Friday, August 7, 2020
முகப்பு வாழ்க்கை மாணவர் - இளைஞர் ஸ்டுடண்டுக்கு குண்டாஸ் - கரோக்கி வெர்சன் - நீங்களும் பாடலாம்

ஸ்டுடண்டுக்கு குண்டாஸ் – கரோக்கி வெர்சன் – நீங்களும் பாடலாம்

-

போராடுபவர்களையும், மாணவர்களையும் ஆள்தூக்கி குண்டர் சட்டத்தைக் கொண்டு ஒடுக்க நினைக்கிறது தமிழக அரசு. மணல் கொள்ளை, குட்கா ஊழல் மற்றும் வருமானவரிச் சோதனையில் சிக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் திமிருடன் உலாவருகின்றனர். ஆளும் அண்ணா அதிமுகவின் குண்டர்கள் இன்று போராடும் மாணவர்களை ஒடுக்குகிறார்கள். போராடத் தூண்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வேன் என்று கொக்கரிக்கிறார்கள். இதற்கு தமிழக மாணவர்கள் அஞ்சமாட்டார்கள். தொடர்ந்து போராடுவார்கள். அவர்களின் போராட்டப் பாடலாக இந்த பாடல் மாற வேண்டும் என்பதற்காக “கரோக்கி – சேர்ந்து பாடலாம்” வடிவத்தை வெளியிடுகிறோம்.

இதில் பின்னணி இசையும் காட்சிகளும் வரும். பாடல் வரிகள் வரும் இடத்தில் குரல் இருக்காது, அதன் வரிகள் மட்டும் வரும். இதை பதிவிறக்கம் செய்து நீங்களும் பாடலாம்.

அடுத்து இந்தப் பாடலை சமூகவலைத்தளங்களில் விரிவாக கொண்டு செல்ல உங்கள் ஒத்துழைப்பு தேவை. இந்தப்பாடலை பதிவிறக்கம் செய்து ஆடத்தெரிந்த நண்பர்கள் ஆடலாம். நடனம் என்பது கானா, வெஸ்ட்ரன், செவ்வியில் என எந்த வடிவமாகவும் இருக்கலாம். அதை செல்பேசி அல்லது வீடியோ காமராவில் HD ஃபார்மெட்டில் தரமாக ஒளிப்பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள். தெரிவு செய்யப்படும் வீடியோக்களை வெளியிடுகிறோம்.

பின்னணி இசையோடு பாடுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், சினிமா பாடகர்கள், மேடைப் பாடகர்கள், இயக்கப் பாடகர்கள் என அனைவரும் முன்வந்து பதிவு செய்து அனுப்புங்கள். தெரிவு செய்யப்படும் ஆடியோ – வீடியோக்கள் வினவு தளத்தில் வெளியிடப்படும். அதை உங்களது சமூகவலைத்தள கணக்குகளிலும் வெளியிடுங்கள். போராட்டப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள்

ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி!

குண்டாஸ் குண்டாஸ்
ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்
ஊழல் பண்ணி தின்ன காசில
அமைச்சர் வயிறு அண்டாஸ்

பச்சப்பாஸு அண்ணாமலை
தட்டிக்கேட்டான் ஸ்டுடன்ட்ஸ் – அவன்
விவசாயிக்கு பொறந்தவன்டா
நீங்களெல்லாம் புரோக்கர்ஸ் – உன்
கேசு கீசு குண்டாசெல்லாம்
நமத்துப்போன பட்டாசு – நீங்க
நடத்துறது சர்க்காரில்லே
ஆளே இல்லா சர்க்கஸ்

ஆத்து மணலை ஆட்டையப்போட்ட
அமைச்சர் தலையில முண்டாசு
ஐ.டி ரெய்டில் சிக்கினவங்க
ஆக்கங்கெட்ட கூவாஸ்
கூவத்தூரு கும்மாளத்தில்
வேட்டிய தூக்கி பிரேக் டான்ஸு
குட்கா விற்க லஞ்சம் வாங்கின
ஐ.பி.எஸ் க்கு போனசு

கதிராமங்கலம் நெடுவாசல்
அக்கா குடுத்திச்சி நோட்டீசு – அரசை
ஆதரிச்சா எழுத முடியும்
மூளை கெட்ட முண்டாஸ்
குண்டாஸுக்கும் அண்டாஸுக்கும்
பந்தோபஸ்து போலீசு
ஓ.பி.எஸ்  இ.பி.எஸ்
பி.ஜே.பி க்கு லெக் பீஸ்

ஆறு கேஸ் வாங்கினாக்கா
ஸ்டூடண்டுக்கே குண்டாஸ் – உங்க
ஆத்தா மேல நூறு கேஸ்
இன்னா…ங்கடா டமாஸ்
சின்னம்மாவை உள்ளே வச்சும்
ஊஹும் ஊஹும் நோ யூஸு
இந்த அக்யூஸ்டெல்லாம் ஒண்ணா சேந்து
நமக்கு போடுது குண்டாஸ்.

பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________

இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
அடக்குமுறைக்கு எதிரான ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க