Saturday, June 25, 2022
முகப்பு உலகம் ஆசியா பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

-

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

ந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரப்பிடாது, நானும் வர மாட்டேன்… பேச்சு பேச்சாத்தான் இருக்கட்டும்” என்று சீனாவிடம் கட்டன் ரைட்டாக சொல்லி விட்டது இந்தியா. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றால், இரு நாடுகளும் தங்களது துருப்புக்களை தோக்லம் பகுதியில் இருந்து பின் வாங்கிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிக்கிம், பூட்டான் மற்றும் சீனாவின் எல்லைக் கோடுகள் சந்திக்கும் பகுதியில் சீன இராணுவம் புதிதாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதாக கூறி இந்தியா தனது துருப்புக்களை எல்லையில் குவித்தது. கடந்த ஒரு மாத்ததிற்கும் மேலாக இந்நாடுகளிடையே நிலவும் முறுகல் நிலையில் சீனாவின் அரசு சார்புள்ள பத்திரிகைகள் இந்தியாவின் மேல் வன்மத்தைக் கக்கி எழுதி வந்தன. இந்தியத் துருப்புக்கள் பூட்டானை முக்காடாகப் போட்டுக் கொண்டு தனது எல்லைப் பகுதியில் அத்துமீறிப் பிரவேசித்துள்ளதாகவும், ஒழுங்கு மரியாதையாக ஓடிப் போகாவிட்டால் அடித்துப் பத்தி விட்டு விடுவோம் என்றும் சீனப் பத்திரிகைகள் படு கேவலமாக இந்தியாவை ஏசி வருகின்றன.

இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்துடன் கடுமையாக போர் புரிந்த டைம்ஸ் நௌ தொலைக்காட்சி, #Boycotpakmatch, #NaMoSnubSharif, #pakTerrorState, #PakDalalTwist உள்ளிட்டு சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ஹேஷ்டாக் ரக ஏவுகணைகளை பாகிஸ்தான் தலைநகரை நோக்கி ஏவியது. ரிப்பப்ளிக் தொலைக்காட்சியும் ஜீ தொலைக்காட்சியும் டைம்ஸ் நவ்வுக்கு சற்றும் சளைக்காமல் தங்கள் சொந்த தயாரிப்பான ஹேஷ்டாக் ரக போர் விமானங்களின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளில் குண்டு மழை பொழிந்தன.

இந்திய இராணுவத்துக்கு ஒரு இழுக்கு என்றால் கும்பலாக வந்து கும்மியடித்துச் செல்லும் தேசிய பத்திரிகைகள் சீன விவகாரத்தில் மட்டும் அநியாயத்துக்கு அமைதிகாத்தன. இந்திய தேசிய ஊடகங்களின் மேஜர் ஜெனரெல் அர்னாப் கோஸ்வாமி (ரிப்பப்ளிக் டி.வி), காப்டன் ராகுல் சிவசங்கர் (டைம்ஸ் நௌ) துவங்கி பூபேந்திர சௌபே (நியூஸ் 18) வரையிலான போர் வீரர்கள் சீன டிராகனின் முதுகை வருடிக் கொண்டிருப்பதைப் பார்த்து தேஷ பக்தாள் சமூகம் மனம் புழுங்கிக் கொண்டிருக்கின்றது.

எனினும், சண்டை என்று வந்து விட்ட பின் ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? எனவே காங்கிரசு கட்சித் தலைவர்களில் யார் யாரெல்லாம் சீன உணவகங்களில் மோமோ தின்றார்கள் என்ற விவரத்தை புலனாய்வு செய்து கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் வேலையை மேற்படி ஊடகங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. கண்ணாடியைத் திருப்பி வைத்தால் எப்படி ஆட்டோ ஓடும் என்பது இன்னமும் ஹெச்.ராஜா உள்ளிட்ட நாக்பூர் தயாரிப்புகளுக்கு புரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருப்பதாக கேள்வி.

போகட்டும்.

56 இன்சு மார்பகத்தோன் சீன சவளைப் பிள்ளையை பொடனியில் ஒரே போடாக போட்டு விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமே? ஏன் அது முடியவில்லை? பாரத மாதாவுக்கு பேராபத்தை ஏற்படுத்தியிருக்கும் சீனாவோடு தேச பக்தாள் துவந்தம் செய்திருக்க வேண்டாமோ? அட குறைந்தபட்சம் இந்தியாவுக்கு விரோதமான சீனத்தின் பொருட்களுக்கு தடையாவது விதித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி, சீனா என்றவுடன் பம்மிப் பதுங்குவதேன்?

முதலாளித்துவ அறிவுஜீவிகள் இதற்கு வேறு காரணங்கள் சொல்கின்றனர். அதாவது, சீனாவின் இராணுவம் இந்திய இராணுவத்தை விட படைபலத்திலும், ஆயுத பலத்திலும் பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது என்கின்றனர். இந்நிலையில் சீனாவுடன் இந்தியா போரில் இறங்கினால், 1962 போரில் இந்தியாவுக்கு கிடைத்த தோல்வியை விட படுமோசமான தோல்வியை இந்தியா சந்திக்க நேரிடும் என போரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளில் ஓரளவுக்கு உண்மை இருக்கலாம். எனினும், கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்டவர்கள் இந்த நாட்டை படிப்படியாக அமெரிக்காவின் அடியாளாக மாற்றி வைத்துள்ளனர். சீனாவுடன் ஒரு போரைத் துவங்குவது தற்போதைய சர்வதேச அரசியல் நிலைமைகளில் அமெரிக்க நலனுக்கு உகந்ததாக இல்லை. வட கொரியா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சீனாவின் தயவை அமெரிக்கா நாடி நிற்கும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு போர் ஏற்பட்டால் அதில் இந்தியாவுக்கு சாதமான ஒரு நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்காது.

இவையெல்லாம் 56 இன்சு மார்பகத்தோனுக்கு மட்டுமல்ல, அவரின் துதிபாடிகளான தேசிய ஊடகங்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். எனவே தான் மொத்தமாக அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், எல்லையில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பதற்ற நிலையை தக்கவைத்துக் கொள்வது உள்நாட்டில் தேசிய வெறியை தூண்டுவிடும் என்பதால், சீன டிராகனைக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தான் விவகாரம் முற்றிலும் வேறானது.

படைபலத்திலோ, இராணுவ ஆயுத பலத்திலோ பாகிஸ்தான் நம்மை விடப் பின் தங்கியுள்ளது என்பதோடு, அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் தேவை மெல்ல மெல்லக் குறைந்து வருகின்றது. எனினும், முற்றாக தேவையற்ற நாடாக மாறி விடவில்லை. எனவே பாகிஸ்தானுடனான முறுகல் நிலையை முழு அளவிலான போர் எனும் அளவுக்கு இல்லாவிட்டாலும், மேலும் பதற்றமான நிலைகளுக்கு எடுத்துச் செல்வதில் இந்தியாவுக்குத் தடையில்லை. சீனாவுடனான பதற்ற நிலையைக் காட்டிலும் பாக்கிஸ்தானுடனான பதற்ற நிலையை மேலும் அடர்த்தியான – அதே நேரம் அமெரிக்க நலன்களுக்கு முரண்படாத – தொலைவுக்கு இந்தியா எடுத்துச் செல்லலாம்.

அதே நேரம், பாகிஸ்தானுடனான பதற்ற நிலையை முன்னிறுத்தி இந்தியாவுக்குள் இருக்கும் இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பரசியலை தொடர்ந்து சூடாக வைத்திருக்கவும் இந்துத்துவ அரசியலுக்கு சாத்தியமாகின்றது. எனவே தான் கட்டதுரை சீனாவிடம் பம்மும் இந்திய கைப்பிள்ளை, பூச்சிப்பாண்டி பாகிஸ்தானிடம் விரைத்துக் கொண்டு நிற்கிறது.

இந்த மொத்த தேசபக்த கபட நாடகத்தில் காவி டவுசர்களின் முகமூடி படுகேவலமாக கிழிந்து தொங்குகின்றது. எனவே தான் சீனப் பொருட்களுக்கு தடை விதிக்க மறுக்கும் காவிகள், வாட்சப் குறுஞ்செய்திகளின் மூலம் சீனப் பொருட்களை வாங்கும் இந்தியர்களை தேச விரோதிகளாக சித்தரித்துக் கொண்டுள்ளனர்.

செய்தி ஆதாரம்:

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

 • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

 1. அமெரிக்காவையும் ஜப்பானையும் நம்பி இந்தியா இந்த பிரச்சனையில் இறங்கவில்லை,

  இன்றைய இந்தியாவை உங்களை போன்ற ஆட்கள் 1962 இந்தியா என்று தப்பு கணக்கு போட்டு வைத்து இருக்கிறீர்கள். 1967ல் இதே பகுதியில் சீனாவை ஓட ஓட விரட்டி அடித்தது உங்களுக்கு மறந்து விட்டது போல… 1967 சீனாவை விரட்டி அடிக்க முடிந்த எங்களால் சீனாவை இப்போது விரட்டி அடிக்க முடியாதா ?

  சிறிய நாடுகளை எல்லாம் மிரட்டி தென் சீனா கடலை ஆக்கிரமித்த மாதிரி பூட்டானையும் ஆக்கிரமிக்கலாம் என்ற சீனாவின் சதி திட்டத்தில் இந்தியா உள்ளே நுழையும் என்பதை கணிக்க தவறிவிட்டார்கள். பூட்டான் இந்தியாவின் பாதுகாப்பில் இருக்கும் நாடு என்பதை மறந்து விட்டார்கள், சீனாவின் இந்த செயலால் சிக்கிமை போல் பூட்டானும் இந்தியாவோடு இணைந்து கொள்ளும் நிலை வந்தாலும் வரலாம் அதற்கு தான் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு செயல் வழி வகுத்து இருக்கிறது.

  • எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவ வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும்—சிஏஜி அறிக்கை….!என்ன கொடுமை இது மணிகண்டன்…..?

   முந்தாம் நாள் பாராளுமன்றத்தில் சம்ர்பிக்க பட்ட சிஏஜி அறிக்கையை முழுமையா படித்துவிட்டு விவாதத்துக்கு வாங்க! உங்க கருத்துப்படி மற்றும் சிஏஜி அறிக்கை படி பார்த்தால் இந்தியா சீனாவை பத்து நாளில் ஜெயித்து விடவேண்டும் அல்லவா? அது சாத்தியமா? பத்து நாட்களுக்கு பின் வெடிபொருள் இன்றி எப்படி சண்டை போட போறீங்க மணிகண்டன்? அமெரிக்காவை நம்பி நீங்க இல்லை என்றால் வேறு யார் இந்தியாவுக்கு ஆய்தம் சபளை செய்யபோராங்க? வங்க தேசமா? இலங்கையா? பர்மாவா? எத்தியோப்பியாவா? ருவாண்டாவா? யார் ஆயுத உதவி செய்யபோராங்க இந்தியாவுக்கு? இப்படி எல்லாம் வீரவசனம் பேசாமல் யுத்த தாயாரிப்பு நிலையில் இல்லாத மோடியின் இந்திய அரசு தானே உண்மையில் மதியற்ற அரசு ?

   //1967 சீனாவை விரட்டி அடிக்க முடிந்த எங்களால் சீனாவை இப்போது விரட்டி அடிக்க முடியாதா ?//

   • மணிகண்டன்,

    செந்தில்குமரன் சொல்வதை நினைத்து வருத்தபடாதீர்கள்.

    பசுமாட்டுச்சாணி உருண்டையும் பசுமூத்திர புகைக்குண்டும் செய்வதற்கு பதஞ்சலிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆர்எ.எஸ்.எஸ் தேசபக்த குண்டர்கள் கத்தியுடன் சீன எல்லைக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என்று சிவசேனா கூறியுள்ளது.

   • சீனாக்காரன் என்ன சொல்கிறானோ அதை உங்களை போன்ற கம்யூனிஸ்ட் ஆட்கள் தமிழில் சொல்கிறீர்கள் அவ்வுளவு தான். நான் எங்கள் ராணுவ தளபதி செல்வத்தை நம்புகிறேன்… உலகின் 4 பெரிய ராணுவம் இந்த மாதிரியான சூழலுக்கு மாற்று ஏற்பாடு இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

    • முட்டாள் தனத்தின் உச்சத்தில் இருக்கீங்க மணிகண்டன்….உண்மையில் உங்க வார்த்தைகள் முட்டாள் தனமாக இருபதனை நீங்க கவனிக்கவில்லையா மணிகண்டன்… எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவ வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும்—சிஏஜி அறிக்கை இது ஒன்றும் கம்யுனிஸ்டு கட்சி காரனின் அறிக்கை அல்ல மணிகண்டன்… இது CAG தலைவரின் அறிக்கை…இந்திய பாரளுமன்றத்தில்வாசிக்ப்ட்ட அறிக்கை…. இதனை வாசித்தவர் ஒன்றும் சீனா காரன் அல்ல….CAG என்றால் Comptroller and auditor general என்று பொருள் வருங்க….அந்த ஆபிசின் வேலை என்னவென்றால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவுகளை ஆடிட் செய்வதுங்க…

     அந்த அமைப்பின் தலைவர் : Shri Shashi Kant Sharma Comptroller and Auditor General of India. இவர் இந்தியா காரர் தாங்க… இவர் இந்தியாவை சேர்ந்த மாநிலமான பிகாரை சேர்ந்தவர்….

    • மணிகண்டன் உங்களின் கவனத்திற்காக பாதுகாப்பு துறை மீதான CAG ஆடிட் அறிக்கையை வைக்கின்றேன்…. படித்துவிட்டு வந்து இந்திய ராணுவம் யுத்த தயார்நிலையில் உள்ளதா அல்லது அதன் ஆயதங்கள் பத்து நாட்களில் தீரும் நிலையில் உள்ளதா என்று கூறுங்கள் !

     http://www.cag.gov.in/sites/default/files/audit_report_files/Report_No_19_of_2017_Compliance_audit_Union_Government_Defence_%20Defence_PSU%20_Ministry_of_Defence.pdf

    • பத்திரிக்கைகளில் வந்து உள்ள செய்திகளும் வெடிபொருட்கள் தீர்ந்து விடும் என்று CAG அறிக்கைகளின் அடிப்டையில் தானே உள்ளன மணிகண்டன்…! இந்திய ராணுவ வெடிபொருட்களுக்கு மாற்று ஏற்பாடு செய்தாயிற்று என்று புருடாவிடகூடாது மணிகண்டன்….

     Why Indian Army has run out of ammunition, key concerns in CAG report explained….
     http://indiatoday.intoday.in/story/indian-army-ammunition-cag-china-pakistan-doklam-standoff/1/1009079.html

     Around 40 percent of ammunition types used by Indian Army will run out in 10 days, says CAG report​
     http://www.firstpost.com/india/around-40-of-ammunition-types-used-by-indian-army-will-run-out-in-ten-days-says-cag-3842729.html

     • இந்த CAG இப்போது மட்டும் அல்ல காங்கிரஸ் ஆட்சியிலும் இப்படி ஒரு அறிக்கை தான் கொடுத்தார்கள். பிஜேபி ஆட்சியிலும் ஆயுதங்கள் வாங்காமல் இருப்பதற்கு காரணம் எதாவுது இருக்கும் என்றே நம்புகிறேன்.

      இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது எங்களை கேரளாவில் உள்ள ராக்கெட் தளத்திற்கு அழைத்து சென்றார்கள் அந்த சூழலில் இந்தியா அனுப்பிய ராக்கெட் தோல்வி நடு வானில் வெடித்து விட்டது என்று எல்லா பத்திரிகையிலும் செய்தி வந்தது. அதை பற்றி அங்கே எங்களுக்கு demo கொடுத்த ஆராய்ச்சியாளரிடம் கேள்விகள் கேட்டேன் அவர் சொன்னது அந்த ராக்கெட்டை சீனா கப்பல் trace செய்வதால் நாங்கள் வெடிக்க வைத்தோம் என்று சொன்னார்.

      ஆயுதங்கள் வாங்காமல் இருப்பதற்கும் எதாவுது காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

      சீனா பாக்கிஸ்தான் போன்ற மிக மோசமான எதிரி நாடுகளை அருகில் வைத்து கொண்டு எந்த ஒரு நாடும் மெத்தனமாக இருக்க மாட்டார்கள்

      • இதே CAG அறிக்கை படிதான் 2G ஊழலில் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது… நீங்க CAG அறிக்கையை மறுப்பதால் அப்படியே திமுக வுக்கு வக்காலத்து வாங்குவது போன்று உள்ளதே மணிகண்டன்… ஏதாவது கூட்டணி திமுக-பிஜேபி ஏற்பட போகிறதா என்ன? உங்களுக்கு பணம் கொடுக்கும் உங்க பிஜேபி ஊடக தலைமை திமுக வுக்கு சாதகமாக பேச சொல்லியுள்ளதா என்ன? வெடிபொருட்கள் பத்து நாட்களிலேயே தீர்ந்து விடும் என்ற CAG யின் அறிக்கையை உங்களுக்கு முன் வைத்து சில மணி நேரம் ஆகிறது… ஆனாலும் உங்களால் அந்த அறிக்கை கொடுக்கும் இந்தியாவின் பாதுகாப்புக்கு பயம் ஏற்படுத்தும் விவரங்களை மறுக்க முடியவில்லை… வழக்கம் போல கம்யுனிஸ்ட்டு காரன் காக்கா பிடிக்கிறான், டிராகனை பிடிக்கிறான் என்று கத்திக்கொண்டு உள்ளீர்கள்..

      • ஆயுதம் வாங்காம இருக்க ஏதாச்சும் காரணம் இருக்கும்னு இப்படி அந்தர் பல்டி அடிக்கறேலே….ஹஹஹா சூப்பர் அப்பு.. உங்க ஆளுக காமேடிய வடிவேலு கோஅ மிஞ்ச முடியாது.

       சரி பாதுகாப்புக்காக ஒதுக்குன 3.5 இலட்சம் கோடிகள் எங்கே அப்பு.

      • மணிகண்டன் இந்த விசயத்தில் CAG அறிக்கையை முழுமையாக படித்து விட்டு வந்து விவாதிக்கவும்… உங்களை தலை கீழாக கவிழ்க்கும் அத்துனை செயலகளையும் செய்து கொண்டு உள்ளார் செல்வம் அவர்கள்…. எச்சரிக்கை…..

  • மணிகண்டன்,

   உங்க மோடியின் அரசு….

   தூய்மை இந்தியா திட்டம்- தோல்வி..
   டிஜிட்டல் இந்தியா திட்டம் – தோல்வி
   சுமார்ட் சிட்டி திட்டம் – தோல்வி
   மேக் இன் இந்தியா திட்டம் – தோல்வி
   டீமானிடிசேசன் திட்டம் – தோல்வி..
   கங்கை தூய்மை திட்டம் – தோல்வி
   விவசாயிகளின் நலனிலும – தோல்வி..
   வலைவாசி குறைப்பிலும் – தோல்வி
   வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் – தோல்வி
   எல்லை பாதுகாப்பிலும் – தோல்வி
   மீனவர் பாதுகாப்பிலும் – தோல்வி ..
   மக்களின் பாதுகாப்பிலும் – தோல்வி ..

   இப்ப என்ன சீனாவுடன் போரை தொடங்கி இந்திய நாட்டுக்கு பெருத்த தோல்வியையும் நாசத்தையும் ஏற்படுத்த போகிறதா?

   • இந்த திட்டங்களுக்கு மாநிலங்களும் சாதாரண மனிதர்களின் ஒத்துழைப்பும் தேவை.

    ஒரு கேள்வி உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள என்ன செய்திர்கள் ? அரசின் திட்டங்களை எப்படி எல்லாம் குலைப்பது என்று சிந்திக்கும் நீங்கள் என்றாவுது மக்களுக்கு தூய்மை பற்றி விழிப்புணர்வு கொடுத்து இருக்கிறீர்களா ? ஏன் சுற்றுப்புற தூய்மை பிஜேபி அரசுக்கு மட்டும் தான் பொறுப்பு கம்யூனிஸ்ட்கள் வேண்டுமானால் குப்பை (சீனா குப்பை???) அள்ளி தெருவில் போட மட்டும் தான் வருவீர்களா ?

    அவ்வுளவு ஏன் அந்த பெண் அனிதாவிற்காக கழிப்பறை வசதி இல்லை என்று நீங்கள் கட்டுரை வெளியிட்டிர்கள் அவரோடு சேர்ந்து NEET தேர்வுக்கு எதிராக போராடிய நீங்க்கள் அவருக்கு சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு கொண்டு வந்திர்களா ? அவருக்கு கழிவறை கட்ட அரசு மானியம் வாங்கி கொடுத்திர்களா ?

    இப்படி அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்ப்பை மட்டும் காட்டி அந்த திட்டங்கள் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக போராட்டங்கள் (உதாரணம் நெடுவாசல்) மாறியல்கள் செய்யும் நீங்கள் அரசை குறை சொல்வதற்கு என்ன அடிப்படை தகுதி இருக்கு ???

    • அட மணிகண்டன்…, எண்ணத்துக்கு இப்படி உளறிகிட்டு இருக்கீங்க? காரில் போகும் நீங்க ஏற்படுத்தும் காற்றில் சுற்று சூழல் மாசை விட பேருந்தில் பயணிக்கும் நாங்க என்னத்த செஞ்சயுட போறோம்…! உங்கள மாதிரி இப்படி கேள்வி கேட்கும் வெள்ளை காலர் சட்டை போட்ட வெள்ளை பன்றிகள் எல்லாம் தினமும் ஆபிஸ் மற்றும் வீடு என்று எல்லா இடங்களிலும் AC போட்டுக்கொண்டு அதில் இருந்து வெளிஏற்றும் கார்பன் வாய்வின் மூலமாக நம்ம இயற்கையை தினம் தினம் நீங்க கற்பழிக்கும் அழகை தான் பார்த்துக்கொண்டு இருக்கோமே! ஓசோன் லேயரை ஓட்டை போடும் வேலையை நீங்களும் உமது கார்பரேட் ஆட்களும் முறையா தானே செய்துகிட்டு உள்ளீர்கள்…

     சீன குப்பைகளை என்ன மயித்துக்கு இந்தியாவில் இறக்கு மதி செய்யரீங்க என்ற எனது கேள்விக்கே இன்னும் பதில் இல்லை…. அப்புறன் நான் என்ன மயிருக்கு உமக்கு இந்த விசயத்தில் பதில் சொல்லணும்…அறிவோட இருக்கறவன் ஆளும் அரசு என்றால் முதலில் சீனத்து குப்பைகளை இறக்குமதி செய்வதில் இருந்து தடை செய்யட்டும்…

     மோடியின் மத்திய அரசு விருது கூட கொடுத்துத்தே ஒரு தமிழ் படத்துக்கு! என்ன படம் அது….ஜோக்கர்…. அதனை பாருங்க முதலில்… இந்திய திருநாட்டில் ஒரு கக்கூஸ் கட்ட கூட எவ்வளவு லஞ்சம் ஊழல் நடக்குது என்று உமது மரமண்டைக்கு அப்பவாது புரியுதா என்று பார்க்கலாம்…

     நெடுவாசலை பற்றி தனியாக விவாதிக்கலாம்…ஜோக்கர் மணிகண்டன்…!

    • நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிக்கிறீர்

     அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி எதிர்க்கும் நீங்கள் (கம்யூனிஸ்ட் வினவு கூட்டங்கள்) அந்த திட்டங்கள் சரியான வகையில் செயல்பட அரசுக்கு என்ன என்ன உதவிகளை செய்திர்கள் ? அரசு கொண்டு வரும் எந்த திட்டமும் செயல்பட கூடாது அந்த திட்டங்கள் எல்லாம் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக தானே நீங்கள் எல்லாம் போராட்டங்கள் நடத்துகிறீர்கள் ?

     அரசு கொண்டு வரும் திட்டங்களின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக நீங்கள் இருந்து கொண்டு அரசின் திட்டங்கள் எல்லாம் தோல்வி என்று நீங்கள் சொல்வது எந்த வகையில் நியாயம், முதலில் அந்த மாதிரி சொல்வதற்கு உங்களை போன்ற ஆட்களுக்கு தகுதி இருக்கிறதா ?

