கூட இருக்கலாம்…. சமுகத்தை பற்றி சிந்திக்கும் யார் வேண்டுமானாலும் அடுத்து கைது ஆகலாம்…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க