குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. புதிய பாடல்

5

மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் பாடல் இது.

 

குண்டாஸ் குண்டாஸ்
ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்
ஊழல் பண்ணி தின்ன காசில
அமைச்சர் வயிறு அண்டாஸ்

பச்சயப்பாஸ் அண்ணாமலை
தட்டிக்கேட்டான் ஸ்டுடன்ட்ஸ் – அவன்
விவசாயிக்கு பொறந்தவன்டா
நீங்களெல்லாம் புரோக்கர்ஸ் – உன்
கேசு கீசு குண்டாசெல்லாம்
நமத்துப்போன பட்டாசு – நீங்க
நடத்துறது சர்க்காரில்லே
ஆளே இல்லா சர்க்கஸ்

ஆத்து மணலை ஆட்டையப்போட்ட
அமைச்சர் தலையில முண்டாசு
ஐ.டி ரெய்டில் சிக்கினவங்க
ஆக்கங்கெட்ட கூவாஸ்
கூவத்தூரு கும்மாளத்தில்
வேட்டிய தூக்கி பிரேக் டான்ஸு
குட்கா விற்க லஞ்சம் வாங்கின
ஐ.பி.எஸ் க்கு போனசு

கதிராமங்கலம் நெடுவாசல்
அக்கா குடுத்திச்சி நோட்டீசு – அரசை
ஆதரிச்சா எழுத முடியும்
மூளை கெட்ட முண்டாஸ்
குண்டாஸுக்கும் அண்டாஸுக்கும்
பந்தோபஸ்து போலீசு
ஓ.பி.எஸ்  இ.பி.எஸ்
பி.ஜே.பி க்கு லெக் பீஸ்

ஆறு கேஸ் வாங்கினாக்கா
ஸ்டூடண்டுக்கே குண்டாஸ் – உங்க
ஆத்தா மேல நூறு கேஸ்
இன்னா…ங்கடா டமாஸ்
சின்னம்மாவை உள்ளே வச்சும்
ஊஹும் ஊஹும் நோ யூஸு
இந்த அக்யூஸ்டெல்லாம் ஒண்ணா சேந்து
நமக்கு போடுது குண்டாஸ்.

பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு

_______________________

இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
அடக்குமுறைக்கு எதிரான ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

5 மறுமொழிகள்

  1. என்னாங்க பாசு பொசுக்குன்னு இருக்கு பாசு….
    தொவட்டி அடிக்கிற மாதிரி இல்லயே பாசு…..
    இவனுங்க சட்ட திட்டம்(குண்டாஸ்) எல்லாம் நமக்கு தேள் கொட்டியது போல இருக்கு….

  2. சிறந்த இசய்.சிறந்த வடிவம்.எள்ளல் கடந்த பேச வய்க்கம் வரீகள்.தெஈடரட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க