தென்னமெரிக்காவின் இதயம் என்றழைக்கப்படும் பராகுவேயில் கடந்த ஒரு மாதமாக அரசுக்கெதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது.

சுமார் 70 இலட்சம் மக்கள் வசிக்கும் பராகுவேயில் மக்கள் தொகையில் வெறும் 2.6% மட்டுமே உள்ள கார்ப்பரேட் பண்ணை முதலாளிகளின் கையில் 85.5% நிலங்களும், மக்கள் தொகையில் 91% உள்ள சிறு விவசாயிகளிடம் வெறும் 6% நிலங்களுமே உள்ளன.
Avanza de vuelta la Marcha de campesinos. Esperan dictamen para que sea tratada Ley de Emergencia de la Agricultura Familiar. #Paraguay pic.twitter.com/2mLk6iVSBt
— Osvaldo Zayas (@OsvaldoteleSUR) July 25, 2017
ஒரு புறம் பண்ணை விவசாயிகளின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் விவசாயிகளுக்கு, மறுபுறம் அரசும் எந்தச் சலுகைகளையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளது. மேலும் உலகளாவிய பருவ நிலை மாற்றங்களால் ஏற்பட்ட மழை வெள்ளங்களால் பயிர்கள் அழுகி விவசாயம் பொய்த்துப் போகவே, பயிர்க் கடன்களை இரத்து செய்யக்கோரி சிறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர் விவசாயிகள்.
34 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்களைத் தள்ளுபடி செய்யும் நிலையில் தான் இல்லை என்று அரசாங்கம் கைநழுவப்பார்த்தது. ஆனாலும் விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தால் அரசாங்கம் வேறு வழியின்றி இப்போது இறங்கி வந்துள்ளது. செனட் சபை உறுப்பினர்களால் தேசிய அவசரச் சட்டம் ஒன்று முன்மொழியப்பட்டு கீழ் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு சிறு விவசாயிக்கும் கடன் தொகையிலிருந்து 10,000 அமெரிக்க டாலர் வரை விலக்கு அளிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
செய்தி ஆதாரம் :
_____________
தென் அமெரிக்க மக்களின் போராட்டச் செய்திகளை தொடர்ந்து தரும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி