Monday, June 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்எங்க மண்ணு எங்க ஊரு மீத்தேன் எடுக்க நீ யாரு - டீசர்

எங்க மண்ணு எங்க ஊரு மீத்தேன் எடுக்க நீ யாரு – டீசர்

-

நாடு முழுவதும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் வறட்சி மற்றும் அரசு புறக்கணிப்பு காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர். அரசோ அந்த மரணங்களை தனிப்பட்ட மரணம் என்று கணக்கு காட்டுகின்றது.

கால்நடைகள் கூட மேயப் பசுமையின்றி, பருக நீரின்றி மடிகின்றன. மழை தேவைப்படாத பனைமரங்களே பட்டுப் போகின்றன. இந்நிலையில் தமிழக விவசாயத்தை முற்றாக அழிக்கும் வண்ணம் காவிரி டெல்டாவின் களஞ்சியங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்கிறது காவிக் கும்பல்.

வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யுங்கள் என்கிறார் இல.கணேசன்  நமது மண்ணை, நமது ஊரை ஏன் விட வேண்டும்? அந்த விவசாயிகளின் போர்க்குரலாய் ஒலிக்கிறது இப்பாடல். இப்பாடலின் முன்னோட்டம் இன்று… முழுப் பாடல் வரும் திங்கள் 31.07.2017 அன்று வெளியாகும்

பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________

இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
விவசாயிகளுக்கு ஆதரவாக ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க