Monday, March 17, 2025
முகப்புகலைகவிதைபிரபலமான குசு - மனுஷ்ய புத்திரன்

பிரபலமான குசு – மனுஷ்ய புத்திரன்

-

பிரபலமான குசு

ரு பிரபல மனிதருக்கு
எப்போதாவதுதான்
குசு விடவேண்டும் போலிருக்கிறது
அப்போது அவர்
எல்லோருக்கும் கேட்கும்படியாக
ஒரு குசு விடுகிறார்
அது நகரத்திற்கு மேலாக
‘டமாரெ’ன்று வெடிக்கிறது
போன மாதம்
இன்னொரு பிரபலமான மனிதர்விட்ட குசுவைவிட’
இந்தக் குசு பெரிதாக இருந்தது.

நகரவாசிகள் அனைவரும்
அந்த சத்தைக் கேட்கிறார்கள்
அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்
அந்த குசு வெடித்த இடத்தில்
ஒரே புகைமண்டலமாக இருக்கிறது
சத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்
சில நொடிகளில் வந்துவிட்டன
ஒரு குசுவை படம் பிடிப்பதில்
அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது

அவர் ஏன் இப்போது
குசுவிடுகிறார் என்று கேட்கப்படுகிறது
இதற்கு முன் அவர் ஏன் குசு விடவில்லை
என்றுகூட கேட்கப்படுகிறது
ஒரு பிரபல மனிதருக்கு எப்போது
அஜீரணம் உண்டாகும் என்று
யாருக்குத் தெரியும்
ஒரு கெட்டுபோன பதார்த்தம்
வயிற்றுக்குள் போனால்
பிறகு எதுவுமே அவர் கட்டுப்பாட்டில் இல்லை
மேலும் பிரபல மனிதர்கள் விடும் குசு
அவர்களின் குசுதானா என்பதே சந்தேகத்திற்குரியது.

பிரபலமான மனிதர்
தான் வெறுக்கும்
யாரோ ஒருவர் முகத்தில்தான் குசுவிடுகிறார்
ஆனால் அது ஒரு வரலாற்று தருணமாக
மாறிவிடுகிறது.

அந்தக் குசுவின் வாசனை பற்றி
நகரமே விவாதிக்கிறது
அதன் நறுமணங்கள் பற்றி
வேறு வேறு வியாக்கியானங்கள்
பரவிக்கொண்டிருக்கின்றன
சிந்தனையாளர்கள்
அதன் மருத்துவகுணங்களைப் பற்றி பேசுகிறார்கள்
அவநம்பிக்கைவாதிகள்
அது தொற்று நோய்களை உண்டாக்கக்கூடியது
என்கிறார்கள்
சதிக்கோட்பாட்டாளர்கள்
அது ஒரு உண்மையான குசுவே அல்ல
என்று சாதிக்கிறார்கள்
அவரது எதிரிகள்
அவரின் ஆசன வாயிலில்
தார் ஊற்றி மூடவேண்டும் என்கிறார்கள்

மக்களுக்கு மிகவும் அலுப்பாக இருக்கிறது
அவர்கள் வாழ்க்கையில்
எந்த மாற்றமும் நடப்பதில்லை
திடீரெனெ விடப்படும்
ஒரு சப்தமான குசு
ஒரு ஆசுவாசத்தைக் கொண்டுவராதா
என்று ஏங்குகிறார்கள்
குசுக்கள் காற்றில் கலைந்து செல்பவை
என்பதை அவர்கள் நினைக்கவிரும்பவில்லை.

மக்கள் தெருக்களில் நின்று
தினம் தினம்
எதெதற்காகவோ போராடுகிறார்கள்
முழக்கங்களை எழுப்புகிறார்கள்
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
அதிகாரத்தால் தாக்கப்படுகிறார்கள்
அவர்களின் குரல்
இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை
ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.

அதிகாரம் துப்பாக்கி முனையில்
பிறந்தது ஒரு காலம்
இப்போது அவை பிரபலமான குசுக்களிடமிருந்து
பிறக்கின்றன.

இந்த நகரத்தில்
மாதத்திற்கு ஒரு முறை
யாரேனும் ஒரு பிரபல மனிதர்
தன் பிரமாண்டமான குசுவை
விடுவதற்கு வருகிறார்.

நன்றி: –  மனுஷ்ய புத்திரன் 

  1. “குசுக்கள் காற்றில் கலைந்து செல்பவை
    என்பதை அவர்கள் நினைக்கவிரும்பவில்லை.”

    Well said .

  2. குசு விடுவது சரி
    வருபவர்கள் விட்டுவிட்டு போகட்டும்.அதைப்பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.
    ஆனால் சமீபகாலமாய் சில பிரபலங்கள் பலருக்கும் கேட் க வேண்டும் என்றே முக்கிக்கொண்டு விடுவது போலல்லவா இருக்கிறது.
    எப்போதுமே சத்தமாக குசு விடுபவர்களை யாரும் பொருட்படுத்துவது இல்லை.
    அடக்கி அடக்கி வைத்து திடீரென்று நேரம் பார்த்து கடும் இரைச்சலோடு குசுவை விட்டுக்கொண்டே இருந்தால் அதிலும் ஒரு சந்தேகம் வரத்தானே செய்யும்.

  3. குசு விடுபவா் பிரபலமானவர் என்பதோடு பாா்பன பிரபலம் என்றால் காது கிழியும் அளவுக்கு சத்தம் பலமாக கேட்கும் ஏனென்றால் அவர்கள் விடுவது தேஷபக்த குசு புனித குசு அதன் வீரியமும் அதிகம்.

  4. கமல் ஒரு கபடதாரி என்பதை அவரின் தந்தி டீவி பேட்டி தெளிவாய் உணர்த்துகிறது.
    ஜெயலலிதாவை மிகக்கடுமையாய் தாக்குகிறார்.
    ஜெயலலிதாவின் மேல் உள்ள வன்மத்தில் அவர் செத்தபிறகு அவரின் முதுகலும்பற்ற அடிமைகளின் மேல் தன் வீரத்தை காட்டுகிறார்.
    இன்றைய அதிமுக அல்லது தமிழக அரசு எதிர்ப்பிற்க்கு ஜெயலலிதாவோடு தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பகையே காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறார்.இது ஒன்றும் நேர்மையான ஒப்புக்கொள்ளலும் இல்லை.மறைக்க வழியற்று கேள்வியாளரின் நேரிடையான் இந்த கேள்வியை மறைக்க முடியாமல் தான் ஒப்புக்கொள்கிறார்.
    சரி இது பரவாயில்லை.கருணாநிதியை இந்த விசயத்தில் உத்தமராகவேறு காட்டுகிறார்.
    இதுதான் கொடுமை.
    தனிப்பட்ட ஒரு பகையை பழி தீர்த்துக்கொள்வதற்க்கு இந்த கருணாநிதி-ஜெயலலிதா இருவருக்கும் பெரிய வேறுபாடே கிடையாது.இருவரும் ஒரு வகைதான்.
    ஒரு சின்ன அணுகுமுறை வேறுபாடு மட்டும் உண்டு.
    ஜெயலலிதா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடித்தனமான் முறையை பின்பற்றுவார்.அதையே கருணாநிதி ராஜ தந்திர ரீதியில் காலை வாறுவார்.சில நேரங்களில் இந்த ராஜதந்திர வியூகம் மீறி ஜெயலலிதா பாணியில் நிகழ்ந்து விடுவதும் உண்டு.
    உதாரணத்திற்க்கு முதல்வன் என்று ஒரு சினிமா வெளியாகி ஓடிக்கொண்டிருந்த நேரம் அதில் வரும் முதலைமச்சர் பாத்திரம் கருணாநிதியை நினைவுறுத்துகிறது என்று படப்பெட்டியையே தூக்கி கொண்டு ஓடியதும் போட்டு உடைத்ததும் நடந்தது.மதுரையில் மிகப்பெரிய அளவில் நடந்ததாக நினைவு.
    பிறகு என்ன கருணாநிதி உசத்தி? ஜெயலலிதா மோசம்?
    அந்த கருணாநிதி ஆட்சியில்தானே இரண்டு மாதத்திற்க்கு ஒருமுறை சினிமாகாரன் பாராட்டு விழா நடத்துவான்.முதல்வர் மணிகணக்காக உட் கார்ந்து அதை ரசித்துக்கொண்டிருப்பார்.அவரின் வலப்பக்கம் ரஜினி இடப்பக்கம் கமல்.மற்றும் உள்ள அத்தனை நடிகர்ளும் சுற்றிச்சூழ…
    சினிமாவுக்கு தமிழை விற்று பிழைக்கும் வாலியும் வைரமுத்துவும் முதல்வரை தமிழால் குளிப்பாட்ட சினிமாவில் இல்லாவிட்டாலும் கருணாநிதிக்கு கவிதையால் கால் கழுவும் கவிக்கோ அப்துல்ரக்மான் ஜால்ரா தட்ட ஜோராக நடக்கும் பாராட்டுவிழா…
    எத்தனை பாராட்டுவிழாதான் நடந்தது…