     • திட்டம் போட தெரியாதவன் அதனை செயல்படுத்த தெரியாதவன் என்னத்துக்கு மக்களை பார்த்து இப்படி கேள்வி கேட்கனும்.? தூய்மை இந்தியா திட்டம்- தோல்வி.. டிஜிட்டல் இந்தியா திட்டம் – தோல்வி..சுமார்ட் சிட்டி திட்டம் – தோல்வி… மேக் இன் இந்தியா திட்டம் – தோல்வி
      டீமானிடிசேசன் திட்டம் – தோல்வி..கங்கை தூய்மை திட்டம் – தோல்வி

      இந்த தோல்வி அடைந்த திட்டங்களில் அந்த தோல்விக்கு மோடியின் பங்களிப்பு என்ன , மக்களின் பங்களிப்பு என்ன என்று விளக்கவேண்டியது உங்க கடமை மணிகண்டன்…!

      மக்கள் மீது பழியை சுமத்தும் போதே அதில் மோடியின் தோல்விதான் வெளிப்டுகிறதே தவிர , மோடியின் நிர்வாக திறமை இன்மைதான் வெளிடுகிறதே தவற மக்கள மீது எந்த குற்றமும் வெளிப்படவில்லை மணிகண்டன்!

  • உண்மை தான் மணிகண்டன்…, சப்பை மூக்கர்கள் 1967 ல் சிக்கிம் எல்லையில் உள்ள Nathu La பகுதியில் ஏற்பட்ட சிறு சண்டையில் அங்கிருந்து இருந்து விரட்டியடிக்கப்பட்டது என்பது உண்மைதான்.. சப்பையர்களுக்கு உயிர் பலிகளும் அதிகம் தான்..300 முதல் 400வரையில் உயிர் இழப்புகள் அவர்களுக்கு! இந்தியாவுக்கு 80 வரையில் உயிர் இழப்புகள்…

   சரி இப்ப விசத்துக்கு வருகின்றேன்…. இந்தியா 1962ல் நடந்த சண்டையில் சீனாவிடம் இழந்த நிலப்பரப்பை இந்த 1962 சண்டையில் ஏன் மீண்டும் பெற முயற்சிக்கவில்லை? எதிரிகள் பயம் கொள்ளும் அளவுக்கு ஏன் இந்தியா சண்டையில் சீன பிடித்து வைத்து இருந்த இந்திய நிலபரப்புக்குள் ஊடுருவவில்லை…? 1967 சண்டையில் உண்மையிலேயே இந்தியா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்ததாக இருந்து இருந்தால் சீனாவை முழுமையாக வெற்றிகொண்டு இந்தியா 1962 ல் சீனர்களிடம் இழந்த பகுதிகளை வென்று எடுத்து இருக்கவேண்டுமே? ஏன் செய்யவில்லை? இந்தியாவை தடுத்தது யார்?

   • இந்த முறை உங்கள் சீனாவை முழுமையாக வெற்றி கொள்வோம். இந்தியா சகம்யூனிஸ்ட்கள் எங்கள் நாட்டின் முதுகில் குத்தினாலும் அதையும் தாங்கி கொண்டு உங்கள் சீனாவை தோற்கடிப்போம்

    • நான் என்ன கேட்டேன் …, நீங்க என்ன உளறிகிட்டு இருக்கீங்க மணிகண்டன்? என் கேள்வி என்னவென்றால்.. 1962 போரில் இழந்த பகுதிகளில் 1967 போரில் இந்தியாவுக்கு வெற்றி என்றால் ஏன் மீண்டும் அந்த பகுதிகளை திரும்ப பெறவில்லை? இந்திய நிலபரப்பை மீண்டும் சீனாவிடம் இருந்து திரும்ப பெற யார் தடுத்தது?

   • 1967 சீனாவின் தோல்வியை முழுமையாக சொல்லுங்கள் சீனா சிக்கிமை ஆக்கிரமிக்க நினைத்தது முழுமையான தோல்வி. தனி நாடாக இருந்த சிக்கிம் இந்தியாவின் பகுதியாக இணைந்தது. இப்போதும் பூட்டானை ஆக்கிரமிக்க பார்க்கும் சீனா தோல்வி அடைய போவது உறுதிஹி பூட்டானும் இந்தியாவோடு இணையலாம்.

    • அது வழக்கமான எல்லை சச்சரவு தான் மணிகண்டன்…அதுசரி போரிட்ட பத்து நாட்களுக்கு மட்டுமே வெடிபொருளை வைத்து இருக்கும் இந்தியா எப்படி சீனாவை பத்து நாட்களுக்குள் வெல்லும் என்று கூருகிண்றீகள்? உங்களின் அதித நம்பிக்கையும், முட்டாள் முரட்டு தனமும் வேலைக்கு ஆகாதே மணிகண்டன்!

     • உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அப்படியே சீனாவை சேர்ந்த ஒருவனின் கருத்தை படிப்பது போலவே இருக்கிறது.

      இது சாதாரண எல்லை பிரச்னை இல்லை.

      1967ல் அவர்களின் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிமை கைப்பற்றுவது, அதில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் பெரும் இழப்பையும் சந்தித்தார்கள்.

      • ஒரு போர் என்றால் என்வென்று கூட தெரியாமல் சிறு எல்லை சண்டைகளை எல்லாம் யுத்தம் என்ற அளவுக்கு பறை சாற்றிக்கொண்டு உள்ள வினவின் கை பிள்ளை மணிகண்டனை பார்கையில் சிரிப்பு தான் வருகின்றது. தொடர்து செல் அடித்தால் நாங்கள் விமான தாக்குதல் நடத்துவோம் என்று குரல் கொடுத்தவுடன் எதற்காக இந்தியா தாக்குதலை நிறுத்திக்கொண்டது ? மீண்டும் மீண்டும் கேட்கின்றேன் கிடைத்த இந்த சந்தர்பத்தை வைத்துகொண்டு 1962 சீன போரில் இழந்த பகுதிகளை இந்தியா இந்த 1967சண்டையில் திரும்ப பெற்று இருக்கவேண்டியது தானே மணிகண்டன்? ஏன் செய்யவில்லை? யார் தடுத்தார்கள் இந்திய இராணுவத்தை ?

   • உங்கள் சீனா அரசு தினம் தினம் இந்தியா எங்களுக்கு சரி சமமான நாடு இல்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அதையே தான் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் எங்கள் நாட்டை பற்றி சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

    இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனைகளை திசை திருப்ப எல்லையில் பிரச்சனையை உண்டு பண்ணுகிறார்கள் என்று சீனா அரசு பத்திரிகையில் வந்ததை தான் உங்களை போன்ற ஆட்கள் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

    சீனா உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் அணைத்து அண்டை நாடுகளோடும் பிரச்சனையை வேண்டும் என்றே தூண்டுகிறார்கள் ஏன் உங்களை உங்களை இந்தியா கம்யூனிஸ்ட்கள் மறைக்கிறீர்கள்.

    • இந்தியாவும் சீனாவும் சரி சமமான நாடு என்றால் எந்த எந்த துறைகளில் அவைகள் சமமானவை என்று நீங்க கூறவேண்டும் அல்லவா மணிகண்டன்? முதலில் பொருளாதாரம் அடுத்து ராணுவம் ஆகிய துறைகளை கணக்கில் எடுத்துகொண்டு பேசுவோம்…இரண்டிலுமே இந்தியா சீனாவை விட பின்தங்கி தான் உள்ளது… வேண்டுமானால் உங்களுக்கு ஆதாரமாக விவரங்களை கொடுக்கின்றேன் மணிகண்டன்…. எவ்வளவு விவரங்களை கொடுத்தாலும் அவைகள் உங்கள் அறிவில்ஏறவா போகின்றது?

     • சீனா அனைத்து நாடுகளோடும் பிரச்சனையை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள். போர் என்று வந்தால் அவர்கள் அணைத்து துருப்புகளை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த முடியாது அவர்கள் சுற்றிலும் எதிரிகளை வளர்த்து வைத்து இருக்கிறார்கள்… ஆனால் இந்தியா இந்த மாதிரியான ஒரு சூழலை எதிர்பார்த்து பாக்கிஸ்தான் சீனா மற்றும் உங்களை போன்ற உள்நாட்டு கம்யூனிஸ்ட் எதிரிகளையும் சேர்த்து திட்டம் தீட்டி படை பலத்தை வளர்த்து இருக்கிறார்கள். இந்த சூழலை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியாவும் சீனாவும் சம ராணுவ பலம் உள்ள நாடுகள் தான்

      • RSSகாரன் மத்திரம் ஊதி சீனாவை துரத்த சொன்ன மாதிரி நீங்களும் பொத்தாம் பொதுவாக இப்படி இரு நாடுகளின் வலிமையை பற்றி பேசக் கூடாது மணிகண்டன்…

       பொருளாதார அளவிலான ஒப்பீடு என்றால் :

       இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளின் GDP யை ஒப்பீடு செய்யவேண்டும்….

       ஏற்றுமதி எவ்வளவு இறக்குமதி எவ்வளவு என்று ஒப்பீடு செய்யவேண்டும்….

       ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள பற்றாகுறையை அமெரிக்க டாலர்களின் ஒப்பீடு செய்யவேண்டும்….