    அன்றைய காலத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் முதல்வரைநேரில் சந்திக்க முடியவில்லை என்று குறைபட்ட செய்தியும் உண்டு மறந்து விட வேண்டாம்.
    அப்பொவெல்லாம் இந்த அறிவுச்சுடடர் கலைஞானி கமல் கூடத்தானே இருந்தார்.சொல்லியிருக்க வேண்டியதுதானே நல்லவர் கருணாநிதியிடம், ” இந்த பாருங்க..எங்களுக்கு தொழில் சினிமா..மணிகணக்காக நாள் முழுக்க கொஞ்ச நாளைக்கு ஒரு முறை இப்படி பாராட்டு விழா பாராட்டுவிழா என்று பணத்தையும் விரயம் பண்ணி எங்கள் நேரத்தையும் விரயம் பண்ணி, முதல்வரான உங்களின் பொன்னான நேரத்தையும் வீணடிக்காதீர்கள்…இது நல்லா இல்ல…”
    சொல்லியிருக்க முடியுமா? சொன்னால் கலைஞர் சும்மா இருந்திருப்பாரா?
    சொல்லவெல்லாம் வேண்டாம்..
    விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தாவது இருக்க முடியுமா?
    பிறகு என்ன கருணாநிதி உசத்தி ஜெயலலிதா மட்டம்? ரெண்டும் ஒரே கழுதை விட்டைதானே
    அவருடைய ஆட்சியில்தான் அவரின் பேரன்மார்கள் எல்லாம் படத்தயாரிப்பாளர்களாக படையெடுத்து அத்தனை வினியோகஸ்த்தர்கள் வாயிலும் மண்ணள்ளி போட்டார்கள்.
    சன் டீவி ஏகபோக ஏதேச்சதிகார பாணியில் நடை போட்டது.இவையெல்லாம் எதுவுமே கலைஞானிக்கு தெரியாதா நினைவில்லையா?

    எனக்கொரு சந்தேகம்..
    ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் கடைசி கட்டத்தில்தான் ரஜினிக்கும் ஜெ வுக்கும் நேரிடையாக முட்டியது.
    அந்த நேரத்தில் வெளியான முத்து என்ற படத்திலும் ஜெயலலிதாவை ஜாடை காட்டி காட்சி வசனங்கள் இருந்ததாக சொன்னதுண்டு.
    அந்த ஆண்டிலேயே வந்த தேர்தலிலும் ரஜினி பகிரங்கமாய் கருணாநிதியை ஆதரித்து அவர்களின் குடும்ப தொலைகாட்சியான சன் டீவியில் தேர்தல் பிரச்சாரமே செய்தார்.
    அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா கடுமையாய் அலைகழிக்கப்பட்டு பிறகு மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு ரஜினியோடு உறவு ஏற்படவில்லை என்றாலும் ரஜினிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.அந்த நேரத்தில் நம்ம தமிழ்குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ்தான் கம்பை சுழட்டிக்கொண்டு ரஜினி சிகரெட் குடிப்பதற்க்கு மிரட்டிக்கொண்டு நின்றார்.ஜெயலலிதாவால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் இல்லை.அதன் பிறகு வந்த காலங்களில் தன் மகளின் கல்யாண பத்திரிகையை கொண்டு போய் ஜெயலலிதா காலில் வைத்து ரஜினி கும்பிட்டது தனிக்கதை.

    ஆனால் இந்த கமலோடு ஜெ க்கு என்ன அவ்வளவு விரோதம்?அவர் செத்தபிறகும் ஜெ வோடு கமலுக்கென்ன இவ்வளவு குரோதம்?
    தன்னுடைய ஒரே ஒரு படத்தை தடைசெய்தார்( அது மிக மோசமான அவதூறை அள்ளித்தெளித்து எடுக்கப்பட்ட படம் என்பதும் உண்மைதான் )என்ற ஒற்றை காரணத்திற்க்காக அரசாங்கத்தை எதிர்ப்பாராம்( காரணத்திற்க்கு காரணமான தலைமை செத்தபிறகும் ).அதற்க்கு ஊழல் என்றும் லஞ்சம் என்றும் காரணம் கூறுவராம்.
    இவரின் நரித்தன்ம் தெரிந்துதான் ரஜினியை கூட அவ்வளவு பொருட்படுத்தாத ஜெயலலிதா இவருக்கு ஆப்படித்தாரோ
    பாம்பின் கால் பாம்பறியுமன்றோ!?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க