       அந்த அந்த நாட்டு மக்களின் தனி நபர் வருமானத்தை ஒப்பீடு செயயவேண்டும்…

       ராணுவ ரீதியிலான ஒப்பீடு என்றால் :

       ஆண்டு பட்ஜெட்டில் இரு நாட்டு ராணுவமும் எவ்வளவு பணம் செலவு செய்கின்றது என்று ஒப்பீடு செய்யவேண்டும்…

       தரை படையின் ராணுவ வீரர்ட்களின் எண்ணிக்கை மற்றும் ரிசர்வில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்ய வேண்டும்

       விமானபடையின் விமானங்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் ஒப்பீடு செய்யவேண்டும்

       கப்பற்படையின் பலம் என்ன ….குறிப்பாக விமானம் தாங்கி கப்பல்களின் எண்ணிக்கையும் அதன் தரமும் கணக்கில் எடுத்துகொள்ள படவேண்டும்…

       இவற்றில் எல்லாம் யார் வலிமையான்வ்ர்கள் என்று கூறுங்கள் பார்கலாம்…

       நீங்கள் கூறும் சீனவுக்கு அனைத்து நாடுகளுடனும் பிரச்சனை என்ற விசயம் எப்ப இந்தியாவுக்கு சாதகமாக வரும் என்றால்…, ஒரு வேலை இந்தியாவுடன் சீனா போர் தொடுத்தால் அந்த நாடுகள் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவுடன் போரிடவேண்டும்… எந்த எந்த நாடுகள் அப்படிசீனாவுடன் போரிட்ட தயாராக உள்ளன என்று உங்கள் ஞானக்கண் கொண்டு பார்த்து கூறுங்கள் பார்கலாம்..!

      • சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியர்கள் அனைவரும் காலையில் எழுந்தவுடன் மந்திரம் சொல்லுங்கள்- ஆர்.எஸ்.எஸ். இந்திர குமார்..

       ஆகா.. ஆகா.. ஆகா.. இதுவல்லவோ சிறந்த இராணுவ உக்தி.. பல மில்லியன் டாலர் செலவழித்து சீனா இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கும்போது, ஐந்து பைசா செலவில்லாமல் அவர்களை விரட்டி அடிக்கும் உத்தியை வெளிபடுத்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வாழ்த்துகிறேன்..

       https://www.facebook.com/profile.php?id=100009582742233&hc_ref=ARQFIT1rAs7KFTVAIm0aZ7h-ibrJX3UiVtAiJjLyPRXxYxwumefYK12YubqOa5y-cDo&fref=nf

 2. “இன்றைய இந்தியாவை உங்களை போன்ற ஆட்கள் 1962 இந்தியா என்று தப்பு கணக்கு போட்டு வைத்து இருக்கிறீர்கள். 1967ல் இதே பகுதியில் சீனாவை ஓட ஓட விரட்டி அடித்தது உங்களுக்கு மறந்து விட்டது போல… 1967 சீனாவை விரட்டி அடிக்க முடிந்த எங்களால் சீனாவை இப்போது விரட்டி அடிக்க முடியாதா ? ”

  What a day dream Mr. Manikandan. I does not want you to wake up from your day dreaming. Dream welllllllllll.

  • அடேயப்பா கெளம்பிட்டாங்க “தேஷபக்தாள்” எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் மீது போர்தொடுக்க முடியாது அது மனித குலத்தின் பேரழிவிற்கு வித்திடும் என்று புறிந்து கொள்ளாமல் உங்களைப்போன்ற சில தேஷ பக்தாள் தேசிய வெறியை கிளப்பிவிட்டு அதில் குளிர்காய்வது வாடிக்கை

 3. எவனோ ஒரு பாஜக MP மூதேவி,சீனப் படையெடுப்பை முறியடிக்க மந்திரம் ஜெபிக்க சொன்னான்.சப்பை மூக்கன்கள் நம்மை கேலி செய்கிறான்கள்.

  “Chinese Defence Ministry
  spokesman Wu qian made
  this assertion ahead of this
  week’s National Security Ad-
  visers’ (NSA) talks to resolve
  the standoff.
  Maintaining China’s hard-
  line stance on the issue, Mr.
  Wu told a media briefing
  that”India should not leave
  things to luck and not har-
  bour any unrealistic illu-
  sions”

  https://www.facebook.com/selvasundaram.balasubramanian?hc_ref=ARSpSOBeD2elQ0thLgmKenSLueI7zPpBhkw85r8O2qyUbqEoNobL3V2ENi2YNHP2Z1U&fref=nf

  • எப்போதிலிருந்து சீனா அரசின் பேச்சாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டீர்கள் ? வாழ்த்துக்கள்

   • மணிகண்டன் உங்க முட்டாள் பிஜேபி எம்பி-களையும் அவர்கள் மந்திரம் ஊதி இந்தியாவை ம=காப்பாத்த கூறிய மடமை தனத்தையும் கண்டு எதிரியே கைகொட்டி சிரிக்கின்றான்… இதுல வேற உங்களுக்கு கிளுகிளுப்பா ? தூ….வெக்கம் கேட்ட விவஸ்தை கேட்டவரே….

 4. Dr mbetkar indhu mathathai ambalapaduthi urithu thonga vittar.maanam ketta kaavigal avar padathukku maalai pottu thalith sondhangalai kalavarthil irakki vidugirargal.nanbar sk vum manikandan avargalai than karuthukkalal aatharappoorvamaga urithuthan parkirar.manikandan avargalo dr.ambetkar padathuku maalai pottukonde irukkirar.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க